உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Aathira on Sun Nov 22, 2015 11:28 am

@mkrsantharam wrote:[center][size=24][color=#993300]   ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
[/u]
மேற்கோள் செய்த பதிவு: 1173257

சுத்தத் தமிழில் திட்டி விடுகிறோம்.

திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தங்களை இது போன்ற ஆயிரம் கதைகள் திரும்பிப் பார்க்கட்டும்.  அதைத் தொடர்ந்து எழுதி எழுதித் தங்கள் கைகள் வலிக்காது இருக்கட்டும்.

அழகான பதிவுகள். முழுப் பதிவும்  இன்றைய என் காலைக்கு உணவாகியது. நன்றிகள் எம். கே. சாந்தாராம்.


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Aபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Aபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Tபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Hபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Iபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Rபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Aபழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Sun Nov 22, 2015 5:38 pm

@mkrsantharam wrote:ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  
எம்கே ஆர்சாந்தாராம்
அது எப்படி எங்களால் முடியும் ஐயா ....

இறைவன் உங்களுக்கு நோய்நொடியில்லாத நீண்ட ஆயுளை அளித்து , நீங்கள் இது போல இன்னும் பல்லாயிரம் கட்டுரைகளை எழுதி உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31208
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Sun Nov 22, 2015 6:38 pm

MKR Santharam wrote:( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் !  மகிழ்ச்சி )

மணம் கமழும் சந்தன பதிவுகள்
மனம் வருமா திட்டுவதற்கு ?
தொடருங்கள் அய்யா , எப்போதும் போல் ,
ஆர்வத்தை தூண்டும் நடையில் ,
அழகு தமிழில் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அணிவகுத்து நிற்போம் , படிப்பதற்கு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Dec 11, 2015 5:03 pm

கடிதங்களை அன்புடன்

வரைந்த :1. திரு . ஹரி பிரசாத்

அடியேன் எழுதும் எழுத்துக்களை அணு அணுவாக

நீங்கள் ரசிப்பதற்கு , உங்களின்

மேற்கோளே சாட்சி !

நன்றி , ஹரி பிரசாத் !
2 . திரு . பழ முத்து ராமலிங்கம் :


" அனைவருக்கும் அறிந்த செய்திதான் , ஆனால் திரு. ஹரி பிரசாத்

போன்ற இளம் தலை முறைக்கு இந்த தொகுப்பு

புதியவை தானே !

உங்களுக்கு என் நன்றி !
"

3 . மாணிக்கம் நடேசன் :


ஐயா , தங்களின் பாராட்டுக்களுக்கு நான் எப்பொழுதும்

நன்றி உடையவனாக இருப்பேன் !

நன்றி ஐயா !

.4 . திரு . பி . கே . செல்வா


உங்களுக்கும் நன்றி ஐயா !
5. சகோதரி . ஆதிரா :

அன்புச் சகோதரி !

திரைப்படங்களைப் பற்றியும் , திரைப்படப் பாடல்களையும்

நீங்கள் எங்கே ரசிக்கப் போகிறீர்கள் என்று

" தப்பு கணக்கு "

போட்டுவிட்டேன் !

உங்களின் எழுத்துக்களில் தொனித்த நகைச் சுவை உணர்வை

மிகவும் ரசித்தேன் !

மிகவும் நன்றி , சகோதரி !


6. திரு. ராஜா :


உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி , ராஜா சார் !

7. திரு . தி . என் . பாலசுப்பிரமணியன்


உங்களின் மனம் கவரும் எழுத்துக்களுக்கு மிக்க

நன்றி , ஐயா !

ஆகிய அனைவருக்கும் நன்றி !

நன்றி !

நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் : 6

" ஏனடி ரோஜா !

என்னடி சிரிப்பு !

எதனை கண்டாயோ ! "படம் : " காட்டு ரோஜா " ( 1963 )

பாடியவர் : பி . சுசீலா

இசை : கே . வி . மகாதேவன்

பாடல் : கவியரசு . கண்னதாசன் .

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 IX1OeZmTS96uA22JM6Xw+maxresdefault
" நாட்டிய " பேரொளி " பத்மினி .
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 OwEISjTRmmF0peEZTnnT+artist_25582லலிதா - பத்மினி - ராகினி - ஆகிய சகோதரிகள்

முதலில் , அந்த கால பிரபல நடனக் கலை நிபுணர் உதய சங்கர் ,

தயாரித்த " கல்பனா " என்கிற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம்

ஆயினர் !

அந்த படத்தைப் பார்த்த ஏ . வி. எம் செட்டியார் , பின்னர் தான் தயாரித்த

" வேதாள உலகம் " படத்திற்கு நடனமாட பத்மினி - லலிதா வை

ஒப்பந்தம் செய்தார் !

அதன் பின்னர் நிறைய படங்கள் !

பத்மினியின் நடனங்கள் நிறைந்த படங்கள் !

" மணமகள் " படத்தில் பத்மினியின் நடிப்பைப் பார்த்து ,

" இப்படி எல்லாம் உணர்ச்சிகரமாக இவர் நடிக்கிறாரே , நான்

இப்படி எல்லாம் நடிக்க வருமா ! "

என்று ' பெரு மூச்சு ' விட்டவர் :

பத்மினிக்கு பின் நடிக்க வந்த " ஜூனியர் " :

சிவாஜி கணேசன் !

அதற்கு பின்னர் அதே சிவாஜியுடன் 44 படங்களுக்கும்

மேல் பத்மினி நடித்தார் !

அதற்கு பின்னர் எம்ஜிஆர் - ஜெமினி கணேசன் - எஸ் .எஸ் . ஆர்

, இந்தி நடிகர் ராஜ் கபூர் என அனைத்து இந்திய நடிகர்களுடன்

நடித்து அகில இந்திய நட்சத்திரம் என்கிற பெயருடன்

மகப் பெரிய புகழுடன் விளங்கி வந்தார் !இது பத்மினி !@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" அபிநய சரஸ்வதி "

பி . சரோஜாதேவி .
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 LiPhpOf9SbyYRPXc47CA+imagesதமிழில் , " தங்க மலை ரகசியம் " போன்ற படங்களில் சிறு சிறு

வேடங்களில் நடித்து வந்த சரோஜாதேவி எம்ஜிஆரின் " நாடோடி மன்னன் " படத்தில்

அதாவது பத்மினி நடித்து புகழ் பெற்று ஏறக்குறைய 8 ஆண்டுகள் வந்த " ஜூனியர் "

நடிகை பி . சரோஜாதேவி .

ஸ்ரீதரின் " கல்யாண பரிசு " இவரை உச்சத்தில் கொண்டு போய் விட்டது ! அப்போதில்

இருந்து இவருக்கு ஏறுமுகம் தான் !

அந்த படத்திற்கு பின் இவர் பத்மினியை " ஓவர் டேக் " செய்தார் !


இது சரோஜாதேவி !
" என்னய்யா ஆச்சு , உமக்கு ? ஏன் இந்த நடிகைகளின்

ஆராய்ச்சி ? "என்றா கேட்கிறீர்கள் ?" சோழியன் குடுமி சும்மா ஆடுமய்யா ! "


1961 ஆம் ஆண்டில் நடிகை பத்மினி , டாக்டர் ராமசந்திரனை திருமணம்

செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார் !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 ZUMtQ5WsSemRrmJEGPtp+Padmini-Husband-1970s


அவ்வளவுதான் !


பி . சரோஜாதேவி காட்டில் மழை !

ஆனால் ......செம்பரம்பாக்கம் ஏரியை ,

, ஏரி நிரம்பி இரண்டு நாட்கள் கழித்தும் முறைப்படி அனுமதி

வாங்கி , திறக்கவே முடியாத அளவுக்கு

அடை மழை !


பத்மினி விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இவரை மொய்த்துக் கொண்டார்கள் !

எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் - இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு

சரோ ( ! ) வை " புக் ' செய்ய அலைந்தார்கள் !


எப்படி ?


1. சரோ வை அறிமுகம் செய்த எம்ஜிஆர் இவருக்காக காத்துக் கிடந்த

கொடுமை !

" ஏன் கடமை " படத்தின் படப் பிடிப்பை சொதப்பினார் !2. ஒரே சமயத்தில் - ஒரே கால கட்டத்தில் :

காலையில் சிவாஜியுடன் படப்பிடிப்பு : " ஆலையமணி "

மாலை - இரவு எம்ஜிஆருடன் படப்பிடிப்பு : " பணத்தோட்டம் " !3. சிவாஜியின் " புதிய பறவை " படப்பிடிப்பில் ஒரே சொதப்பல் !4. எம்ஜிஆரின் " தெய்வத்தாய் " படத்தில் இவர் செய்த " கோல் மால் " கள் .

" இனி எம்ஜிஆருடன் இவர் நடிக்கும் இறுதிப் படம்

" தெய்வத்தாய் " என்று சொல்லும் அளவுக்கு இருந்தது !இப்படி பல புகார்கள் - நடிகை சரோஜாதேவி இடம் !

இந்த " கூத்து" க்களை வேடிக்கை பார்த்து வந்த

கவியசு கண்னதாசன் , சரோஜா தேவி மீது வெறுப்பு கொண்டார் !

" இந்த பெண் தமிழ்ப் பட உலகை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறார் ! "

என்று வெறுப்புடன் சொன்னார்


பின்பு சொன்னார் :" இந்த " தயிர்க்கார பொம்பளைக்கு "

இவ்வளவு ' டிமாண்டா ! "அது என்ன " தயிர்க்கார பொம்பளை ? "


அது வேறு ஒண்ணும் இல்லே !

நடிகை சரோஜா தேவி யின் தாயார் , கர்நாடகாவில் அவர் நடிக்க வருவதற்கு

முன் தயிர் வியாபாரம் செய்து வந்தாராம் !

அத்தான் !

இதனை நான் சொல்லவில்லை, ..................

கண்ணதாசன் சொன்னது !
[color:ef79= #339900]இந்த சமயத்தில் தான் ..................


நடிகை பத்மினி , திருமணத்திற்கு ப பின் .....

மீண்டும் நடிக்க வந்தார் !" காட்டு ரோஜா " ( 1963 ) படத்தில் ஒப்பந்தம்

ஆனார் !

கண்னதாசன் அந்த படத்திற்கு பாடல்களை எழுதினார் !இதுதான் நல்ல சமயம் ..........

பத்மினியை வரவேற்று .....

சரோ வை சாடி அவர் எழுதிய பாடல் :


" ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு ! "இனி பாடலுக்கு வருவோம்
இந்த பாடல் முழுவதும் ,

நடிகை பத்மினி , நடிகை சரோஜா தேவி யை நோக்கி நக்கலாக பாடுவதாக

கண்ணதாசன் எழுதியுள்ளார் !

எனவேதான், படப்பிடிப்பு நடத்தும் போது, பத்மினியின் கையில்

ரோஜாப் பூக்களை திணித்துகே கொடுத்து ,

" அம்மா சரோஜாதேவி ! இந்த பாடல் நிஜ ரோஜாக்களைப் பார்த்து தான்

பத்மினி பாடுகின்றார் !

உங்களை நினைத்து அல்ல ! "

என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் !இந்த அழகில் இந்த படத்தின் பெயர் :


" காட்டு ரோஜா "


" ஏனடி ரோஜா "


என்பதை :


" ஏனடி
ரோஜா "

என்று நினைத்துக் கொள்ளுங்கள் !" அன்று போனவள் இன்று வந்துவிட்டாய் என

புன்னகை செய்தாயோ ! "இதற்கு நான் விளக்கம் சொல்லணுமாக்கும் ! சூப்பருங்கஇப்படி பாடலின் அனைத்து வரிகளும் சரோஜா தேவியை

நினைத்து எழுதியிருப்பார் , கவியசு !
" மொட்டாக நின்றவளே !

முள்ளோடு வந்தவளே ! "
அது என்ன முள் ?

ரோஜாவுக்கு முள் இருக்கும்லே , அத்தான் .......!

நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் !
" எத்தனை காலங்கள் மாறிய போதும்

என்றும் இளமையடி ! - எனக்கு

என்றும் இளமையடி ! "
நடிகை பத்மினிக்கு திருமணம் ஆனா போதும்

அவர் எப்போதும் இளமையோடுதான் இருப்பார் என்பதை

கண்ணதாசன் சொல்லுகிறார் !அது மட்டுமா !
" ரத்தினக் கம்பளமே !

அடி முத்திரை மோதிரமே ! - நீ

நாளை பொழுதுக்கும் வாடி விழுந்திடும்

மாயக் கதையடியோ ! "
அதாவது ......


பத்மினிக்கு எப்போதும் ' மார்கெட் ' உண்டு !

சரோஜாதேவிக்கு கூடிய சீக்கிரம்

மார்கெட் விழுந்துவிடும் -

என்கிறார் !உண்மைதான் !

திருமணம் ஆகி மறு பிரவேசம் செய்த பத்மினி

பிறகு பல ஆண்டுகள் தமிழ்த் திரை உலகில்

கோலோச்சினார் !


ஆமாம் 1986 ஆம் ஆண்டில் " லக்ஷ்மி வந்தாச்சு " படம் வரை

பத்மினி நடித்தார் !சரோஜா தேவி ?


1976 ஆம் ஆண்டில் அவர் நடித்த :

" பத்து மாத பந்தம் " படத்திகு அப்புறம் அவர் தமிழில்

நிலைத்து நிற்க முடியவில்லை !
கண்ணதாசன் ஒரு

தீர்க்கதரசிதான் !


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அடுத்த பாடல் :
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 0If5X20oRVOjo9nfvrch+mgr
பாடலாசிரியர் வாலியால்

மெல்லிசை மன்னரை

அழவைத்த ( உண்மையிலே ! ) பாடல் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Fri Dec 11, 2015 5:37 pm

காட்டு ரோஜா வை பற்றிய தகவல்களை ,
காட்டிய அழகு , என்ன சொல்லுவது போங்க ,ரோஜா மனம்தான் அன்பு மலர் அன்பு மலர்
film news Anandhan போன்ற தகவல் களஞ்சியம் நீங்கள்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by siva.c.r on Fri Dec 11, 2015 7:28 pm

மடை திறந்த செம்பரம்பாக்கம் ஏரி நீர் போன்ற நடையில்

சுவைபட தகவல்களைத் தரும் டாக்டர் சார் அவர்களே,


ஆதாரமில்லாமல் எதையும் தாங்கள் பதிப்பிக்க மாட்டீர்கள் என்பதை

நான் நன்கு அறிவேன்.


"தயிர்க்கார பொம்பளை"யை மனதில் கொண்டுதான் கண்ணதாசன்

இந்தப் பாடல் வரிகளை எழுதினார் என்று தாங்கள் சொல்லித்தான்

இப்போது தெரிய வந்தது.


ஆழ்ந்து சிந்தித்தால் கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரிகளுக்குப்

பின்னும் இம்மாதிரி ஏதாவது ஒரு பின்புலம் இருக்கும் என்றே

தோன்றுகிறது. கவிஞர் கதைக்கேற்பவும் காட்சிக்கேற்பவும்

பாடல்களை இயற்றும் தருணங்களில் அவர் சொந்த அனுபவங்களும்

அவர் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தக்

கலவைகளின் வெளிப்பாடுதான் மூன்றுக்கும் பொருத்தமான

வார்த்தைகளாகப் பிரவாகிக்கிறது.


பாடல் வரிகளின் மறு அர்த்தத்தைப் பற்றி நம் கவனத்திற்கு வந்த

பாடல்கள் சில. ஆனால் நாம் அறியாமல் அவ்வாறு பல பாடல்கள்

இருக்கலாம். தங்கள் அழகு நடையில் ஒவ்வொரு பாடல்களாக

அவை வெளிவரட்டும்.


ஆவலுடன் காத்திருப்போம்.


- சிவா.சி.ஆர்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
மதிப்பீடுகள் : 47

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Fri Dec 11, 2015 7:49 pm

நன்றி எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களே ! பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 1571444738 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5052
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2799

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Dec 28, 2015 5:01 pm

பத்மினி, ச ரோஜா தேவி இவுங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியாத தகவல்களை, கொடுத்துட்டீங்க
டாக்டர் சார். அடுத்து நடிகையர் திலகம் சாவி3 அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறேன். அதுக்கு முன்னால கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்குங்க. நன்றி டாக்டர் ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4369
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1324

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Feb 04, 2016 5:57 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு. டி. என் . பாலசுப்பிர மணியன் ,

2. திரு. சி . ஆர் . சிவா ,

3. திரு. எஸ் . செளந்தர பாண்டியன்

மற்றும்

" என்றும் என் ரசிகர் " ( ! )

4. மாணிக்கம் நடேசன் ,


ஆகியோர்களுக்கு என் நன்றி !
" என்னடா ! 2015 ஆம் ஆண்டில் எழுதிய

கடிதங்களுக்கு , 2016 இல் பதில் சொல்கிறானே இவன் ! "


என்கிறீர்களா !
உண்மைதானே !

இன்னொரு புத்தகம் எழுதுவதற்கு ஒருவருக்கு

நான் உதவி செய்தேன் !

அத்தான் ' லேட் ' !இனி ......கூடிய விரைவில் !

" தைரியமாகச்

சொல் நீ

மனிதன் தானா ?
ஹி......ஹி .....ஹி .....!

என்னை நானே திட்டிக்கொள்வதாக நீங்கள்

நினைக்க வேண்டாம் !

அடுத்த கட்டுரையில் இடம் பெறப்போகும்

பாடலின் பல்லவி !
அதனை ஒட்டி ஒரு ஜோக் !

' வால் பையன் "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 2RQlh2B1Qk2oDA6qWjSY+Vaal-Paiyan-Drama-2013-500x500
" வால் பையன் " மேடை நாடகத்தில் நாயகன்

எஸ் . வி . சேகருக்கு திடீரென்று

" வால் " முளைத்து வளரும் !

" பின் பக்கத்தில் " தான்யா !

அதனைப் பார்த்து எல்லோரும் " குரங்கு " , " குரங்கு "

என்று கிண்டல் செய்வார்கள் !

நம்ம ' வால் ' எஸ் .வி. சேகர் படா பேஜார் ஆகிவிடுவார் .....

அதாவது ... வாழ்க்கையே வெறுத்துவார் !


" சரி, நாம் தான் வெறுப்போடு இருக்கின்றோம் ....சற்று

' டிரான்ஸிஸ்டர் ' த திருப்பி பாடாவது கேட்போம் ! "


என்று ' வால் ' சேகர் ரேடியோ வைத் திருகினால் .....

என்ன பாட்டு தெரியுமா ! ?" தைரியாமாக சொல் நீ

மனிதன் தானா , மனிதன்தானா ?

இல்லை !

நீதான் ஒரு மிருகம் ....... ! "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Ful1jDBSTe6g0vTQknBT+526x297-RYZஎம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Thu Feb 04, 2016 6:16 pm

டாக்டரிடம் இருந்து " வால்"யு மிக்க பதிவுகளின் ஆரம்பம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Thu Feb 04, 2016 7:51 pm

வாங்கோ அண்ணா, நேத்து தான் நானும் இவரும் பேசிக்கொண்டோம் உங்களைப்பற்றி .............உங்களிடம் சொல்லிக்காமலே கிளம்பி வந்து விட்டேன் அண்ணா...............குழப்பமாகவே வந்துவிட்டேன்............மன்னிக்கணும்............. :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்போ சௌதி வந்து விட்டேன்.................உங்களின் பதிவுகளுக்காக ஆவலுடன் waiting  அண்ணா புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60429
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12268

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 05, 2016 2:34 pm

டாக்டர் ஐயா, நீங்க லேட்டா வந்தாலும் சும்மா வர மாட்டீங்க, நல்ல சரக்கோட தான் வருவீங்க, அதாவது சிறந் மத்தவங்களுக்கு தெரியாத தகவல்கள சொன்னேன், தொடருங்கள் மீண்டும் காத்திருக்கிறோம். நன்றி டாக்டர் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4369
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1324

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 10, 2016 5:28 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு. பாலசுப்பிர மணியன்

2. 2. திரு . மாணிக்கம் நடேசன்

மற்றும்

3. தங்கை சுமதி


இவர்கள் அனைவருக்கும் நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் : 7    

  " தைரியமாக  சொல் நீ மனிதன் தானா ! "


படம் :   " ஒளி விளக்கு "

பாடல் : " வாலி "

இசை :  மெல்லிசை மன்னர் .
 ' ஒளி விளக்கு "    - எம் ஜி ஆரின்  100 வது படம் !

அது மட்டுமல்ல !

பிரபல பட நிறுவமான ' ஜெமினி ' பட நிறுவனம்  எம்ஜிஆரை வைத்து தயாரிக்கும்

முதல் படமும் இதுதான் !

இசை : மெல்லிசை மன்னர்

பாடல்கள் :  வாலி

இயக்கம் : சாணக்கியா . ( ' எங்க வீட்டுப் பிள்ளை ' பட இயக்குனர் ! )எல்லாம் ஓ. கே !

கதை ?

அங்கேதான் பெரிய ஓட்டை !  

எம்ஜிஆரின் 100 ஆவது படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் ?

சும்மா ' ஜம்முன்னு ' இருக்கவேண்டாமா !

இல்லையே ஸ்வாமி !

இந்தியில் வெளி வந்து ( அங்கே ) வெற்றி பெற்று ஓடிய :

' ஹீரோயினுக்கு ' முக்கியத்துவம் தரும் கதை கொண்ட :" PHOOL   AUR  PHATHTHAR "


என்கிற படத்தின் ரீமேக் .......... தமிழில் எடுத்தார்கள் !

தர்மேந்திரா , மீனா குமாரி , மும்தாஜ் நடித்த இந்த படத்தில் சீனியர் நடிகை

மீனா குமாரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து :

" விதவைத் திருமணத்தை "

ஆதரித்து எடுத்த படம் !

எம்ஜிஆருக்காக கதையை :

" பிசைந்து " , -  அரைத்து -  "  - குழவியில் இட்டு ' போண்டா ' ஆக்கி

பின்பு " பஜ்ஜி " ஆக்கி பின்பு ஒரு வழியாக " மசாலா பூரி "   ஆகிய

கதை ஐப் பற்றி சொல்வதல்ல இந்த கட்டுரை - அதனை - பின்னர்

பார்ப்போம் !இப்போது அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :

 " ஒளி விளக்கு "  படத்தில் எம்ஜிஆர் குடிகாரர் ஆக வருவார் !

ஏன் ?

" இது என்ன கேள்வி !  ஒரிஜினல் இந்திப் படத்திலும் அதே மாதிரி

" தண்ணி '   கேரக்டர்தான், அதான் !


இந்த ' தண்ணி '  அடிக்கிற மாதிரியான வேடம் எம்ஜிஆருக்கு கொஞ்சமும்

பிடிக்கவில்லை !

எம்ஜிஆர் , தான் நடிக்கும் வேடங்களில் " நெகடிவ் கேரக்டர் '  மாதிரியான

வேடங்களை தவிர்த்து வந்தார் !


1. " அந்தமான் கைதி " படத்தில் எம்ஜிஆர் வெண்சுருட்டு .....அதானே ....

' சிகரட் '   ......ஐ பிடித்து விட்டு புகை புகையாக விட்டு பின்பு சிகரட்

துண்டுதனை அணைத்து வீதியில் வீசிவிட்டு  பின்பு தன்  வீட்டுக்குள் நுழையும்

காட்சி ஒன்று இருக்கும் .......இப்போது உள்ள ' அந்தமான் கைதி ' பட பிரதிகளில்

அந்த காட்சி காணோம் !2. " பணக்காரி " என்கிற படம் , எம்ஜிஆர்  அந்த படத்தில் போலிஸ் அதிகாரி

ஆக வருவார் . ஆனால் அந்த படத்தில் அவர் எதிர் மறை நாயகன் - அதான் -

'வில்லன் ' ரோல் இல் வருவார் .....எனவே " பணக்காரி "   ஐ தீ வைத்துக்

கொளுத்தப் பட்டதாக  உறுதி செய்யப்படாத தகவல் உண்டு !3. எம்ஜிஆர் , கதைப் படி  குடிகாரர் ஆக நடிக்க நேர்ந்தால் ........டோன்ட்

வொர்ரி .......படத்திலேயே அவர் குடிகாரர் ஆக நடிப்பார் !
சரி , ' ஒளி விளக்கு ' படத்தில் என்ன செய்வது ?

எம்ஜிஆருக்கு கவலை வந்துவிட்டது !

வாலியை அழைத்தார் !


" வாலி , இந்த ' ஒளி விளக்கு '   படத்தில் நான் குடிப்பவன் ஆக நடிக்கிறேன் ,

இது ஏன் ' இமேஜ் ' க்கு ஒத்து வராத வேடம் !

இதற்கு நீங்கள்தான் தீர்வு காண வேண்டும் ! "


வாலி யோசித்தார் , பின்பு சொன்னார் !  


" அண்ணே ! ஒரிஜினல் கதைப் படி நீங்கள் குடிகாரர் , எனவே

படத்தில் நீங்கள் குடித்தே ஆக வேண்டும் !  "


எம்ஜிஆருக்கு கோபம் வந்து விட்டது !


" அதுதான் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டேனே , பின்பு

எதற்கு மறுபடியும் இப்படி சொல்கிறீர்கள் ? "

எம்ஜிஆர் குடித்தார் .......மன்னிக்க......குமுறினார் !


வாலி தொடர்ந்தார் :

" அண்ணே !  நீங்கள் அப்படியே படத்தில் நடியுங்கள் !  ஆனால்

உங்களின் மனசாட்சி உங்களை

" குடிக்காதே "

என்று கண்டிக்கிறது , சரியா ! "எம்ஜிஆரின் முகம் சிறிது மாறுகிறது !


" சரி ! மனசாட்சி என்றால் அதனை எப்படி படத்தில் காட்டுவது ? "

கேட்டார் எம்ஜிஆர் !


வாலி உற்சாகமானார் !

மேலும் சொன்னார் :


" அது ஒண்னும் பெரிய விஷயம் இல்லே அண்ணே !

நாம எடுப்பது  கலர் படம் !

நடுவில் அசிங்கமான குடிகார எம்ஜிஆர் !

அந்த குடிகார எம்ஜிஆருக்கு இரண்டு பக்கங்களிலும்

இரண்டு அழகான  உடைகளை அணிந்த - ஒவ்வொரு பக்கத்திலும்

இரண்டு அழகான எம்ஜிஆர்கள் !

அவர்கள்தான் உங்கள் மனசாட்சி ( கள் ! )

உங்களுக்கு அறிவுரை அந்த அழகான எம்ஜிஆர்கள் போதிக்கின்றனர் !


நீங்கள் திருந்திவிடுகிறீகள் !


எப்படி ? "


முகம் மலர்ந்தார் , எம்ஜிஆர் !

" சபாஷ் வாலி !   இப்படி காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் !

நீங்கள் சொன்னதையே வைத்து  பாட்டு ஒன்றை எழுதுங்கள் !

குடியின் தீமைகளை விளக்கியும் குடியின் கொடுமையில் இருந்து

திருந்தி வாழ வும் அறிவுரை சொல்லும்படியாக பாட்டு எழுதுங்கள் ! "


சொல்லிவிட்டார் எம்ஜிஆர் , வாலி சும்மா இருக்க முடியுமா !

எழுதிவிட்டார் !
எதோ ஒரு  சூழ்நிலையில்  எம்ஜிஆரிடம் பேச , பேச

முடிவில் ஒரு பாட்டு உருவாகிவிட்டது !

இதனை வாலியே எதிர்ப்பார்க்கவில்லை !

ஆனால் எம்ஜிஆர் மிகவும் ' குஷி ' அடைந்தார் !" வாலி !  இந்த பாட்டை கொண்டு போய்

விசு கிட்டே கொடுத்துவிட்டு பாட்டு   போட சொல்லுங்கள் ! "உத்தரவு போட்டார் , எம்ஜிஆர் !

அதனை உடனே நிறைவேற்றினார் , வாலி !  " தன மெட்டுக்கு பாட்டு எழுதும்போது

அந்த வரிகளை முதலில் தன்னிடம் காட்டிவிட்டுத்தான் வேறு

யாரிடமும் காட்டவேண்டும் "  ----

மெல்லிசை மன்னரின் ' சட்டம் ' இது !

" மெட்டுக்கு வார்த்தைகள் பொருந்தி வருகின்றதா என்பதை

முதலில் சரி பார்க்கும் உரிமை / கடமை தனக்கே உண்டு ! "

--- இது மெல்லிசை மன்னரின் ' பைபிள் ' விதி !
இந்த பாடல் காட்சிக் கான பாடலை எழுதியது

மட்டுமில்லாமல் அதனை எடுத்துக் கொண்டு நேரடியாக

போய்க் காட்டி அவரிடம் ' ஒ.கே ' வாங்கி விட்டு வந்தார் வாலி - இது மெல்லிசை

மன்னருக்குப் பிடிக்கவில்லை !" அப்போ ஒண்ணு செய் , வாலி !

இந்த பாட்டை ஒ. கே பண்ணிய எம்ஜிஆர் கிட்டேயே போய் டியூன்

போட்டுக்கொங்குங்க ........போங்கோ !  "வாலியை , மெல்லிசை மன்னர் பொரிந்து

தள்ளிவிட்டார் ! வாலி , மெல்லிசை மன்னரை சமாதானம் செய்ய

முயன்று தோற்றுப் போய்விட்டார் !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 LdOyCWVTy4KbISAiRzQJ+hqdefault


' அவர்   கேட்டார் .....நான் கொடுத்தேன் .....நான் என்ன செய்வது ? "
' என்னைக் கேட்காமல் நீ என் கொடுத்தே ? "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Vj3PVY7HRgKX3jt9qoFL+MSV_jpg_2472548f


[color:60a1= #330000]வாலிக்கும் , மெல்லிசை மன்னருக்கும்

' குழாயடி சண்டை '  பெரிதாகிவிட்டது !பொதுவாக மட்டுமல்ல ....

எப்பொழுதுமே , மெல்லிசை மன்னருக்கு கோபமமே வராது !

அது அரிது ....பின் என் இப்படி கோபிக்கிறார் ......

அதுவும் வாலி மீது ?காரணம் இருக்கின்றது !

இதோ காரணம் !எம்ஜிஆர்க்கு

" தைரியமாகச் சொல்  நீ மனிதன்தானா? '

என்று வாலி பல்லவி எழுதியிருந்த அதே நேரத்தில் ......


' யாரடா மனிதன் இங்கே, கூட்டி வா அவனை இங்கே  " "


என்கிற பல்லவியுடன் ஒரு பாடல் , மெல்லிசை மன்னர் இசையமைத்து

இசையமைத்து ஒளிப்பதிவும் செய்து விட்டார் !

யாருக்கு ?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு !


 யார் எழுதிய பாடல் ?

கவிஞர் கண்ணதாசன்  அதுவும் கவிஞரின் சொந்தப்படத்தில் !

" லட்சுமி கல்யாணம் "
 இப்போது சொல்லுங்கள் ... வேறு வம்பு

வேணுமா மெல்லிசை மன்னருக்கு !
அதான் கோபம் மெல்லிசை மன்னருக்கு !சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்

மெல்லிசை மன்னர் ! முதலில் நேரே எம்ஜிஆரிடம் சரணடைந்தார்

மெல்லிசை மன்னர் ! " அண்ணே ! ( எம்ஜிஆர் ) என்னிடம் காட்டாமல் உங்களிடம்

மட்டும் காட்டிவிட்டு இந்த பாட்டுக்கு இசையமைக்க சொல்லிவிட்டார் , வாலி !

ரெண்டு பாடல்களுக்கும் வரிகள் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கு !

நாளைக்கு படம் ரிலீஸானதும்


" என்ன விசு ....நீ எங்க கிட்டேயும் வேலை செய்யறே ...

அப்புறம் அங்கேயும் வேலை செய்யறே !....

' எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே !'

என்று நீங்க கேட்டா  .....?  .....அதனால்தான் !  ...."இழுத்தார் மெல்லிசை மன்னர் !

அத்தோடு இதனையும் வெளிப்படையாக சொன்னார் !


" வாலியின் பல்லவியும் நன்றாகத்தான் இருக்கிறது ! "  
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 CVVxjCb5RbKkqZlsFQKk+vaali_Msv_1521230g


 கவிஞர் -க்கும்

எம்ஜிஆருக்கும் ...

" டிஷ்யூம் - டிஷ்யூம் " நிலவியிருந்த

நேரம் அது !
எம்ஜிஆர் யோசித்து சொன்னார் !' அப்போ ஒண்ணு செய்யுங்க , விசு !

கவிஞர் கிட்டே இதப் பத்தி பேசிப்பாருங்க ! "உத்தரவிட்டார் , எம்ஜிஆர் !


மெல்லிசை மன்னரின் நிலை எப்படி

இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் !வேறு வழி ?


கவிஞர் இடம் சென்றார் , மெல்லிசை மன்னர் !

சொன்னார் !

அவ்வளவு தான் !

வானத்திற்கும் பூமிக்கும் இடையே குதித்தார் :

கவிஞர் கண்ணதாசன் !


 " என்ன , விளையாடுறியா !

வட்டிக்கு வாங்கி படம் எடுக்கிறேன் !

என்ன நினைச்சுக்கின்னு இருக்கிறே !

பாட்டு இசையமைத்து படக் காட்சியைக் கூட

'ஷூட் ' பண்ணியாச்சு !

நீ நினைச்சா வெச்சிக்குன்னு இருக்க வேண்டும்.....

இல்லேன்னா எடுத்திடணும் ! "முடியாது என்று சொல்லியிருந்தால் கூட

பரவாயில்லை !

" அர்ச்சனை '  அல்லவா செய்து விட்டார் , கவிஞர் !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 VyJNGFl4S6ukV0deh4DB+valiandkanna வீட்டுக்குச் சென்ற மெல்லிசை மன்னர்

அறைக்குள் நுழைந்து , தாள் போட்டு அழ ஆரம்பித்தார் !ஒரு பக்கம் எம்ஜிஆர் !


மறு பக்கம் கவிஞர் !( மெல்லிசை மன்னர் இந்த சந்தர்ப்பத்தில்

வாய் விட்டு அழுததை , அவரே அந்த கால :

" மெட்ரோ சான்னல்"  - ' பொதிகை ' இரண்டாவது சானலில் -

இப்போது அந்த சானல் இல்லை - சொன்னது எனக்கு இன்னும்

நினைவில் உள்ளது .....ஆனால் ....

இப்போது அதற்கு ஆதாரம் இல்லை ...ஹி....ஹி .... ! )  மறு நாள் !நேரே எம்ஜிஆரிடம் சென்றார் , மெல்லிசை மன்னர் !

விஷயத்தை சொன்னார் !

" எங்கே அந்த " யாரடா மனிதன் இங்கே ! "

பாட்டை எனக்கு போடு ! "

என்று எம்ஜிஆர் சொல்ல ,

மெல்லிசை மன்னர் போட்டார் அந்த பாட்டை !
' தைரியமாக சொல் நீ மனிதன் தானா ! "" யாரடா மனிதன் இங்கே ! "இரண்டு பாடல்களையும் எம்ஜிஆர் கேட்டார் !

" அடே ! இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கே !

" மனிதன் " என்கிற சொல்தான் இரண்டு பாடல்களுக்கும் பொது !

நம் பாடல்  குடியின் தீமைகளை விளக்குகிறது!

கவிஞர்  அவர்களின் பாடல் பொதுவாக நல்ல மனிதர்களைத்

தேடும் பாடல் !

இரண்டுக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கு !

எனவே எனவே இரண்டு பாடல்களும் ஒரே சமயத்தில்

வந்தால் பெரிதாக தோன்றாது !

எனவே இரண்டு பாடல்களும் இருக்கட்டும் ! "  
எம்ஜிஆர் தீர்ப்பு சொல்ல ....

மெல்லிசை மன்னர் பேரு மூச்சு விட்டார் !

கடைசியில் எம்ஜிஆர் , மெல்லிசை மன்னரைப் பார்த்து

சொன்ன ' ஆறுதல் வார்த்தைகள் '  தான்

இந்த கட்டுரையின் " ஹைலைட் " ! இதோ !
 " நீ என்  கிட்டே கெட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கெட்ட பெயர்  வாங்கக் கூடாது ! "அதுதான் எம்ஜிஆர் !


@@@@@@@@@@@@@@@@@@@@@
 வரப்போகும்

கட்டுரைகள் ....

' மினி '  கட்டுரைகளின் வடிவில் !


##############################
" ஒரு ' சாம்பிள் ! '
கவிஞர் முத்துலிங்கம் :பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 QxLhMRegRpKLUWScjVeA+09mp_lead_jpg_830903g


இவர் எம்ஜிஆர் படங்களில் முதன் முதலாக

" உழைக்கும் கரங்கள் " படத்திற்கு பாடல் எழுத வருகிறார் .

பாடலுக்கான காட்டி அவருக்கு சொல்லப் பட்டது ! ' ஒருவள் ஒரு நல்லவனை காதலிக்கிறாள் !

ஆனால் அவனோ இன்னொரு பெண்ணை கரம் பிடித்து

அவள் முன்னடி நிற்கிறான் !

அந்த காட்சியைப் பார்த்து அவள் பாடும் பாட்டு - இது காட்சி ! "
முத்துலிங்கம் 4 அல்லது பல்லவிகளை எழுதினார் !

எனினும் அவருக்கு பிடித்தது இது !
 "  ஆண்டவனின் சன்னதியில்

அன்றாடம் தேடி வந்தேன் !

தேடி வந்து பார்க்கையில் - ஸ்ரீ

தேவியுடன் அவன் இருந்தான் ! "பாடலுக்கு இசையமைக்க வந்த

மெல்லிசை மன்னர் " நன்றாக இருக்கு " என்றார் !


பாடலைப் பாட வந்த வாணி ஜெயராம் அவர்களும்

" நன்றாக இருக்கு "

என்றார் ! ஆனால் நடந்தது என்ன ?இயக்குனர் கே . சங்கருக்கு அந்த பல்லவி

பிடிக்காமல் , வேறு பல்லவியை தேர்வு செய்தார் .....

புதியவர் முத்துலிங்கம் தடுக்க முடியவில்லை !

ஆக , அவரது இரண்டாவது பல்லவிதான் படத்தில்

இடம் பெற்றது !

அந்த பல்லவி :
 " கந்தனுக்கு மாலையிட்டாள்

கானகத்து வண்ண மயில் !

கல்யாண கோலத்தில்

கவிதை சொன்னாள் காதல் குயில் ! "


 " சரி , இதெல்லாம் சகஜம் !

அதே எல்லாம் இங்கே ஏன் எழுதுறே ? "என்கிறீர்களா !மெல்லிசை மன்னரும் , முத்துலிங்கமும் , வாணி ஜெயராம்

- இவர்கள் அனைவரும் விரும்பிய

முதல் பல்லவிதான் ......." மன்மத லீலை " படத்தில்

மெல்லிசை மன்னர் இசையமைத்த

வாணி ஜெயராம் பாடிய ,

கவிஞர் கண்ணதாசன் எழுதிய :


 " நாதெ மெனும்  கோவிலிலே

ஞான ஒளி எற்றி வைத்தேன் !

எற்றி வைத்த விளக்கினிலே - எண்ணெய்

விட நீ கிடைத்தாய் ! "  
தொடரும்


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Wed Feb 10, 2016 5:50 pm

வாங்க ஐயா ,நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.... அலுவலக தொலைபேசியில் இரண்டு அழைப்புகளை நிராகரித்துவிட்டு படித்துமுடித்தேன். புன்னகை


" நீ என் கிட்டே கேட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கேட்ட வாங்கக் கூடாது ! "


அருமை அருமை புன்னகை , இந்த வார்த்தையை ஒருவர் உதட்டளவில் சொல்லியிருக்க முடியாது...

"உன்னை சுற்றி அரணாக நான் இருக்கிறேன்" என்று மனதில் நினைக்கும் ஒருவரின் உதடு தான் இது போல சொல்ல முடியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31208
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 10, 2016 6:06 pm

@ராஜா wrote:வாங்க ஐயா ,நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.... அலுவலக தொலைபேசியில் இரண்டு அழைப்புகளை நிராகரித்துவிட்டு படித்துமுடித்தேன். புன்னகை


" நீ என் கிட்டே கேட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கேட்ட வாங்கக் கூடாது ! "


அருமை அருமை புன்னகை , இந்த வார்த்தையை ஒருவர் உதட்டளவில் சொல்லியிருக்க முடியாது...

"உன்னை சுற்றி அரணாக நான் இருக்கிறேன்" என்று மனதில் நினைக்கும் ஒருவரின் உதடு தான் இது போல சொல்ல முடியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1192933
 நன்றி திரு . ராஜா அவர்களே !


தட்டச்சு  பிழைகளை பொறுத்துக் கொண்டு என்னை பாராட்டி உள்ளீரகள் !

நன்றி ஐயா !


எனவே ,

மெல்லிசை மன்னரிடம்  எம்ஜிஆர் சொன்னதை .....

இப்படி திருத்திப் படிக்கவும் !   " நீ என் கிட்டே கெட்ட பெயர் வாங்கிக்கோ !

என் கிட்டே திட்டு வாங்கிக்கோ !

.......ஆனா .....

வெளியே யார் கிட்டேயும் நீ கெட்ட பெயர்  வாங்கக் கூடாது ! "    நன்றி !


எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 16 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை