ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Thu May 08, 2014 9:43 amபுதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.இதற்காக, ஆண்டு முழுவதும் விரிவான ஏற்பாடுகளை, இப்போட்டிகளை நடத்துபவர்கள் மேற்கொள்வர். இந்தப் போட்டிகளை, ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து ரசிப்பதும் வழக்கம்.தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் என்றில்லாமல், சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே, இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்ததால், இதைப் பார்க்கும் ஆர்வம், பிற பகுதி மக்களுக்கு அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்றே.இந்நிலையில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதால், அந்த போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

நல அமைப்புகள்

கடந்த ஆண்டில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், 'வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, கடுமையான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்' என, அனுமதித்தது. இதையடுத்து, தீவிர கெடுபிடிகளுடன், கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.இந்த வழக்கு விசாரணையின்போது, 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்' என, பிராணிகள் நல அமைப்புகள் வலியுறுத்தின.தமிழக அரசு, தன் வாதத்தில், 'அரசு மற்றும் கோர்ட் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன' என, தெரிவித்தது.இந்நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்கு, 2011ல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. ஜல்லிக்கட்டு நடத்துவதால், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன; காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களும், போட்டியில் பங்கேற்பவர்களும் காயப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை நடத்த, என்ன தான் விதிமுறைகள் அரசு கொண்டு வந்தபோதிலும், அந்த விதிமுறைகள், முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மீது, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவது, காளைகளின் வாலை முறுக்குவது போன்ற, பலவிதமான சித்ரவதைகளுக்கு காளைகள் உட்படுத்தப்படுகின்றன.

விலங்கு உரிமை

மனிதர்களுக்கு மட்டும் தான் அடிப்படை உரிமை உள்ளது என, கூற முடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி, விலங்குகளை துன்புறுத்த முடியாது.பல நாடுகளில், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இருப்பதாகவும், இது காலம் காலமாக தமிழகத்தில் ஒரு பாரம்பரிய விளையாட்டு என்றும், அதை தடை செய்யக் கூடாது என்றும், தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை, நியாயமானது அல்ல. விலங்குகளைத் துன்புறுத்தி, ஒரு விளையாட்டை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால், காலம் காலமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த வீர விளையாட்டை, இனிமேல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட காளைகள், இனிமேல், விவசாய தொழில்களில் ஈடுபடுத்தப்படும்.

'ரேக்ளா ரேஸ்'களுக்கும் தடை:

'ஜல்லிக்கட்டு' போட்டிகளுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'ரேக்ளா ரேஸ்' எனப்படும், மாட்டு வண்டி போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும் போது, 'தமிழகம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில், வண்டிகளில் மாடுகளை பூட்டி, அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லும் போட்டி நடத்தப்படுகிறது; அந்த போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

மேலும், இத்தகைய போட்டிகள் நடைபெறாமல் தடுக்க, தேவையான கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள, விலங்குகள் நல வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும், விலங்குகள் துன்புறுத்தலை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டிற்கு தடை எதிர்த்து மேல்முறையீடு: விழா குழுவினர் கருத்து

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. தை இரண்டாம் நாளில், அனைத்து கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுலா பிரசித்தி பெற்றது.


அதிர்ச்சி:

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்த தடை இருந்த போதும், கோர்ட் வழிகாட்டுதல்படி நடந்தன. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த, மீண்டும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது, விழாக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்று தர வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாராயணசாமி, பேரூராட்சித் தலைவர், பாலமேடு: உழவு மாடுகளுக்கு, தை இரண்டாம் நாள் கொம்பில் துண்டு கட்டி, அதை அவிழ்க்க, மாமன் மச்சான் உறவு முறையில் இருப்பவர்களுக்கு சவால் விடுவோம். மஞ்சமலை ஆற்றில் நடக்கும் துண்டு அவிழ்க்கும் நிகழ்ச்சி, பின் ஜல்லிக்கட்டாக மாறியது. மாடு பிடி வீரர்களை, வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வருத்தமளிக்கிறது.நான்கு ஆண்டுகளாக, பேரூராட்சி சார்பில் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை; வீரர்கள் காயம்படவில்லை. இத்தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பாலாஜி, ஜல்லிக்கட்டு விழாக்குழு கவுரவத் தலைவர், அலங்காநல்லுார்: ஜல்லிகட்டு நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் பார்ப்பர். விலங்குகள் நல வாரியத்தினர் கொடுத்த தகவலின்படி ஜல்லிக்கட்டு நடத்த, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. தமிழக பாரம்பரிய விளையாட்டிற்கு எதிரானது. தமிழக அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர், மதுரை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது எதிர்பாராதது. மாநிலத்தில் நுாற்றுக்கணக்கான இடங்களில் நடந்த இந்த வீர விளையாட்டு, பல்வேறு காரணங்களால் தற்போது, 30 இடங்களில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.ஜல்லிக்கட்டில், ஓரிரு வினாடிகள் மட்டும் காளைகள் களத்தில் நிற்கின்றன. பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனியில் நடக்கும் இதுபோன்ற விளையாட்டுகள் குறித்தும், கோர்ட்டில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. 400 கிலோ எடையுள்ள மாடு, 110 கிலோ எடை வரை, சாதாரண நிலையில் தாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதியில் கூட, 400 ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

[thanks] தினமலர் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Thu May 08, 2014 9:50 am


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு : அலங்காநல்லூரில் கருப்புகொடி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பதை தொடர்ந்து அலங்காநல்லூர் கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று தடை விதித்தது. இந்த உத்தரவு அலங்காநல்லூர் உள்பட மதுரை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் என பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் தடையை எதிர்த்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெருக்கள் தோறும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் கிராம பொதுமக¢களும் தங்கள் வீடுகளிலும், ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியிலும் கருப்புக்கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் துக்கம், எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பாலமேடு, அவனியாபுரம், சக்குடி உள்ளிட்ட ஊர்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கருப்புக் கொடியேற்றியுள்ளனர்.

ஜல்லிக் கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூர் கோவிந்தராஜ் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜல்லிக¢கட்டிற்காக, ஆண்டு முழுவதும் ஜல்லிகட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளைப் போல் பேணிக¢காத்து வளர்க்கிறோம். காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.

காளைகளுக்கு சத்தான உணவு, பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி என அத்தனை விஷயங்களிலும் தனிக்கவனம் காட்டுகிறோம். இங்கே மிருகவதை என்ற பேச்சுக¢கே இடமில்லை. இதை விலங்குகள் நலவாரியம் உணர்ந்து தமிழர்களின் உணர்வுக¢கு மதிப்பளித்து, பாரம்பரிய இந்த வீர விளையாட்டு தொடர வழி செய்யவேண்டும், என்றார்.

மாடுபிடி வீரர் குறவன்குளம் நாகராஜன் கூறுகையில், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாடுபிடி வீரராக இருக்கிறேன். வெளிநாடுகளில் காளைகளை மொத்தமாக அவிழ்த்து விட்டு ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்குவார்கள். ஆனால் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளையை பெரும் கும்பல் வழிமறித்தாலும் தனி ஒருவர்தான் அடக்குகிறார். இதில் துன்புறுத்தல், மிருகவதை இல்லை. எதிர்பாராமல் நடக்கும் ஓரிரு சம்பவங்களுக்காக இதற்கு தடை விதிப்பது நியாயமல்ல. மாநில அரசு மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டை மீட்டுத்தர வேண்டும்என்றார்.

அலங்காநல்லூர் கிராம பிரமுகர் சிதம்பரம் கூறுகையில், ஜல்லிகட்டிற்கு தடை விதிக¢கப்பட்ட இந்த நாளை பாரம்பரியமிக்க ஒட்டுமொத்த தமிழர்களுக்கான துக்க நாளாகவே கருதுகிறோம். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊர் முழுக்க கருப்பு கொடியேற்றியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இந்த நீதிமன்றத் தடையை நீக்கவேண்டும். ஜல்லிக¢கட்டு காளைகள் இனம் மட்டுமல்லாது, தமிழர் கலாச்சார, வீர அடையாளமும் காக்கப்படவேண்டும், என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Thu May 08, 2014 11:11 am

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு: தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் முடிவு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2007-ம் ஆண்டு விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட் டுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு வாதிட்ட தன் அடிப்படையில் ஜல்லிக் கட்டு நடத்த பல்வேறு வழிகாட் டுதல்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2009-ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு முறைப் படுத்தும் சட்டம்’ தமிழக சட்ட சபையில் இயற்றப்பட்டதன் மூலம் சில ஆண்டுகளாக ஜல் லிக்கட்டு நடத்தப்படுகிறது. அப்போது பல இடங்களில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலைப் பின்பற்றவில்லை என விலங்குகள் நல வாரியம் சாரபில் உச்ச நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் ஜல்லிக்கட்டுக்கு முற்றிலும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அதன் மாநிலச் செயலர் ஒண்டிராஜ் கூறிய தாவது: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழக கிராமம்தோறும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நாள டைவில் குறைந்துகொண்டே வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 26 இடங்களில் நடைபெற்றுள்ளது. இவை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் நடைபெற் றவை. இதனால் ஜல்லிக்கட் டின்போது விதிமீறல்கள் வெகு வாகக் குறைந்துவிட்டன.

எங்கேனும் விதிமீறல் இருந்தால் அந்த ஊரில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கலாம். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இதுபற்றி பேசவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by பாலாஜி on Thu May 08, 2014 12:10 pm

தீர்ப்பு வருத்தம் அளிக்கும்படி உள்ளது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் on Thu May 08, 2014 12:19 pm

Indha varusham namma siva kalandhukkalaamnnu irundhaaru, ippadi sollittaangalae!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ஜாஹீதாபானு on Thu May 08, 2014 12:28 pm

@யினியவன் wrote:[link="/t110081-topic#1062209"]Indha varusham namma siva kalandhukkalaamnnu irundhaaru, ippadi sollittaangalae!

வாங்கண்ணா நலமா?
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் on Thu May 08, 2014 6:21 pm

நலம் பானு. நீங்க எப்படி இருக்கீங்க?
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by கிருஷ்ணா on Fri May 09, 2014 11:03 am

அய்யோ ஜல்லிக்கட்டு நடக்குதே அதுதான் எங்க ஊர்னு பெருமை அடிக்க முடியாதா :-(
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Sat May 10, 2014 9:44 am


ஜல்லிக்கட்டு: தமிழர்கள் நடத்தும் அறப்போருக்கு ஆதரவு- வைகோ

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழர்கள் நடத்தும் அறப்போருக்கு ஆதரவு தெரிவிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"வீரத்தின் வெளிப்பாடாம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பண்பாட்டு உரிமையை மறுக்கின்ற அநீதி ஆகும். தமிழர்கள், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தங்கள் பிள்ளைகளைப் போல, வீடுகளில் போற்றிப் பாதுகாத்து வளர்க்கின்றார்கள். அந்தக் காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறபோது வீர வாலிபர்கள் அதன் கொம்புகளையும், திமிலையும் பற்றிப் பிடித்துத் தங்கள் துணிச்சலையும், வேகத்தையும் நிலைநாட்டுகின்றார்கள்.

இதற்குத் தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்ற காரணம் எவ்விதத்திலும் ஏற்கத் தகுந்தது அல்ல. மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது. மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் மாடுபிடிப் போட்டியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காளைகளைத் துன்புறுத்திச் சாகடிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில், மாடுகள் மீது பாய்கின்ற இளைஞர்கள், ஒரு சிறு தார்க்குச்சியைக் கூடப் பயன்படுத்துவது கிடையாது. உயிரைப் பணயம் வைத்து, வெறுங்கைகளால் மாடுகளைப் பிடிக்கின்ற இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படுகின்றது.

நாள்தோறும் எண்ணற்ற சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் உயிர் இழக்கின்றனர். அதற்காக இனிமேல் சாலைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று உத்தரவிட முடியுமா?

தமிழர்களின் நெடிய பாரம்பரியப் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான, பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கின்ற ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற வீரத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறலாகவே இந்தத் தீர்ப்பு அமைந்து உள்ளது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தென்பாண்டி மண்டலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகத் தமிழர்கள் மேற்கொள்ளும் அறப்போருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது'' எனக் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Sat May 10, 2014 9:54 am

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இளைஞர்களின் உடல் மற்றும் மனஉறுதியைச் சோதிக்கும் இவ்விளையாட்டு, வீரத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடரச் செய்ய வேண்டும் என்பது நிச்சயம் தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கும்.

ஆண்டுதோறும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, இவ்வீரவிளையாட்டு தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். அந்தவகையில் தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை நீக்க மறுபரிசீலனை செய்கின்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by கிருஷ்ணா on Sat May 10, 2014 11:35 am

நல்லது. இப்படி நாலு பேர் ஆதரவு தந்தால் எதுவும் நடக்கும். :-)
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ஜாஹீதாபானு on Sat May 10, 2014 1:34 pm

@யினியவன் wrote:[link="/t110081-topic#1062231"]நலம் பானு. நீங்க எப்படி இருக்கீங்க?

நானும் நலம் அண்ணாபுன்னகை
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவா on Sun May 11, 2014 6:21 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை: தமிழர்களின் அடையாளம் காப்பாற்றப்பட வேண்டும்- கருணாநிதி வலியுறுத்தல்


சென்னை: "தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும்" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு" விளையாட்டு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், "வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்" என்று கடந்த ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்; "ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்" என பிராணிகள் நல அமைப்புகள் முறையிட்டுக் கொண்டதன் அடிப்படையில்; "மனிதர்களுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமை உள்ளது எனக் கூறமுடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி விலங்குகளைத் துன்புறுத்த முடியாது. எனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாகவே வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும் காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும்.

அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு, எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்கியதாகும். பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டில் இந்த விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து தமிழகத்தை நோக்கி பிற நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு ஆகும்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண் காணிப்பில் நடத்தப்பட்டன.

அதைப்போலவே 2008ஆம் ஆண்டும் கழக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறப்பட்டு; உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப் படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுதல்– மாவட்ட ஆட்சியர் இசைவளிக்கும் இடத்திலேயே போட்டி நடத்துதல்– போட்டி நடத்தப்படும் இடத்தில் ஆறு அடி உயரத்திற்கு இரட்டைத் தடுப்பு அரண்கள் அமைத்தல்– பொதுப்பணித் துறையினரிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெறுதல்– போட்டி நடக்கும் இடத்தில் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்தல்– அனைத்து ஏற்பாடுகளையும் துணை ஆட்சியர் ஒருவர் கண்காணிப்பில் செய்தல் போன்ற நிபந்தனைகள் அந்த சட்டத்திலே இடம் பெற்றிருந்தன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக்குழுவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டு கோளையும் உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக் கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் -ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தைத் தவிர்த்திடும் நோக்கத்தோடும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ராஜா on Sun May 11, 2014 8:33 pm

அட விடுங்கப்பா ....

தமிழர்கள் என்ற அடையாளத்தையே இளைய தலைமுறை இழந்து வருகிறது . இதுல ஜல்லிகட்டு ஒன்று தான் குறை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum