புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
4 Posts - 3%
bala_t
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
290 Posts - 42%
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
5 Posts - 1%
manikavi
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 15, 2014 7:55 am

Aathira wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அறவா வழிதனை,  மறவா தமிழ் பெண்கள்
அந்நிய  தாக்கம் ஆயிரம் இருப்பினும்
அடுக்களை அருவாமனையில்  
அரியாமல் இருக்க முடியும்
அறியாமல் இருக்க முடியாது .
அடியேன் அறிந்த விஷயமிது .  

ரமணியன்
அரிவதை அறிய மறந்தவர்கள், துறந்தவர்கள் பலர் உண்டு
நம் ஆதிரா அவருள் இல்லை என நம்புவோம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073862

அப்படி சொல்லுங்க சார். ரமணீயன் சார் எப்போதும் எனக்குத்தான் ஆதரவு.  ஆனா உண்மையா எதையும் சொல்ல்வாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1073924

அறவா வழிதனை
மறவா வழித்தோன்றலன்றோ எம்குலம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 15, 2014 7:59 am

ஜாஹீதாபானு wrote:இன்று தான் இதைப் படித்தேன் ஐயா... படிக்கும் போதே நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு வருகிறது. அருமையான பயணத்தை படங்களுடன் விளக்கிய விதம் சூப்பர். பகிர்வுக்கு மிக்க நன்றீ ஐயா.

மேற்கோள் செய்த பதிவு: 1073901

நன்றி பானு ! இன்னும் தொடரும் .பொறுத்துக் கொள்ளுங்கள் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 15, 2014 8:42 pm

நடைபயிற்சி நல்கிய நட்பு
சனி அன்று இரவு உணவு உண்ட பின் , 7.30 மணிக்கு ,  , welcome Dance .பயணிகளை வரவேற்று , நடத்திய நடன  நிகழ்ச்சிகள் . வண்ண வண்ண உடைகளில் ,கண்ணை பறிக்கும் ஒளிகளில் , செவியை செவிடாக்கும் ஒலிகளில் , ஐரோப்பிய நடனங்கள் . அறியாமை , அதிகம் ரசிக்க முடியவில்லை : ஆனாலும் ரசித்த மக்களும் , கூடவே பங்குகொண்ட ,விசிறிகளும் , ஒரு உற்சாக  கலகலப்பை உண்டாக்கி , நட்பு ரீதியான  அன்னியோனியத்தை வெளிபடுத்தினர்..  8.30 மணி சுமாருக்கு , கொஞ்சம் பழ வகைகள்/ ஐஸ்க்ரீம்  ஏதாவது கொறித்து விட்டு வரலாம் என்று டெக் 15 க்கு போனோம் . அங்கு தான் நீச்சல் குளங்கள் (பெரியவர்களுக்கு / சிறுவர்/சிறுமியருக்கு ) இருக்கிறது. அது வழியாகத்தான் கார்டன் கபே க்கும் போகவேண்டும் .  இரவு 8-30 மணிக்கும் அங்கே குளித்துக்கொண்டும் ,நீச்சல் அடித்துக்கொண்டும் பயணிகளின் ஆரவார கூச்சல்கள் . .( நீச்சல் குளம்  பற்றி தனி ஒரு சிறு பகுதி பின்னால் நீந்திவரும் ),  
கார்டென் கபே யில் .உட்கொள்ளும் உணவு பண்டங்கள்  /beverages எல்லாம் டிக்கட்டில் சேர்க்கப்பட்டுள்ளன . தனியாக பணம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று , ஆனந்த் கூறி இருந்தான்.   பழங்கள் / ஐஸ்கிரீம் உண்ட பிறகு சிறு வாக்கிங் போய்  வரலாம் என்று நினைத்து வெளியே வரும்போது , முடிவில் பெரிய கண்ணாடி அலமாரிகளில் விதவிதமான உற்சாக பானங்கள் விதவிதமாக . மக்களும் தள்ளாடாமல் தங்களுக்கு பிடித்த சரக்குகளை வாங்கிக்கொண்டும், அமைதியான இடம் நாடி சென்று கொண்டு இருந்தனர்.
அந்த ஸ்டால் பக்கம் போன போது என் கண்ணில் பட்ட  உ.பா. வை பார்த்ததும்   ஈகரையில் கலாய்க்கப்படும் முக்கிய தலைகள் மனதில் தோன்றினர் .     கேள்வி ஞானம் தான் , கண்டறியேன். உ. பா வின் பெயர் சிவாஸ் ரிகள்  . தமிழ் படுத்தினால் உ.பா.சிவாவின் ராஜ பாரம்பரியம் . இதே முக்கியமான தலைகள் , மீண்டும் ஒரு முறை , பிறிதொரு நேரத்தில் , வேறொரு முக்கியமான  சூழ்நிலையில் நினைவிற்கு வந்தனர் . அதை பிறகு கூறுகிறேன்.  (இப்போதைக்கு  என் தறி கெட்டு  ஓடிய கற்பனையை  மன்னித்தருள்க . ) .  கபே யில்  பொருளுக்கு விலை இல்லை என்றாயே , இந்த  உ.பா விற்கும் பொருந்துமா ? ஆனந்தை கேட்ட போது , "  இல்லையில்லை--இலவசம் இதற்கு அப்பாற்பட்டது .விலையே ,ஒன்றுக்கு இரெண்டாக  இருந்தால் ஆச்சர்யபடமுடியாது . கிடைக்கும் சில இலவசங்களும் இந்த உ.பா வின் உதவியால்தான் என்றான்.  தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலகில் எல்லா இடங்களிலும் இலவசம் தலை காட்டும் போது , தண்ணிமுக்கிய  பங்கு வகிப்பது  உலகறிந்த  உண்மை   .
டெக்  15.
காம்ப்ளிமென்டரி  உணவகங்கள் , கார்டென் கபே , காலை 6 முதல் 7-30 வரை குளிர், சூடு பானங்கள் ,பால் , ப்ளைன் காபி , டி , க்ரீன் டி  முதலியவை கிடைக்கும் . பிறகு 730 மணி முதல் buffet  காலை உணவு.
மற்றபடி a la carte  உபசரிப்புகள் savor ,taste ,Flamingo Bar &grill ,tropikaana முதலிய இடங்கள். அதை தவிர இட்டாலியன் -La Cucina , Japanese --டெப்பன்யாக்கி ,French -Le Bistro  வாயில் நுழையாத பெயர்கள் -வாயில் போடப்போவது இல்லை என்பதால் ,அதன் வாயிற் பக்கம் கூட போகவில்லை .   எங்களுக்கு வேண்டிய சுத்த சைவ உணவுகள் /நொறுக்ஸ் / பால் காப்பி /டி , பழ ரசங்கள்  ஐஸ் கிரீம்கள் கர்டன் கபே /Savor  ரெண்டு இடங்களிலும் ப்வேண்டுமளவு கிடைத்ததால் , வேறு இடங்களுக்கு போக முயற்சிக்கவே இல்லை. மொத்தம் 27 சாப்பிடும் இடங்கள் 20 பார் வசதிகள்.வெளியிலும் /உட்பக்கத்திலும் ஒரே நேரத்தில் தண்ணியில் மிதக்க .


இந்த லின்க்கை பாருங்கள் .
முக்கியமான சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு .https://www.youtube.com/watch?v=Uszd2ju90zk
நீச்சல் குளம் ,குழந்தைகள் kids pool , aqua park, சூரிய குளியல் லவுஞ்சு சாய்வு நாற்காலிகள் , ஹோட்டல் cafetria ,திறந்த வெளி சினிமா தியேட்டர் ,காசினோ முதலியன வீடியோ வடிவில்  

2ம் நாள் காலை .5.55  good  morning கூறிக்கொண்டே கிறிஸ் ( எங்கள்  தள steward )  பெட் காபி கொண்டுவந்து கொடுத்தார் .2 flask இல்  . எங்கள்  இருவருக்கும் ஒரு flask போதுமானதாக இருந்ததால் , மறுநாள் முதல் ஒன்றே போதும் என்று கூறிவிட்டோம் .
Personal hygiene முடித்துக்  நடை பயிற்சியை 2ம் நாள் காலை 6 3/4  மணி சுமாருக்கு ஆரம்பித்தோம்.5.30 மணிக்கே சூர்ய உதயம் ஆகிவிட்டு இருந்தது. இளம் வெய்யிலில் , டெக்  16 இல் , ஜாகிங் தளம் . அதை ஒட்டி சூரிய குளியலுக்குக்காக lounge நாற்காலிகள் .  

ஜாகிங் தளத்தில் 8 சுற்றுகள் சுற்றினால் ஒரு மைல் என்று குறிப்பிட்டு இருந்தார்கள் .16 இல் ஜாகிங் செய்துவிட்டு , 15 இல் சாப்பிட வசதியாக இருக்கும் என்பதால் 16 இல்  ஜன நடமாட்டம் சிறிது அதிகமே . 8 ம் டெக்கில்  ஓரிருவரே வருவார்கள் என்பதால் அங்கேயே நடை பயிற்சியை தொடர்ந்தோம்.
US  இலும் அதே போல் இந்த கப்பலிலும் நம் எதிரே யார் வந்தாலும் , முகத்தில் புன்சிரிப்புடன் ஹாய் என்று முகமன் கூறுவதும் கையை சிறிதே அசைத்து வாழ்த்து கூறுவதும் வரவேற்க தக்க விஷயமாக கருதுகிறேன். நட்பு வலையம் பெருக இது ஒரு சிறந்த சாவி . நடை பயிற்சி செய்யும் நாட்களில் , டெக் 8 , வெளி சுற்று இரு  முறை சுற்றினால்,  உத்தேசமாக ஒரு கிலோமீட்டர். வெளி சுற்று பாதையை ஒட்டி , உட்கார இருக்கைகள் அதை ஒட்டி காபி ஷாப் . கேட்கும் பண்டங்கள் தருவதற்கு வெயிட்டர்கள் .

இது மாதிரி சூழ்நிலையில் , வாக்கிங் போகும்போது ஒரு இளம் தம்பதிகளை  கண்டோம். எப்போதும் ,மடிகணினி,குறிப்பெடுத்தல் , சிறிதே உறவாடல் துணைவியுடன் , தட்டச்சிடுவது . வழக்கம் போல் ஹாய் யில் ஆரம்பித்து கை அசைத்து , குட் மார்னிங் கூறி, நட்பு சிறிதே வளர்ந்தது. எல்லா ஜனங்களும் கேளிக்கையில் ஈடுபட்டு உள்ள போது இவர்கள் மட்டும் கணினி சகிதம் மும்முரமாக வேறு வேலையில் ஈடுபட்டு இருப்பது சிறிதே ஆவலை தூண்ட ,

ஒரு நாள் ,மன்னிக்க கோரி பேச்சை ஆரம்பித்தேன் . அவரும் சகஜமாகவே பேசி ,தன்னிலை விளக்கினார் .   சுருக்கமாகவே நம் ஈகரை உறவுகளுக்கு .
அந்த ஆண்மகன்  முது நிலை படிப்பு முடித்து  , பிரபல பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியாராக உள்ளார். முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இது வரை மற்றவர்கள் கூறிய விஷயங்களை பாடங்களாக எடுத்து உரைத்தது  போல் தானும், ஒரு டாக்டரேட் செய்து , தன்னுடைய ஆராய்சிகளை புத்தகமாக வெளியிட்டு ,அதை மற்றவர்கள் படித்து , முன்னேற வேண்டும் என்பது ஒரு ஆசை . முது நிலை படித்தது எனக்காக ,டாக்டரேட்  பண்ணுவது சமூகத்திற்காக, என்று கூறியவர் , இந்த சூழ்நிலையில் நிம்மதியாக உட்கார்ந்து இறுதியாக திருத்தவேண்டியவைகளை திருத்தி , படித்த மனைவியுடன் சில விஷயங்களை விவாதித்து , இறுதி ரிப்போர்ட் தயார் செய்து வருகிறேன் என்றார் .

என்னை சிறிது தடுமாற வைத்த ஒரு கேள்வியும் கேட்டார் .  " உங்கள் நாட்டில் Ph.D  பண்ணுவதற்கு என்ன நடைமுறை என்று கேட்டார் ." நுணலும் தன்   வாயால் கெடும்" என்பது போல், நான் ஏதோ கேட்கப் போய் , ------------, சரி , சமாளிப்போம் . நாம் சொல்வது சரியா  என்று இவர் செக் அப் பண்ணவா போகிறார் . அய்யா , உங்கள் ஆர்வம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது.(மெய் இல்லை .) எல்லா பல்கலை கழகங்களுக்கும் சில விதி முறைகள் உண்டு .அங்கும்  இங்கும் சில வேறுபாடுகள் இருக்கலாம் . ஆனாலும் 90 % எல்லாம் ஒத்தே இருக்கும் . முதலில்  முதுநிலை முடித்து , பல்கலை கழகத்து விருப்பம் தெரிவித்து , அவர்கள் நடத்தும் பரிட்சையில் தேர்வு பெற்று , தேர்வு பெற்றவர்கள் எந்த துறையில் , எதை பற்றி ஆய்வு செய்ய உத்தேசம் , எவ்வளவு காலத்தில் ஆராய்ச்சி முடிவு , உத்தேச செலவு எல்லாம் எழுதிட , அதை university grants commission (எப்படி எழுதுவது பல்கலை கழக நிதிநிதிஉதவி ஆணையமா -----)  ஆராய்ந்து  ஒத்துக்கொண்டால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். உதவுவதற்கு முற்றும் கற்றறிந்த வல்லுநர் உதவி கிடைக்கும் அவர் வழிபாட்டில் , ஆராய்சிகளை செய்து , ஆய்வுநூலை சமர்பித்தால் , சரி என்று பட்டால் , viva -voce ,கமிட்டி முன் நேர்முக பரீட்சை etc பட்டமளிப்பு . என்று கூறி , சமாளித்தேன் . (அய்யா /அம்மா முனைவர்களே--உதவுங்கள் . சரியான முறை யாது என்பதை அறிய உண்மையிலேயே ஆவலாய் உள்ளேன் )
அவர் வேறு கேள்வி கேட்கும் முன் , உங்கள் யுனிவெர்சிடியில் எப்படி என்று கேட்டேன் ?  
அங்கேயும் அதே மாதிரிதானாம் சின்ன சின்ன மாறுபாடுகளுடன் .

உங்களுக்கு நட்புவட்டத்தில் ,உறவினர்கள் யாராவது முனைவர்கள்  இருக்கிறார்களா ? என்று வினவ ,நேரில்  பேசி அளாவளாவிய ஆதிரா , சுந்தரராஜ் தயாளனும் , எந்தன் பேட்டை வாழ் சௌந்தரபாண்டியன் அய்யா அவர்களும்  கண் முன் தோன்ற ,நட்பு வட்டத்தில் 4/5 பேரும்  உறவினர்களில் 4 பேர் இருக்கிறார்கள் என்றேன் . அதிர்ஷ்டசாலி என அவர் மகிழ , நானும் மகிழ ..

Dr.Banumathi ,Dr.சுந்தரராஜ் தயாளன்  Dr.Soundara Pandiyan
முனைவர் பட்டம் பெற , நீங்கள் உழைத்த உழைப்பு, அர்பணித்த நேரம் , இரவை பகலாக்கி எழுதிய குறிப்புகள் , அலசிய வரலாறு நூல்கள் ,சந்தித்தத் வேறுபட்ட மனிதர்கள்  இவற்றை நினைக்கையில்,  உங்கள் தனி மனித  முயற்சி பெருமை பட வைக்கிறது
.  


மிகவும் பிரயத்தனப்பட்டு , பல்வேறு சுகங்களை தியாகம் செய்து , டாக்டர் பட்டம் பெறும் வல்லுனர்களும் அறிவாளிகளும் ஒரு புறம் இருக்க , just like that  என,  சமூக சேவை செய்யாது ,பணம் குடுத்து , பயம் காட்டி டாக்டர் பட்டம் வாங்கும்   ஒரு கூட்டமும் நாட்டில் உள்ளது .பஹாமாசில் வேறு  மாதிரி ஒரு மனிதரை பார்த்தேன் . அதை பிறகு கூறுகிறேன் .  


ரமணியன்

நடைபயிற்சி நடனத்தை தொடர்கிறது .-------------



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 15, 2014 9:02 pm

அய்யா நீங்கள் விளக்கி தப்பித்தது மிக நன்று புன்னகை

முனைவர்கள் தங்களின் துனைவர்களாகி விட்டனர் நட்பினூடே - அந்த எதிர்கால முனைவரும் தான்.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 16, 2014 9:11 pm

அந்த நட்பு ரயில் நட்பு மாதிரி , இனி .
சந்திப்புகளில் இறங்கும் போதே, சந்திப்பை மறந்து விடுகிறோம் .
நட்பெனில் ஈகரை நட்பாக இருக்கவேண்டும் அல்லவா?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 16, 2014 10:08 pm

[quote="T.N.Balasubramanian"][u] 90 % எல்லாம் ஒத்தே இருக்கும் . முதலில்  முதுநிலை முடித்து , பல்கலை கழகத்து விருப்பம் தெரிவித்து , அவர்கள் நடத்தும் பரிட்சையில் தேர்வு பெற்று , தேர்வு பெற்றவர்கள் எந்த துறையில் , எதை பற்றி ஆய்வு செய்ய உத்தேசம் , எவ்வளவு காலத்தில் ஆராய்ச்சி முடிவு , உத்தேச செலவு எல்லாம் எழுதிட , அதை university grants commission (எப்படி எழுதுவது பல்கலை கழக நிதிநிதிஉதவி ஆணையமா -----)  ஆராய்ந்து  ஒத்துக்கொண்டால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். உதவுவதற்கு முற்றும் கற்றறிந்த வல்லுநர் உதவி கிடைக்கும் அவர் வழிபாட்டில் , ஆராய்சிகளை செய்து , ஆய்வுநூலை சமர்பித்தால் , சரி என்று பட்டால் , viva -voce ,கமிட்டி முன் நேர்முக பரீட்சை etc பட்டமளிப்பு . என்று கூறி , சமாளித்தேன் . (அய்யா /அம்மா முனைவர்களே--உதவுங்கள் . சரியான முறை யாது என்பதை அறிய உண்மையிலேயே ஆவலாய் உள்ளேன் )

 ரமணீயன் சார் 100 சதவீதம் உண்மையாகச் சொல்லியுள்ளீர்கள்.

உங்களுக்கு நட்புவட்டத்தில் ,உறவினர்கள் யாராவது முனைவர்கள்  இருக்கிறார்களா ? என்று வினவ ,நேரில்  பேசி அளாவளாவிய ஆதிரா , சுந்தரராஜ் தயாளனும் , எந்தன் பேட்டை வாழ் சௌந்தரபாண்டியன் அய்யா அவர்களும்  கண் முன் தோன்ற ,நட்பு வட்டத்தில் 4/5 பேரும்  உறவினர்களில் 4 பேர் இருக்கிறார்கள் என்றேன் . அதிர்ஷ்டசாலி என அவர் மகிழ , நானும் மகிழ ..

Dr.Banumathi ,Dr.சுந்தரராஜ் தயாளன்  Dr.Soundara Pandiyan
முனைவர் பட்டம் பெற , நீங்கள் உழைத்த உழைப்பு, அர்பணித்த நேரம் , இரவை பகலாக்கி எழுதிய குறிப்புகள் , அலசிய வரலாறு நூல்கள் ,சந்தித்தத் வேறுபட்ட மனிதர்கள்  இவற்றை நினைக்கையில்,  உங்கள் தனி மனித  முயற்சி பெருமை பட வைக்கிறது
.  


/quote] மேற்கோள் செய்த பதிவு: 1074076

நேற்றே படித்தேன் ரமணியன் சார். வெகு அழகான விமர்சனம். அழகான நட்பு. உங்க ந்ட்புல நாங்கல்லாம் இருக்கோம். உங்கள் அன்பு மனத்தில் இருக்கோம் என்பதில் மகிழ்ச்சி. தொடருங்க அடுத்து சந்தித்த நபரைப் பற்றி.



பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Tபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Hபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Iபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Rபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Aபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 16, 2014 10:24 pm

முன்னிறுத்திய முனைவரொருவர் மொழிந்தால்,
வழிமொழிவதன்றோ அழகு புன்னகை தொடருங்கள் அய்யா அழகிய பயணத்தை...




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 18, 2014 9:19 pm

நீச்சல் --நடனம்

நீச்சல் 18 மணி நேர இடை விடா விளையாட்டு . அனுபவிப்பதற்கென்றே
காலை 6 மணி அளவில் நடை பயிற்சி செய்யும் போதும் குளித்துக் கொண்டு இருந்தார்கள் இரவு 11மணி சுமாருக்கு அறை திரும்பும் போதும் குளித்துக்கொண்டு இருந்தார்கள் .குளிப்பது , குளித்துக்கொண்டே இருப்பது ,குடித்துக் கொண்டே குளிப்பது , அயற்சி  சிறிது ஏற்படின் , கொண்டு வந்த துண்டால் ஈரம் அகற்றி , புது துண்டு பெற்றுக்கொண்டு , உடம்பில் கிரீம் தடவி  உணவகம்  போகவேண்டியது  கொறிக்க.  பசி இல்லை எனில் மேல்தளம் சென்று சூரியக்குளியல் .
டவல் ஸ்டேஷன் ஒன்று உண்டு நீச்சல் குளம் அருகே . ஈரத்துண்டை கொடுத்தால் , sterilize  பண்ணிய புது துண்டு.

பெரியோர் நீச்சலகத்தில் காலை 10 மணி அளவில் மியூசிக்/ பேண்ட்/ ஆரம்பம் . மாலை 4 /5 மணி வரை கூத்து கும்மாளம் உபா வும் உண்டு .
நம் நாட்டிலும் பார்த்து இருக்கலாம் .நாளெல்லாம் வெய்யிலில்  ஸ்விமிங் செய்து வீடு திரும்பையில் ,உடல் கருத்தே இருக்கும் . வெண்தோல்  வேண்டாமென, tanning செய்துகொள்வது அல்லது சூரிய குளியல் செய்வது அமெரிக்க ஐரோப்பிய கலாச்சாரம் என்பது நாம் அறிந்ததே. கண்ணியம் குறையாத அளவு கச்சையும் கீழாடையும் அணிந்த பெண்களும் ,trunks எனப்படும் அரை ஆடை அணிந்த ஆண்களும் ,வயது , ஆண் , பெண் ,உறவினர் ,நண்பர்கள் , வித்தியாசமின்றி குதித்துக் கொண்டும் குளித்துக்கொண்டும் இசைக்கேற்ப விரசமின்றி , ரசமாகவே நடனம் ஆடிக்கொண்டும் இருப்பதை பார்க்கையில் ,வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக கவலைகள் மறந்து அனுபவிக்க வேண்டும் என்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் . அவர்கள் நடனம் M TV இல் வரும் THE  GRIND முறையிலமைந்து இருந்தது .

குழந்தைகள் குளிக்கும் இடம் ,ஆழம் அதிகம் இல்லாது ,theme பார்க்கில் உள்ள விளையாட்டு வசதிகளுடன் , இரண்டு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் எப்போதும் இருக்கும்  .இரவு நேரங்களில் ,பாதுகாப்பு கருதி ,குழந்தைகள் நீச்சல் தடாகம் முடி இருக்கும்.

கப்பலுக்கு வேண்டிய தண்ணீர் தேவைகள் , கடலில் இருந்தே எடுக்கப்பட்டு  RO முறைப்படி   சமையலுக்கு, குடிப்பதற்கு ஏற்றபடி  சுத்திகரிக்கப்படுகிறது. அதில் வடிகட்டிய நீர் குளியல் , ஸ்விம்மிங் , பாத்ரூமிற்கு அனுப்பபடுகிறது. அந்த தண்ணீரின் சுத்தமும் , களங்கமில்லா தெளிவும் நம் ஊர்களில் தற்போது  காண்பது அரிது . அந்த காலத்தில் காவிரியில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்று நீரின் களங்கமின்மையை ஸ்ரீரங்கம் /திருச்சியில் கண்டுள்ளேன் .  
குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதில் குறியாக உள்ளார்கள் . தினமும் இரு வேலை அறைகளை சுத்தம் செய்து, மறு நாள் விசேடங்களை /முக்கிய நடப்புகளை நியூஸ் லெட்டர் மூலம் ,(அச்சடிக்கப்பட்டது ) நம் அறையில் வைக்கப்பட்டு இருக்கும் . அதன் கூடவே ,குழந்தைகள் விரும்பும் படி கைதுண்டுகளில்  பொம்மைகள் செய்து வைத்து இருப்பார்கள் .  பார்வைக்கு 3 படங்கள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 2r5vpew
[url=பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 V4tcfl]
[url=பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 Rc64jl]

தினம் தினம் சினிமா ,3D சினிமா பெரிய திரைகளில். , நடனங்கள் , நடன பயிற்சி , மேஜிக்   ஷோ, சர்கஸ் , ஒரிகாமி என்று பலவிதமாக நம்மை மகிழ்விக்க ,நிகழ்சிகளை நடத்தி வந்தனர்.

Popஇசைக்கு வழங்கும் Grammy award ஐ ஒத்தது    Tony award என்பது .
Legally Blonde என்ற இசை நாடகம் . முக்கியமாக பேசப்படுகிறது 7 Tony பரிசுகள் அடைந்த இசை ரூபத்தில் நடிக்கப்பட்ட நாடகம் .வசனங்களுக்கு பதில் பாடல்கள்  .நல்ல வரவேற்பு 2 நாட்கள் இரவு 8 மணிக்கும் 10 மணிக்கும் மொத்தம் நான்கு  முறை .

Blonde என்றும்  Brunette என்றும் பெண்களின் தலை முடிக்கேற்ப பெண்கள் பிரிக்கப்படுகின்றனர் . பொதுவாக Blonde எனப்படும் தேன் நிற /செம்பட்டை முடி பெண்கள் ,Brunette  எனப்படும் சிறிது கருமை கலந்த பெண்களை விட சிறிது அறிவு குறைந்தவர்கள் என்ற அபிப்ராயம் பரவலாக உள்ளது . . ஏமாற்றப்பட்டு , நிராகரிக்கப்பட்ட Elle Woods என்ற  அந்த Blonde ( பெண்) , தன்னை ஒதுக்கிய ஆண்மகன் படிக்கும் ஹார்வர்டில் சேர்ந்து அவன் கூடவே சட்டம் பயின்று ,அவனை விட நல்ல முறையில் தேர்ச்சி பெற்று , நிராகரித்தவனே , தன்னை மணம் புரிய அழைப்பு விடுகையில் , அவனை இவள் நிராகரிக்கிறாள் . நமக்கு பழக்கமான தெரிந்த கதைதான் என்றாலும் இசையின் வெளிப்பாடுகள், நடிப்பு ,செட்டிங்க்ஸ் மனதை கவர்ந்தன .
இசை ,நடிப்பு மூலம் கதை கூறினாலும் , இசை ரூபத்தில் கேட்பதோ பார்ப்பதோ புதிது அல்லவே நமக்கு ..நம்மை பழக்கப்படுத்தி ,  கவிதை ரூபத்தில் தன்  கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.  

தினமும் Salsa ,Rumbaa , Samba நடனங்கள் Burn The Floor என்ற தலைப்பில் நடனமேறும் . கலந்து நடனம் ஆட விரும்புவர்களுக்கு, மதிய நேரத்தில் ஸ்டெப்ஸ் சொல்லிகொடுக்க guides உண்டு .

3ம்  நாள்,  கப்பல் கேப்டன் பயணிகளுடன் 1015 மணிக்கு  காலை டெக் 8இல் கலந்துரையாடுவார் . கப்பல் தொடர்பான செய்திகள் பகிர்ந்து கொள்வார். தெளிவு பெற வேண்டிய சந்தேகங்கள் கேட்கலாம் , என்ற செய்தி , நியூஸ் லெட்டரில் இருக்க , அவரை சந்திக்க பிளான் பண்ணினோம்.,
அந்த நாள் , திவ்யா ,கேப்டனை பார்த்து அது மாதிரி கேள்வி கேட்டது ,நாங்கள் எதிர் பாராத ஒன்று .
கேப்டனும் சிரித்துக்கொண்டே , "Young Lady , I too had  similar  doubts -------------------------"

சந்தேகங்கள் நாளை தீரும் --------------------------------

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 19, 2014 12:02 am

இன்று தான் ஐயா உங்களது பயண கட்டுரையை பார்த்தேன். வெகு அருமையாக உள்ளது. அது என்ன மிதக்கும் கப்பலா? அல்லது இந்திரபுரியா? வெகு சுவாரசியமாக செல்கிறது உ(எ)ங்களது பயணம்.  கைதுண்டுகளில்  செய்து வைத்திருந்த பொம்மை அழகு. உங்களது பயணத்தை தொடருங்கள், தொடர்ந்து வர ஆவலுடன் காத்திருக்கிறேன்.




பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 21, 2014 8:34 am

நன்றி விமந்தினி .
எனது மகன் , கடலில் உல்லாச பயணம் போகலாம் என்ற போது , 8 நாட்கள் கடலில் போர் (Bore ) அடிக்காதா என்று சந்தேகப்பட்டது உண்டு . இருந்ததை எல்லாம் முழுமையாக பார்க்க ,இன்னும் ஒரு வாரம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் தான் எஞ்சியது , விடை பெறுகையில் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக