புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
Guna.D
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Shivanya
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம வீட்டு சமையல்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:20 am

First topic message reminder :

கூழ் தோசை
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 1
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி... கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.
குறிப்பு: இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:24 am

பப்பாளி கூட்டு
தேவையானவை: பப்பாளிக்காய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பாசிப்பருப்பு - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 11
செய்முறை: பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வேகவைத்த பப்பாளிக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:25 am

நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்,  இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 12
செய்முறை: நெல்லிக்காயை நறுக்கி, கொட்டை நீக்கி இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:25 am

பாகற்காய் பிட்லை
தேவையானவை: பாகற்காய் - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 13
செய்முறை: துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால்... பாகற்காய் பிட்லை தயார்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:25 am

பிரண்டைத் துவையல்
தேவையானவை: இளம் பிரண்டை - 10 துண்டுகள், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 14
செய்முறை: பிரண்டைத் துண்டுகளை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை தனியாக எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து... புளி, உப்பு, தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு: இந்தத் துவையல், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:26 am

வேப்பம்பூ ரசம்
தேவையானவை: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு நெல்லிக் காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 15
செய்முறை: வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து... கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும். வேப்பம்பூவை வறுத்து சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:26 am

கீரை குணுக்கு
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, கீரை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.  
நம்ம வீட்டு சமையல் - Page 2 16
செய்முறை: மூன்று பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, வடிகட்டி... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை வதக்கி, அரைத்த மாவுடன் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:27 am

மிளகு மோர்க்குழம்பு
தேவையானவை: சேனைக்கிழங்கு - 100 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், மிளகு - 20, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், மோர் - 250 மில்லி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 17
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும். மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி வேகவிடவும். மோருடன் உப்பு, அரைத்த மிளகு - அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விட்டு... கடுகு, வெந்தயத்தை எண்ணெயில் தாளித்துச்  சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உடை யது மிளகு... நோய்களை குணப்படுத்தும் சக்தியும் வாய்ந்தது.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:27 am

பச்சை சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 200 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் -  ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 18
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை நசுக்கிப் போட்டு வதக்கவும். வதங்கிய உடன் சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு  டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:27 am

மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: மிளகு - 25, காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மாங்காய் வற்றல் - 4 துண்டுகள், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 2 19
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து,  சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து, அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, சிறிது கொதித் ததும் மாங்காய் வற்றலைப் போட்டு, வெந்ததும் இறக்கவும்.

குறிப்பு: மாங்காய் சீஸனில் மாங்காயை வாங்கி நறுக்கி, உப்பு சேர்த்து, ஊறவைத்து, காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:28 am

வெங்காயத் துவையல்
தேவையானவை: சின்ன வெங்காயம் - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
நம்ம வீட்டு சமையல் - Page 2 20
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இது... தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன். சாதத்துடன் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம்.

நம்ம வீட்டு சமையல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக