புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாமரன்! - Page 2 Poll_c10பாமரன்! - Page 2 Poll_m10பாமரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரன்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 7:55 pm

First topic message reminder :

பாமரன்!
பாமரன்! - Page 2 P30b
பல தருணங்களில், பிரச்னை எதுவானா லும் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், அந்தப் பிரச்னைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத சாமான்ய மனிதர்கள்தான்.

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஓர் ஆசிரியர், ஒரு டாக்டர், வழக்கறிஞர், பாதிரியார் மற்றும் பாமரன் ஒருவன் என ஐந்து பேர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சினிடையே வக்கீல், ''நான் எல்லோரது வழக்குகளும் ஜெயிக்க வாதாடுகிறேன். நான் இல்லையென்றால் நாட்டில் பிரச்னைகள் அதிகமாகி யிருக்கும்'' என்றார். பாதிரியாரோ, ''நான் எல்லோரும் சுகமாக வாழ, கடவுளை தினமும் வேண்டுகிறேன். அதனால்தான் நாட்டில் அமைதி நிலவுகிறது'' என்று சொன்னார். ''நான் எல்லோரையும் நோயிலிருந்து காப்பாற்றுகிறேன். எனவே, நான் கடவுளுக்குச் சமமானவன்'' என்றார் டாக்டர். ஆசிரியரோ, ''நான் எல்லோருக்கும் கல்வி தந்து அறிவை வளர்க்கிறேன். என் பணியே உயர்ந்தது! மாதா, பிதாவுக்கு அடுத்து குருவைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் தெய்வம் சொல்லப்பட்டுள்ளது!'' என்று பெருமையுடன் சொன்னார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பாமர மனிதன், ''அது சரி, உங்கள் அனைவருக்கும் நான்தானே பணத்தைக் கொட்டி அழுகிறேன். ஆகவே, உங்களைவிட நானே உயர்ந்தவன்'' என்றானாம் விரக்தியுடன்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:31 pm

நஷ்டம்... பத்து லட்சம்!
பாமரன்! - Page 2 P80a
திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிராமத்தான் ஒருவன் திடீரென ஓவென்று அழ ஆரம்பித்தான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து விசாரித்தார்கள். ''அநியாயமா பத்து லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சே!'' என்று கதறித் தீர்த்தான். 'எப்படி நஷ்டம் வந்தது? உனக்கு ஏது அவ்வளவு பணம்? எந்த வியாபாரத்தில் போட்டு நஷ்டம் அடைந்தாய்?’ என்றெல்லாம் அக்கறையுடன் விசாரித்தார்கள்.

''இந்த பேப்பரில் ராஜஸ்தான் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் வந்திருக்கிறது. முதல் பரிசு 10 லட்சம், அதுதான் நஷ்டமாகிவிட்டது!'' என்று அவன் தேம்பி அழுதான்.

''நீ லாட்டரிச் சீட்டு வாங்கி, அதைத் தொலைத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள் சுற்றி இருந்தவர்கள்.

''இல்லை. லாட்டரிச் சீட்டு வாங்க மறந்து விட்டேன். அதனால்தான் அழுகிறேன்!'' என்றான் அந்தக் கிராமத்தான்.

இப்படித்தான், இல்லாத பிரச்னைகளை எண்ணி எண்ணி, அதற்காகவே கவலைப்பட்டு, பயந்து, மன இறுக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 9:36 pm

கீதை வரிகளில் கிருஷ்ணன்

அது 11-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வாழ்ந்த காலம்.

ஒருமுறை, நாம சங்கீர்த்தனத்தின் மகிமையைப் பரப்பும் நோக்கில், தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டு, கால்நடையாகவே பூரியிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் மஹாபிரபு.
பாமரன்! - Page 2 P70
அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கோபால பட்டர் என்ற விஷ்ணு பக்தர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த சமஸ்கிருத பண்டிதர். தினமும் ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்று, சந்நிதியில் அமர்ந்து, பகவத்கீதை பாராயணம் செய்வார். ஆனால், அவர் கீதை படிக்கும்போது தட்டுத் தடுமாறிப் படிப்பார். வார்த்தைகளைத் தப்பும் தவறுமாக உச்சரிப்பார். தொடர்ச்சி இல்லாமல் படிப்பார். ஆலயத்தில் பூஜை செய்யும் பட்டர்களும் பட்டாச்சாரியார்களும் இதனால் மிகவும் மனம் வருந்தினார்கள். பலமுறை கோபால பட்டரை அணுகி, ''இப்படி ஆலயத்தில் வந்து தப்பும் தவறுமாக கீதை பாராயணம் செய்வது பகவத் அபசாரம் அல்லவா? இதை நிறுத்திவிடுங்கள்; அல்லது, வேறு எங்காவது சென்று பாராயணம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

கோபால பட்டர் அவர்கள் பேச்சைக் காதிலேயே வாங்கவில்லை. ''பகவத் கீதையை பகவத் சந்நிதானத்தில் படிப்பது ஒரு வைஷ்ணவனின் உரிமை. என்னை யாரும் தடுக்க முடியாது. தடுத்தால் அதுதான் பகவத் அபசாரமாகும். அது தெய்வ நிந்தனையும் ஆகும்'' என்று கூறிவிட்டார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்று அனைவரும் ஒதுங்கிவிட, ஆலயத்தில் கோபால பட்டரின் பாராயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்ரீரங்கம் வந்தபோது, ரங்கநாதர் ஆலயத்தில் அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் வருகிற நேரத்தில் கோபால பட்டர் கீதையைத் தப்பும் தவறுமாகப் பாராயணம் செய்து கொண்டிருந்தால், அது மஹாபிரபுவின் மனதை வேதனைப்படுத்துமே என்று எண்ணிய ஒரு சில பட்டர்கள் கோபால பட்டரை அணுகி, அன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது பாராயணத்தை வடக்கு கோபுர வாயிலில் வைத்துக்கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டனர். கோபால பட்டரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

சைதன்ய மஹாபிரபுவை மேளதாளம் முழங்க, வேத கோஷம் ஒலிக்க, ஆலயத்துக்கு அழைத்து வந்தார்கள். ஆலயத்தின் ராஜகோபுரத்தில் நுழைந்ததுமே, சைதன்ய மஹாபிரபு பரவச நிலையடைந்தார். ''இங்கு எங்கோ பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. நான் அங்கே போகவேண்டும்'' என்று கூறி, கூட்டத்தினரைத் தாண்டிக்கொண்டு ஓட்டமாக ஓடி, கோயிலுக்குள் நுழைந்து, வடக்கு கோபுர வாசலை அடைந்தார். அங்கே கோபால பட்டர் கீதை பாராயணம் செய்வதைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தார். கண்களில் நீர் மல்க கோபால பட்டர் பாராயணம் செய்ததைக் கேட்ட மஹாபிரபுவின் கண்களிலிருந்தும் வெள்ளம்போல் நீர் சுரந்தது.

கோபால பட்டர் பகவத் கீதையில் ஓர் அத்தியாயம் படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து, மஹா பிரபுவைப் பார்த்ததும் பரவசமானார். மஹா பிரபு, கோபால பட்டரைப் பார்த்து ''ஸ்வாமி, நீர் மஹா பெரிய பண்டிதர். ஆனாலும், கீதை வரிகளைப் படிக்கும்போது ஏன் உச்சரிப்புப் பிழை ஏற்படுகிறது?'' என்று கேட்டார். அதற்கு, ''பிரபு, எப்படியாவது கீதையை மனப்பாடம் செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் தினமும் தவறாமல் பாராயணம் செய்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏடுகளைத் திறந்தால் அதில் பகவான் கிருஷ்ணன்தான் என் கண்களுக்குத் தெரிகிறானே தவிர, எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை'' என்றார் கோபால பட்டர். உணர்ச்சிவசப்பட்ட சைதன்ய மஹா பிரபு, கோபால பட்டரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.

''எவன் ஒருவன் கீதையின் வாசகங்களிலும் வரிகளிலும் கிருஷ்ணனைக் காண்கிறானோ, அவனால்தான் கீதையின் தத்துவங்களை நன்கு உணரமுடியும்'' என்றார் மஹாபிரபு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 10:36 pm

அனைத்துக் கதைகளும் சிறந்த நீதியை நிலைநாட்டுவதாக உள்ளது. மிகவும் அருமையான திரி. தொடருங்கள் தமிழ் நேசன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



பாமரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 10:48 pm

சிவா wrote:அனைத்துக் கதைகளும் சிறந்த நீதியை நிலைநாட்டுவதாக உள்ளது. மிகவும் அருமையான திரி. தொடருங்கள் தமிழ் நேசன்!
மேற்கோள் செய்த பதிவு: 1084375 நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 04, 2014 10:10 am

இப்பதான் பாமரன் கதையை படித்து முடித்தேன்... பாவம் அந்த பாமரன்...வக்கீலிடமும்..டாக்டரிடமும் மாட்டி தவிக்கின்றார்..

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 04, 2014 2:03 pm

தமிழ்நேசன்1981 wrote:அன்பால் புலியையும் வெல்லலாம்!
பாமரன்! - Page 2 P28a
குருவும் சிஷ்யனும் காட்டு வழியே சென்றுகொண்டி ருந்தனர். அப்போது, திடீரென புலியின் உறுமல் அருகில் கேட்டது. சிஷ்யன் நடுநடுங்கிப் போனான். ''குருவே, இங்கிருந்து ஓடிவிடலாமா?'' என்று பரிதாபமாகக் கேட்டான்.

''ஓடிவிடலாம்தான். ஆனால், புலி நம்மைத் துரத்தாமல் விடாது. புலியை எதிர்த்துப் போராடலாம் என்றாலோ, நம்மிடம் ஆயுதம் எதுவுமில்லை. பேசாமல், கடவுளை வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, தியானத்தில் அமரலாம். ஆனால், கடவுளின் தீர்ப்பு யார் பக்கம் இருக்கும் என்று நமக்குத் தெரியாது. எனவே, சற்றுப் பொறுமையாக இரு!'' என்ற குரு, தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் ஈடுபட்டார். புலி சற்று நேரத்தில், வேறு வழியில் சென்று மறைந்தது.

''குருவே, என்ன அற்புதம் செய்து புலியை விரட்டினீர்கள்?'' என்று கேட்டான் சிஷ்யன்.

''ஒன்றும் பெரிதாகச் செய்ய வில்லை. என் மனத்திலிருந்து எதிர்மறை எண்ணங்களை வெளி யேற்றி, ஆழ்மன சக்தியை வெளிக் கொண்டு வந்தேன். புலியின் மன நிலையை அது பாதித்து, அமைதியை ஏற்படுத்தியது. எனவே, அது சாந்தமாகி, விலகிச் சென்றது. நம் உள் மனமும் அறிவும் ஒருமுகப்பட்டு, அமைதியும் சாந்தமும் நிலவும்போது, அந்த சாந்த நிலை வெளியேயும் பரவி, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அமைதியடையச் செய்கிறது!'' என்றார் குரு.
மேற்கோள் செய்த பதிவு: 1084348

எவ்வளவு உண்மை இக்கதையில்
இதை கணவன் மனைவி இருவரும் கடைப்பிடித்தால் குடும்பமே கோவில் தான்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாமரன்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 8:50 pm

எல்லா கதைகளுமே ரொம்ப அருமையாக இருக்கு நேசன்......தொடருங்கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக