புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
62 Posts - 57%
heezulia
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
104 Posts - 59%
heezulia
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_m10   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Mon Nov 11, 2013 7:28 pm



நண்பர்களே ,

ஒரு திங்களாகவே ( ஒரு மாதமாய் ) நான் ஒரு சங்கப்பாடலைப் பதிப்பிக்கலாம் என நினைத்து - தொடரும் ஆர்வக் குறைவுக் காரணமாய் - செய்ய இயலாமல் ...

ஆனால் ஒருவர் பதிப்பித்த ஒர் புதுக்கவிதை  என் சோர்வையும் போக்கி விட்டது ...அவர் இக்கவிதையினை யார் எழுதியது
எனசொல்லவில்லை ...ஆனால் அது 25 பிப்ரவரி, 2010 லேயே யாசர் அராபத்
என்பவரால் எழுதி பதிப்பிக்கப்பட்டுள்ளது ... ...

சரி, இந்த முன்னுரை போதும் என நினைக்கிறேன் ....

கணவன் , மனைவி இல்லற வாழ்வில் கூட்டு வாழ்க்கை நடத்துவதில் சங்கடங்கள் எத்தனை உண்டோ அத்துனை நலங்களும் உண்டு. இன்றைய பரபரக்கும் வாழ்வில் எங்கு நோக்கினும் உள்ள பாதுகாப்பின்மையும் நிழல் போன்று கூட வருகையில் வீட்டில் பெற்றோரோ அல்லது மற்ற உறவினரோ உடன் வசித்தல் வீட்டு வேலைகளைப் பங்கிடுதலினும் ஒரு நிம்மதி உணர்வைத் தோற்றுவிக்கும் ; பாதுகாப்பை கூட்டவும் செய்யும் ; ஊக்கத்தை ஊட்டும் - பின்னும் குழந்தைகள் பெற்றவுடன் இவ்வுறவுகளின் அவசியம் தெற்றென விளங்கவே செய்யும் ! ஆனால் , அதற்கு சற்று பரந்த மன்ப்பாங்கும் பொறுமையும் வேண்டுமே - அதற்கு எங்கு போவது !

சரி , இந்தக்கதையெல்லாம் ஏன் இப்போது ...

வேறொன்றுமில்லை , நண்பர்களே , இந்தக் கதை - அதாவது, கூட்டு வாழ்வில் கூட வசிப்போரின் வார்த்தைகளைக் கேட்டல் - என்றும் நடந்து வருவதுதான் என்பதை ஒரு கலித்தொகைப் பாடல் உணர்வுடன் சொல்கிறது !

களவொழுக்கத்தினின்று மீண்டு கற்பொழுக்கத்தில் காலடி வைத்து சின்னாட்களே ஆயின தலைவிக்கு ! அதாவது , காதலன் தன்னைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கும் காரிகையாகி விட்டனள் தலைவி !! மணம் நடந்து விட்டது !!! அதற்கு முன்னர் அக்காதலனோ , நான் உன்னைக் கண்ணுக்குள் கண்ணாக வைத்துக் காப்பேன் எனவும் உன்னை என்றும் பிரியேன் எனவும் பிரியமான வார்த்தைகளை இனிக்கப் பேசி " செவ்விய தீவிய சொல்லி " , அவளையும் மெதுவாகத் தழுவி " பைய முயங்கிய " மலரை நுகர்வது போல் அவளை நுகர்ந்தும் இருந்துவன் அவன் ! - இவ்வளவும் இதற்கு மேலும் அறிந்தவள் தலைவியின் தோழி . இந்நிலையில் , தலைவனுக்கு பொருள் அவசியமாகிறது ...பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பது இப்போது அவனுக்கு உறைக்கிறது . தலைவிக்கு சொன்னவை எல்லாம் மறந்தே போயிற்று . அவன் வெகு தொலைவு செல்ல முடிவு செய்து விடுகிறான்.

தோழிக்குப் பொறுக்கவில்லை ...அவனை ஒரு பிடி பிடித்து விடுகிறாள் !

தலவனை நோக்கி அவள் சொல்கிறாள் : என் இனிய தோழியிடத்து நீ எவ்வளவு இனிமை சொட்ட பேசினை ;
எவ்வளவி செவ்விய மொழிகள் பகர்ந்தனை ; என்ன உறுதிகள் தந்து அவளை உன்னுடையவள் ஆக்கினை !
இவை யாவையும் மறந்து " அஞ்ஞான்று அவற்றொடு பைய முயங்கிய அவை எல்லாம் பொய்யாதல் "
ஆகி அவளை விட்டு செல்வாய் எனப் பாவி நான் அறியாது " யான் யாங்கு அறிகோ " போனேன் !

நீ வெளியூர் செல்லலால் என்ன நடக்கும் என்று சிந்தித்தனையா...
புது மணம் முடித்த அவள் , தனியளாகி , உன் அரண்மனை போன்ற வீட்டில் உன் உற்றார்களால் அவள் என்னவெல்லாம் சொல்லி அலைக்களிக்கப்படுவாள் " அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து ",நீ இதை எல்லாம் கிஞ்சித்தும் நினையாமல் , அவளை விட்டு ஏகிறாய் ! இப்போது எல்லை தகர்ந்த சினத்தில் சிதைக்கிறாள் அவனை : " மகன் அல்லை மன்ற " நீ ( ஆண் ) மகன் இல்லை!.

தன் தோழிக்கும் நேரப்போகும் துயரை நினைத்து எவ்வளவு ஆவேசமாகிறாள் இத்தோழி !

அத்தோடும் விட மனதில்லை அவளுக்கு !

கொடும் வெயில் சுட்டெரிக்கும் வழிதனைக் கடந்து வேற்றூரில் உள்ளபோது நம்மூர்க்காரர்கள் உன்னை போன்றே அங்கு வருவர் . அவர்களிடம் , அன்பை விட்டொழித்து , யான் துறந்து வந்த தலைவி எங்ஙனம் உள்ளாள் என்ன கேட்டுத் தொலைக்காதே ; அதன் மேல் அவர்கள் உண்மை செப்பும் நிலையில் , உன் தலைவி பற்றி உரைத்து விடுவார்கள் எனில் , " பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய " , பகலவன் போல் விளங்கும் உன் களையான முகம் , அவ்வவலச் செய்தியால்
" ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. " நீயும் துக்கப்படுவாய் ! இதனால்
நீயும் நொந்து உன் வினை முடிக்க இயலாமல் " அருஞ் செய் வினை முற்றாமல் " அல்லல் உறுவாய் ! எனவே , அவளைப்பற்றி ஏதும் வினவாதே எனவும் நெஞ்செரிய எச்சரிக்கிறாள் !!

புரிகிறதுதானே , நண்பர்களே !

நீ அவளைப் பிரிந்த சின்னாட்களில் அவள் இறந்து படுவாள் என்பதைத்தான் இவ்வளவு
சுற்றி வளைத்துக் கூறுகிறாள் தோழி !!

தலைவியின் வரம்பிலா காதல் மனத்தினையும் தோழியின் நட்பின் உயர்வையும் நாம் எண்ணி எண்ணி வியக்ககத்தான் முடியும் !

இந்தப் பாடல் வள்ளுவனின் இக்குறளுக்கு

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

விரிவுரையாக அமைகிறது ...!!!


இக்காட்சியைத் தீட்டும் அச்சங்கப்பாடல் :

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ? என்று, வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு!

   கலித்தொகை - பாலைக் கலி - 19

இதில் ஒன்றும் கடின  சொற்கள் இல்லை ! இருப்பினும் ,

செவ்விய - நேர்மையான
தீவிய - இனிய
அகன் நகர் - அகன்ற வீட்டில் உள்ளோர்
பகல் முனி - பகலவன் , ஞாயிறு , கதிரவன்

சரி , தற்போதையக் கவிதைக்கும் வருவோமே ...

ஈராயிரம் ஆண்டுகளானாலும் மாறா மனித இயல்புகளைக் காட்டுகிறதில்லையா...!!??


புகைப்படத்துடன்வந்து
பிடித்திருக்கா?என்றாள் என் அம்மா!
..........................................
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய்ப் புரிவதற்குள்
...........................................
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
( வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன் )
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
............................................
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
( அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,)
...............................................
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

   ஆக்கியவர் : யாசர் அராபத்

அன்புடன் ,
சுந்தரம்

பி.கு : நீண்டு விட்டது நண்பர்களே , பொறுக்க ! என் ஆர்வம் அப்படி ...

பி .கு : இந்த நேரத்தில் ' திருத்துதல் ' பற்றி சொல்லணும் ...முந்தைய அத்துனைப் பதிப்புகளிலும் தலைப்பை நான்
மாற்ற நினைக்கிறேன் ...ஆனால் , இயலுமா எனத்தான் தெரியல...




dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 11, 2013 7:44 pm

   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       103459460 


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Nov 11, 2013 8:09 pm

தொடர்க... பாராட்டுகள்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 9:43 pm

-
யதார்த்தமான உண்மை...
-
அந்த காலத்தில் பொருள் தேடி பிரிந்து செல்லும்
கணவனிடமிருந்து சேதி ஏதும் பெற இயலாது...
-
இப்போது, ஏர்போர்ட்டில் செக்கிங் முடிந்து விட்டதா
என்பதையும், போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு
தாமதமில்லாமல் போய்ச் சேர்ந்தாரா என்று
அடிக்கடி தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது...!
-
அயல் நாடுகளுக்கு தொழிலாளர்களாக செல்பவர்கள்
நிலைதான் பரிதாபமானது..
-
தொழில் வல்லுநர்களாக செல்பவர்களுக்கு அவ்வளவு
துன்பமில்லை...!
-
   குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!       103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக