புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
3 Posts - 5%
prajai
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
2 Posts - 4%
Rutu
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
1 Post - 2%
சிவா
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
1 Post - 2%
viyasan
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
10 Posts - 67%
mohamed nizamudeen
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
2 Posts - 13%
Rutu
30 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை குட்டீஸ் ரெசிபி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:07 am

பிரெட் க்ரிஸ்பிஸ்


தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 1
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.

இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:10 am

வெஜ் சாண்ட்விச்


தேவையானவை: சால்ட் பிரெட் ஸ்லைஸ் - 10, கேரட் துருவல், கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், வெங்காயம், குடமிளகாய், தக்காளி -  தலா ஒன்று, வெண்ணெய் - 100 கிராம், புதினா - சின்ன கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, இஞ்சி  விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 2
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் வெண்ணெய், இஞ்சி விழுது சேர்த்து நன்கு குழைத்து, பிரெட் துண்டின் மேல் பரவலாகத் தடவவும். அதன் மேல் வதக்கிய காய்களை பரவலாக வைத்து, மல்லித்தழைத் தூவி மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் (தவாவில் சூடுபடுத்தியும் தயார் செய்யலாம்).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:12 am

டொமேட்டோ  கார்ன் புலாவ்


தேவையானவை:  பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த கார்ன் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு,
30 வகை குட்டீஸ் ரெசிபி 3
செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

வேக வைத்த கார்னை மேலே தூவி... பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:15 am

மினி வெஜ் ஊத்தப்பம்


தேவையானவை:  இட்லி மாவு - 4 கப், கேரட் துருவல். கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், இட்லி மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 4
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி... கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்பமாக (சற்று தடிமனாக) ஊற்றி, மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:21 am

பிரெட் வெஜ் ஆம்லெட்


தேவையானவை:  பிரெட் ஸ்லைஸ் - 10, கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) -  ஒரு கப், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண் ணெய், உப்பு  - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 5
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு டன் வதக்கிய காய்கறி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங் கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:26 am

மசாலா குஸ்கா


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பால் - 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 6
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லித் தழை ஆகியவற்றை வதக்கி...  மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து... அரைத்து வைத்த வெங்காயம் - தக்காளி விழுது மற்றும் இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும், 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.

இதற்கு, ஆனியன் ராய்தா மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:29 am

பனீர் ஃப்ரைடு ரைஸ்


தேவையானவை:  பாசுமதி அரிசி - 2 கப், பனீர் - 100 கிராம், பூண்டு - காய்ந்த மிளகாய் அரைத்த விழுது - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 7
செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். பனீரை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு - காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பாதியளவு வெங்காயத்தாள், பனீர் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பாசுமதி சாதம், மீதமுள்ள வெங்காயத்தாள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:31 am

ஃப்ரூட் பகளாபாத்


தேவையானவை: பச்சரிசி - 2 கப், பால் - அரை கப், புளிப்பில்லாத புதிய கெட்டித்தயிர் - இரண்டரை கப், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், பச்சை திராட்சை - 20, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 8
செய்முறை:  பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி ஆகியவற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் கெட்டித்தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்.

இதை டிபன் பாக்ஸில் போட்டு லஞ்சுக்கு கொடுத்து அனுப்பலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:33 am

பச்சைப்பயறு பாத்


தேவையானவை:  பச்சைப்பயறு, பச்சரிசி - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி - 8, பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 9
செய்முறை: பச்சைப்பயிறு, பச்சரிசியை நன்கு கழுவி 2 கப் நீர் ஊற்றி ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் ஊற வைத்த அரிசி - பயறை சேர்த்து குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரைத் திறந்து 'பொலபொல’வென இருக்கும் மணக்கும் சாதத்தின் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி தூவி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, கிளறி இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:35 am

க்ரீன் இட்லி


தேவையானவை:  குட்டி இட்லி - 20 (அல்லது பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்) புதினா, கொத்தமல்லி - தலா ஒரு சிறு கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், புளி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி 10
செய்முறை: புதினா, கொத்தமல்லியை மண்போக அலசி, சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து... புதினா, கொத்தமல்லி, புளி, தேங்காய் துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஆறவைத்து, அரைத்துக் கொள்ளவும். நெய்யை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... அரைத்து வைத்த சட்னி, குட்டி இட்லிகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக