புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
31 Posts - 44%
jairam
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
1 Post - 1%
சிவா
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
13 Posts - 4%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
9 Posts - 3%
Jenila
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
4 Posts - 1%
jairam
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 18, 2014 1:02 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .85

மரம் என்று பொதுவாக யோசித்துப் பார்த்தால் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் என்று பாடகர் பாடுவது நினைவில் வரும்..

ஆனால் அந்தக் காலத்தில் பெண்களுக்கும் மரத்துக்கும் நிறைய தொடர்பு இருந்ததாம்..இதுபற்றி வரும் ஒரு சமஸ்கிருதப் பாடலின் தமிழ் வடிவம்..

பெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்
பெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்

மற்ற மரங்களை விட்டு விடலாம்..இந்த அசோக மரம்..

அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும் மரமாம்..இதையும் நெட்டிலிங்க மரத்தையும்  குழப்பிக் கொள்வார்களாம் பலர்.. அசோக மரம் பலவித மருத்துவ குணங்க்ள் வாய்ந்தது..குறிப்பாக பெண்களுக்கு உண்டான நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் இந்த மரத்தின் பட்டையைப் பயன் படுத்துவார்களாம்.. அசோகம் என்றால் சோகம் இல்லாதது என்று பொருள்.. பொடானிகல் பெயர் அசோகா பார்பிகா..

அசோக மரங்கள் சூழ்ந்த இடம் அசோக வனம்.. சீதாப் பிராட்டி இலங்கையில் இந்த மரத்தின் கீழ் தான் இருப்பார்..

(அசோகவனம்னா எனக்கு அந்தக்கால பத்மினி இந்தக்கால நயன் தாராதான் நினைவுக்கு வர்றாங்க)
ஏன் அஞ்சலி தேவி வரலையா..ஷ்ஷ்)

சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்க்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று..

திருமாலிருஞ்சோலையெனும் திருமால் கோவிலில் அசோக மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.  இந்த மரம் தழைத்திருக்கும் செவ்விய தளிர்களை உடையது. செக்கச்சிவந்த மலர்களை உடையது. கொத்துக் கொத்தாகப் பூப்பது. தற்போது தென்னிந்தியாவில், பெங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் அருமையாக வளர்க்கப்பட்டு வரும் மரமாகும்..

(யாராவது உன்னை கட்டுரை எழுதச் சொன்னாங்களா..
ஷ்ஷ்)

ஒரு திரைப்படத்தில் ஹீரோ கணவனின் மீது மனைவிக்கு எக்கச்சக்க அன்பு.. கணவனோ பாடகன்.. தொழில் முறையாக பெண்கள், ரசிகைகளுடன் பேசவேண்டிய வேலை.. ஆனால் மனைவிக்கோ கோபம் வருகிறது.. காரணம் அதீத அன்பு.. ஆங்கிலத்தில் பொஸஸிவ்னெஸ் என்பார்கள்..

(சரி..இது எதுக்கு இப்ப..
ஷ்ஷ்.)

இந்த ஸ்லோகத்திலும் பொஸஸிவ்னெஸ் ஏற்படுகிறது ஒருவருக்கு..யாருக்கு பரமசிவனுக்குத் தான்..ஏனாம்..


வாருங்கள் ஸ்லோகத்துக்குள் போய்ப் பார்க்கலாம்..

**

நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே
அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே
பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே

Namo vakam broomo nayana ramaneeyaya padayo
Thavasmai dwandhaya sphuta ruchi rasalaktha kavathe
Asooyathyantham yadhamihananaaya spruhyathe
Passonamisana pramadhavana kamkhelitharave

**
“அம்மா, உன் கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், ஒளி மிகக் கொண்டு பிரகாசிப்பதும், உலராத செம்பஞ்சுக் குழம்பினால் மிகுந்த சிவப்பு நிறத்தில் காணப்படுவதுமான உன் திருவடிகளை வணங்குகிறோம்…

தேவி.. உனது பொற்பாதங்களால் உதை வாங்குவதற்காகத் தான் அந்த அசோக மரம் புன்
முறுவலுடன் பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறது.. அதைக் கண்டு நீ மரத்தை உதைக்கிறாய்.. மகிழ்ச்சி அலைகள் உடலெங்கும் ஊடுருவ அந்த மரம் தனது சிவந்த மஞ்சள் நிறத்திலான பூக்களை புஷ்பித்து உன் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றது..

ஆனால் உனது திருமலர்ப் பாதங்கள் மரத்தைத் தீண்டுவதை பரமசிவனாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்..சற்றே கசப்புணர்வு கொள்கிறாராம் அசோக மரத்தின் மீது..

ஏனாம்..எல்லாம் உன் மீதுள்ள அதீத அன்பினால் தான்..உனது ஸ்பரிசம் அவருக்கே சொந்தமானதாம்..தனக்குக் கிடைக்க வேண்டிய ஸ்பரிசம் உதையாக அசோகமரத்துக்குப் போய்ச் சேர்வது அவருக்குப் பிடிக்கவில்லையாம்..”


**

பகவத் பாதர் இந்த ஸ்லோகத்தில் சாதாரண கணவனின் மன நிலை போன்று பரமசிவனது மனது உள்ளதென கவி அழகிற்காக மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்..

தேவியின் பாதாரவிந்தங்க்ளை இவ்வண்ணம் தியானிப்பவர் தேவியின் ஸாயுஜ்யத்தை அடைவர்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 18, 2014 1:04 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .86


“தனிமையான குடிசை.. சுற்றிலும் தோட்டம்..கொஞ்சம் வெளியில் சென்றால் காடு..கண்களுக்கு அழகிய பச்சைப் பசேல்.. நானும் என் கணவரும் மட்டும் தான்..

இளையவர் வழக்கம் போல காய்கனி தேடிப் போய்விட்டார்..நானும் அவரும் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தோம்..

ஒரு சமயம் படக்கென ஏதோ விளையாட்டாகச் சொல்லி விட்டார்..எனக்கோ கோபம் வ்ந்து விட்டது.. தோட்டத்தில் போய் அங்கிருந்த மல்லிகை பந்தலில் கொடியோடு கொடியாக சாய்ந்து நின்றேன்..

அருகில் வந்தார்..”இவளே”

“ம்க்கும்” பேசுவேனா என்ன..

மறுபடியும் ஏதோ பேசிப் பார்க்க, நான் பேசவே இல்லை.. ஓரக்கண்ணால் பார்த்ததில் கொஞ்சம் சிரிப்பு எனக்குள்.. மனுஷர் கஷ்டப் படட்டும்.. எவ்ளோ பெரிய ராஜா..குழந்தையாட்டம் முகம் வாடிடுச்சு பாரேன்.. ம்ம் மனம் இளகக் கூடாது..

அவர் கொஞ்சம் தனக்குத் தானே யோசித்தார்.. சற்றுப் பொழுதில் டங்கெனத் தரையில் ஏதோ உருளும் சத்தம்..

தரையைப்பார்க்காமல் அவரைப் பார்த்தால் எங்கேயோ மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

.கீழே பார்த்தால்..அடடா இது அவரது மோதிரமல்லவா.. பாவம் நான் கோபித்துக்கொண்டேனென்று மனதை அலைபாயவிட்டு, மோதிரம் நழுவுவது தெரியாமல் நிற்கிறாரே..

“ம்க்கும்”

முதல் ஒலிக்குத் திரும்பவில்லை

மறுபடியும் “ம்க்கும்”

சற்றே திரும்பி..”ஓ.. உன்னுடைய குரலொலியா.. அன்பே.. நான் ஏதோ குயில் தானாக்கும் என்றிருந்துவிட்டேன்.. என்னவாம்..”

மெளனமாய் நான் அவரையும் பார்த்து என் கையிலிருந்த அவரது மோதிரத்தையும் பார்த்தேன்..

ஓ.. இது கீழே விழுந்துவிட்டதா.. நன்றி..” என்றவாறே வாங்கிக் கொண்டார்..

பின் என்ன.. நாங்கள் இருவரும் கலலகவெனப் பேசிக்கொண்டிருந்தோம்..

**

அசோக வனத்தில் சீதை அனுமனிடம் கணையாழியைக் கொடுத்து அடையாளத்துக்காக காகாசுர விருத்தாந்தத்தையும் அப்புறம் பஞ்சவடியில் நடந்த மேற்கண்ட சம்பவத்தையும் அனுமனிடம் விவரிப்பதாக வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வருகிறது..

கம்ப நாட்டாழ்வார் என்ன சொல்கிறார்..ம்ம் அவர் சொல்வதை கிருபானந்த வாரியார் குரலில்-கொஞ்சம் எழுதிப் பார்ப்போமா..

*
“இந்த இப்பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தொடேன் என்ற
செவ்வரம்

சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்..ம்ம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

இனிமேல் இந்தப் பிறவில வேறு எந்தப் பெண்ணையும் பார்ப்பதில்லை..அப்படி உனக்கு வரம் தந்தேன் என்று சொன்னார்.. அதையே நீ போய் அவர்கிட்ட சொல்லு என்றாள் சீதை

என்பார் கிருபானந்த வாரியார்..
..
**
இந்தப் பெண்களுக்கே புருஷன் தனியாக இருந்தால் தானாகவே எப்படி சந்தேகம் வருகிறது எனத் தெரியவில்லை.

. என்ன தான் கண்ணன், கிருஷ்ணன் என்று ஆடவர்கள் பெயர் வைத்திருந்தாலும் கூட,, என்ன தான் நடிகைகளின் அழகை ரசித்தாலும் கூட அதெல்லாம் ரசனை மட்டுமே.. மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்க மாட்டார்கள்..என ஆன்றோர்கள் சொல்வார்கள்..!

**
ஆக பஞ்சவடியில் ராம பிரானுக்கும் சீதாப் பிராட்டிக்கும் ஏற்பட்டதென்ன? ஊடல்..

பழைய திரைப்பாடல் ஒன்றில் “ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா” என்று வரும்..எஸ்.வி. சேகர் ஹீரோவாக நடித்த படம் என்பது அடிஷனல் தகவல்..

**
என் நண்பர் ஒருவர் அவரது போதாத காலமோ என்னவோ தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஆஃபீஸிக்குச் சென்று விட்டார்..

அங்கிருந்த வெள்ளை வெளேர் அல்லி மலர்க்கொடியாய் இருந்த டேனிஷ் பெண்ணை மனைவியிடம் அறிமுகப் படுத்தியும் வைத்தார்..

அந்தப் பெண் அவரது மனைவியிடம் ஹலோ ஹவ் ஆர்யு என இயல்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டே நண்பரைப் பார்த்ததில் அந்தப் பெண்ணின் முகம் கொஞ்சம் மாறியது..

இயல்பாய் நண்பர் அருகே சென்று அவர் கட்டியிருந்த டையின் பின்னால் சட்டையில் போடாமல் இருந்த பட்டனைப் போட்டுக் கொண்டே, ஸீ.. இவர் எப்போதும் இப்படித் தான்..ஆஃபீஸ் ஞாபகத்தில் இப்படியா இருப்பது என நண்பரின் மனைவியிடம் வெகு கேஷுவலாகக் கேட்க, நண்பர் பாடு இன்னும் பெரும்பாடாய்ப் போனது..

பின் மனைவியை சமாதானப் படுத்த பீட்சா ஹட் கூட்டிச் சென்று இரண்டாயிரம் ரியால் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட மூன்று லடசம்) செலவு செய்தது தனிக்கதை.

.(பீட்ஸா ஹட் போகும் முன்னர் வழியில் இருந்த ஜாய் அலுக்காஸீக்கும் சென்று வந்ததாக பின்னர் தெரிவித்தார்!)

பெண்கள் சின்னக் கோபம் கொண்டாலும் ஆடவர்கள் பாடு கஷ்டம் தான்..!

**

இங்கே பரமசிவனுக்கும் பார்வதிக்கும் என்ன ஆனது..

பரமனும் அம்பிகையும் தனித்திருக்கிறார்கள்.. பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்..

பரமன் மனதில் ஒரு சின்ன எண்ணம்..இவ பாட்டுக்குப் போய் மரத்தை உதைத்தாள் அல்லவா..

அது என்னடான்னா வெங்கலப்பானையில் பொங்கல் வச்சா உலை பொங்கி வழியறா மாதிரி மரம் முழுக்க புஷ்பித்து விட்டது.

.காலால் என்னைத் தொடு என்றால் கேட்கமாட்டாள்..வெட்கப் படுவாள்..கண்களை மூடுவாள்..உலகம் இருளும்..ம்ம் அதெல்லாம் வேண்டாம்.

.கொஞ்சம் சின்னதாய் ப்ளே பண்ணிப் பார்க்கலாம்..

“அம்பிகே..அவயாரு..” என்று வேண்டுமென்றே வம்பிழுத்து ஒரு பெண்ணீன் பெயரைச் சொன்னது தான் தாமதம்.

.கண்கள் சிவக்கின்றன..உதடுதுடிக்கிறது.. கைகள் மென்மையாய் நடுங்குகின்றன.. நின்று கொண்டிருந்த பாதங்களாகிய தாமரைப் புஷ்பங்கள் மேலும் சிவக்கின்றன.. விசுக் விசுக்கென நடந்து போய் அங்கிருந்த ஒரு த்ரீ சீட்டர் சோஃபாவில் எதுவும் பேசாமல் அம்பாள் அமர.. அப்பு’றம் என்ன ஆச்சு..

அருகில் உட்காராமல் தரையில் அமர்ந்து அம்பாளின் பாதமலர்களைப் பிடிக்கிறாராம் பரமசிவன்..

அம்பிகை உள்ளூரப்பதறி ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சற்றே கால்களை அசைக்கிறாளாம்.. அவள் காலில் அணிந்திருக்கும் சிலம்புகள் கில கில என சத்தம் போடுகின்றதாம்..அது எப்படி இருக்கிறதாம்..

இந்த மன்மதன், என்ன தான் மறுபடியும் உயிர் பெற்று இருந்தாலும் கூட தன்னை எரித்த நெற்றிக் கண்ணின் மேல் சற்றே கோபாமாய் இருந்தானாம். அம்பாளின் பாதமலர் பரமனின் நெற்றிக் கண்ணின் மேல் பட அவனுக்கு உற்சாகம் தாளவில்லையாம்..

ஏய் நீ ரொம்ப என்னை எரிச்சேயில்லை.. இப்ப பாரு என மனதுள் நினைத்தவாறு சிரிப்பை அடகக மாட்டாமல் சிரிக்கிறானாம்.. அந்த கொலுசின் ஒலி அப்படி இருக்கிறதாம்..

பின் என்ன ஊடல் போச்சு..போயிந்தே..இட்ஸ் கான்..

(இப்படியே எல்லாத்தையும் சொல்லிட்ட போல இருக்கே. மன்ச்சு..

அதுசரிடா.. ஆக்சுவலா முந்தா நாள் நீ பாடினயே..அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்..அது இங்கே பாடியிருக்கலாம்..

ஆமாம் மன்ச்சு.. அதுவும் அந்த ஹீரோயினோட கண்ணுக்குள்ள ஒரு “கடற்புறா” வே விடலாம்..”

“உன் கிட்ட சஜஸ்ட் பண்ணினேன் பாரு..)

ஸ்லோகத்தில் எப்படி வந்திருக்கிறதென்று பார்க்கலாமா.. கம்..லெட் அஸ் கோ..

**

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா
துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா

Mrisha krithva gothra skhalana matha vailakshya namitham
Lalate bhartharam charana kamala thadayathi thee
Chiradantha salyam dhahanakritha -munmilee thavatha
Thula koti kkana kilikilith -meesana ripuna

”அம்பிகே.. உன்னுடன் தனிமையில் இருக்கும் போது உன்பெயரைத் தவிர வேறொரு பெண்ணின் பெயரை பரமசிவன் பொய்யாகக் கூறி விடுகிறார்..

அதனால் நீ அவரிடம் ஊடல் கொள்கிறாய்..உன்னை சமாதானம் செய்ய, உன் கோபத்தை எவ்விதம் தணீப்பது எனத் திகைக்கும் பரமன் உன்னை வணங்கும் போது உன் பாதகமலத்தில் அவரது சிரம் பட்டு உன் கால்கொலுசு ஒலி எழுப்புகிறது..

அது மன்மதன் தன்னை பரமன் எரித்ததனால் ஏற்பட்ட பகையை மறந்து பரமனின் நெற்றிக்கண் உன் பாத கமலத்தில் பட்டதால் தானே வெற்றி பெற்றதாக எண்ணி சிரிக்கும் ஒலி போல் இருக்கிறது..”

**

இந்த ஸ்லோக பாராயணம் எதிரிகளை வெல்லும் வல்லமையைப் பெற்றுத் தருமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 19, 2014 10:09 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .87


ஒரு வாலிபன் ஒரு அழகான வாலிபியை- இளம்பெண்ணை - முதல் முதல் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம்..மனதுக்குள் என்ன நினைத்துக் கொள்வான்..?

ஆள் பாக்க நல்லாத் தான் இருக்கா.. ஆனா என்ன கொஞ்சம் அனுஷ்கா மாதிரி ஹைட்..ம்ம்

அதே வாலிபனுக்கு வயதாகிறது.. ஸே நாற்பது வயது..பார்ப்பது அதே யெளவனப் பருவத்தில் உள்ள குமரி.. ம எ நி கொ.. “ம்ம்ம் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் இவளப் பாத்துருக்கக் கூடாதா.!.”

அதே வாலிபனுக்கு இப்போது நாற்பத்தைந்துக்கு மேல்.. பார்ப்பது அதே சிறுவயதுப் பெண்.. என்ன செய்வான்.. மனதில் எல்லாம் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டான்..உள்ளே சம்சாரத்திடம் “ இவளே..இந்த்ப் பொண்ணு பாத்தா அசப்புல நம்ம கமலீ மாதிரி இல்லை..”..

பெண்கள் எல்லா வயதிலும் ஆண்களை அழகானவர் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்..!

ஒரு யெளவன மங்கை ஒரு வாலிபனை நோக்கினாள் என்றால் ம.எ. நி.கொள்வாள் என்றால்..ஆளோட மூஞ்சில்லாம் நல்லாத் தானிருக்கு கொஞ்சம் கொஞ்சம் சூர்யா மாதிரி..ஆனா ஒடம்பப் பாரு.. ஒரு நாள் முழுக்க தயிர்ல ஊறின வடையாட்டமா பொதபொதன்னு இருக்கு..! இதையும் அந்தப் பெரியவர்களே கூறியிருக்கிறார்கள்..!

ஆக இங்கு நடப்பது என்ன… ஒப்பிடுதல்..கம்பேரிஸன்..

(பரவால்லடா.. அச்சு அசலா மேஜர் சுந்தர்ராஜனாட்டமாவே பேசற போ..

ஷ்ஷ்)

ஒரு இனிமையான பாடலின் நடுவில் வரும் சில் வரிகள்..

சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரைக் கொடி
தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு

(இந்தப் பாட்ட எதுக்குடா எடுத்தே.. ஸ்லோகத்துல என்ன வருது..சிங்கமா, சின்னக் கம்மலா, தெப்பக் குளமா..

ஷ்ஷ்)

இன்னொரு மென்மையான பாடலினிடை வரும் வரிகள்..

பொழுது சாஞ்சாலே தலை குவியும் தாமரை போல
என்னப் பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்ணே

(ஓகே ஓகே..இப்பப் புரியுது. ராத்திரியில் பூத்திருக்கும்னு ஒரு பாட்டு வருமே.. அதை சொல்லப்போறியா..

ஷ்ஷ்...)

முந்தைய ஒரு ஸ்லோகத்தில் தாமரை பற்றி எழுதியிருந்த பகவத்பாதர் இந்த இன்றைய ஸ்லோகத்தில் அம்பிகையின் பாத கமலத்துக்கும், ஒரிஜினல் கமலத்துக்கும் உள்ளவற்றைச் சொல்லுகிறார்..அது என்னவென்று பார்ப்பதற்கு முன்..

(ஆரம்பிச்சுட்டயா..ஏதாவது எழுதியிருக்கயா..

ஆமாம்.. கவிராஜர் என்பவர் எல்லா ஸ்லோகங்களுக்குமே தமிழ்ல் மரபுக் கவிதை எழுதியிருக்கிறார்..இந்த ஸ்லோகத்துக்கும் எழுதியிருக்கிறார்..

நான் அதோட விருத்த பேஸ் மட்டும் வைத்துக் கொண்டு எழுதப் பார்த்திருக்கிறேன்..இரண்டையும் படித்தால் நான் நன்றாகத் தழுவியிருக்கிறேன் என்றும் கூட சொல்லலாம்..சொல்லட்டா..

சொல்லு)



கமல மென்பதோ இரவி லேகுவிந்
திருந்து பின்னதாய் மலர்ந்திடும்
சமய மாகவே பனியும் வீசிட
சங்க டத்துடன் கருகிடும்
அமர்த்த லாகவே அழகு மிகுந்திட
பொலியும் உனதருள் பாதமும்
விமலை என்றிடும் அலையின் மகளது
அருளை இன்னமும் தந்திடும்..

கவிராஜர் எழுதியிருந்த மொழிபெயர்ப்பை உரைக்குப் பின் தருகிறேன்..வாருங்கள் ஸ்லோகத்துக்குள் சென்று பார்ப்போம்..
..


***

ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள
நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள
வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்
ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம்

Himani-hanthavyam hima-giri-nivas'aika-chaturau
Nisayam nidranam nisi charama-bhaghe cha visadau;
Varam laksmi-pathram sriyam ati srijanthau samayinam
Sarojam thvad-padau janani jayatas chitram iha kim.

”தாயே.. இமவானின் மகளாகிய உனது பாதங்கள் பனிமலையில் வசிப்பதற்காகவே பயிற்சி பெற்று அழகாக விளங்குகின்றன.

.அந்த பாத கமலங்கள் இரவிலும் விடிந்த பின்னும் மலர்ந்த விதமாகத்தான் இருக்கின்றன.. உன் திருவடித் தாமரைகளானது உன்னை வணங்கும் அடியவருக்கு அவரது தேவையும் நேரமும் அறிந்து எப்பொழுதும் அருளை வாரி வழங்குபவை..

இந்த சாதாரண தாமரை எப்படிப் பட்டது..

பனி பட்டால் கருகிவிடும்.. தாமரை திருமகள் தன்னிடம் வசிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கிறது.. உன்னுடைய திருவடித் தாமரையை பூஜித்தாலோ லஷ்மி கடாட்சம் பொங்கி வழியுமல்லவா..

இரவு வந்தால் தாமரையானது மூடிவிடும்.. உனது பாத தாமரைகள் எப்பொழுதும் பொலிந்து, மலர்ந்து விளங்குகின்றன.. எனில் உன் பாத தாமரைகள் அந்த தாமரை மலர்களை ஜெயித்து விட்டன எனலாம்..”

**

தாமரை மலரினால் சிவனை பூஜை செய்தால் மிக விசேஷமாம்.. அவ்வண்ணம் சிவ பூஜை செய்பவருக்கு சிவன் வெற்றிகளை வாரி வழங்குவாராம்..

இந்த ஸ்லோக பாராயணம் குபேரனுக்கு இணையான செல்வத்தையும் புகழையும் பெற்றுத் தருமாம்.

**
கவிராஜரது மொழிபெயர்ப்பு..

இமநெ டுங்கிரி உலவி யுங்கவின்
எழுநி ரந்தர மலருமேல்
அமர்பெ ருந்திரு அருளு நின்பத
அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலை யின்திரு மனையெ னும்பெயர்
விளவ தொன்றல முதல்வியே.

**

















சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 19, 2014 10:11 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .88



கேள்வி: ஓமானின் \மிக முக்கியமான சுற்றுலா இடம் எனச் சொல்லப் படுவது எது?

பதில்: டர்டில் (Turtle) பீச்..

கேள்வி: டர்டிலுக்கும், மெதுவாகப் புகை விடுவதனால் கொசுவத்திச் சுருளுக்குக்கூட தனது பெயரான டார்ட்டாய்ஸ் என வைக்கப் படும் ஆமைக்கும் என்ன வித்யாசம்

பதில்: ஒன்றும் இல்லை.. இரண்டுமே ஆமைகள் தான்.. என்ன டர்டில் கடலாமை.. நீர் தான் அதன் பலம்.. டார்டாய்ஸ் நில ஆமை..நிலத்தில் வாழும்..

கேள்வி: எதனால் பச்சை டர்டில்கள்.. பச்சைக் கடலாமைகள் ஓமான் பீச்சிற்கு வருகின்றன..

பதில்: கொஞ்சம் விரிவாகவே சில பாராக்களில் சொல்லலாம்..

கடலாமைகளில் ஆண் கடலை விட்டு வருவதில்லை.. பெண் கடலாமைகள் மட்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் கடற்கரையை நோக்கி வருகின்றன.

. வந்தவை தன்னை விட கொஞ்சம் அகலமாகவும் சற்றே ஆழமாகவும் கடல் மணலில் குழி தோன்றுகின்றன.. பின் கிட்டத்தட்ட ஐம்பது முதல் நூறு வரை முட்டை போட்டு விட்டு டபக் டபக்கென த்ங்கள் கைகளாலேயே அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குள் சென்று விடுகின்றன..

சுமார் ஐம்பத்து ஐந்து நாட்கள் கழித்து மணற் சூட்டால் பொரியப்படும் முட்டைகளிலிருந்து குட்டிக் குட்டி ஆமைகள் கடலை நோக்கி அதி அதி காலையில் செல்கின்றன..இது வருடா வருடம் நடக்கும் ஒரு விஷயம்..

ஆமை என்று பெயர்வைத்த புண்ணியவான் யாரோ தெரியாது.. ஆனால் இந்தக் கடலாமைக் குஞ்சுகள் அல்லது குட்டிகள் பிறந்தது முதலே அதற்கு வாழ்க்கை ஒரு போராட்டம் தான்..

பிறப்பதற்கு முன் மனிதன் எதிரி..முட்டைகளை எடுத்துக் கொள்ளப் பார்ப்பான்..பிறந்த பிறகு நண்டு, பறவைகள், எல்லாவற்றையும் கடந்து கடலுக்குள் செல்லும் போதே உடன்பிறப்புகளில் பாதியையாவது பறிகொடுத்து விட்டுத் தான் கடலில் செல்லும்..

வாழ்க்கை நிலையாமையை ஆரம்பத்திலேயே உண்ர்வதாலேயோ என்னவோ அவை 180 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன..

சொல்ல முடியாது.. அவை நம்மைப் பார்த்தால், ஹே உன்னோட தாத்தாவைப் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன், இன்னாரோட பேரனாடா நீ எனக் கேட்டாலும் கேட்கும்.. நமக்குத் தான் அவற்றின் பாஷை புரியாது..

ஆமை மெதுவாக நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.கடலாமை ஒரு மணிக்கு 20 மைல் வேகத்தில் நீந்துமாம்..

குஜராத்தில் ஒருகோவிலில் சிவன் பார்வதி சன்னிதிகளுக்கு எதிரே நந்தி, ஆமை சிற்பம் இருக்கின்றதாம்..விசாரித்ததில் சிவ்னின் வாகனம் நந்தி..பார்வதியின் வாகனம் ஆமை என்றார்களாம்.. எனக்கு இதுபுதிய தகவல்.. திருவாரூரில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் ஆமை இருக்கிறது..

(இதுவரை ஆமை பற்றிய கட்டுரையைப் படித்தவர்.என் மனசாட்சி.ஏன் மன்ச்சு இவ்வளவு சீரியஸா பேசறே..

அதான் நீ வந்துட்டயே.. அம்மி பத்திச் சொல்லு

அம்மியா.. அம்மி என்றவுடன் நினைவுக்கு வருவது இளவரசி பாடிய கைவலிக்குது கை வலிக்குது மாமா என்ற பாடல்..

பாரு நீ திருந்தவே மாட்டேங்கற..)

திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்ற நிகழ்வு வரும்.. அதில் அம்மியை மிதிப்பதற்கு மனைவியின் காலை எடுத்துக் கணவன் வைப்பான்.. என்ன அர்த்தம்..

வசிஷ்ட முனிவர் அவர் மனைவியின் பெயர் அருந்ததி..

வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில்கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு பெண்ணும் பருவமடைந்தது முதல் திருமணம் ஆகும் வரை பல்வேறு பார்வைக்கணைகளுக்கு ஆட்படத் தான் செய்வாள்..இது இயற்கையான விஷயம்..

எனில் திருமண பந்தத்தில் இணையும் போது,
மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையும் வேறு வித பார்வை பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாள்.. அது மட்டுமல்ல. தன்னைத் திருமணம் செய்து கொள்பவனின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்;

கணவனிடம் சரணாகதி அடைகி றாள். இவை அக்னியில் வளர்க்கும் ஹோமங்களில் முன் சொல்லப் படுகின்றன..

பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை,வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகின்றான்.

மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள்.

இதுவே அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதின் தாத்பர்யம்..

(சரி அப்புறம்..

மீண்டும் ஆமை)

வியாச முனிவர் அம்பாளைப் பற்றிச் சொல்லிய ஒரு ஸ்லோகத்தில் அவரது பாதகமலங்களின் மேற்புறங்கள் ஆமையின் ஓட்டைப் போல் இருக்கின்றன என்று சொல்கின்றாராம்..

அது தவறு என்கிறார் இன்றைய ஸ்லோகத்தில் பகவத் பாதர்.

ஸ்லோகத்துள் போய்ப் பார்க்கலாமா

**

பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம்
கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா


Padham the kirhtinam prapadham apadham Devi vipadham
Katham nitham sadbhih kutina-kamati-karpara-thulam;
Katham vaa bahubhyam upayamana-kaale purabhida
Yad adhaya nyastham drshadi daya-manena manasa.

**

“தேவி..உனது பாதங்களின் மேற்புறங்கள் அடியவர்களைக் காத்து அவர்களது துன்பங்களைப் போக்குவனவாக உள்ளன.
.அப்படிப்பட்ட மேற்புறங்களை சில கவிகள் ஆமை ஓட்டின் மேற்புறம் என்று வர்ணித்து உள்ளனரே.. என்ன தான் உனது பாதம் சற்றே அழகாக வளைந்து இருப்பதை அப்படிச் சொன்னாலும், கடினமான ஆமை ஓடு என்று சொல்ல அவர்களுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ

அம்பிகையே..அதை விடு.. உன்னுடைய விவாக சமயத்தில் உன் பஞ்சுமலர்ப் பாதங்களை சிவனார் அம்மியின் மீது வைத்தாரே..

உன் பாதங்கள் நோகாமல் இருந்தனவா எனத் தெரியவில்லையே..அப்படி வைப்பதற்கு சிவனாருக்கும் எப்படி மனம் வந்ததோ..”
**
தேவியின் மலர்ப்பாதங்களின் மென்மையை இந்த ஸ்லோகத்தில் வியப்பாக வெளிப்படுத்துகிறார் பகவத் பாதர்.

இந்த ஸ்லோக பாராயணம் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் காக்குமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 20, 2014 10:21 am


**
நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .89

மதுரையில் திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்கோயில் மதுரைக் காரர்களுக்கு ஒரு சுற்றுலாத் தலம் போல.. எனது இருபத்திரண்டு வயதுக்கு முந்தைய வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு பத்து தடவையாவது போயிருப்பேன்..ஒரு தடவை டவுனிலிருந்து சைக்கிளில் சென்று பார்த்த அனுபவமும் உண்டு.

குடும்பத்துடன் கட்டுச் சோறு, தண்ணீர் பாட்டில்கள் சகிதம் பஸ்ஸிலோ, காரிலோ சென்று கீழே பெருமாள் தரிசித்து விட்டு மேலே காட்டுப் பாதையில் வெயிலின் கிரணங்கள் கொஞ்சூண்டு ஊடாடி வருகின்ற நிழற்கோலங்களினூடே நடந்து மலையுச்சியில் நூபுரகங்கையில் ஸ்னானமோ அல்லது தலையில் தெளித்துக் கொண்டோ இருந்து கொஞ்சம் உணவருந்தி, பின் திரும்பியிருக்கிறேன்..

ம்ம் கடைசியாக அழகரையும் நூபுர கங்கையையும் பார்த்து பதினேழு வருடங்கள் இருக்கும்..இனிமையான அனுபவம் அது..

பெரியாழ்வார் தனது இரண்டாம் திருமொழியில் என்ன சொல்கிறார்..

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை
வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி
தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.

என்ன அர்த்தமாம்..தேவலோகத்தில் உள்ள கல்பக விருஷத்தில் பெரிய பெரிய பூக்கள் பூக்குமாம்.. அந்தப் பூக்களில் இருந்த தேனானது திருமாலிருஞ்சோலை நூபுர கங்கையில் கலந்து ஓடுகிறதாம்

(உனக்குத் தெரியுமாடா கற்பக விருஷம் பற்றி.. சரி நீ என்ன சொல்வேன்னு நானே சொல்றேன்..கற்பகம் ஒல்லி ஒல்லி கே.ஆர்.விஜயாவின் முதல் படம்..கரெக்டா

மன்ச்சு..அப்படியே என்னைப் படிச்சு வச்சுருக்க..

அப்புறம் ஒரு டிரிப் அழகர் கோவில் காலேஜ் டேஸ்ல யாரோடயோ போன போல இருக்கே..அதைச் சொல்லட்டா..

சமர்த்தோன்னோ..ஒனக்கு கிட்காட் வாங்கித் தாரேன்..ஸ்லோகம் பத்திச் சொல்லும்மா)

காதல் கொண்ட வாலிபன் தனது லேடி லவ்வைப் பற்றி பெரிய பட்ஜெட் படத்தில் பாடும் ஒரு பாடலில் வரும் இரு வரிகள்..

நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே

விரல்களின் கிரீடம் நகமாம்.. அழகாய்த் தான் இருக்கிறது..

இன்றைய ஸ்லோகத்தில் பகவத் பாதர் கற்பகத் தரு பற்றியும் நகங்களைப் பற்றியும் என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாமா.. வாருங்கள் உள்ளே போகலாம்


**
நகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள
பலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள

Nakhair naka-sthrinam kara-kamala-samkocha sasibhi
Tarunam dhivyanam hasata iva te chandi charanau;
Phalani svah-sthebhyah kisalaya-karagrena dhadhatam
Daridhrebhyo bhadraam sriyam anisam ahnaya dhadhatau.



“சும்ப நிசும்பர்களை அழித்த சண்டியே.. தேவி.... தேவலோகத்து விருட்சம் கற்பக மரம். தேவர்கள் என்ன கேட்டாலும் வாரி வழங்கும் தன்மையுடையது

ஆனால் உன் பாதக் கமலங்களோ அமரருக்கு மட்டுமல்லாது ஏழைகளுக்கும், யார் என்ன கேட்டாலும் அளிக்கக் கூடிய தன்மை வாய்ந்தது.

அதனாலேயே உனதுபாத நகங்களிலிருந்து வரும் ஒளி தேவ தாருக்களையே பரிகசிக்கின்றன.-. கற்பகத் தரு போன்ற தேவ தாருக்கள் தங்கள் கைகளால் செய்வதை உனது பாத மலர்க்ளே செய்வதால்....

.உனது திருவடிகளில் இருக்கும் நகங்கள் பல நிலவுகளின் ஒளி பொருந்தி இருக்கின்றன..

தேவருலகப் பெண்கள் தங்கள் காரியம் நடக்கவெண்ணி உன்னைக் கரம் குவித்து வணங்குகின்றனர்.. அவர்களது கைகளாகிய தாமரை மலர்கள் உனது விரல் நகங்களாகிய பெளர்ணமி நிலவுகளைக் கண்டதால் கூம்பி, கூப்பிய படி இருக்கின்றன..”

**

தேவியின் இந்த ஸ்லோக பாராயணம் அளவற்ற செல்வத்தையும் புகழையும் கொடுக்கும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 20, 2014 10:24 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 90


வண்டு கறுப்பாய் இருக்கும்
பார்க்க கொஞ்சம் அசிங்கமாய்..
ஆறுகால் இருந்தும் பறக்கத் தான் செய்யும்
கொய்ங்க் என்று காதுகளின் அருகில் வந்து
சுருதி பிறழ்ந்து ராகம் பாடிச் செல்லும்
ஒரு ஷணப் பொழுதில்
உடலினைக் கூச வைத்து விடும்
அறிவு கெட்ட ஜென்மம்..
எனினும்
பூக்களின் மேல் அமரும்
பாக்கியம் பெற்றது..

(பின்ன நீ பூ மேல உட்கார்ந்தா பூ நசுங்கிடுமே
ஷ்ஷ்..மன்ச்சு..உனக்காக ஒரு பக்திப் பாட்டு!)

பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன் அழகு

(இவனே …இது பக்திப் பாட்டு இல்ல..திரைப்பாட்டு..

ஸாரிப்பா..தேவையான அடுத்த டூ லைன்ஸ்..)

மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு

(ம் ம் வண்டு பத்திச் சொல்லப் போறியா.
போதும்னு நினைக்கறேன்)

வண்டுகளுக்கு ஆறுகால்கள் இருப்பதால் ஷட் சரணம் என்பார்கள்..அது போல இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பாத கமலங்களைச் சுற்றி வரும் வண்டாக ஆன்மா இருக்கவேண்டும் என ஆசைப் படுகிறார் பகவத் பாதர்..

ஸ்லோகத்தில் சென்று பார்க்கலாமா..

**
ததானே தீநேப்ய: ச்ரியமநிசம் ஆசாநுஸத்ருசீம்
அமந்தம் ஸெளந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தாரஸ்தபமஸுபதே யாது சரணே
நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

Dhadhane dinebhyah sriyam anisam asaanusadhrusim
Amandham saundharya-prakara-makarandham vikirathi;
Tav'asmin mandhara-sthabhaka-subhage yatu charane
Nimajjan majjivah karana-charanah sat-charanathaam.

“:கற்பகத் தரு குறைவற்ற செல்வத்தை எப்போதும் வேண்டியவர்களுக்குக் கொடுக்கும்.. அவற்றிலுள்ள பூக்களோ குறைவற்ற அழகுடையவை..அளவற்ற மகரந்தத்தைப் பரவச் செய்பவை..

அப்படி கற்பக மரத்தின் பூங்கொத்துக்கள் இருப்பது போல இருக்கும் உனது பாத மலர்களில் தேனைப் பருக வரும் ஆறு கால்களையுடைய வண்டாகிய உயிரினம் பூவினுள் புகுந்து தேனருந்துவது போல, இந்த நான் என்னும் எனது உயிரை, மனம்+பஞ்சேந்திரியங்க்ளைச் சேர்த்து ஆறு கால் உள்ள வண்டாக ஆக்குவாய்.

அம்மா..இதனால் கண்களால் உன் தரிசனம் பெறுவேன், காதுகளால் உன்னைப் போற்றிப்பாடும் பாடல்களை கேட்பேன். மூக்கினால் உன்னை பூஜித்த மலர்களின் மணம் அறிவேன்.. நாவினால் உனது நிவேதனங்களின் அருமை அறிவேன்.. உன் மலரடிகளில் பறக்கும் போது உனனுடைய ஸ்பரிசமும் பெற்று வீடு பேறு பெறுவேன்..

அம்மா.. என் மீது அருள் புரிவாயாக.”

**

இச்செய்யுள் பாராயணம் மனதை நல்ல சிந்தனையில் நாட்டம் கொள வைத்து செல்வத்தையும் வாரி வழங்குமாம்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 20, 2014 10:27 am

ஒரு பத்து நாட்கள் விடுமுறையில் செல்கிறேன் என்பதால் பத்து நாட்கள் கழித்து மீதம் பத்தையும் இடுகிறேன்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 20, 2014 5:30 pm

சின்னக் கண்ணன் wrote:ஒரு பத்து நாட்கள் விடுமுறையில் செல்கிறேன் என்பதால் பத்து நாட்கள் கழித்து மீதம் பத்தையும் இடுகிறேன்..

இனிய விடுமுறை நாட்கள், சின்னக் கண்ணன் .
மீதி சம்பத்தையும் எதிர்பார்க்கிறோம் ஆவலுடன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 30, 2014 10:56 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 91

முதலில் சில வளையல்களைப் பற்றி வரும் பாடல்களைப் பார்ப்போம்.

அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்

எழுதியவர் வாலிபக் கவிஞர் தான்.

(இவனே.. நீ ஏதோ சொல்ல வந்து வளையல்னு சொல்லிட்ட போல..

ஓ.. ஆமாம் மன்ச்சு இன்னிக்கு உபவாசம் இல்லை அதனால தான்..அன்னம்னு சொல்றதுக்குப் பதிலா வளையல்னு சொல்லிட்டேன்.. இன்னும் சில அன்னப் பாடல்)

அன்னமே இவளிடம் நடை பழகு
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்..

இது கங்கை அமரன் என நினைத்திருந்தேன்..ஆனால் வைரமுத்து என சில வலைத்தளங்களில் வந்திருக்கிறது..இருந்தாலும் அழகிய பாடல் இவர்களும் செளந்தர்ய லஹரியைப் படித்திருக்கக் கூடும்..

(என்னடா சொல்லவே இல்லை..சிவராத்திரிங்கறதாலயா.. ஆனா மாலைக்கருக்கல்ல ஏதோ ஓமான் எக்ஸ்ப்ரஸ்ல வடை சாப்பிட்டதா யாரோ சொன்னாங்களே

ச்ச் மன்ச்சு.. நானா உபவாசம்னேன்..வீட்டில. நான் ஜஸ்ட் விரதம் முடிக்க கம்பெனிகொடுத்தேன்.. சாபூதானா கிச்சடி..

இதென்ன வ.க்கு அப்புறமா.. பார்த்துபபா..)

மஹா சிவராத்திரி என ஏன் பெயர் வந்தது.. ஒரு முறை பிரளயத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அம்பிகை ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி.

இன்றைய தினம் ஈசனுக்கும், ஈசனுக்கு உகந்த உமையவளுக்கும் உகந்த நாள்.இன்றைய நாளில் பகவத் பாதர் தேவியின் கால் கொலுசுகளில் உள்ள ரத்தினங்கள் என்னவோ சொல்லித் தருகிறது என்கிறார்.. என்ன என்பதை ஸ்லோகத்துக்குள் சென்று பார்க்கலாமா

(ஏன்..சீக்கிரமா போறேங்கற..

இல்ல மன்ச்சு.. சிவராத்திரி தூக்கமேது…?!

அதானே பார்த்தேன்..உன்னை உன்னை..சரி.. போனாப் போறது..இன்னும் ஒரு அன்னம் பாட்டு பாடு)

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

(குட்பாய்.நல்ல டீசண்டான பாட்டா சொன்னாய் போ... வாழ்க்கையைப் பற்றி இந்தப் பாட்டில வரும்.

இல்லை மன்ச்சு.. நல்ல ரொமாண்டிக் பாட்டு..ஏரிக்கரை மேலே..தேவ காந்தாரி ராகம்

அதே தான்..வாழ்க்கைல இன்பத்தை தொடரும் துன்பம்னு சொல்லுவார்களல்லவா.இதுல எஸ் எஸ் ஆர்..தொடர்வார்..யாரை..

யூ டூ மன்ச்சு.வா எல்லோரையும் கூட்டிக் கொண்டு ஸ்லோகத்துக்குள்ல போகலாம்)

**

பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ:
ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்
சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே

Pada-nyasa-kreeda-parichayam iv'arabdhu-manasah
Skhalanthas the khelam bhavana-kala-hamsa na jahati;
Atas tesham siksham subhaga-mani-manjira-ranitha-
Chchalad achakshanam charana-kamalam charu-charite.


**

புண்ணீய சரிதங்களை உடைய அம்பிகையே.. நீ அடியெடுத்து வைக்கும் நடையின் அழகினை அறிய விரும்பி உனது மாளிகையில் நீ வளர்க்கும் அன்னங்கள் டபக் டபக்கென துள்ளிக் குதித்த வண்ணம் உனது வெகு அழகிய நடையைப் பின்பற்றி நடக்கின்றன..

உனது காற்கொலுசுகளில் உள்ள நவரத்தினங்களின் கலீர் கலீரென்ற ஓசையானது அந்த அன்னங்களுக்கு நடை பழககுவதற்காக எழுப்பும் ஒலி போல இருக்கின்றது..”

எனவே உனது நடையழகுக்கு ஈடாக எதையும் கூறமுடியாது என்பது புலனாகிறது..

**
42வது ஸ்லோகத்தில் ஆரம்பித்து இந்த ஸ்லோகத்துடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது..

இந்த ஸ்லோக பாராயணம் பூமியையும் செல்வத்தையும் பெருக்குமாம்..

**


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Mar 30, 2014 10:58 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 92

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் பாடல்களில் ஒன்று இது. இன்றைய ஸ்லோகத்தில் அம்பாளின் சிவசக்தி ரூபம் பற்றிச் சொல்கிறார் பகவத்பாதர்..

அம்பாளானவள் அமுதக் கடலின் நடுவே கற்பக மரங்கள் சூழப்பட்ட தீவில் சிந்தாமணிக் கற்கள் கொண்டு அமைக்கப் பட்ட மாளிகையில் இருக்கிறாள்

..இங்கு தேவியை அருகிலிருந்து துதிக்க எண்ணம் கொண்டார்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் முதலானோர்.. என்ன செய்தார்கள்.. சதாசிவர் என்ன செய்தார்.. என்பதை ஸ்லோகம் படித்துக் கொண்டே பார்க்கலாம் வாருங்கள்.
.

**

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி ருத்ரேச்வரப்ருத:
சிவஸ் ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலந ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்

Gataas the mancathvam Druhina-Hari-Rudr'eshavara-bhrutah
Sivah svacchac-chaya-ghatita-kapata-pracchada-pata;
Tvadhiyanam bhasaam prati-phalana-rag'arunathaya
Sariri srungaro rasa iva dhrisam dhogdhi kuthukam.


**
“அம்பிகையே..பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் உந்தன் வேத ரூபமான கட்டிலுக்கு தங்கள் சக்தியினால் கால்களாக மாறி அருகில் இருந்து கொண்டு உன்னை வணங்குகின்றனர்.

ஸதாசிவன் ஸ்படிகம் போன்ற நிர்மல வடிவினர். அவர் உனது கட்டிலின் மேல்விரிப்பாக இருக்கிறார்.

தேவியின் சிவந்த ஒளியானது ஸ்படிகமயமான சதாசிவனின் வெண்மை நிறத்தில் பிரதிபலிப்பதால் அவரும் சிவந்த ஒளியோடு ஸ்ருங்கார ரஸமே சதாசிவனாக உருக்கொண்டது போல் தேவியின் கண்களுக்கு மகிழ்வூட்டுபவராகக் காட்சி அளிக்கிறார்..

**
இந்த ஸ்லோகத்தில் ஸதாசிவனும்,பராசக்தியும் இரண்டறக் கலந்து சிவசக்தியாக இருப்பது குறிப்பிடப் படுகிறது.. அம்பாள் சதாசிவனுடைய மடியில் வீற்றிருப்பதையே பஞ்சப் பிரம்ம கோலத்தில்- வேத ஸ்வரூபத்தில் - சொல்லும் போது சதாசிவனை மேல்விரிப்பாக இருப்பது கூறப்பட்டிருக்கிறது..

இந்த ஸ்லோக பாராயணம் ஆளும் திறமையை வளரச் செய்யுமாம்

****


Sponsored content

PostSponsored content



Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக