புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Kavithas
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
6 Posts - 1%
prajai
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
4 Posts - 1%
manikavi
'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 9 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 7:46 pm

நான் ஒரு வீடியோ வில் அம்மாவுக்கான 16 பிண்டங்கள் வைப்பது எதற்கு என்று வாத்தியார் விளக்குவதை போட்டிருந்தேன். அதற்க்கான ஸ்லோகமும் விளக்கமும் இதோ :

மாத்ரு ஷோடஸி (16 ) ஸ்லோகமும் அர்த்தமும்:

அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும்16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர்.
இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். அந்த ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இப்போது இங்கு பார்ப்போம். (நன்றி : கீதா ப்ரஸ்)

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 7:48 pm

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில் என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.


8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 7:51 pm

9. க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்) அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத் தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 7:53 pm

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றையெல்லாம் கடந்து செல்வதற்குத்
துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

இந்த ஸ்லோகங்களை படித்து முன்பே பரிச்சயம் செய்து கொள்வதும், அவற்றின் பொருளை அறிந்து கொள்வதும், கர்த்தா மனம் ஒன்றித் தன் கடமையை ஆற்ற உதவும்.

தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 8:01 pm

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்ததிருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சிலர், கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள்செய்யவேண்டியதில்லை)  என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தவே கூடாது  கூடாது கூடாது கூடாது 

இப்போ நாம் ஒருநாள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவதால், மறுநாளிலிருந்து  நாம் சாப்பிடுவதை விட்டு விடுகிறோமா என்ன? அது போலத்தான் இதுவும். 'கயா'ஸ்ரார்த்தம் செய்து விட்டதால் வருடாந்திர ஸ்ரார்த்தம் செய்யாமல் இருக்காதீங்கோ புன்னகை சரியா? புன்னகை

தொடரும்.......................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 11:15 am

விஷ்ணு பாதம் இருக்கும் கதாதரர் கோவில் புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 9 VzFh6H9BR7OPIaLLbx5w+vishnupadam



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 9:07 pm

புத்த கயா புன்னகை இது நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து ஒரு 12 -13 கி.மீ. இருந்தது. அங்கு போனதும் தான் தெரிந்தது செல் போன்கள் மற்றும் காமிராக்களுக்கு அனுமதி இல்லை. கண்டிப்பாக எடுத்து கொண்டு உள்ளே போகவேண்டும் என்றால் 'நிறைய பணம் கட்டனும்' என்றார்கள். நாங்கள் காரிலேயே வைத்து விட்டு சென்றோம். அங்கும் நாம் பாதுகாப்பாக வைக்க Free  lockers  இருக்கு. எங்க மாமா மட்டும் தன் போன் ஐ அங்கு வைத்தார். கோவிலைப்பார்த்து   முடித்ததும் டிரைவர் ஐ கூப்பிட  இரு போன் ஆவது வேண்டுமே ? புன்னகை

எனவே, அங்கும் போட்டோ எடுக்கலை, இங்கு நான் போடப்போகும் போடோக்கள் நெட் லிருந்து எடுத்தது புன்னகை திரும்ப வரும்போது போனை லாக்கர்லிருந்து எடுத்தும் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்தோம் அது தான் இது புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 9 KAUDjN3qRVCfG7NbIcfp+photo0173

இந்த கோபுரம் மேலே ஒரு 4 அடி தங்கம் போல ஜொலிக்கிறது புன்னகை இப்போ அந்த இடம் பற்றிய தகவல்கள்.

புத்தமதத்துக்குரிய நான்கு புண்ணியத் தலங்களில் மூன்று இந்தியாவில் உள்ளன. மற்றொன்று நேபாளத்தில் உள்ளது. கபிலவஸ்து நகருக்கு அருகில் உள்ள லும்பினி அவருடைய பிறந்த இடம். புத்த கயா அவர் ஞானம் பெற்ற இடம். சாரநாத் அவருடைய முதல் பிரசங்கம் நடந்த இடம். குஷிநகர் அவர் இறந்தபின் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம். இவற்றில் லும்பினி மட்டும் நேபாளத்தில் உள்ளது. இந்த நான்கு இடங்களில் புத்த கயா மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பாட்னாவில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவில் புத்த கயா உள்ளது. இந்துக்களின் புனித தலம் என்று கூறப்படும் கயாவில் இருந்து 13 கி.மீ தொலைவில் புத்த கயா உள்ளது. இரண்டையும் வேறுபடுத்தி கூறுவதற்காக இதை புத்தகயா என்று கூறுவார்கள்.

கபிலவஸ்து அரசரின் மகனாக வளர்ந்த சித்தார்த்த கௌதமர் மனித வாழ்வின் அவலங்களை தெரிந்து கொண்ட பின் அவற்றுக்கான காரணங்களை அறிய அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவர் இன்றைய பீகாரில் உள்ள புத்த கயாவில் உள்ள ஒரு அரசமரத்தின் அடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது.போதி மரத்தை நமது பகுதிகளில் அரசமரம் என்று அழைப்பார்கள். ஞானம் பெறுவதற்கு முன் இவர் வீடுகளில் பிச்சையெடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மகத பேரரசர் பிம்பிசாரர் தன்னுடைய அரியணையை அவருக்கு தருவதாக கூறியதாகவும், கௌதமர் அதை மறுத்து விட்டு கயா நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.

மௌரிய வம்ச பேரரசர் அசோகர் புத்தர் ஞானம் பெற்ற மரத்தைச் சுற்றி ஒரு கோவிலை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார். புத்தர் குஷிநகரில் மகாபரிநிர்வாணம் அடைந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் கழித்து இந்த கோவில் கட்டப்பட்டது. கி.மு.566 முதல் 486 வரையிலானஆண்டுகளை புத்தரின் காலம் என்று வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த கோவில் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. தற்போதைய கட்டிடம் குப்தர்கள் காலத்தில் (கி.பி.6ம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த பாஹியன், யுவான் சுவாங் ஆகிய சீன பயணிகள் போதி மரம் பற்றியும் அதை சுற்றி அமைக்கப்பட்டிருந்த் வேலி பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொடரும்........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 9:10 pm

13ம் நூற்றாண்டு வரை வழிபாடு நடத்தப்பட்ட வந்த கோயில் பின்னர் பயன்படுத்தப்படாமல் இருந்துவிட்டது. அக்கால கட்டத்தில் புத்த மதம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. 19ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதன் மீது கவனம் செலுத்தினார்கள். 1861ம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் மகாபோதி வளாகத்தில் ஆய்வுகளை நடத்தி மீண்டும் கோயிலுக்கு உயிர் கொடுத்தனர். 55 மீ உயரமுள்ள இந்த கோயில் இந்தியாவில் உள்ள செங்கற்களால் ஆன மிகப்பழமையான புத்த ஆலயமாகும். கோயில் மட்டும் 5.5 ஏக்கரில் அமைந்துள்ளது. போதி மரம் உள்ளிட்ட ஆறு புண்ணியத் தலங்கள், கோயில் ஆகியவை பன்னிரண்டு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் உள்ளன. பரந்துபட்ட இந்த இடத்துக்கும், அதில் உள்ள கட்டிடங்கள் அனைத்துக்கும் ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு 2002ம் ஆண்டில் உலக பாரம்பரிய அந்தஸ்து அளித்துள்ளது.

'கயா' யாத்திரை !  - Page 9 9g9foeMOSredGcpOOZKN+News_36472(1)

இந்த கோயிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் வளாகம் பீகார் அரசுக்கு சொந்தமானது. 1949ம் ஆண்டில் பீகார் அரசு புத்த கயா கோயில் சட்டத்தை நிறைவேற்றியது. நாட்டில் இருக்கும் பிறமதங்களின் சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிமை கொண்டாடுவதை வழக்கமாக கொண்ட இந்து மத அடிப்படைவாதிகள் இந்த வளாகத்துக்குள்ளும் ஒரு சிவன் கோவிலை கட்டிவிட்டு அதை நிர்வகிக்கும் உரிமையையும் கேட்டு சச்சரவை எழுப்பினர். அதையடுத்து இச்சட்டத்தை பயன்படுத்தி மாநில அரசு 1953ம் ஆண்டில் ஐந்து இந்துக்களையும், நான்கு புத்தமதத்தவரையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து கோவிலை பரிபாலித்து வருகிறது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இக்கோவில் உள்ளிட்ட வளாகத்தின் நிர்வாக உரிமைகளை புத்தமதத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகளை நிறைவேற்ற அரசுகள் மறுத்து வருகின்றன.இந்த கோவில் வளாகத்தில் உள்ள போதிமரம் புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் சந்ததிதான்.

கி.மு.2ம் நூற்றாண்டில் அரசர் புஷ்யமித்ரா சுங்காவும், கி.பி. 600ம் ஆண்டில் அரசர் சசாங்காவும் மரத்தை வெட்டி விட்டு அதன் கிளையை அங்கு ஊன்றி புதிய மரத்தை உருவாக்கியுள்ளனர். தான் ஞானம் அடைந்த மரத்தின் முன் நின்று கண்கொட்டாமல் புத்தர் ஒரு வாரம் தியானம் செய்துள்ளார். அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. 1881ம் ஆண்டில் அங்கிருந்த மரம் பட்டுவிட்டதால், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் பட்டமரத்தை அகற்றி விட்டு புதிய மரத்தை நட்டுள்ளார்.இந்த மரத்தின் கீழ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளனர். வெடிவிபத்தால் மரத்துக்கு சேதமில்லை புன்னகை

தொடரும் .....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 9:19 pm

இது மற்றும் ஒரு போட்டோ

'கயா' யாத்திரை !  - Page 9 9eFBq2U3SGIXh27k3F4Q+puthagaya04

இது தான் வாசல், ஆனால் இப்போ சைடு வழியாக உள்ளே போகும்படி வைத்திருக்கிறார்கள். நிறைய போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். இந்தியர்களுக்கு ஒரு ' பாஸ்' பச்சை கலரிலும் 'வெளிநாட்டவர்களுக்கு' சிவப்பிலும் தருகிறார்கள். நாம் உள்ளே இருக்கும் வரை அதை வைத்திருக்க சொல்கிறார்கள். கேட்கும்போது காண்பிக்கணுமாம்.

நம் நாட்டு ஆட்களைவிட வெளிநாட்டவர்கள் தான் நிறைய பேர் இருந்தார்கள். அந்த புனித அரச மரத்தை சுற்றி மண்டி இட்டு உட்கார்ந்து ஏதோ வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள். கோவில் ரொம்ப தூய்மையாக இருந்தது. ரொம்ப பெரிய புத்தர் விக்கிரகம் இருந்தது.

இதோ அதன் போட்டோ புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 9 LtVDnfGaTTG8O57VjXb1+Buddha_Bodh-Gaya

தொடரும்..........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 04, 2014 9:27 pm

இந்திய சன்யாசிகள் !

'கயா' யாத்திரை !  - Page 9 Xc3qxsJwRDigdwSjPb6T+IndianMonk07


மற்றும் வழிபாடு நடத்தும் சன்யாசிகள் !

'கயா' யாத்திரை !  - Page 9 XyUBs1mhS6C5wYla26ns+Bodhi-tree-600x401

தொடரும்.............





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக