புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_m10சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 7:56 pm

சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Astro-articles-44

மனித வாழ்வில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. சிலருக்குத்தான் கிடைக்கின்றன.  அப்படிக் கிடைத்த அந்தச் சில பேர்களிலும்  எல்லோரும் பேரும் புகழும் பெற்று இருப்பதில்லை. மிகவும் குறைவாக, ஒருசிலர்தான் பேரும் புகழும் பெற்று விளங்குவார்கள். அட!  மனிதர்களுக்குத்தான் இப்படியென்றால், நவகிரகங்களுக்குக்கூட இதே நிலைதான் போலிருக்கிறது. யாருக்காவது ஏதாவது வசதி, வாய்ப்பு கிடைத்து விட்டால் எதிர்பார்த்ததோ- எதிர்பாராமலோ, எப்படியாயினும் சரி, உடனே நாம், ‘‘அவனுக்கு என்னப்பா! சுக்கிர தசை சுருட்டிக்கிட்டு அடிக்கிது.  அதுனாலதான் காசும் பணமும் பேரும் புகழும், கொட்டோ கொட்டுனு கொட்டுது. சிங்கி அடிச்சப் பய. இப்பப் பாரு, எங்கியோ போயிட்டான்!’’ என்று  சொல்வோம். அதாவது, நமக்கும் இன்னும் சுக்கிர தசை அடிக்கவில்லையே என்கிற ஏக்கம்... தவிப்பு... பொறாமை... அவ்வாறு போற்றப்படும் சுக்கிரன்,  நவகிரக மண்டலத்தில் ஆறாவதாக விளங்குகிறார்.

சுக்கிரனைப் பற்றித் தனி நூலே எழுதலாம். அந்த அளவிற்கு அவரைப் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. நவரசங்களும் நிறைந்த சுவையான  வாழ்க்கை சுக்கிரருடையது. அவர் அசுரர்களுக்கு ஆசார்யராக (குருவாக) இருந்ததால், அவர் ‘சுக்கிராசார்யார்’ எனப்பட்டார். இவரைப் பற்றிய  தகவல்களில், சிலவற்றைப் பார்க்கலாம். பிருகு முனிவருக்கும் புலோமிசைக்கும் புத்திரனாய்த் தோன்றியவர் இவர். பிருகு முனிவரின் மகனானதால்,  அவருக்கு ‘பார்க்கவன்’ என்ற பெயரும் உண்டு. பார்க்கவன் காசி நகரம் சென்று, அங்கே ஒரு சிவலிங்கத்தை நிறுவி, முறையாக வழிபாடு செய்து  வந்தார். ஆனால், சிவபெருமான் காட்சி கொடுக்கவில்லை. அதனால் மனம் வருந்திய பார்க்கவன் மிகுந்த வருத்தமடைந்து, புலன்களை அடக்கிக்  கடுந்தவம் செய்யத் தொடங்கினார். அவருடைய தவம் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது.

சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Astro-articles-44

அதன் பலனாக பார்க்கவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார். ‘‘பார்க்கவா! உன் தவம் என்னை மகிழச் செய்தது. இறந்தவர்களை உயிர் பிழைக்கச் செய்யும் மிருத சஞ்சீவினி என்னும் மந்திரத்தை நான் உனக்கு உபதேசம் செய்கிறேன்’’ என்று சொல்லி, சிவபெருமான் பார்க்கவனுக்கு மந்திர உபதேசம் செய்தார். அதன்பின், தேவர்கள் பிருகஸ்பதியைத் தங்கள் குருவாகக் கொள்ள, அசுரர்கள் பார்க்கவனைத் தங்கள் குருவாக ஏற்றனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. அப்போரில், இரு பக்கமும் பலர் இறந்தார்கள். உயிரிழந்த அசுரர்களை எல்லாம், தான் சிவபெருமானிடம் இருந்து பெற்ற மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தால் உயிர் பிழைக்கச் செய்தார் பார்க்கவன். தேவகுருவான பிருகஸ்பதிக்கு, அந்த மந்திரம் தெரியாததால், போர்க்களத்தில் இறந்துபோன தேவர்களை அவரால் பிழைக்க வைக்க முடியவில்லை.

ஒரு சமயம், அந்தகாசுரன் என்பவன் தேவர்களோடு போர் செய்தான். போர்க்களத்தில், அளவில்லாத அசுரர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதுகண்டு பதறிய அந்தகாசுரன் பார்க்கவனிடம் ஓடினான். ‘‘குருநாதா! நீங்கள் வந்து காப்பாற்றாவிட்டால் நாங்கள் யாரும் பிழைப்பது அரிது. வாருங்கள்!’’ என்று மனம் குமுற அழைத்தான்.அந்தகாசுரனின் அழைப்பிற்கு அசுரகுரு இணங்கினார். போர்க்களத்திற்குப் போய், மிருத சஞ்சீவினி மந்திரத்தின் மூலம், இறந்த அசுரர்களை எல்லாம் உயிரோடு எழுப்பினார். மீண்டும் கடுமையான போர் நடைபெற்றது. தேவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. நடுங்கிப்போன அவர்கள் விரைந்தோடிப் போய் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். ‘‘எம்பெருமானே! நீங்கள் உபதேசித்த மந்திரத்தைக் கொண்டு, அசுரகுரு இறந்த அசுரர்களை எல்லாம் உயிரோடு எழுப்பி விடுகிறார். இனிமேல் தேவர்கள் பிழைப்பது கடினம்’’ என்று கதறினர்.

சிவபெருமான் உடனே பார்க்கவனை அழைத்துவரச் செய்தார். பார்க்கவன் வந்ததும் அவரிடம் சிவபெருமான், ‘‘பார்க்கவா! கொஞ்ச காலம் நீ என் வயிற்றில் இரு!’’ என்று சொல்லி, பார்க்கவனை விழுங்கி விட்டார். சிவபெருமானின் திருவயிற்றில் இருந்தபடியே, பார்க்கவன் வெளியே நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அந்தகாசுரனுக்கும் தேவர்களுக்கும் போர் நிகழ்ந்தது. சிவபெருமான் திருவருளால் அந்தகாசுரன் அழிக்கப்பட்டான். சிவபெருமானின் திருவயிற்றில் இருந்த பார்க்கவன், ஆயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார். அதன்பிறகு சிவபெருமான் மிகுந்த அருளோடு பார்க்கவனை வெளிப்படுத்தினார். வெளிப்பட்ட பார்க்கவன், தூய்மையான வெண்மை நிறத்தோடு இருந்ததால், அவருக்கு ‘சுக்கிரன்’ எனப் பெயர் ஏற்பட்டது. இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்றவரும் அசுரர்களுக்கு குருவாக இருந்தவருமான சுக்கிராசார்யார், பிள்ளைப் பாசத்தின் காரணமாகச் சற்று நிலைத் தடுமாறிய வரலாறும் உண்டு.

போர்க்களத்தில் இறந்துபோன அசுரர்களை எல்லாம் அசுர குருவான சுக்கிராசார்யார் பிழைக்கச் செய்து கொண்டிருந்தார். அது தேவர்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது. அதனால் அவர்கள் தேவ குருவான பிருகஸ்பதியின் மகனான கசனிடம், ‘‘நீ போய் சுக்கிராசார்யாரிடம் சீடனாக இருந்து, அவரிடமிருந்து மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றுக்கொண்டு வா!’’ என்று சொல்லி அனுப்பினார்கள். கசனும் போய் சுக்கிராசார்யாரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருநாதரின் மகளான தேவயானிக்கு சில பணிவிடைகள் செய்து, அவள் மனதையும் கவர்ந்தான்.அசுரர்கள் சும்மா இருப்பார்களா? ‘‘இந்தக் கசன் பகைவரான தேவர்களிடம் இருந்து வந்தவன். இவனை விட்டு வைக்கக் கூடாது. இவனால் நம்முடைய அபூர்வ மந்திர ரகசியம் வெளிப்பட்டுவிடும்; நமக்கு ஆபத்து வந்துவிடும்’’ என்று யோசித்த அசுரர்கள், கசனைக் கொன்று விட்டார்கள். அவனைப் பிரிய இயலாமல் அவன் மேல் காதல் கொண்டுவிட்ட மகள் தேவயானியின் வேண்டுகோளுக்காக, சுக்கிராசார்யார் கசனை சஞ்சீவினி மந்திரம் சொல்லி உயிர்ப்பித்தார்.

இப்படியே இருமுறை நடைபெற்றது. மூன்றாவது முறை, அசுரர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்கள் கசனைக் கொன்று, கொளுத்தி, அந்தச் சாம்பலை மதுவோடு கலந்து, தங்கள் குருவான சுக்கிராசார்யாருக்குக் கொடுத்து விட்டார்கள். விவரம் புரியாமல் சுக்கிராசார்யாரும் அந்த மதுவைக் குடித்து விட்டார். கசனைக் காணாததால் வழக்கப்படி தேவயானி, தந்தையிடம் வேண்டினாள். சுக்கிராசார்யாரும் மந்திரத்தைச் சொன்னார். அப்போது, சுக்கிராசார்யாரின் வயிற்றில் இருந்த கசன் உயிர் பெற்றான். அவன் தன் வயிற்றிலேயே இருப்பதை உணர்ந்த சுக்கிராசார்யார், கசன் வெளியிலே வரவேண்டுமானால், தான் இறக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தார். உடனே, தன் வயிற்றுக்குள் இருந்த கசனுக்கு, ‘சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசம் செய்தார். அதை கிரகித்துக்கொண்ட கசன், அவருடைய வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்தான். சுக்கிராசார்யார் இறந்தார். பிறகு கசன் தான் கற்ற மந்திரத்தால், சுக்கிராசார்யாருக்கு உயிர் கொடுத்தான்.

சுக்கிராசார்யாரின் வாழ்க்கை, மிகவும் விரிவானது. அதைச் சொல்லும் ஞான நூல்கள், சுக்கிராசார்யாருக்கு ஒரு கண் கிடையாது என்று சொல்லி, அதற்கான காரணத்தையும் விவரிக்கின்றன. அது; மகாபலி சக்கரவர்த்தி யாகம் செய்த வேளையில், வாமனர் அங்கு வந்து, மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் ஒப்புக் கொண்டார். அப்போது ராஜகுரு சுக்கிராசார்யார் தடுத்தார். ‘‘மகாபலி உன்னிடம் மூன்றடி மண் கேட்கும் இவனைச் சாதாரணமாக எண்ணாதே! உன்னிடம் இருப்பதையெல்லாம் கைப்பற்றி, இந்திரனுக்கு அவற்றைக் கொடுப்பதற்காக, மகாவிஷ்ணுவே இப்படி வாமனனாக வந்திருக்கிறான்’’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலியோ, ‘‘நான் சொன்ன சொல்லை மீற மாட்டேன்’’ என்று கூறி, கமண்டலத்தை எடுத்து வாமனரின் கையில் நீர் வார்க்கத் தொடங்கினார். அப்போதுகூட, சுக்கிராசார்யார் தன் முயற்சியை விடவில்லை. அவர் ஒரு வண்டாக உருமாறி, கமண்டலத்தில் இருந்து நீர் வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டார்.

அதை அறிந்த வாமனரான திருமால், ஒரு தர்ப்பைப் புல்லால் அந்தத் துவாரத்தில் குத்தவே, அது சுக்கிராசார்யாரின் ஒரு கண்ணைக் குத்தியது. அது முதல் சுக்கிராசார்யார், ஒற்றைக் கண்ணை உடையவரானார். இவ்வாறு அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்த சுக்கிராசார்யார், ஓர் அற்புதமான நீதி நூலையும் எழுதி இருக்கிறார். அது, ‘சுக்கிர நீதி’. சுக்கிராசார்யாருக்கு கரங்கள் நான்கு. கமண்டலம், அட்சமாலை, தண்டம், வரதம் என நான்கு கரங்களிலும் ஏந்தி இருப்பார். விஷ்ணு தர்மோத்தரம் என்ற நூல், சுக்கிராசார்யாருக்கு இரண்டு கரங்கள். அவற்றில் நிதியும் புத்தகமும் வைத்திருப்பார் என கூறுகிறது. சுக்கிராசார்யார் வெண்மை நிறத்தவர்; வெண்மை ஆடையர்; வெள்ளித்தேர் உடையவர்; அத்தேரில் எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். (பத்துக் குதிரைகள் என்றும் சொல்வதுண்டு.) நவகிரக வழிபாட்டு முறைகளைக் கூறும் வடமொழி நூல்கள், சுக்கிராசார்யார் வெண்மைத் திருமேனி, நான்கு திருக்கரங்கள், திருமுடி ஆகியவை கொண்டவர்;

அவருக்குப் பஞ்சகோண வடிவமான தேர் உண்டு. வெண்சந்தனம், வெள்ளை மலர், வெண் மணிமாலை, வெள்ளாடை, வெண் குடை, வெண்ணிறக் கொடி ஆகியவற்றை உடையவர்; மேருவை வலம் வருபவர் என்று வர்ணிக்கின்றன. பத்மாசனம் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். சடையும் மரவுரியும் தரித்து, நவகிரக மண்டலத்தில் சூரியனுக்குக் கிழக்கே, பஞ்ச கோண மண்டலத்தில் வைத்து, சுக்கிராசார்யாரை வழிபட வேண்டும். சுக்கிரரின் மந்திரத்திற்கு உரிய முனிவர் பாரத்வாஜர், அதிதேவதை - இந்திராணி; பிரத்யதி தேவதை - இந்திர மருத்துவன். சுக்கிரருக்கு உரிய ராசிகள் - ரிஷபம், துலாம்; கொடி - குதிரைக் கொடி; திசை - கிழக்கு; வாகனங்கள் - முதலை, கருடன்; தானியம் - மொச்சை; ரத்தினம் - வைரம்; சமித்து-அத்தி; சுவை- இனிப்பு; உலோகம்- வெள்ளி; அன்னம்- மொச்சைப் பயறு சாதம்; மனைவி - சகீர்த்தி; மகன்- விஷகடிகன்; இவ்வாறெல்லாம் விவரிக்கும் நூல்கள், சுக்கிராசார்யாரின் பலவிதமான பெயர்களையும் குறிப்பிடுகின்றன:

உசனன், கவி, காவியன், ஹிமாபன், குந்த தவளன், சுப்ராம்சு, சுக்லாம் பரதரன், சுக்ல பூஷணன், ஸுதீ, ஆத்மவித், வேத வேதாங்க பாரகன், மஹாமதி, நீதிக்ஞன், நீதிக்ருத், நீதி மார்க்க காமி, கிரகாதிபள், வைத்திய மந்திரி, வைத்திய குரு! அப்படிப்பட்ட சுக்கிராசார்யாரின் அருளால், நம் அனைவருக்கும் சுக்கிர தசை அடிக்கும்படியாக வேண்டுவோம்!

நன்றி : தினகரன் - பி.என்.பரசுராமன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 28, 2013 8:07 pm

பயனுள்ள ஜோதிட பதிவு அருமையிருக்கு  அம்மா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Mசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Uசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Tசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Hசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Uசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Mசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Oசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Hசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Aசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Mசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! Eசுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக