புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_m10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_m10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_m10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_m10ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 6:02 am

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! 8orh
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம். அவர்களில் நால்வர் வைத்திருந்த ஆயுதங்களுக்கு முறையான லைசென்சு வேறு கிடையாதாம். கடந்த மே 12 அன்று இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ள இவர்கள் அதற்கு தரும் மாத வாடகை மட்டும் ரூ. 4 லட்சம்.

தப்பி விட்ட சுகாஸ் சாதாரண நபரல்ல

[*]அவர் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் 2009-ல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று கூறி ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

[*]பெங்களூருவை சேர்ந்த சுகாஸ் தனது நண்பரும் முன்னாள் முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் கவுடா என தன்னை சொல்லிக் கொண்டு ஒரு தொழிலதிபரிடம் ரூ. 1 கோடியை ஏப்பம் விட்டிருக்கிறார்.

ஒரு பரிமாற்றம் நடந்த பிறகு தனது பெயரையும், சிம் கார்டையும் மாற்றிவிடும் சுகாஸ் தனது இருப்பிடத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றிக் கொள்வார்.

திரைப்பட வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி மரியா பாலை ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார் சுகாஸ். சொகுசு வாழ்க்கையும், அது தரும் சுகமும் அதற்காக மோசடியில் ஈடுபடுவது தவறில்லை என்ற நிலைக்கு மரியா பாலை மாறச் செய்கிறது. பின்னர் நடந்த மோசடிகளில் மரியா பால் சம பங்காளியாக மாறி விடுகிறார். இருவரும் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

[*]கொச்சியை சேர்ந்த இமானுவேல் சில்க்ஸின் உரிமையாளரிடம் அவரது கடைத் திறப்பு விழாவுக்கு பிரபல நடிகைகளைக் கூட்டி வருவதாகச் சொல்லி பணம் வாங்கி விட்டு கம்பி நீட்டியிருக்கின்றனர்.

[*]ஒப்பந்த அடிப்படையில் உடைகள் தைத்து தருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தத சென்னையைச் சேர்ந்த ஸ்கைலாக் நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியை சுகாஸ் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயக்குமார் என்றும், மரியா பால் அவரது உதவியாளர் என்றும் நடித்து தொலைபேசி வழியாக தொடர்பு கொள்கிறார்கள். கர்நாடக அரசின் போக்குவரத்து, உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்கான ரூ 400 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அதற்கு முன்வைப்புத் தொகையாக தான் சொல்லும் வங்கிக் கணக்கில் ரூ.62,47,016 ஐ கட்டச் சொல்லி உள்ளார். பணத்தை கட்டிய பிறகு எந்த ஒப்பந்தமும் நடக்கவில்லை.

[*]சென்னை அம்பத்தூரை சேர்ந்த சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்யும் பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் தம்பதியிடம் ரூ.360 கோடி மதிப்பிலான கர்நாடக மாநில பெண்களுக்கான இலவச நாப்கின் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு வைப்பு நிதியாக ரூ.19 கோடி கேட்டிருக்கிறார் சுகாஸ்.

நம்பிக்கையை பெறுவதற்காக இவர் கர்நாடக மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான் சௌதா பகுதியை சேர்ந்த லேண்ட்லைன் ஃபோனில் வருவாராம். மறுமுனையில் அரசு அலுவலகம் என்று உறுதி செய்யும் மரியா பால் இணைப்பை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கும் சுகாஸுக்கு மாற்றித் தருவாராம். இதை நம்பிய பாலசுப்ரமணியமும் பணத்தை தர முன்வந்திருக்கிறார். ஆனால் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. சூழலைப் புரிந்துகொண்ட சுகாஸ் அம்பத்தூர் கனரா வங்கியின் மேலாளரை தொலைபேசியில் அழைத்து பாலசுப்ரமணியத்துக்கு கடன் வழங்கச் சொல்லி இருக்கிறார். வங்கி மேலாளரால் ரூ 50 லட்சத்துக்கு மேல் கடனுக்கு ஒப்புதல் வழங்க இயலாது என்ற போதிலும் அவரை தனது பேச்சு வசியத்தால் மாற்றி இருக்கிறார் சுகாஸ். போதாத குறைக்கு வங்கி மேலாளரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பரிந்துரைக்க வைத்துள்ளார். அரசு ஒப்பந்தம்தானே, லோன் கொடுங்கள் என வீட்டாரைப் பேச வைத்துள்ளார் சுகாஸ்.

கனரா வங்கி துணைப் பொது மேலாளர் இம்மோசடியை புரிந்துகொண்டு புகார் கொடுத்திருக்கிறார். வங்கிக் கணக்குகளை முடக்குவதற்குள் ரூ 12 கோடியை ஆட்டையைப் போட்டு முடித்திருந்தார் சுகாஸ்.

வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் வங்கி மேலாளர் ஜெகதீஷ், கடன் வாங்கிய பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் மார்ச் 20-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அப்போதும் தன்னுடன் ஃபோனில் பேசியவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார் வங்கி மேலாளர். அவரது புகைப்படத்தை காட்டி, துரை தயாநிதி பெயரால் ஏமாற்றியதை எல்லாம் போலீசார் சொன்ன போதும் கூட அவர் நம்பத் தயாராக இல்லை.



ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! 8x1r
சொகுசு கார்கள்





[*]ஆட்டையைப் போட்ட பணத்துடன் டெல்லிக்குப் போய் பண்ணை வீடு, ஆடம்பர கார், கேளிக்கைகள் என வாழத் துவங்கிய பிறகு இருவரது கையும் அரிக்கத் துவங்கியது. அங்கும் ஒரு ஏமாற்று வேலையை துவங்கினர். ஏமாந்தவர் பணத்தை திரும்பப் பெற முயன்ற போது போலீசுக்கும் தகவல் தந்து விட்டார். போலீசார் சுகாஸைப் பிடிக்க திட்டமிட்டனர். கடைசி நேரத்தில் அவருக்கு போலீசிலிருந்தே தகவல் கசியவே மரியா பாலை அம்போவென விட்டுவிட்டு தப்பி விட்டார்.

ஒரு இண்டர்காம் போர்டும், பெண் உதவியாளரும் இருப்பதாக காட்டிக் கொண்டு ஐ.ஏ.எஸ் என ஒரு முதலாளியை மட்டுமின்றி வங்கி மேலாளரையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளான் விகாஸ். விவசாயக் கடனுக்கோ, கல்விக் கடனுக்கோ ஒரு சில லட்சங்களை வாங்குவதற்கே அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என அலைக்கழிக்கும் வங்கி நேரில் பார்க்காத ஒருவனை நம்பி ரூ 19 கோடி கடன் கொடுத்துள்ளது என்றால் அதிகார வர்க்கத்தின் சட்ட திட்டங்களின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம். சக்கரவர்த்தி, பாலசுப்பிரமணியன் போன்ற முதலாளிகள் அரசு ஒப்பந்தம் என்ற பெயரால் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்ற நப்பாசையில் விழுந்திருக்கின்றனர்.

சினிமா உலகில் சம்பாதிப்பதைக் காட்டிலும் ஏமாற்றி சம்பாதிப்பது எளிது என்பதைப் புரிந்துகொண்ட லீனா பால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தனியார்மயம் வந்த பிறகுதான் இதுபோன்ற மோசடிகளுக்கு வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. சீருடை தைப்பது அல்லது நாப்கின் தயாரிப்பது என எல்லாவற்றையும் அரசே ஒரு பொதுத்துறை நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தால் இந்த மோசடி எப்படி நடந்திருக்க முடியும்?

இராணுவத்திற்கு தேவையான ஹெலிகாப்டர்கள் துவங்கி அரசுப்பணியாளர் சீருடை வரை தனியார் முதலாளிகள் இப்படித்தான் இலஞ்சம் கொடுத்து ஆர்டர் பெறுகின்றனர். முதலாளிகள் வளைப்பதற்கும், அவர்களுக்காக வளைந்து கொள்வதும்தான் நமது ‘ஜனநாயகத்தின்’ அழகு. அந்த அழகுதான் இத்தகைய மோசடி சீமான்களையும் சீமாட்டிகளையும் பெற்றுப் போடுகிறது.

ஒரு தொலைபேசி, ஒரு பெண் குரல், ஒரு நுனி நாக்கு ஆங்கிலம் மூன்றும் இருந்தால் போதும். கொள்ளையை நீங்கள் கோடிகளில் நடத்தலாம்.

நன்றி வினவு

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Jul 04, 2013 9:02 am

நல்ல புத்திசாலி தான் ஆனால் கண்டிப்பாக சிக்குவான்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! Mgr
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 04, 2013 9:24 am

என்ன ஒரு ஐந்தாறு வருஷம்தான் ....அப்புறம் இந்த அம்மாவும் வெளியில் வந்திடுவாங்க புன்னகை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 2:13 pm

//ஒரு தொலைபேசி, ஒரு பெண் குரல், ஒரு நுனி நாக்கு ஆங்கிலம் மூன்றும் இருந்தால் போதும். கொள்ளையை நீங்கள் கோடிகளில் நடத்தலாம்//

ரொம்ப அபாயமாக இருக்கே ராஜு சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 2:14 pm

சிறையில் சந்திப்போம் வாங்க வாங்க புன்னகை




soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jul 06, 2013 12:49 pm

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் ! 06-1373092655-leena-maria-paul-movie-stills15-600

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து சென்னை வங்கி ஒன்றில் ரூ.19 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவான நடிகை லீனா மரியாபாலின் காதலனை கொல்கத்தாவில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் என்ற சேகர் ரெட்டி (22), ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்தும், முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர் போலவும் நடித்தும் மோசடி செய்தார். இதனையடுத்து சென்னை, பெங்களூரில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான ரெட்டி,சிறையில் இருந்து வெளியே வந்தவர். இவர் மலையாள நடிகையான லீனா மரியாபாலின் காதலர் ஆவார். லீனா பாலும், சேகர் ரெட்டியும் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடியே 22 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.

இந்த நிலையில், டெல்லியில் கடந்த மே 27ஆம் தேதி லீனா மரியாபாலை போலீசார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். ஆனால், சேகர் ரெட்டி காரில் தப்பி விட்டார். இதனையடுத்து ரெட்டி வைத்திருந்த 9 சொகுசு கார்கள் மற்றும் 4 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, சேகர் ரெட்டி, ஜெய்ப்பூர், மும்பை, கோவா, கொல்கத்தா, சிலிகுரி என பல இடங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக சுற்றித் திரிந்தார். டெல்லி போலீசாரும், சேகர் ரெட்டி மீது மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை தேடி வந்தனர். கடைசியாக, அவர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் கங்கர்பிதா எல்லையில் பதுங்கி இருப்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் விரைந்து சென்று கொல்கத்தாவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து சேகர் ரெட்டியை வெள்ளிக்கிழமை மாலையில் கைது செய்தனர்.

டெல்லி போலீசார் சேகர் ரெட்டியை கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின்போது, மோசடி பணத்தில் சேகர் ரெட்டி சொகுசு வாழ்க்கை நடத்தி இருப்பது தெரிய வந்தது. ரூ.19 கோடி மோசடி பணத்தில், ரூ.7 கோடிக்கு சொகுசு கார்களும், ரூ.1 கோடிக்கு நகைகளும் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.  அவரிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 2 வைர மோதிரங்கள், ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு வைர கம்மல், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பேக், 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் நேபாளம், பூடான் நாடுகளின் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட தகவலை சென்னை போலீசாருக்கு தெரிவித்து விட்டதாக டெல்லி போலீசார் கூறினர். அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சேகர் ரெட்டிக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெற்று டெல்லிக்கு செல்ல உள்ளனர். அங்கு சேகர் ரெட்டியை கைது செய்து சென்னைக்கு கொண்டு வர உள்ளனர்.

-- ஒன் இந்தியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக