உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Today at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Today at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Today at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Today at 2:59 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by ayyasamy ram Today at 2:36 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Today at 2:31 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by ayyasamy ram Today at 2:16 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Today at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Today at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Today at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Today at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 1:10 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by ayyasamy ram Today at 12:57 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Today at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Today at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Today at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Today at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Today at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Today at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Today at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Today at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Today at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Today at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Today at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Today at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Today at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Today at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Today at 9:23 am

» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 9:20 am

» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:19 am

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
by ayyasamy ram Today at 9:16 am

» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:08 am

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:00 pm

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:59 pm

» புத்தகங்கள் தேவை !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:54 pm

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:49 pm

» டான் பிரவுன் நாவல்கள் தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 9:40 pm

» நாவல் தேடல்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:27 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:23 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:17 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:13 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:12 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:09 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:04 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:34 pm

» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...!!
by சிவனாசான் Yesterday at 7:32 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சிவனாசான் Yesterday at 7:21 pm

» வீட்டிலேயே விவசாயம்
by கண்ணன் Yesterday at 4:25 pm

» துன்பம் நேர்கையில்…
by ayyasamy ram Yesterday at 3:49 pm

Admins Online

அன்னாதாஸ்தயேவஸ்கி

அன்னாதாஸ்தயேவஸ்கி Empty அன்னாதாஸ்தயேவஸ்கி

Post by Admin on Mon Feb 23, 2009 2:24 am

அன்னாதாஸ்தயேவஸ்கி Anna
அன்னாதாஸ்தயேவஸ்கி

அறிவியல், அரசியல்,மருத்துவம், இலக்கியம், இசை, விளையாட்டு எனத் தொடங்கி, எத்தனையோதுறைகளில் பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு குறிப்பிட்ட துறையிலுமாக அல்லாமல் வெறும் குடும்பத்தலைவியாக இருந்தே உலக அளவில் புகழ் பெற்ற ஒருவரைத் தெரியுமா உங்க ளுக்கு? இந்த வாரம் அவரைத்தான் சந்திக்கப் போகிறீர்கள். அவர் பெயர் அன்னா. அன்னா, 1846-ம் வருடம் சோவியத் யூனியனில் பிறந்தவர். மிகச் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கஷடப்பட்டு உயர் கல்விப் படிப்பை முடித்துவிட்டு, குடும்ப சௌகரியத்துக்காக ஏதாவது வேலைக்குப் போகலாமே என்று தீர்மானித்தார்.

சுருக்கெழுத்து கற்றுக் கொண்டு விட்டால், ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்குமே என்கிற எண்ணத்தில் 1866-ம் வருடம்-தமது இருபதாவது வயதில் பி.எம். ஆல்கின் என்கிற சுருக்கெழுத்து ஆசிரியர் நடத்தி வந்த தனியார் பள்ளி ஒன்றில் போய்ச் சேர்ந்தார்.

கரமசோவ் சகோதரர் கள், குற்றமும், தண்டனை யும் போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களின் ஆசிரி யரான தாஸ்தயேவ்ஸ்கி, அக் காலத்தில் மிகுந்த சிரமத்தில் இருந்தார். சிரமம் என்றால், எல்லாம் தானே உண்டாக்கிக் கொண்ட சிரமங்கள். ஒரு தீவிர வாதக் குழுவுக்கு ஆதரவாகச் செயல் பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போனவர் அவர். சைபீரியா வுக்கு நாடு கடத்தப்பட்டு, படாத பாடெல்லாம் பட்டு மீண்டு வந்தவர்.

அவர் சிறையில் இருந்த காலத்தில் அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து போயிருந்தார். போதாக்குறைக்கு தாஸ்தயேவ்ஸ்கிக்கு கொடுமையான காக்காய் வலிப்பு நோய் வேறு இருந்தது. இத்தனையும் போதாதென்று குடித்துக் குடித்து வேறு உடம்பை எக்கச் சக்கத்துக்குக் கெடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

பணம் சம்பாதிப்பதற்காகச் சூதாடி, இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் அதில் இழந்து, கிட்டத்தட்ட மஞ்சள் கடுதாசி கொடுக்கிற நிலைக்கு வந்துவிட்டிருந்தார் அப்போது. ஆனாலும் பெரிய எழுத்தாளர் என்பதால் இறுதி யாக அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருந்தது.

ஸ்டெல்லோவ்ஸ்கி என்கிற ஒரு பதிப்பாளர் அவருக்குக் கொஞ்சம் முன்பணம் கொடுத்து உதவினார். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தாஸ்தயேவ்ஸ்கி அவருக்கு ஒரு நாவலை எழுதி முடித்துக் கொடுத்தாக வேண்டும். குறிப்பிட்ட தினத்துக்கு ஒரு நாள் தள்ளிப்போனாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் மற்ற அனைத்துப் புத்தகங்களின் உரிமையும் அவரை விட்டுப் போய்விடும். இப்படியொரு இசகு பிசகான ஒப்பந்தம் அது!

தாஸ்தயேவ்ஸ்கிக்கு அப்போது மிகப்பெரிய பணத்தேவை இருந்ததால் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். எப்படியும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நாவலை முடித்துவிட லாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அந்த நம்பிக்கை வரக் காரணம்-அவரது நண்பரான ஆல்கின்! ஏற்கனவே பார்த்தோமல்லவா? சுருக்கெழுத்து ஆசிரியர் ஆல்கின் அவர்தான்!
ஆல்கின் தாஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு யோசனை சொன்னார். நீங்கள் ஒரு சுருக்கெழுத்தாளரை வேலைக்கு வைத்துக்கொண்டால் சுலபமாக உங்கள் நாவல் எழுதி முடிக்கப்பட்டு விடும். என்பதே அந்த யோசனை. அன்னாவை மனத்தில் வைத்தே அவர் இப்படியொரு யோசனையைத் தெரிவித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

அன்னாதாஸ்தயேவஸ்கி Empty Re: அன்னாதாஸ்தயேவஸ்கி

Post by Admin on Mon Feb 23, 2009 2:25 am

தாஸ்தயேவ்ஸ்கியும் அதற்கு ஒப்புக் கொண்டார். 1866, அக்டோபர் 4-ம் தேதி முதல் முதலாக அன்னா, தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டுக் குப் புறப்பட்டார். ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு ஸ்டெ னோகிராபராக இருக்கும் உத்தியோகம்!

சரியாக ஒரு மாத காலத்துக்குள் இந்தப் புதிய நாவலை எழுதி முடித்தால் பதிப்பாளர் பணம் கொடுப்பார். கடனை அடைக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். ஒரு மாத காலத் துக்கு ஒருநாள் தள்ளிப்போனால்கூட, தாஸ்தயேவ்ஸ்கியின் மற்ற அனைத்துப் புத்தகங்களின் பதிப்புரிமையும் அந்த வில்லன் பதிப்பாளருக்கே போய்விடும்.

தாஸ்தயேவ்ஸ்கி இந்த நெருக்கடியை அன்னாவிடம்மனம் திறந்து சொன்னார்.அன்னாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர் பார்க்கும் வேகத்தில் நான் உழைப் பேன். நாவலை உரிய காலத்தில் பதிப்பாளரிடம் கொண்டு கொடுத்துவிட முடியும் என்றே நினைக்கிறேன் என்று நம்பிக்கை சொன்னார்.

உண்மையில் தாஸ்தயேவ்ஸ்கி, அப்போது ஒரு முழு நாவலுக்கான திட்டம் எதுவுமே வைத்துக் கொண்டிருக்க வில்லை. ஆனாலும் நாவலை எழுதியே ஆகவேண்டும் என்பதால் அத்தியாயம் அத்தியாயமாக டிக்டேட் செய்ய ஆரம்பித்தார்.

இப்படித்தான் அன்னாவுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் தொடர்பு உண்டானது. ஒரு மாத காலம். ஒரு நாவல். தினசரி தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டுக்கு அன்னா வருவார். ஆரம்பிக்கலாமா? என்று அவர் கேட்பார். அன்னா தன் பென்சிலைக் கூறாக்கிக்கொண்டு எழுத ஆரம்பிப்பார். தாஸ்த யேவ்ஸ்கி சொல்லிப்போகும் வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துப் போய் இரவெல்லாம் உட்கார்ந்து விரித்து எழுதி மறுநாள் எடுத்து வருவார். அதில் சரி செய்ய வேண்டியதைச் செய்து ஒழுங்குபடுத்தி வைத்து விட்டு மீண்டும் அடுத்த அத்தியாயம். கடுமையான வேலைதான். ஆனால் அன்னா அதை மிக ஆர்வமுடன் செய்தார்.

இதனிடையில் எழுதும் நேரம் போக மிச்ச நேரத்தில் அன்னா, தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடந்தபல சம்பவங்களைக் கேட்டு அறிந்தாள். இல்லற வாழ்க்கை அவருக்குப் பொய்த்துப் போனதில் அன்னாவுக்குத் தீராத வருத்தம். ஒரு நல்ல மனைவி மட்டும் அவருக்கு அமைந்திருந்தால் வாழ்வில் இத்தனை கஷடங்களை அவர் பட்டிருக்க மாட்டார் என்று நினைத்தார் அன்னா. தாஸ்தயேவ்ஸ்கிக்கு அப்போது நாற்பதுக்கு மேல் வயது. அன்னாவுக்கோ, இளமை மிக்க இருபது! பார்க்கவும் அழகாக, கவர்ச்சியாக இருப்பார் அவர்.

ஆனால் ஒரு சூதாடி, குடிகாரன், மனைவியை இழந்தவன், பெரும் கடன்காரன், காக்காய் வலிப்பு நோய் உள்ளவன், வாழ்வில் எந்த ஒழுங்கும் பேணாதவன் - அத்தகைய ஒரு ஆள் - மாபெரும் எழுத்தாளராகவே இருந்தாலும் காதல் வருமா என்ன?

அன்னாவுக்கு வந்தது! அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாவலை குறித்த காலத்துக்குள் எழுதி முடித்துவிட்டார்கள். ஆனாலும் பதிப்பாளர் நைஸாக ஊரைவிட்டு எங்கோ போய் ஒளிந்துகொண்டு, தாஸ்தயேவ்ஸ்கியை அலைக் கழிக்க ஆரம்பித்தார். எப்படியாவது அவரை உரிய காலத்தில் நாவலைக் கொடுக்கவிடாமல் ஏமாற்றி, மொத்த புத்தகங்களின் உரிமையையும் களவாடி விட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

அன்னாதாஸ்தயேவஸ்கி Empty Re: அன்னாதாஸ்தயேவஸ்கி

Post by Admin on Mon Feb 23, 2009 2:25 am

ஆனால் அன்னா, தமது புத்திசாலித்தனமான நட வடிக்கைகளின் மூலம் அந்தப் பதிப்பாளரின் நண்பரைப் பிடித்து, எப்படியோ நாவல் பிரதியை உரிய தினத்தில் அவரிடம் சேர்த்துவிட ஏற்பாடு செய்துவிட்டார்.

மிகப்பெரிய சதிவலையிலிருந்து தன்னைக் காப்பாற் றிய அன்னாவின் மீது அப்போதுதான் தாஸ்தயேவ்ஸ்கிக் குக் காதல் பிறந்தது! அன்னாவைப் போன்ற ஒரு பொறுப்பான பெண் மனைவியாக வாய்த்தால் எழுத் தில் இன்னும் எத்தனை எத்தனையோ சாதிக்கலாமே என்று அவர் ஏங்கினார். தம் காதலை முதன் முதலில் அவர் அன்னாவிடம் சொன்னபோது அன்னா, யோசிக் கச் சற்று அவகாசம் கேட்டார். அவரது வீட்டார் கொஞ் சம் இதை எதிர்த்தார்கள். ஒரு கிழவனைப் போயா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்? உனக்கென்ன பைத்தியமா என்றார்கள். அதுவரை மாபெரும் நாவலாசிரியராக இருந்தவர், காதல், கல்யாணம் என்று வந்ததும் வெறும் கிழவன் ஆகிவிட்டார்!

ஆனால் அன்னா மிக உறுதியுடன் இருந்து தாஸ்த யேவ்ஸ்கியைத் திருமணம் செய்து கொண்டார்! அன்றிலிருந்துதான் அவருடைய நிஜமான பணிகள் ஆரம்பமாயின.

தாஸ்தயேவ்ஸ்கியின் சொந்தச் சிக்கல்கள் ஒவ்வொன்றாக அவரது நினைவுக்கு வந்தன. முதலில் அவர் குடிக் கும் அளவைக் குறைத்தார். பிறகு கடன்களை அடைக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டார். தாஸ்தயேவ்ஸ்கி எதையெதை எப்போது எழுத வேண்டும், யார் பதிப்பாளர் என்பதை யெல்லாம் அன்னாதான் தீர்மானித்தார். அவரது காக்கை வலிப்பு நோய்க்குத் தீவிர சிகிச்சை தரவும் ஆரம்பித்தார். ரஷயாவில் இருந்த மிகச் சிறந்த மருத்துவர்களிடம் அழைத்துப்போய்க் காட்டினார்.

வாழ்வில் சந்தோஷம் என்றால் என்ன என்று அந்த மகா கலைஞன் முதல் முறையாகத் தெரிந்து கொண்ட தினங்கள் அவை. தாஸ்தயேவ்ஸ்கியின் சந்தோஷத் துக்காகத் தன் சொந்த சந்தோஷங்கள் அத்தனை யையும் அன்னா அப்போது துறந்திருந்தார்! அவர் சிறையிலிருந்த காலத்தில் எழுதிய நாட் குறிப்புகள், அரைகுறை சிறுகதைகள், நாவல் கள் எல்லாவற்றையும் தூசி தட்டி எடுத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கினார்.

தன் வாழ்நாள் முழுவதையும் கணவரின் புத்தகங்களை வெளிக்கொண்டு வருவதற் காகவே செலவழித்த அந்தப் பெண்மணி 1881-ஆம் ஆண்டு விதவை ஆனார். அதா வது, அவரது திருமண வாழ்க்கை என்பது சுமார் பதினைந்து வருடங்கள் மட்டுமே. ஆனால் 1918-ல் தாம் இறக்கும்வரை தம் கணவரின் பெருமையை உலகறியச் செய்வதற் காக சளைக்காமல் உழைத்துக் கொண்டே இருந்தி ருக்கிறார் அந்தப் பெண்மணி.

இறப்பதற்குச் சில காலம் முன்னதாக, தன்னுடைய மற்றும் தம் கணவருடைய டைரிக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து தம் காதல், திருமணம் குறித்த தகவல்களை மட்டும் தொகுத்து ஒரு சிறு நூலாக அன்னா எழுதி வெளியிட்டார். ஒரு வரி கூட மிகையில்லாமல் நடந்ததை நடந்த விதமாகவே கூறும் அன்னாவின் அந்த நினைவுக் குறிப்பு இன்றளவும் உலக இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

அன்னாதாஸ்தயேவஸ்கி Empty Re: அன்னாதாஸ்தயேவஸ்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை