புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
42 Posts - 63%
heezulia
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 9:34 am

http://www.meenagam.org/?p=13920
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு



எழுதியவர்ஏதிலி on October 22, 2009
பிரிவு: செய்திகள்



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Sl_dmk_teamபிரமாண்டமான
பிரச்சாரத்துடன் தாளம் தப்பட்டையுடன் வந்திறங்கிய தமிழகத்திற்கான இந்திய
நாடாளுமன்றக் குழுவினர் நாடு திரும்பிவிட்டனர். ‘மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?

என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.’ இனி
நாடு திரும்பிய அவர்கள் ‘சென்றார்கள், வென்றார்கள், வந்தார்கள்’ என்று
பிரச்சாரங்கள் தடபுடலாக நடைபெறக்கூடும். மக்கள் மீளக் குடியேற்றப்படாமலேயே
அவர்கள் மீளக் குடியேற்றப்படுவதாக கதைகள் பின்னப்படும். இரண்டுநாள்
சிறீலங்கா அரசு அறிவித்த போலி யுத்த நிறுத்தத்தைக் கூறியே வெறும் வாயை
மென்றவர்களுக்கு இப்போது அவல் கிடைத்ததுபோல கள நிலையை நேரில் சென்று
பார்வையிட்டு திரும்பிய பின் சொல்லவா வேண்டும். யாழ்குடாவிற்கு
சென்றவர்கள் அங்கு தமிழ் மக்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து
விடுவார்கள் என்று தெரிந்துதான் சிறீலங்காவின் ஆயுதக் குழுத் தலைவர்
டக்ளசை அருகில் வைத்துக்கொண்டு அனைத்து கூட்டங்களையும்
நடத்தியிருக்கின்றார்கள்.

டக்ளஸ் இருந்தால் தமிழ் மக்கள் வாய்
திறக்க மாட்டார்கள். வாய் திறந்தால் மறுநாள் தங்கள் உயிர் இருக்காது
என்பது அந்த மக்களுக்குத் தெரியும். அதனால் அந்த மக்களின் வாயை
மூடுவதற்காகவே டக்ளசுடன் மேடைகளில் காட்சியளித்திருக்கின்றார்கள்.
அப்படியிருந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துணிந்து தங்கள்
கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றக் குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தமிழ் மக்களுக்கான
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவை
என்று கூறியிருக்கின்றார் இந்த நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கி வந்த
டி.ஆர்.பாலு அவர்கள்.

இத்தனை காலமும் தமிழ் மக்களின் பிரச்சினை
குறித்து ஆராயமல்தான் இலங்கையின் இறையாண்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை இவரது பதில்
ஏற்படுத்தியிருகின்றது. முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு
அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே இலங்கை
வந்துள்ளதாக தெரிவித்த இவர், பின்னர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
குறித்தும் சிறீலங்கா அரசாங்க உயர் மட்டத்துடனான சந்திப்பின்போது
கலந்துரையாடி அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து இதுதொடர்பான முழுமையான
அறிக்கையினை நாம் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.

இதுவே எமது கடமை. இதற்குமேல் எத்தகைய
முடிவினையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும் என்று
தெரிவித்திருக்கின்றார். இந்த முரண்பட்ட பதில்களே இவர்களின் பயணத்தின்
நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பிவிட்டிருக்கின்றது.”இலங்கைத்
தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க
உதவும் வகையில் கொங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அங்கு
அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும். தவறைத்
திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும்
முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது”

என இந்தக் குழுவினரின் பயணம் குறித்து
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கும்
குற்றச்சாட்டும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனவே, இவர்களின் பயணத்தின்
நோக்கம் குறித்த சந்தேகங்கள் தமிழ் மக்களுக்கு அதிகமாகவே
ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம்
ஏறி வைகுண்டம் போவேன்’ என்று சவால் விட்ட கதையாக, தமிழகச் சிறைகளில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களையே இன்னும் விடுவிக்க
முடியாத இவர்களால், கொடூர இனவெறிகொண்ட சிங்கள அரச இராணுவத்திடம் இருந்து
வன்னி மக்களை விடுவிக்கப்போவதாக கூறுவது வேடிக்கையானது. ஆளாளுக்கு வந்து
பார்வையிட்டுச் செல்லும் ஒரு மிருகக்காட்சிச் சாலையாக மாறியுள்ள வன்னி
முகாம் மக்களைப் பொறுத்தவரை இவர்களும் ‘வந்தார்கள், சென்றார்கள்’
அவ்வளவுதான்.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 9:58 am


மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?


அப்படித்தான் தெரிகிறது....

தகவலுக்கு நன்றி அக்கா.........







நன்றி



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Eegaraitkmkhan
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:16 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:22 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக