புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
64 Posts - 58%
heezulia
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உண்மை கசக்கும்! Poll_c10உண்மை கசக்கும்! Poll_m10உண்மை கசக்கும்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை கசக்கும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 8:55 pm

பத்மினியின் வரவு, எங்கள் அலுவலகத்திற்கே, ஒரு புதிய ஒளியைக் கொடுத்தது. அவள் இளமையும், அழகும் பார்ப்பவர்களை, இன்னொரு முறை பார்க்க தூண்டும். அத்தனை அழகான முகம். இன்னும் கொஞ்சம் நேரம், நம்முடன் பேச மாட்டாளா என்ற ஏக்கத்தை உண்டு பண்ணும், இனிய குரல்.

பத்மினி, வேலையிலும் நல்ல திறமைசாலி. அழகு, அறிவு நிறைந்த, இருபத்தி ஐந்து வயது இளமங்கையான அவள், என்னிடம் மட்டும், கொஞ்சம், 'விசேஷமாக' நடந்து கொள்வதால், நான், பலரின் பொறாமைக்கு ஆளானேன்.
என் பெயர் சிவா, பத்மினியை விட, ஒரு வயது மூத்தவன். அவள், பெண்களில் அழகி என்றால், நான் ஆண்களில் அழகன். அது தவிர, நானும், பழகுவதற்கு இனியவன்; வேலையிலும் திறமைசாலி.

ஆபீசில் எல்லாரும், நானும், பத்மினியும் கூடிய விரைவில், திருமண பந்தத்தில் இணைந்து விடுவோம் என்று, நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நான், சற்று வித்தியாசமானவன். என் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் மற்றவர்களிடமிருந்து மாறு படுவதும், என் கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பதும், ஒரு சிலருக்கே தெரியும்.

ஆனாலும், என்னால், பத்மினி விஷயத்தில் அவ்வளவு கறாராக இருக்க முடியவில்லை. வெளிப்படையாக, என் விருப்பதை சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், மனதின் ஆழத்தில், இருவரும், ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டிருந்தோம் என்பதில், சந்தேகமில்லை.

ஆண் தான், முதலில், தன் காதலை சொல்ல வேண்டும் என்பது, எழுதப்படாத ஒரு நியதி. அதனால், கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் பழகிய பின், ஓரளவு, இருவரும் எங்கள் பின்புலங்களை அறிந்து கொண்ட பின், என் காதலை, அவளிடம் சொன்னேன்.
பத்மினி வசதியான குடும்பத்து பெண். பிறந்து, வளர்ந்து, வேலை கிடைத்தது எல்லாம் மும்பையில் தான். ப்ராஜக்ட் போஸ்டிங்கில் சென்னைக்கு வந்தாள். அவளுக்கு, ஒரு சகோதரி உண்டு. அவளும் மணமாகி, மும்பையில் இருந்தாள். பத்மினியின் அப்பா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதல்நிலை அதிகாரி. கலீனாவில் ஆயிரத்து எண்ணுறு சதுர அடியில், சொந்த ப்ளாட், கார்கள் என்றெல்லாம் வளம் பெற்றவள்.

நானோ, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தில் நேர் எதிர். எனக்கு அப்பா கிடையாது; அம்மா மட்டுமே. மாமாவின் ஆதரவிலும், அரசு உதவி தொகையிலும் படித்து, இன்று தலைநிமிர்ந்து இருப்பவன். சேலத்திற்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில், அம்மா, மாமாவின் குடும்பத்துடன் வசித்து வருகிறாள். மாமாவுக்கு, கொஞ்சம் நிலங்கள் உண்டு. அதில் வரும் வருமானத்தில் தான், அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அம்மா, சமீபகாலமாக, என்னை திருமணம் செய்யச் சொல்லி, வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அதற்கு, இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. பத்மினியுடன் ஏற்பட்ட நட்பும், நண்பர்கள் தந்த தைரியமும் பத்மினியிடம் என் காதலை சொல்ல வைத்தது.
இது தான், என் காதல் கதையின் முன்னுரை. கதை இனி மேல் தான்.

கான்டீனில், காபி குடித்துக் கொண்டிருந்த போது, பத்மினியிடம் என் விருப்பத்தை வெளிப்படுத்தினேன். நான் சொன்னதைக் கேட்டதும், அவள் ஒரு வினாடி, என் முகத்தை உற்றுப் பார்த்தாள்''நாளை மாலை, 5:00 மணிக்கு, நீ, என் வீட்டுக்கு வர முடியுமா?'' என்று கேட்டாள்.''நீ, உடனே பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை பத்மினி. யோசித்தே பதில் சொல்,'' என்றேன்.

''பரவாயில்லை. நீ, நாளைக்கு என் வீட்டுக்கு வா. நான், உன்னிடம் தனியாக கொஞ்சம் பேச வேண்டும்,'' என்றாள்.
நானும், அதற்கு மேல் பேச்சை தொடரவில்லை. அவள் எதைப் பற்றி பேச வீட்டிற்கு வரச் சொல்கிறாள் என்பது, எனக்கு புரியவில்லை. சரி, ஒருநாள் தானே, பார்த்துக் கொளளலாம் என்று விட்டுவிட்டேன்.

.....................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 8:56 pm

மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, திருவான்மியூரிலிருந்த அவள் வீட்டுக்கு சென்றேன். அங்கு, அவள் ஒரு ப்ளாட் எடுத்து தங்கியிருந்தாள். நான், காலிங்பெல்லை அழுத்தியதும், கதவை திறந்த பத்மினி, ''ஹாய் வா,'' என்றாள், சிரித்த முகத்துடன். ஓரளவுக்கு பெரிதாகவே இருந்த அந்த ஹாலில் சிறியதாக, ஒரு சோபா செட், ஷெல்ப், புத்தகங்கள், 'டிவி' என்று, எல்லா வீடுகளிலும் இருக்கும் பொருட்கள் இருந்தன.
பத்மினி, எந்த விதமான ஒப்பனைகளும் இன்றி, நைட்டியில் தேவதை போல், இருந்தாள்.

'இந்த அழகு, பிளஸ் அறிவு தேவதை, என் மனைவியானால், நான், எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன்...' என்ற எண்ணம், என் மனதில் ஓடியது.

''உட்கார். காபி, டீ ஆர் சம்திங்க் கோல்ட்?''
''காபி''
''ஒரு நிமிஷம்,'' என்று உள்ளே சென்றாள். நான், மேஜையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து, புரட்ட ஆரம்பித்தேன்.
''மம்மீ,'' என்று கூவியபடி, பெட்ரூமிலிருந்து, தூங்கி எழுந்த முகத்துடன், அழகான மூன்று வயது ஆண் குழந்தை, ஹாலுக்குள் ஓடி வந்தது. நான் திடுக்கிட்டேன்.
என் கையிலிருந்த பத்திரிகை கீழே நழுவியது.

'டிரே'யில் காபியுடன் நுழைந்த பத்மினி, ''ஹாய் குட்டி தூங்கி எழுந்தாச்சா,'' என்றதும், குழந்தை ஓடி, அவள் கால்களை பற்றிக் கொண்டது. அதன் கைகளை பற்றிக் கொண்டே, காபி டிரேயை, டீபாயில் என் எதிரே வைத்த பத்மினி, குழந்தையை தூக்கி, மடியில் வைத்துக் கொண்டு, என் எதிரே அமர்ந்து, ''அங்கிளுக்கு ஹலோ சொல்,'' என்றாள். அது, உறக்கம் கலையாத கண்களுடன், என்னை புதிதாகப் பார்த்தது.

''பத்மினி, இந்தக் குழந்தை,'' என்று இழுத்தேன்.
முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல், ''என் பையன் ஆகாஷ்; மூன்று வயதாகிறது,'' என்றாள். எனக்கு இதயம், வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
''அப்படியானால் உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?''

பத்மினி வெற்று பார்வை பார்தது, ''இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன், மும்பையில் இருந்த போது, என்னுடன் படித்த ஒருவனுடன் ஏற்பட்ட தொடர்பால் வந்த, குழந்தை இது,'' என்றாள்.
''அவன் என்ன ஆனான்?''

''அவன் ஒரு அயோக்கியன்; நான் ஏமாற்றப்பட்டேன்.''
''என்னது?''
.................




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 8:57 pm

பத்மினி சிரித்தாள். ''ஆச்சர்யமாக இருக்கிறதா... இத்தனை அழகும், திறமையும் உள்ள இவள் எப்படி, ஒருத்தனிடம் ஏமாந்தாள் என்று. உனக்கு மட்டுமல்ல, என் பெற்றோருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவனும் என்னைப்போலப் படித்தவன்; அழகன்; புத்திசாலி. ஆனால், நல்லவன் இல்லை. பெண்கள் அவனுக்கு விளையாட்டு பொருள். பெண்களை பேசி மயக்கி, வீழ்த்துவதை தன் ஆண்மைக்குக் கிடைத்த வெற்றியாக கருதுபவன். அதில், நான் சிக்கிக் கொண்டது, என் துரதிர்ஷ்டம்.

''ஆனால், அப்போது எனக்கு என் அழகு, இளமை பிரதானமாகக் தெரிந்தது. என் பார்வைக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு ஆணும், என் கர்வத்தை ஏற்றினர். கடைசியில் இவன் காலடியில் விழுந்தேன். கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்து, என்னிடம் உறவு கொண்டான். என் கர்ப்பம் தெரிந்ததும், அலட்சியமாக, 'அபார்ஷன் செய்து கொள்' என்று கூறி, விலகினான். என் பெற்றோர் குழந்தையை, கருவிலேயே அழித்து விடுபடி கூறினர். என்னால், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், சுமந்து பெற்றெடுத்தேன்.

''எனக்கும், உன்னைப் பிடித்திருக்கிறது சிவா. ஆனால், என்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால், நீ, இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைத் சொல்லத்தான், உன்னை, என் வீட்டிற்கு வரச் சொன்னே.''

நான், பதில் பேசாமல் மவுனமாக, அமர்ந்திருந்தேன். பின் பேசினேன்...''நன்றி, பத்மினி. உன் நேர்மையை பாராட்டுகிறேன். இதுபோல், முறை தவறி பெற்ற குழந்தைகளை அனாதை விடுதி வாசல்களிலும், குப்பை தொட்டிகளிலும் வீசிவிட்டுச் செல்லும் பெண்களுக்கு மத்தியில், நீ, வித்தியாசமாகத் தோன்றுகிறாய். உன் தைரியம் பாராட்டப்பட வேண்டியதுதான். இருந்தாலும்,'' என்று நிறுத்தி னேன்.

''சொல்லு சிவா, நீ எதைச் சொன்னாலும், நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்,'' என்றாள் பத்மினி.
''நீ, என்னை ஆணாதிக்கக்காரன் என்று நினைத்தாலும், பரவாயில்லை. நீ செய்திருப்பது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய தவறு. நல்லவனோ, கெட்டவனோ திருமண பந்தத்திற்கு முன், அவன் வார்த்தைகளை நம்பி, அவனுடன் உறவு கொண்டது மிகப்பெரிய தவறு. நீ உலகம் தெரிந்த படித்த பெண். ஏன் உனக்கு, அந்தக் குறைந்தபட்ச தற்காப்பு உணர்வு கூட இல்லை... உருவான ஒரு உயிரை அழிக்க, உன் மனம் இடம் தரவில்லை என்றாய். கருணை என்ற நோக்கில், நீ செய்தது சரியாக இருக்கலாம்.

ஆனால், நீ சுமந்து பெற்றிருப்பது, ஒரு ஏமாற்றுக்காரனின் வாரிசை. தாய், தந்தையின் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் தானே அவர்கள் குழந்தைக்கும் வருகிறது. உன்னை பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றியவன், விதைத்த விதையில், முளைத்த உயிர் இது. நாளை, இவனும் வளர்ந்து, பெரியவனாகையில், அவன் குணங்களைப் பெற்றிருக்க மாட்டான் என்பதற்கு, என்ன உத்திரவாதம்... உன் குணத்தைக் கொண்டாலும், உனக்கிருக்கும் மிகப்பெரிய குறை; கர்வம், அலட்சியபோக்கு, பிடிவாத குணம். நீ, இன்று இருக்கும் இந்த நிலைக்கு, இவை எல்லாம் காரணமல்ல என்று, உன்னால் உறுதியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டேன்.

பதில் பேசாமல் அமர்ந் திருந்தாள் பத்மினி.''நல்ல இல்லறத்திற்க்கு அழகும், பணமும் மட்டும் போதாது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம், மன ஒழுக்கம், அடக்கமும் தேவை. உன் தவறுக்கான தண்டனையாகவோ, பிராயச்சித்தமாகவோ நீ இந்தக் குழந்தை என்னும் சிலுவையைச் சுமக்கிறாய். ஆனால், உன்னை காதலித்தேன் என்பதற்காக, உன்னையும், நீ செய்த தவறையும், நான் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, உன்னை ஏமாற்றிக் கைவிட்டவனின், குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை.

''காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் இன்றும், நடந்து கொண்டுதான் இருக்கிறது. என் காதல் அப்படியல்ல. இதே போன்றதொரு தவறுடன், நான் உன்னிடம் வந்திருந்தால், நீ, என்னை ஏற்றுக் கொள்வாயா என்றெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்னிடமில்லை. நாம் திருமணம் செய்து கொண்டால், மனதில், நீ செய்த பிழையும், அதனால், பிறந்த இந்தக் குழந்தையும் உறுத்தலாகவே இருக்கும். நான் பேசுவது உனக்கு குரூரமாக இருக்கலாம்.

நீ செய்த தவறை, நீதான் அனுபவிக்க வேண்டும். அதைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் உள்ள ஆண் வந்தால், அவனை மணந்து கொள். ஆனாலும் கூட, அது எந்தக்காலத்திலுமே பெண்கள் செய்யும் விஷப்பரீட்சைதான். நாம் சாதாரண ஆபீஸ் நண்பர்களாகவே இருப்போம்.''
பேச்சை முடித்து, ''பை... ஆல் த பெஸ்ட், '' என்று கூறி, விடைபெற்றேன்.

அந்தக் குழந்தையை தூக்கிக் கொஞ்ச கூட எனக்கு விருப்பமில்லை.இவனை மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம், 'காதல்' என்பதன், அர்த்தம் தெரியவில்லையே... 'மன்னிக்கத் தெரியாத இவன் என்ன மனிதன்' என்ற நினைப்பும், கசப்பும் உங்களுக்கு ஏற்படுகிறதா...பரவாயில்லை. உண்மை என்றும் கசக்கத் தான் செய்யும்!

தேவ விரதன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 8:37 pm

எனக்கு இந்த முடிவு ரொம்ப பிடித்திருக்கு புன்னகை உங்களுக்கு ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 08, 2014 8:45 pm

நல்ல கதை உண்மை என்றுமே கசக்கத்தான் செய்யும்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




உண்மை கசக்கும்! Mஉண்மை கசக்கும்! Uஉண்மை கசக்கும்! Tஉண்மை கசக்கும்! Hஉண்மை கசக்கும்! Uஉண்மை கசக்கும்! Mஉண்மை கசக்கும்! Oஉண்மை கசக்கும்! Hஉண்மை கசக்கும்! Aஉண்மை கசக்கும்! Mஉண்மை கசக்கும்! Eஉண்மை கசக்கும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 9:50 pm

-
எனக்கும் இந்த கதையின் முடிவு பிடிச்சிருக்கு...
-
 உண்மை கசக்கும்! 3838410834 

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 09, 2014 12:49 am

இந்த கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

1- திட்டமிட்டு பெண்களை ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் பலியாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

2- கர்வம்,அலட்சியப்போக்கு, பிடிவாதகுணம்,கொண்ட பெண்கள், நல்ல ஆண்களை மதிக்காமல் ஏமாற்றுவோரை நம்பி ஏமாந்து போவது வழக்கமாக இருக்கிறது.

3- திருமண வாழ்க்கை நீண்டகாலத்துக்கு சந்தோசமாக இருக்கவேண்டுமானால் ஆணும் பெண்ணும் ஒரே தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது வயது, அழகு,கல்வி,அந்தஸ்து,என்பன.

நல்ல கதை



நேர்மையே பலம்
உண்மை கசக்கும்! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:21 am

Muthumohamed wrote:நல்ல கதை உண்மை என்றுமே கசக்கத்தான் செய்யும்

 ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  நன்றி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:21 am

ayyasamy ram wrote:-
எனக்கும் இந்த கதையின் முடிவு பிடிச்சிருக்கு...
-
 உண்மை கசக்கும்! 3838410834 

நல்லது ராம் அண்ணா புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:22 am

அகிலன் wrote:இந்த கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

1- திட்டமிட்டு பெண்களை ஏமாற்றும் ஆண்களிடம் பெண்கள் பலியாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

2- கர்வம்,அலட்சியப்போக்கு, பிடிவாதகுணம்,கொண்ட பெண்கள், நல்ல ஆண்களை மதிக்காமல் ஏமாற்றுவோரை நம்பி ஏமாந்து போவது வழக்கமாக இருக்கிறது.

3- திருமண வாழ்க்கை நீண்டகாலத்துக்கு சந்தோசமாக இருக்கவேண்டுமானால் ஆணும் பெண்ணும் ஒரே தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது வயது, அழகு,கல்வி,அந்தஸ்து,என்பன.

நல்ல கதை
சரியாக சொன்னிங்க அகிலன் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக