புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
1 Post - 14%
Manimegala
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:01 am

First topic message reminder :


இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாரமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.

நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.

முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.

வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.

இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல, வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில், "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.

கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.

மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:04 am

ஞாபக மறதி இல்லாத மனிதனைக் கண்டுபிடிப்பது சிரமம். பல மேடைகளில் பேச்சாளர்கள் பேச நினைத்துப் போன விஷயங்கள் எதுவுமே பேசாமல் வேறு விஷயங்களைப் பேசி ஏனோ தானே என்று சமாளித்துவிடுவார்கள். ஆனால், பலர் குறிப்பெடுத்துப் போன பேப்பரைப் பாக்கெட்டிலிருந்து எடுக்காமலேயே சரியாகப் பேசி கைதட்டல் வாங்கிவிடுவார்கள். மார்க்கெட்டிற்குப் புறப்படும் முன் என்ன என்ன வாங்க வேண்டும் என்று குறிப்பெடுத்துச் செல்லுங்கள் குழப்பமில்லாமல் குழம்பு வைக்க முடியும்.

குறிப்பெடுத்தல் எவ்வளவு முக்கியம் என்பதற்கு நான் அறிந்த ஒரு சிறந்த உதாரணம் : அனுபவப்பட்ட ஆகாய விமானி. அவர் விமானத்திதல் ஏறினால் விமானம் புறப்படுவதற்கு முன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்ற குறிப்பு அட்டையை எடுத்துப் படித்து டிச் செய்வார். அதே போல் விமானம் புறப்பட்ட பின், இறங்குவதற்கு முன்னும், இறங்கிய பின்னும் குறிப்பு அட்டையைப் படித்துச் செயல் படுவாராம். இது பயிற்சி விமானி முதல், நாளை ஓய்வு பெறும் விமானி வரை கடைப்பிடிக்கும் விதிமுறை. இதை மனதில் குறித்து வைத்து விடேன் என்று சந்தோஷப்படாதீர்கள். குறிப்பெடுத்து செயல்படுங்கள்.

நமக்கு யாராவது பணம் கொடுத்தால் அவர்கள் முன் எண்ணிப் பார்ப்பது அவர்களை இன்சல்ட் செய்வது மாதிரி என்ற எண்ணம் நமக்குள் பதிந்து விட்டது. அவர் போன பிறகு எண்ணிப் பார்த்தால் ஓரிரு நோட்டுகள் குறைந்தால் அவர் மீது நமக்கு மதிப்புக் குறைந்து, அவர் மீது எப்போதும் ஓர் உஷார் கண் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விடும்.

அதே போல் நாம் யாருக்காவது பணம் கொடுத்தால் அவர் நம் முன்னால் எண்ணிப் பார்த்தால் அவமானப்படுத்துகிறார் என்று டென்ஷன் ஆகி விடுகிறோம். இதில் ஒரு முடிவுக்கு வருவோம்.

உங்களிடம் பணம் கொடுப்பவரிடம், ©தப்பாக நினைக்காதீர்கள்...எண்ணிப் பார்த்துக் கொடுங்கள். குறைவாக இருக்கும் என்று சொல்லவில்லை, அதிகமாகவும் இருக்கலாமில்லையா©© என்று கிண்டலடிப்பது போல் சொல்லிப் பாருங்கள்.

உங்களுக்கும் நிம்மதி, கொடுப்பவருக்கும் செல்ப் செக்கப்.

அதே போல் நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்கும் போதும் உங்கள் முன்னால் எண்ணச் சொல்லுங்கள். காரணம், ©நானே எண்ணவில்லை, அதனால் தான் © என்று பொய்யைச் சொல்லுங்கள். டீலிங்ஸ் சரியாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தப் பணத்தை எடுத்துச் செல்லும் இடைப்பட்டவர்களுக்கு ஓரிரு நோட்டுகளை உருவுவதில் பெரிய லாட்டரி அடித்த சந்தோஷம் உண்டு, இதனால் நமது மரியாதைக்குரியவர்கள் மீது வீண் சந்தேகம் ஏற்பட்டு சந்தோஷம் குறையும்.

கடிதம் எழுதும் பழக்கத்தைக் காதலிப்பதோடு நிறுத்திக் கொள்கிறவர்கள் தான் அதிகம். கடிதம் நம் மனசாட்சி என்பதை யாரும் உணருவதில்லை. பல மணி நேரம் பேசித் தீர்க்காத விஷயத்தை ஒரு கடிதம் சரி செய்துவிடும். பல மைல் தூரத்தை மூச்சு விடும் தூரமாக்குவதும் கடிதம்தானே என்பதை உணர வேண்டும். கடிதம் எழுதிப் பழகிவிட்டால் எழுத்தாற்றல் நம்மையறியாமல் கூடும்.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய கடிதத்தை உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ பத்திரப்படுத்தி வைத்திருந்து காட்டினால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் உங்கள் முன்னேற்றத்தின் அளவை அந்தக் கடிதங்கள் தான் நிரூபிக்கின்றன. சிலர் கடிந்து பேசுவதைக் கடிதம் மூலம் காட்டி விடுவார்கள். அது அவர்களுக்கு சாட்சிக் கடிதமாகி ஆபத்து உண்டு பண்ணி விடும்.

கடிதங்களில் முக்கியமானது நன்றி தெரிவிக்கும் கடிதங்கள். இது உங்களை அறியாமல் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் பரிந்துரை. நட்பை வளர்க்க உரம் போட வேண்டும் என்றால் கடிதம் எழுதப் பழகிக் கொள்ளுங்கள்.

பலர் தாங்கள் செய்யும் வேலையின் பளுவை விவரிக்கும் போத எனக்கு அவர்களது அறியாமை தெரியும். நான் பார்க்கிற வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா© என்று சொல்லுபவர்கள், தயவு செய்து அடிக்கடி சர்க்கஸுக்குச் சென்று பாருங்கள். பிறகு சர்க்கஸ் சாகசக் காரர்களின் ரிஸ்க், பயிற்சி பற்றி யோசியுங்கள். பிறகு உங்கள் வேலைப்பளு குண்டூசி போல் ஆகிவிடும்.

கம்பிமேல் நடப்பவரைப் பற்றி யோசித்தால் கைப்பிடி இருந்தும் பஸ்சில் தள்ளாடி மற்றவர்களை இடிப்பவர்கள் மீத எவ்வளவு கோபம் வரும். சர்க்கஸ் கூடாரத்தின் உச்சியில் அந்தரத்தில் ஊஞ்சலாடி ஒருவர் கையை இன்னொருவர் பிடிப்பதைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதில் உள்ள கஷ்டத்தை யோசித்தால் இதயத்தில் கண்ணீர் வரும். புவியீர்ப்பு சக்தி உயரம் போகப் போக பூமியை நோக்கி அதிகரிக்கும். உயிரோடு உயரத்தில் ஊஞ்சலாடும் இவர்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்தையும் எண்ணிப் பாருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:04 am

சிங்கத்தின் வாயைத் திறந்து தன் தலையை உள்ளே வைத்து, கைத்தட்டு வாங்கும் சீமாட்டியை யோசித்துப் பாருங்கள். சிங்கம் வாய் மூடாமலிருந்தால் இந்த சீமாட்டியின் வயிறு நிறையும். சிங்கம் வாய் மூடினால் சிங்கத்தின் வயிறு நிறையும். நமக்கும் சர்க்கஸ் சாகசக்காரர்களுக்கும் இருப்பது ஒரு ஜாண் வயிறுதானே !

பல தொழில்களில் ஏற்படும் சிக்கல், ©என்னால் தான் இந்தக் கம்பெனியே நடக்கிறது© என்ற ஈகோதான். கம்பெனியில் உங்கள் பணி என்ன© மற்றவர்கள் பணி என்ன© என்பதை யோசியுங்கள். உங்களை விட பதவி குறைந்தவர் செய்யும் வேலையை உங்களால் ஒரு வாரம் செய்ய முடியுமா© என்று பாருங்கள்- நிச்சயம் உங்கள் ஈகோ பறந்து விடும். எல்லோரும் ஒரே எண்ணத்தில் உண்மையாக உழைத்தால் கம்பெனி சிறந்து விளங்கும்.

இன்றைய உங்களது கடின உழைப்பு தான் நாளைக்கு உங்களை முதலாளியாக்கும் அச்சாணி. கப்பலை ஓடச் செய்யும் எந்த ஒரு சிறு பாகத்தையும், கப்பலில் இருந்து கழற்றிப் போட்டால் கப்பல் கடலில் மூழ்கிவிடும். அதே நேரத்தில் எத்தனையோ பாகங்களையும், பொருட்களையும் உடைய கப்பல் மூழ்குவதில்லை. இதை மனதில் கொண்டு பாடுபட்டால் நமது தொழில் எந்தப் புயலையும் சந்தித்து நீதிக் கொண்டே இருக்கும்.

பத்து தண்டால் அடித்து விட்டு நான் பயில்வானாகி விடுவேன் என்று கனவு காண்பவர்களே ! கட்டு மரம் ஓட்டும் மீனவ நண்பர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அசந்து தூங்க வேண்டிய நடுநிசியில் கடலுக்குப் புறப்படுகிறார்கள். அலை இவர்களை விரட்டியுட, இவர்கள் அலையை விரட்டத் துடுப்புப் போட்டுப் போர் புரிந்து முன்னேறுகிறார்கள். இவர்களின் வலிமையை நினைத்தால் நம் இதயமே வலிக்கும் வலையை வீசி விட்டுக் காத்திருக்கும் நேரத்தில் இவர்களின் எதிர்பார்ப்பு, தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்குக் காத்திருக்கும் மாணவனை விட அதிகம். இந்த எதிர்பார்ப்பு கடலில் இருப்பவருக்கு மட்டு மல்ல - கரையில் காத்திருக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் தான்.

இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகும் கரை வந்து வலையை உதறினால் தான் தெரியும்; வென்றது இவர்களா© அல்லது மீன்களா© என்று ! எதிர்நீச்சல், ஏமாற்றம், உடற்பயிற்சி, விடாமுயற்சி உள்ள இந்த மீனவ நண்பர்களைப் பற்றி யோசித்த பிறகு, இப்போதெல்லாம் நான் கடலை ரசிப்பதை விட கட்டுமரங்களைப் பற்றியே சிந்திக்கிறேன்.

இந்தப் பொருளை வாங்கிக் கொடுத்தால் தான் வீட்டுக்கு வருவேன் என்று கடையிலே அழுது புரண்டு அடம்பிடிக்கும் குழந்தைகளையும் கண்டு பயந்திருக்கிறேன். அதே சமயம், அப்பா, அம்மாவே, ©உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள் ! © என்று சொன்ன பிறகும், ©எனக்கு எதுவும் வேண்டாம்© என்று சொல்லும் குழந்தைகளையும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.

கடைக்குப் போகுமுன் உங்கள் பட்ஜெட்டைக் குழந்தைகளிடம் கூறி விடுங்கள். அதே போல் கையில் பணம் இருந்தால், குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்கும் பொருளை உடனே வாங்கிக் கொடுத்து விடுங்கள். காரணம் குழந்தைகளின் இன்றைய ரசனைக்கு அந்தப் பொருள் தான் மகிழ்ச்சியைத் தரும்.

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் இது எவ்வளவு நாள் உழைக்கும், கீழே போட்டால் உடையுமா© கீறல் விழுமா© என்று பல கேள்விகளைக் கேட்பதுண்டு. இப்போதெல்லாம் அந்தக் கேள்விகளெல்லாம் குறைந்து விட்டது. இன்று இது புது மாடலா - ஓ.கே ! ஏனென்றால் காலம் வேகமாகச் செல்லச் செல்லப் புதுப்புது பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சில பொருட்கள் ஒரே மாதத்தில் பாதி விலை குறைந்து விடுகிறது. நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பார்த்த உடனே பிடித்த பொருள் தேவை என்றால், காசும் இருந்தால் உடனே வாங்கி விடுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:04 am

இன்று புதுசு - நாளை பழசு.

குளித்து முடித்தவுடன் டவல்....டவல் என்று பாத்ரூமில் இருந்து வரும் அலறல் குரல் இல்லாத வீடுகள் குறைவு என்றே நினைக்கிறேன். இதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அடக்கம் தான். பாதி குளியலில் கண்ணில் சோப்பு நுரையுடன் மோட்டர் போடுங்க என்று கத்துவதும் பலரது வழக்கம். இந்த வீடுகளில் சிறுவர்கள் அண்ணன் தம்பிகளாக இருந்தால், இந்தக் கூக்குரல்களால் ஏற்படும் சண்டை சொத்துத் தகராறுக்கு மேல் இருக்கும்.

இதற்கு ஒரே தீர்வு - இன்று பயன்படுத்திய துண்டைக் காயப்போட்டதும், நாளைக்குத் தேவைப்படும் துண்டைப் பாத்ரூமில் வைத்து விடுங்கள். தம்பி குளிக்கப்போகும் போது, டேய், மோட்டார் போடட்டுமா©©என்று அண்ணன் கேட்டால், தம்பிக்கு குற்றால அருவியில் குடும்பத்தோடு குளித்த சந்தோஷம் உண்டாகும்.

இது எங்கள் வீட்டிலும் நடைமுறையில் சாத்தியப் பட்டதில்லை - சண்டை தொடர்கிறது. எழுதியாவது மனதைக் குளிர்ச்சிப்படுத்திக் கொள்கிறேன்.

சில நேரங்களில் நாம் செய்யும் தொழிலில், நம் நண்பர்களோ அல்லது நெருங்கியவர்களோ வேலைக்குத் தேவைப்படுவார்கள்.அப்படி அவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும்போது, "இந்த வேலைக்குத் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்" என்று கேட்டால், "என்னங்க உங்க விட்ட போய் பணத்தைப் பற்றி பேசுவதா" அதெல்லாம் பின்னால் பார்த்துக்கலாம்" என்றால், நீங்கள் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

நானூறோ, நாலாயிரமோ, வேலைதொடங்கும் முன் பேசி விடுங்கள். நீங்கள் இந்த வேலைக்கு ஆயிரம் ரூபாய் தரலாமென்று நினைத்திருப்பீர்கள். வேலை முடிந்த பின்பு உங்களுக்கு வேண்டப்பட்டவர் கூலாக, இந்த வேலைக்கு நான் வெளியே பதினைந்தாயிரம் வாங்குவேன், நீங்கள் வேண்டப பட்டவர் என்பதால் பத்தாயிரம் கொடுங்கள் போதும் என்று சிரித்த முகத்துடன் கூறினால், அவர் வில்லனா "நீங்கள் வில்லனாகப் போகிறீர்களா" என்ற நிலை வரும். எதற்கு இந்த வம்பு©

வேலை துவங்கும் முன்,©இது என் தொழில். லாபம், நஷ்டம் இரண்டும் கலந்தது. உங்களுக்கு இது வேலை. அதனால் நட்பு - வேண்டப்பட்டவர் என்ற அன்பையும், நன்றியையும் உங்கள் சம்பளத்தில் காட்டுங்கள்© என்று முன் கூட்டியே சொல்லி விடுங்கள். இப்படி நாசுக்காகக் கூறி கொஞ்சம் முன் பணம் கொடுத்து வேலைக்கு கூலி எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தி விடுங்கள். வேலையும் ஒழுங்காக நடக்கும். நட்பும் நடப்பில் இருக்கும்.

ஒரு நண்பர் நாம் அழைப்புக் கொடுத்ததும் நம் வீட்டு விழாவுக்கு வரவில்லையென்றால் அவரை©எதிரி©லிஸ்டில் சேர்த்து விடுவது பலரது பழக்கம். அவர் ஏன்வரவில்லை என்ற காணத்தைக் கேட்டால் தான் தெரியும் உண்மை என்னவென்று! விழாக்களுக்குப் புறப்படும் முன் திடீரென்று மிக முக்கியமான வேலை வந்து விட்டால் நாம் கூட விழாவைத் தவிர்த்து விட்டு வேலையைத்தானே கவனிப்போம். அதனால் ஒரு விழாவிற்கு வரவில்லை என்பதால் பல வருட நட்பை, உறவைத் துண்டிப்பது குறுகிய குணமாகும்.

திட்டமிட்டுச் செயல்படும் பல பிரபலங்களே சில நேரங்களில் கடைசி நேரத்தில் விழாக்களை விட மிக முக்கிய வேலைக்குச் சென்று விடுவதை நான் கவனித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை விழாக்களை விட தொழிலுக்கும், துக்க சம்பவங்களுக்கு ஆறுதல் சொல்வதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

இப்போதெல்லாம் நரைத்த தலைகளைப் பார்ப்பது அரிதாகி வட்டது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்று சொல்ல முடியாத காலம். முடி வெட்டிக் கொள்ளும் போதே டை அடிப்பது பழக்கமாகி விட்டது. இது விஞ்ஞான வளர்ச்சி. மனிதனை இளமையாக்கும் இந்த வளர்ச்சியை வரவேற்பதை விட்டு விட்டு சிலர் கேலி பேசுவது குறும்பு. பழமை நம் கலாச்சாரம் - விஞ்ஞானம் நம் முன்னேற்றம்.

முகத்தில் ©மரு© இருந்தால் கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வரும். இப்போது மருத்துவம் மருவை மறு நிமிஷமே அகற்றிவிடும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பக்க விளைவுகள் இல்லாத, பிற்காலத்தில் பிரச்சினையில்லாத எந்த விஞ்ஞான மருத்துவத்தையும் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் உடம்பைக் குறைக்க ஓர் ஆபரேஷன், மூக்கை சரி செய்ய ஓர் ஆபரேஷன் என்று அதே வேலையாக இருப்பார்கள் - இது கொஞ்சம் ஒவர்.

எல்லாருக்கும் ஒரே மாதிரி கண்ணும், ஒரே மாதிரி மூக்கும் இருந்து விட்டால் ஒருவருக்கு ஒருவர் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. பிரச்சினையிருந்தால் மட்டும் சரி செய்து கொள்ளலாம். இரண்டு தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த செய்திகளைப் பார்த்தேன். மருத்துவ முன்னேற்றத்திற்கு மனிதகுலம் தலை வணங்க வேண்டும்.

ஒரு தொழிலில் ஒருவர் வெற்றி பெறாவிட்டால் அவரை வசைபாட இவ்வையகம் தயங்குவதே இல்லை. இது எல்லாத் துறையிலும் பொருந்தும். ஒன்றை யோசியுங்கள்- ஒருவர் மேடை ஏறும் போது இன்று பிரமாதமாகப் பேசித் தன் திறமையை வெளிப்படுத்த நினைப்பாரா© அல்லது இன்று தம் பேச்சால் சொதப்பிவிட வேண்டுமென்று நினைப்பாரா வெற்றி தோல்வி எல்லார் வாழ்விலும் வரும்.சில சமயம் சாதித்த அறிவாளிகள் தோல்வியைக் கொடுத்தால், தகுதியற்றவர்கள் அவர்களைக் கேலி செய்துபேசும் போது வேதனையாக இருக்கும். ஒரு விஷயம் - வெளியே தெரியும்.

வெற்றியும் உண்டு, மனதிற்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கும் வெற்றியும் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

எந்த தொழிலையும் அக்கறையுடன் சிந்தித்துச் செயல்பட்டாலும் அதற்கன நேரம் காலம் வரும் போது தான் பிரகாசமாக வரும். குருவைவிட மாணவன் பிரபலமடைந்தால் குருவிற்குத் திறமை குறைவு என்று அர்த்தமாகுமா© லட்சியத்தோடு போராடினால் நிச்சயம் வெற்றி ! ஆனால் என்றைக்கு © எப்போது© எங்கே அந்த வெற்றி காத்திருக்கிறது என்பதை எவராலும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. எப்போத நமக்கு மகிழ்ச்சி வரும் என்று புலம்பும் நாம், எப்போது நமக்குக் கோபம் வரும் என்று யோசித்ததுண்டா© அறிவைச் சேகரித்துச் சேமித்து வையுங்கள். அது பிற்காலத்தில் நிச்சயம் நல்ல வட்டியைத் தரும். கவனம் சிதறாமல் பொறுமையுடன் உங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணம் செய்யுங்கள் - வெற்றி நிச்சயம். இந்தத் தத்துவத்தைக் கூறியிருப்பவர் பென்ஜமின் டிஸிலரி என்ற வெற்றி பெற்ற அறிஞர்.

ஒரு வாரம் வேலைக்குச் செல்லவில்லையென்றால் வீட்டில் இருப்பவர்கள் நம்மிடம் பேசும் வசனமே அதிர்ச்சியாக இருக்கும் - "கொஞ்சம் பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்க", "பால் வாங்கிட்டு வந்துடுங்க", "எதுக்கு சீக்கிரம் முழிச்சி ரெடியாகி எல்லாரையும் தொந்தரவு செய்றீங்க" இந்த மாதிரி தொடரும். வேலைக்குச் செல்லவில்லையென்றால் ஆண்கள் பாடு படாத பாடாகி விடும். போருக்குப் புறப்படுபவர்களைப் போல் காலையில் வேலைக்குப் புறப்படுவதுதான் புருஷ லட்சணம். அப்போது தான் நம்மை ஒரு வீரனாக மதிப்பார்கள்.

இந்த வேலைக்குத்தான் போவேன் என்று அடம் பிடித்து அசிங்கப்படுவதை விட, எந்த வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்து பாருங்கள். உற்சாகமாகவும், இளமையாகவும் இருப்பீர்கள். உழைக்காமல் ஒதுங்கியிருந்தால்,உடம்பு கூட உங்கள் சொன்னப் பேச்சு கேட்காது. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஓயாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த உடம்பு வேலைக்குச் செல்லவில்லை என்றால் எப்படி© வேலை கிடைக்கவில்லை என்பவர்களுக்கு ஒரு பதில் - ஓயாது வேலை தேடுவதே ஒரு வேலை.

விழாக்களுக்குச் செல்வதைச் சிலர் புதுப் புதுக் காரணங்களைக் கூறித் தவிர்த்து விடுவார்கள். விழா ஓர் இணைப்ப என்பதைக் கூர்ந்து நோக்கினால் தெரியும். சண்டை கொண்ட இருவர் பந்தியில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதால் சம்பந்திகளாக மாறக் கூடிய வாய்ப்புக் கூட உண்டு.

யாரும் கல்யாண வீட்டிற்கோ, காதணி விழாவிற்கோ கோபத்துடன் வருவதில்லை. வாசலில் நுழையும் போதே பன்னீர்தெளித்து© சந்தனம் பூசி, கற்கண்டு கொடுத்தால் கோபம், கோபம் கொண்டு ஓடி விடாதா© மேலும் நட்பு, உறவு போன்றவை இறுகுவது வெகுநாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் தான் ஏற்படும். சந்தோஷம் குசலம் விசாரிப்பு இவையெல்லாம் விழாக்களில் அழைப்பிதழ் கொடுக்கும் போது, "குடும்பத்தோட அவசியம் வரணும்" என்று அழைக்கும் கலாச்சாரம் நம்மிடம் இருக்கும்போது அதை ஏன் அலட்சியப்படுத்துவானேன்© அழைப்பிதழ் அனுப்பாத உங்கள் எதிரி வீட்டுத் திருமணத்திற்குப் பெருந்தன்மையுடன் போய்ப் பாருங்கள். அவர் உங்கள் முந்நாள் எதிரி ஆகிவிடுவார்.

சில நேரங்களில் நண்பர்கள் நம்மைச் சந்திக்க வரும் போது, உடன் யாரையாவது கூட்டி வந்தால் அவரைப் பற்றி அவர் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வருவதில்லை. மேலும் நம் நண்பரிடம் பேச வேண்டிய ரகசியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் கொட்டித் தீர்த்து விடுவோம். அந்த விஷயங்கள் வந்தவருக்குத் தெரியக் கூடாததாகக் கூட இருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை.

ஒரு விஷயம், நமக்குப் பிடித்தவர்கள் மற்றவர்களுக்குப் பிடித்தமானவராக இருப்பார்கள் என்று எப்படி ஊர்ஜிதப்படுத்த முடியும் © கடவுள், நாத்திகள், மதம்,ஜாதி, தலைவர்கள் இப்படிக் கருத்து வேறுபாடு எல்லாருக்கும் உண்டு என்பதை உணராமல், நண்பருடன் பேசுகிறோம் என்பதை மட்டும் நினைத்து பக்கத்தில் வந்தவரையும் நம் பேச்சோடு கலந்துவிடும்படி கூடப் பேசுவோம். திடீரென்று சொல்லக்கூடாத விஷயத்தையெல்லாம் சொல்லி விட்டோமோ என்ற சந்தேகம் வரும் போது தான் இவர் யார் என்று அறியத் தோன்றும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

சில நேரங்களில் நீங்கள் பேசியது யார் காதுக்குப் போகக் கூடாது என்று நினைத்திருந்தீர்களோ© வந்தவர் அவருடைய நண்பராக இருந்தால் உடம்பில் அல்ல, உயிரில் ஷாக் அடித்தது போலிருக்கும். சில நேரங்களில் வந்தவர் உங்கள் நண்பருக்கே தெரியாதவராகக் கூட இருக்கலாம். இதை விட சில நேரங்களில் உங்கள் நண்பருடன் வந்தவர் அவராக மூக்கை நுழைந்து உங்கள் வார்த்தைகளைப் பிடுங்கலாம்.

இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க ஒரே வழி, தெரியாதவராக இருந்தால் நீங்களாகவே உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் யார் என்பதை கூச்சமில்லாமல் கேளுங்கள். இல்லையென்றால் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன், ஞாபகமில்லை என்று யாருக்கும் பாதிக்காத பொய்யைச் சொல்லுங்கள். அவர் யார் என்பதைச் சொல்லியே தீருவார்,பிறகு வம்பு இல்லை.

அதே போல் நீங்கள் எந்த நண்பரை பார்க்கப் போனாலும் உங்களுடன் அழைத்துச் செல்பவரை முதலில் யார் என்றும் எவ்வளவு நெருக்கம் என்பதையும் சொல்லி விடுங்கள். உங்கள் நண்பர் காப்பாற்றப்படுவார்.

சிலரிடம் அவரது விலாசம் கேட்டால் யோசித்து பின் தன் மனைவியிடமோ அல்லது மகன்களிடமோ கேட்டுச் சொல்பவர்களும் உண்டு. பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ, முதலில் உங்கள் விசிட்டிங் கார்டு அல்லது ஒரு சீட்டில் உங்கள் விலாசத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அது உங்களை எங்கெல்லாம் காப்பாற்றும் தெரியுமா© திடீரென்று நீங்கள் மயங்கி விழுந்தால் உங்கள் விலாசம் தான் உங்களை வீட்டுக்கு அழைத்து வர உதவும். மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வந்தாலும் விலாசம் இல்லையென்றாலும் நேரம் விரயமாகும். வீண் டென்ஷன் உங்களுக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ள அனைவரிடமும் வெளியே செல்லும்போது விலாசத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

மேலும் ஒரு படி யோசித்தால், உங்கள் குடும்ப டாக்டர், வக்கீல் போன்றவர்களின் விசிட்டிங் கார்ட் அல்லது விலாசம், குறைந்த பட்சம், பாக்கெட் டைரியில் முக்கியமானவர்களின் போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொள்வது, ஒரு முதலுதவிப் பெட்டி உங்கள் பாக்கெட்டில் இருப்பது போன்றது. பாக்கெட்டில் பணமிருந்தால் அதை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். விலாசமிருந்தால் அது உங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

அடிக்கடி வெளியூர் போகிறவர்களால் குடும்பத்தினருக்கு டென்ஷன் ஏற்படும். போன கணவர் உடனே போன் செய்ய வேண்டும். இல்லையேல் குழப்பம் கூடுகட்ட ஆரம்பித்து விடும். எவ்வளவு தூரப் பயணமானாலும் சரி, எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி, போனவுடன் போன் போட்டு நான் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன். இனி இந்த விலாசத்தில் இந்தப் போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.உங்களைப் பற்றிய தேவையற்ற கவலையும், அவர்களைப் பற்றிய கவலையும் நீங்கி நிம்மதியாகப் பணியாற்றலாம்.

நமது வீட்டு விழர்க்களுக்குப் பத்திரிகை அனுப்பும் போது, பலரது விலாசத்திற்கு நாம் படும்பாடு இருக்கிறதே - மூளையே வலிக்கும். கொஞ்சம் முன் யோசனையோடு இதற்கு முன் நாம் நடத்திய விழாவுக்குப் பத்திரிகை அனுப்பும் போது , யார் யாருக்கு அனுப்பினோம் என்ற விலாச நகல் ஒன்றை எப்போதும் பத்திரமாக வைத்திருங்க்ள். ©கல்யாணமா, காது குத்தா, எடு அந்த லிஸ்டை © என்று விசனப்படாமல் விலாசம் எழுதலாம்.

மேலும் நமக்கு புதுப் புது நண்பர்கள். உறவினர்கள் கூடும் போது இந்த லிஸ்டில் அவர்களது பெயரையும் உடனே சேர்த்து விடுங்கள். பலர் நமக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தால், அதே விசிட்டிங் கார்டில் மற்றொருவருக்கு நம் தொலைபேசி எண்ணை எழுதிக்கொடுத்து விடுவோம். விசிட்டிங் கார்டுக்கென்று ஒரு சிறு பெட்டி வைத்திருங்கள். இதெல்லாம் முன் ஜாக்கிரதை மட்டுமல்ல. நட்பை பலப்படுத்த ஒரு பாலமும் கூட.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

விசேஷங்களுக்குப் போகும்போ என்ன பரிசுப் பொருள் வாங்கி போவது - இதை அழைப்பிதழ் வந்த உடனே யோசிக்க வேண்டும். இல்லையென்றால் விழாக்களுக்குப் புறப்படும் முன் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே - அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அழைப்பிதழ் வந்தவுடன் அவருக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்...இப்போதைய நமது பொருளாதார நிலை.....இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை நான் அழைப்பிதழைப் பார்த்தவுடன் இதற்கு மலர் கொத்து, அன்று எனக்கு முக்கிய வேலை இருந்து போக முடியாமல் போனால் அதற்கு வாழ்த்துத் தந்தி, பரிசுப்பொருள் என்றால் எவ்வளவு விலை என்பதை அழைப்பிதழ் கவரிலேயே எழுதிவிடுவேன்.

மேலும் என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துக் கொடுத்தால் அழைப்பிதழ் அனுப்பியவர் மனதில் அதிகம் இடம் பிடிக்கலாம்.

உதாரணத்திற்கு, அவர் எப்போதோ உங்களிடம் சொன்ன விஷயத்தை ஞாபகம் வைத்து அது நினைவுக்கு வரும்படி பரிசுப் பொருள் கொடுத்தால், அவர் எப்போதும் உங்களை மனதில் ஞாபகம் வைத்திருப்பார். கல்யாணப் பெண்ணுக்குப் பரிசு கொடுக்கும் போது, ©சாவிக் கொத்து© கொடுங்கள். இனி தன் கையில்தான் இந்தக் குடும்பப் பொறுப்பு என்று புரிந்து சந்தோஷப்படுவார்.

மாப்பிள்ளைக்கு, குழந்தை தாலாட்டும் தொட்டில் கொடுத்து பாருங்கள். அப்போதே தந்தையாகிவிட்ட சந்தோஷம் முகத்தில் தாண்டவமாடும். புதுமனைப் புகுவிழா என்றால் வீட்டைச் சுத்தம் செய்யும் மிஷின் வாங்கிக் கொடுங்கள். எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் சிம்பாலிக் அவர்களை சிலிர்க்க வைக்கும்.

டேப் ரிக்கார்டரில் பாடல் கேட்கும் ஆர்வம் உள்ள நாம், அந்தப் படப் பாடல் கேசட் முடிந்தவுடன் மறுபடியும் அந்தப் பட கேசட்டைப் பெட்டிக்குள் வைக்கிறோமா என்றால் , பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் அதே சமயம் உடனே கேட்க விரும்பும் படப் பாடல் கேசட் தேடும்போது கிடைக்கவில்லையென்றால் வரும் கோபத்தின் அளவு இருக்கிறதே.... அடேங்கப்பா !

இதற்கு ஒரு யோசனை பாடல் கேட்டு முடிந்தவுடன் அடுத்தப் பட பாடல் கேசட்டை ஆர்வத்துடன் எடுக்கும் முன், கேட்டு முடிந்த பாடல் கேசட்டை அதன் பெட்டிக்குள் வைத்து விட வேண்டும். பிறகு அடுத்த பாடல் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தால் இந்த கேசட் குழப்பம் தவிர்க்கப்படும். இதே போல, சில பைல்களைத் தேடும் போது வீட்டில் ரகளையே நடக்கும்.

டெலிபோன் டைரியில் எப்படி நம்பர்களைக் குறித்து வைத்துக் கொள்கிறோமோ அதேபோல் ஒரு டைரியில் எந்த பைல் எந்தப் பெட்டியில் இருக்கிறது என்று குறித்து வைத்துக் கொண்டால் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி அலுவலகம் நடக்கும் உணர்வு தோன்றும்.

உழைப்பு என்பது உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், இருக்கிறது. உடல் உழைப்புடன் அறிவும் கலந்து விட்டால் வெற்றியின் உச்சத்தைத் தொட்டு விடலாம். இதில் தன்னிலை உணருதல் மிக முக்கியம். தன்னால் இந்த வேலையைச் செய்ய முடியுமா© என்று முடிவெடுப்பது மிக முக்கியம்.

கோடரியால் மரத்தை வெட்டுவது பலம். மரம் வெட்டும் முன்பே கோடரியைக் கூர்தீட்டுவது அறிவு. உடல் பலம் உள்ள எல்லோரிடமும் அறிவு அதிகமிருக்கும் என்று நினைப்பது தவறு. ஆனால் அறிவாளிகள் தனக்கு என்ன தெரியும் என்பதை விட, என்ன தெரியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்து செயல்படுவார்கள். இப்போதும் எப்போதும் எனக்கு மனப்பாடம் ©ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

இரண்டு குடும்பத்துக்கு இடையே சண்டை, இரண்டு அணியினர்க்கு இடையே பிரச்சினை. முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் கோரிக்கையில் குழப்பம். இதற்கெல்லாம் சமரசப் பேச்சுவார்த்தை நடப்பதைப் பலரும் பார்த்திருப்போம். முதல் சுற்றிலேயே சமரசம் ஏற்படும் பேச்சுவார்த்தையும் உண்டு. பேச்சு வார்த்தையால் பிரச்சினை பெரிதானதும் உண்டு.

கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பவர்கள் முதலில் தங்களது கோரிக்கைகளைப் பட்டியலிட்டு எது நமக்கு மிக முக்கியமானது, எதை விட்டு கொடுத்தால் நமக்குப் பெரிய பாதிப்பு வராது என்று திட்டமிடுவார்கள். இது வெற்றிக்கு பெரிய வித்து.

என்னுடைய கோரிக்கையில் ஒன்றைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் ©அலை எப்ப ஓயுரது, தலை எப்ப முழுகிறது©© என்ற பழமொழி பழக்கமான மொழியாகிவிடும். விட்டுக் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். சண்டை, பிரச்சினை, மோதல் இதெல்லாம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.

சிலருக்கு தொலைபேசி பில் வந்தவுடன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து விடும். முதலில் தொலைபேசி நமக்குச் செய்கிற நன்மைகளை எண்ணி பாருங்கள். மறைமுகமாமக தொலைபேசி நமக்கு சம்பாதித்துத் தருகிறது என்பதை மறந்து விடுகிறோம்.

பல கோடி வியாபாரங்களைக் கூட தொலைபேசி முடித்துவிடும். அவசரச் செய்திகள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் போன்ற வேலைகளைத் தொலைபேசி மூலம் நாம் முடிக்கும் போது நம்மை டபுள் ஆக்‌ஷன்- இரட்டை வேடம் மாதிரி அல்லவா மாற்றிவிடுகிறது © பக்கத்து நாட்டைப் பக்கத்து வீடாக சுருக்குகிறது. இந்த ...©டிரிங்.....டிரிங்...© ஓசை இல்லையென்றால் காதல் கூட கொஞ்சம் குறைந்து போயிருக்கும்.

நாம் சந்திக்க வேண்டிய நபர் வீட்டில் இருக்கிறாரா© என்று தெரிந்து கொள்ள தொலைபேசி இல்லையென்றால் எவ்வளவு தூம் வீணாகப் போய்வர வேண்டும். அநாவசிய விஷயங்களுக்கும் போனைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வீட்டுப் போன் கட் ஆனால், இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் பாதி ஒதுங்கி விட்டீர்கள் என்று அர்த்தமாகிவிடும். போன் வாங்குவது பெரிதல்ல- உங்கள் நம்பர் எப்போதும் ஒரே நம்பராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தன் தொலைபேசி துண்டிக்கப்படாமல் வாழ்கிறார் என்றால், அவர் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்கிறார் என்று அர்த்தம்.

பலர் குளிப்பதை ஒரு பெரிய வேலையாகக் கருதி, தள்ளிப் போட்டுக் கொண்டே ஒரு வாரம் வரை கூட குளிக்காதவர்களும் உண்டு. ஒரு விஷயம் ! உங்களை வேலைக்குள் தள்ளி விடுவதே குளியல்தான் . குளித்து முடித்து எந்த வேலைக்குப் போகப் போகிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் குளிக்க ஆரம்பித்தவுடன் தானாகவே பதில் கிடைத்து விடும். புயல் போல் புறப்பட்டு விடுவீர்கள்.

மேலும் குளிக்கும்போது தோன்றும் யோசனைகள், திட்டங்கள் பெரும்பாலும் பயனுள்ளதாகவும், நிறைவேறக் கூடியதாகவும் இருக்கும். குளியலைத் தள்ளிப் போட்டால் நீங்கள் சோம்பேறி லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உற்சாகம் குறையும் போது குளித்துப் பாருங்கள்- குளியலின் மகிமை தெரியும்.

இரண்டு நாள் ஷேவிங் செய்யாமல் இருந்தால் நீங்கள் ஏதோ துக்கத்தில் இருப்பது போல் உங்களுக்கே தோன்றும். தாடி பொருந்தியவர்களுக்கு இது பொருந்தாது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, ஷேவிங், குளியல் என்று வேலைக்கு வெளியேறுங்கள். உங்கள் பேங்க் சேவிங் அக்கவுண்ட் கூடும்.

சிலர் தன்னிடம் இல்லாத ஏதோ ஒரு திறமையைச் சுட்டிக்காட்டி, அது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் நான் பெரியாளாகிவிடுவேன் என்று புலம்புவார்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியவில்லை என்றால், அது ஒன்றுதான் வெற்றிக்கு முட்டுக்கட்டை என்று நினைப்பார்கள்.

ஒரு விஷயம், நீங்கள் எதில் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது தான் அறிவு கூர்மை. விதோவன் என்ற மாபெரும் இசை மேதைக்குக் காது சரிவரக் கேட்காது என்ற செய்தி படித்துப் பதறிப் போனேன். உங்கள் குறைகளைத் தெரிந்து, களைய ஆரம்பிக்கும் போதே உங்கள் நிறைகளை மெருகூட்ட ஆரம்பிக்கிறீர்கள். துவண்ட நேரங்களில் நீங்கள் இதுவரை அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்- துள்ளி எழுவீர்கள்.

வெற்றிக்கு இதுதான் பாதை என்று தெரிந்துவிட்டால் எல்லாரும் அதே பாதையில் பயணம் செய்யத் துவங்கி விடுவார்கள். தன்னம்பிக்கை அடைய பணம் காசு செலவு செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக யோசியுங்கள்! பெருமை உங்கள் வீடு தேடி வந்து சேரும் !

வீடுகளில் கதவுகளைத் திறந்து விட்டு, பின் மூடாமல் விட்டு விட்டால் கதவு ©டமார்© என்று அடிக்கும் சத்தம் இருக்கிறதே - வீடே இடிந்து விடும்போல் இருக்கும். கதவு ©படால்© என்று மூடாமல் இருக்க ஒரு புஷ் பொருத்துவோம். அதைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பதால் தான் இந்த ©டமார்© இடி. புஷ் இல்லாத போது ஒரு துண்டுப் பேப்பவரை மடித்து வைத்தால் கூட இதைத் தவிர்க்கலாம்.

சில நேரங்களில் கதவு பின்னாலிருந்து ©தடால்© என்று அடிப்பதால், தலையில் அடிபட்டு பெரிய விபத்து கூட நேரலாம். கதவிடுக்கில் கால் மாட்டினால் கூட வேதனை தானே ! ஜன்னலும் இப்படித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

வீட்டின் தரையில் சிமெண்ட் அல்லது டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கும் நாம், அங்கே போடும் நாற்காலியால் தரை சேதப்படாமல் இருக்க யோசிப்பதில்லை. உங்கள் காலுக்கு செருப்பு அணிந்து கொள்வது போல வீட்டில் போடும் நாற்காலிகளுக்கும் புஷ் போடுங்கள். தரையும் பாதிக்காது, உங்கள் காலும் பாதிக்காது.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பது இப்போது பல விஷயங்களுக்குத் தேவைப் படுகிறது. பாஸ்போர்ட், அடையாள அட்டை, பரீட்சைக்கு ஹால் டிக்கெட், கிரெடிட் கார்டு, பேங் அக்கவுண்ட் இப்படிப் பலவற்றிற்குத் தேவைப்படுகிறது. இது இல்லாத போது இச்சிறிய போட்டாவை எடுக்கப் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் குதித்துக் கொண்டு, ©சீக்கிரம்© - சீக்கிரம்- சீக்கிரம்©என்று போட்டோ கடைக் காரரை நச்சரிப்பார்கள்.

இப்போதெல்லாம் புகைப்படத் துறையில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. போட்டோ எடுத்த ஐந்து நிமிடத்தில் எத்தனை பிரிண்ட் வேண்டுமானாலும் எடுத்துத் தருகிறார்கள். நாம் திடீரென்று போட்டோ எடுக்க வேண்டிய கட்டத்தில், தாடியுடன் இருக்கிறோமா, கொஞ்சம் டல்லாக இருக்கிறோமா© என்று பல குழப்பங்கள் வரலாம். எப்போதும் நம்மிடம் குறைந்தது பத்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை ரெடியாக வைத்திருங்கள். டென்ஷனே இல்லை.

இதேபோல் சிலர் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து விட்டு எப்போது வரும் என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதாவது வெளிநாடு செல்வோம் என்ற கனவுடையவர்கள் உடனே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். பாஸ்போர்ட் இருந்தால் தான் சில உயர் படிப்புகளுக்குத் தேர்வே எழுத முடியும் என்பது சிலருக்குத் தெரியாது.

எப்போதாவது, என்னவோ அற்புதம் நடக்கும் என்ற நம்பிக்கையில்தாம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிநாடு செல்ல அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும் போது ©பாஸ்போர்ட்© என்கிற சாவி உங்கள் கையில் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும். ஒரு விஷயம், பாஸ்போர்ட் என்பது உங்கள் உடன் பிறவா பிறப்பு.

நம் வீடுகளில் சுவர் மூலையில் ஒட்டடையைப் பார்த்தவுடன் தான் ஒட்டடை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. சில சந்தோஷ குடும்பங்களைக் கவனித்திருக்கிறேன். அட்டவணை ஒன்று வைத்திருக்கிறார்கள். அதன்படி ஒட்டடை இருக்கிறதோ, இல்லையோ - இத்தனை நாளைக்கு ஒரு முறை ஒட்டடை அடிக்க வேண்டும், விளக்குகளைச் சுத்தம் செயய வேண்டும், காருக்கு ஆயில் மாற்ற வேண்டும். இப்படித் தயாரித்த பட்டியலை, குடும்பத்தில் யார், யார் என்னென்ன வேலை செய்வது என்பதைப் பசங்கள் வரைக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் தான் வீடுகள் எப்போதும்©பளீச்© சென இருக்கின்றன. வீட்டில் உள்ளவர்களும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இது என்ன நம்மால் முடியாததா© நிச்சயம் முடியும். இப்போதே பட்டியலைத் தயாரியுங்கள். ஒட்டடை அடிக்கத் துவங்கினால் ஒட்டகத்தையும் ஒரே தவணையில் வாங்கலாம்.

நம் நண்பர் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றால் முதலில் நம் பாக்கெட் நிறைவாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆர்டர் செய்யும் போது உங்களுக்குப் பிடித்தது என்ன வென்று அறிந்து ஆர்டர் செய்ய வேண்டும்.

அதைவிட ஒரு மடங்கு மேலே யோசித்தால் , சர்வரிடமே, ©ஐயா! இவர் என் உயிர் நண்பர், விருந்த கொடுக்க அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களையும் உங்கள் ஓட்டலையும் பாராட்டும்படி அசத்துங்கள்©, என்று கூறி விட்டால் போதும். உங்கள் நண்பர் உச்சி குளிந்து விடுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

சில நண்பர்கள் இருக்கிறாகள். சர்வர் பில் கொண்டு வரும் நேரம் பார்த்து கை கழுவப் போய்விடுவார்கள் . பிறகு வந்த ©நீங்கள் ஏன் பில் கொடுத்தீர்கள்©© என்று போலியாக சண்டை போடுவார்கள். உபசரிப்பில் உண்மை இருந்தால், ருசியை விட அன்பும், நட்பும் பலப்படும்.

ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்தி விட்டு, அப்பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கிறோமா© என்று நம்மை நாமே கேட்டால் பாதிப் பேரிடம் இருந்து வரும் பதில் ©இல்லை© என்று தான் இருக்கும். சாவியை எடுத்த இடத்திலேயே வைக்காமல் அதைத் தேடி அவதிப் படுவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

இப்போதெல்லாம் சிலர் தங்களது செல்போனை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் இன்னொருவரின் போனை வாங்கி ; தங்கள் நம்பருக்குப் போட்ட எங்கே போன் சத்தம் அழுகிறது© என்று கண்டுபிடிக்கிறார்கள். பல் துலக்கும் பிரஷ்ஷிலிருந்த இப்பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நம் ஞாபக சக்தி மேல் நமக்குள்ள நம்பிக்கை வைக்கலாம் ; ஆனால் அதீத நம்பிக்கை கூடாது. கார் சாவி இந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் ; சைக்கிளைப் பூட்டி இந்த இடத்தில் தான் சாவியை வைக்க வேண்டும் என்று நிர்ணயித்தால், எதுவும் தொலைந்து போகாது. மூளையைப் போட்டுத் துளைக்கவும் வேண்டாம். ஞாபகமறதியே இல்லாதவர்கள் இருப்பதாக என் ஞாபகத்தில் இல்லை.

நமக்கு எஸ்.டி.டி.மற்றும் ஐ.எஸ்.டி. போன் வந்தால் யார் பேசுகிறார்களோ அவர்களது பொருளாதார நிலை, நமது நிலை ஆகியவற்றை ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்த்துப் பேச வேண்டும். அவர் சொல்லக் கூடிய செய்தி சுருக்கமானதாக இருந்தால் பரவாயில்லை.

அதிக நேரம் பேச வேண்டிய விஷயமாக இருந்தால், போன் செய்வதவரை, ©நீங்கள் போனை வையுங்கள், நான் திரும்ப அழைக்கிறேன்© என்று கூறி அவரது டெலிபோன் பில்லைக் குறைக்க முயலுங்கள். அவர் மனதில் மட்டு மல்ல, உங்கள் மனதிலும் மகிழ்ச்சி ©அலை© அடிக்கும். போன் செய்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டியாகப் பேச்சை இழுப்பது ஒரு வகையில் துரோகம் கூட.

சிலர் எங்கே எதைப் பேச வேண்டுமென்று தெரியாமல் மூக்கை நுழைத்துப் பேசுவதைப் பார்த்தால் நமக்கு எரிச்சலாக வரும். மேலும் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல் படபடவென பேசுவார்கள்.

ஒரு விஷயம்- மற்றவர்களின் பேச்சில் என்ன விஷயம் இருக்கிறது.எங்கே அவர் முற்றுப்புள்ளி வைக்கிறார் என்று கவனித்து நாம் நம் கருத்தைச் சொல்லத் தொடங்க வேண்டும். அவர் பேச்சில்©கமா© - வைக்கும் போது நாம் குறுக்கிட்டுப் பேசக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

ஆங்கிலப்புத்தகம் ஒன்று பார்த்தேன். சுமார் 1,600 பக்கம் இருக்கும்.அதன் பெயர் ©ஹவ் டு லிசன்© (How to listen). மற்றவர்களது பேச்சைக் கவனிக்கவே இவ்வளவு பெரிய புத்தகமென்றால், நாம் பேசக்கற்று கொள்ள எவ்வளவு பெரிய புத்தகம் படிக்க வேண்டும்.இப்போது என் ஞாபகத்துக்கு வருவது அறிவாளியாய் இரு முட்டாளாய் நடி.

சிலரிடம் பொருளுதவியோ அல்லது வேறு உதவியோ கேட்டுப் போனால், அவரது பெருமையைக் காட்டும் வகையில் ©நான் பார்த்துக் கொள்கிறேன்© என்று உடனே வாக்குறுதியை அள்ளி வீசி விடுவார்கள். அவர்கள் யோசிக்க வேண்டியது இந்த வாக்குறுதியை நம்பி வந்தவர் எவ்வளவு நம்பிக்கையுடனும், கவலை தீர்ந்தது என்ற கற்பனையுடனும் போகிறார் என்பது தான்.

ஒரு விஷயம், நம்மால் எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இதுதான் உண்மை. அதனால் நம்மை நம்பி வருபவரிடம் ©முடியும்©, ©முடியாது©,©நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது©, இவ்வளவு தான் முடியும், உங்களது அவசரத்துக்கு உடனே உதவ முடியாது© போன்ற விஷயங்களைக் கூச்சப்படாமல் கூறி அதே நேரத்தில் உங்களது நிலையை விளக்குங்கள்.

அள்ளி கொடுங்கள் - அதே நேரத்தில் உங்களால் முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள் - அது ஒரு வகையில் பாவம்.

ஒருவர் வெளிநாட்டுக்கோ அல்லது வெளியூருக்கோ சென்று வந்தால், அவர் நமக்கு என்ன வாங்கி வந்தார் என்று குழந்தைகள் ஆவலுடன் பெட்டியைப் பார்ப்பது இயற்கை, ஆனால் சில பெரியவர்களே கூச்சப்படாமல் எனக்கு ஒண்ணும் வாங்கி வரவில்லையா© என் நினைப்பே உனக்கு வரவில்லையா© என்று சில குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்கும்போது குண்டூசியால் குத்துவது போன்று தோன்றும்.

ஒருவிஷயத்தை நாம் யோசிக்க வேண்டும். அவரது பயணம் நமக்குப் பொருள் வாங்கத்தானா© அவரது பயணத்தின் நோக்கம் அங்கு வெற்றியா© அல்லது வேதனையா© கொண்டு போன பணத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு அவர் வேதனையுடன் வந்திருக்கலாம், புறப்படும் போது அவசரம் ஏற்பட்டிருக்கலாம், உங்களுக்கு ஏதாவது வாங்கி வரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவருக்கு உங்கள் மீது பாசமில்லை என்று எடை போட்டு விடாதீர்கள்.

பாசம் பரிசுப் பொருளில் இல்லை. மனிதல் இருக்கிறது. பயணம் முடிந்து வந்தவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் - போன காரியம் வெற்றிகரமாக முடிந்ததா© அங்கே உள்ள எனது நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருந்தார்களா© இப்படிக் கேட்டால் அடுத்து அவர் எங்கே பயணப்பட்டாலும் உங்களையும் உடன் அழைத்துச் செல்ல ஆசைப்படுவார்.

சிலர் அடிக்கடி, ©என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்©© என்று வெகுளித்தனமாகக் கேட்கும் போது, அவர்களது அறிவு, ©கூர் தீட்டப்படவில்லை© என்றே தோன்றும். அன்பையும், நட்பையும் எடை போட்டுக் கொண்டே இருந்தால் ஒரு நாளில் முக்கால் பாகத்தை அதுவே முழுங்கி விடும். அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்போது வெளிபடுத்த வேண்டும்.

மேலும், நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. பலர் அன்பை வெளிப்படுத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்து தெரியப்படுத்துவர். கணவன்- மனைவி அன்பில் நம் கலாச்சாரம் ஒளிந்திருப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக