புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
64 Posts - 58%
heezulia
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
106 Posts - 60%
heezulia
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_m10குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Feb 15, 2013 2:06 pm

தாயின்கருவிலேயே குழந்தைதன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.
குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு.
அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச் சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள்.
‘ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மனநிலை, நல்ல பழக்க வழக்கங்கள் எனக்கற்றுக் கொடுக்கா விட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமம்.
போட்டிகளும் ஆபத்துகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் குழந் தை பிறந்தது முதல், பள்ளிக்குச் செல்லும் வரை அதாவது மூன்று வயது வரை உற்சாகமாக வளரக்கூடிய விஷயங்களை இதய பூர்வத்தோடு விவரிக்கிறது இந்தஇணைப்பு.
.
குழந்தையைத் தூக்கும் முறை:
.
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலைநிற்காமல் இருக்கும்.
குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம்.
உரம் விழலாம். இதற்குச் சுயமருத்துவம் செய்யக் கூடாது.
குழந் தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்கவேண்டும்.
திரும்பவும் இறக்கி, படுக்க வைக்கும் போது, தலையையும், கழுத்துப் பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள்.
பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.
.
குளிப்பாட்டும் முறை:
.
பிறந்த குழந்தைகளைத் தாயே பயமின்றிக் குளிப்பாட்டலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக எண்ணெயை உடலில் தடவி வருடி விடுகள்.
நாம் தரையில் அமர்ந்தபடி, குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோலத்தூக்கிப் பிடிக்க வேண்டும்.
குழந்தை யின் உடலை பேபிசோப் போட்டுக் குளிப்பாட்டி, பிறகு தலை முகத்தைக் கழுவுங்கள்.
தலைக்குக் குளிப்பாட்டும்போது, ஒரு கையை அகல விரித்து, குழந்தையின் நெற்றிப் பகுதியைப் பிடித்தபடி, தண்ணீர் ஊற்ற வேண்டும்.
வாயால் மூக்குச் சளியை எடுக்கிறேன் என்ற பெயரில் வாயால் ஊதுவது, அழுத்துவது கூடவே கூடாது.
குளிப் பாட்டிய உடன் தலை, காது, மூக்கு, கழுத்துப் பகுதியை ஈரம் போகத் துவட்டுங்கள்.
வாரம் ஒரு முறை மிகவும் மிதமான வெந்நீரில், சிறிது யூகலிப்டஸ் இலையைப் போட்டுக் குளிப்பாட்டினால், குழந்தை ஆரோக்கியமாக வளரும். நிம்மதியாகத் தூங்கும்.
.
தாய்ப்பால் ஊட்டும் முறை:
.
குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தாய்ப்பால் மிகச் சிறந்த உணவு.
தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்க, பால் அதிகம் சுரக்கும்.
தாய்ப்பால் சரியாகப் புகட்டுகி றோமா? குழந் தை சரியாகப் பால்குடிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையின் வாய்ப்பகுதி அகலமாக விரிந்திருக்கிறதா என்று கவனியுங்கள்.
குழந்தையின் முகவாய் தாயின் மார்பைத்தொடுவதுபோல் இருக்க வேண்டும்.
மார்புக் காம்பின் கரியப் பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்ப்பகுதியை விட அதிகமாகக் காணப்பட வேண்டும்.
அதாவது கவ்விய நிலையில் இருந்தால் குழந்தை ஆழமாக உறிஞ்ம். தாய்க்கும் மார்பு காம்பில் வலி ஏற்படாது.
இது, தாய்க்கும் குழந்தை க்கும் இடையேயான ஒரு அற்புதப் பிணைப்பை உருவாக்கும்.
.
தூங்க வைக்கும் முறை:
.
குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம்.
தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும்.
வெயில் காலத்தில் கட்டிலில் படுக்கவைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப்புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள்.
உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும்.
குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள்.
காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத்திணறலுக்கு ஆளாகநேரிடும்.
காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந் தெடுப்பது நல்லது.
ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்க வைக்கவேண்டும்.
.
நோய்கள் தடுப்பு ஊசிகள்
குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி, இருமல், காய்ச்சல் இவற்றால் அடிக்கடி சோர்ந்துவிடுவது உண்டு.
உணவு வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாமல் போவது, செரிமானப் பிரச்னை, வயிற்றில் பூச்சி போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
குழந்தைகள் எதைக்கண்டாலும், அதை உடனே வாயில்வைத்துக் கொள்வார்கள்.
அதனால், கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்னையை ஏற்படுத்தி விடும்.
சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்தால், உட லில் இருக்கும் கழிவுகளும் கிருமிகளும் வெளியேற்றப்படும்.
வயிற்றுப்போக்கும் சரியாகும்.
அதிகக் குளிர்ச்சி, தொற்றுநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும்.
பல் வேறு நோய்களுக்குத் தண்ணீரே முக்கியக்காரணம்.
அதனால், தண் ணீரை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, வடி கட்டிக் கொடுப்பது அவசியம்.
தொற்று நோய்களால் மூக்கு ஒழுகுதல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
இவை நீடித்தால், பிற் காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள் ளிட்ட தேவையற்ற பிரச்னைகள் வரவாய்ப்பு இருக்கிறது.
சுற்றுப் புறத்தைச் சுகாதாரத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு அணிவிக்கும்டயபர்களால் கூட சளி ஏற்படலாம்.
சிறுநீர் கழித்ததும், உடனுக்குடன் கவனித்து, மாற்றவேண்டியது அவசியம்.
.
டயபரை அடிக்கடி மாற்றாமல் போகு ம்போதும், இறுக்கமாக அணிவிக்கும் போதும் குழந்தைகளுக்குச் சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்.
டயபரைக் குழந்தைக்குப் போடும் போதே, அதன்கால் இடுக்குப்பகுதியில் பேபிஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டுப் போடுங்கள்.
இதனால், குழந் தைக்கு அரிப்பு, அலர்ஜி ஏற்படாமல் இருக்கும்.
.
நோய் தடுக்கும் மருந்துகள்…
.
குழந்தை பிறந்தவுடன் மருத்துவ மனையிலேயே மருந்துகள், தடுப்பு ஊசிகளைப் போட்டுவிடுகிறார்கள்.
அவை என்ன தடுப்பு ஊசி, என்ன மருந்து என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
.
குழந்தை பிறந்ததும், காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போடவேண்டும்.
.
ஒன்றரை மாதத்தில், டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பு ஊசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ்.
.
மூன்றரை மாதத்தில்டிபிடி மற்றும் போலியோ சொட்டுமருந்து.
.
நான்கரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து.
.
ஐந்தரை மாதத்தில் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ்.
.
ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மை தடுப்புஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
.
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசிகள்…
ஒன்றே கால் வயதில் தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம் மை தடுப்புஊசி
.
ஒன்றரை வயதில் டிபிடி
.
நாலரை வயதில் டிபிடி மற்றும் போலியோ சொட்டு மருந்து.
.
இப்படி அந்தந்தக் காலக்கட்டத்தில் கட்டாயம் நோய் தடுப்பு ஊசி, மருந்து களைப் போடுவதன் மூலம், வருங் காலத்தில் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வது நிச்சயம்.
.
குழந்தைக்கு நம்பகமான சூழலும், தாயின் அரவணைப்பும் மிகவும் அவசியம்.
பாசமும், பாதுகாப்பும் இருப்பதைக் குழந்தைக்கு உறுதிப் படுத்தினால்தான் அதன் வளர்ச்சி ஆரோ க்கியமாக இருக்கும்.
தொடுதல், கொஞ் சுதல், பேசுதல் போன்ற செயல்களின் மூலம், குழந்தை நம் முகம் பார்த்து வாயைக் குவித்து வார்த்தைகளை வெளிப்படுத்த முயற்சிக்கும்.
சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
.
வளர்ப்பவர்களைப் பார்த்தே குழந்தையின் பழக்கவழக்கங்களும் இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும்சூழல்.
ஒரு நாளில் தாய், குழந்தையுடன் செலவிடும் நேரம் குழந்தையின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் செயல்களைப் பாராட்டுவதும், சிறு தவறு செய்தால் ‘ஸாரி’ கேட்பதும், எடுத்த பொருட்களை அதற்கான இடத்தில் வைக்கப் பழக்குவதும் பெற்றோ ரின் கடமை.
விட்டுக் கொடுத்துப் போகும் குணம்தான் சமூகத்தில் குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
.
எதைப் பார்த்தாலும், ஆசை எழும்பும் வயது. அதற்காக, கேட்டதை எல்லாம் வாங்கித் தருவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
உங்களின் குடும்பச் சூழல், வசதி, தேவை யைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாழும் சூழலை உருவாக்குங்கள்.
பிஞ்சிலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் வாழும் சூழல், பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள்.
குழந்தையின் மனதில் தேவை இல்லாத ஆசைகள் இருக்காது. மனக்குழப்பமும் ஏற்படாமல், தெளிவாய் சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
.
நடப்பது, ஓடுவது, விளையாடுவது, எதையாவது எடுத்து வீசுவது என சுட்டி கள் துறுதுறு வெனஇருப்பார்கள்.
இதைத் தொல்லையாக நினைக்காமல் பெற்றோரும் கூடவே குழந்தையை உற்சாகப்படுத் தவேண்டும்.
இது பெற்றோருக்கும் ஓர் உடற்பயிற்சிதான்.
.
பிஞ்சு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பெரியவர்கள் குரலை உயர் த்திப் பேசுவதோ, கத்துவதோ கூடாது.
சுற்றி இருக்கும் விஷயத்தைக் கிரகிக்க த்தொடங்கும்போது, சத்தமான பேச்சுகூட குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்தலாம்.
சாப்பிட அடம்பிடித்தாலோ, அழுகையை நிறுத்துவதற்காகவோ குழந்தையிடம் ‘பூச்சாண்டி வர்றான் பாரு’ என்று பயம் காட்டிப் பணியவைக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு அழுகை என்பது ஓர் உணர் ச்சி வெளிப்பாடு. பின்னாளில் உணவை யே வெறுக்கும் அளவுக்குச் சாப்பாட்டின் மீதான பிடிப்பு போய்விடலாம்.
அன்போடு, நெறிக் கதைகளைச் சொல்லி உணவை ஊட்டுவதே சிறந்தது.
.
சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு விளையாடுவது, சுழற்றி விளையாடுவது என்று விபரீதமாகக் கொஞ்சுவார்கள்.
இதனால், குழந்தை சிரிப்ப தைப்பார்த்து, ரசிப்பதாக நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
இது மிகவும் ஆபத்தான விஷயம். குழந்தைகளுக்கு மனதளவில் இனம் புரியாத பயஉணர்வு ஏற்படும்.
‘இதைச் செய்யாதே’ எனத் தடை போடுவதே குழந்தையின் பயத்தை அதிகரிக்க செய்யும்.
அதே எச்சரிக்கையை, ‘ஜாக்கிர தையா கப்பண்ணும்மா…’ என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.
நல்ல பண்புகளும் வளரும்.
.
குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததும், வீட்டையே சுற்றிச்சுற்றி வலம் வரத்தொடங்கும். அடிக்கடித் தடுக்கி விழும்.
குழந்தைகள் நடக்கக் கூடிய இடங்களில் கூர்மையான டேபிள், ஸ்டூல் போன்ற எந்தப் பொ ருட்களையும் வைக்காதீர்கள்.
தண்ணீர், எண்ணெய் போன்றவை கொட்டி விட்டாலும், உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
குழந்தையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
அன்பு, பாசம், அரவணைப்பு எனச்சகல சந்தோஷ சூழலில் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கை, தைரியத்துடன் அறிவாளியாகவும் வளர்வார்கள்.
.
குழந்தைகளின் எடை
குழந்தைக்குத் தேவையான உணவு உடலில் சேர்கிறதா என்பதை அறிந்துகொள்ள முதலில் குழந்தையி ன் எடையைக் கவனிக்க வேண்டும்.
குழந்தை பிறக்கும்போது 2.75 கிலோ இருந்தால், நான்கே மாதத்தில் அதன் எடை 5கிலோ இருக்கவேண்டும்.
எடை ஓரளவு இரட்டிப்பானால்தான், குழந்தை சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று அர்த்தம்.
குழந்தைகளின் உடை
.
பிஞ்சுக் குழந்தைகளின் உடை பஞ்சுபோல் மிருதுவாக இருக்க வேண்டும்.
டிசைன், கலர், அழகு என்பதை மட்டும் பார்க்காமல், உடலை வதைக் காத பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரு மாதக் குழந்தை க்கும் இப்போது பாவாடை, சட்டை வந்துவிட்டது.
இவற்றைப் போட்டுப் அழகுபார்ப்பது, குழந்தைக்கு இம்சையை ஏற்படுத்தலாம்.
உடைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குழந்தையால் வெளியில் சொல்ல முடியாது.
வெயில்காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின் உடலுக்குப் பாதுகாப்பு.
மிகவும் இறுக்க மான ஆடைகள் அணிவிப்பதை முடிந்தமட்டும் தவிர்த்துவிடுங்கள்.
அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், எளிதில் கழற்றி மாற்ற க்கூடிய உடைகளை வாங்குங்கள்.
.
கடைகளிலேயே குழந்தைகளுக்கு உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்கும் நிலை இருப்பதால், புதுத் துணிகளை வாங்கியவுடன், நன்றாக அலசிக்காயவைத்த பிறகே அணி வது நல்லது.
.
ஜிகினா, ஜம்கி உடைகளில் பட்டன்கள், ஊக்கு, கொக்கிகள் இருந்தால் அது குழந்தையின் உடலை உறுத்தலாம்.
குழந்தைகள் கையில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவும் வாய்ப்புஉண்டு.
அதனால், வெல்க்ரோ, எலாஸ்டிக், லேஸ் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
மழைக் காலத்திலும், ஸ்வெட்டர் குல்லா போன்றவற்றை உடுத்தும் போது, ஜிப் இல்லாததாகப் பார்த்து, கழுத் துவழியாக மாட்டுவது போல் வாங்கலாம்.
.
குழந்தையின் வளர்ச்சியும் மகிழ்ச்சியும்
குழந்தை 3 மாதத்துக்குள் முகம் பார்த்து சிரிக்கும். நீங்கள் ‘ம்…’ என்று சொன்னால், குழந்தையும் ‘ம்’ என்று சொல்லும்.
காதில் வாங்கும் சத்தத்தை உணர்ந்து, திரும்பவும் அதைச் சொல்லிப்பார்க்கும்.
அதனால், மென்மையான ஒலிஎழுப்பிக் குழந்தையை உற்சாகப்படுத்தலாம்.
.
4-வது மாதம், கவிழ்ந்துகொண்டு, தனதுகைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப்பார்க்க குழந்தை முயற்சிக்கும்.
குழந்தையை நிற்கவைக்க, இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்து குழந்தையை நிற்க வைக்கலாம்.
.
5 – 6 மாதங்களில் குழந்தை உட்கர முயற்சிக்கும். தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.
எதையாவது பிடித்துக்கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபடடால் கீழேவிழும்.
தரையில் அழுத்தமாக முன்னங்கையை ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.
.
6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கதொடங்கும். அப்போது, வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும்.
தண்ணீர், பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம் பிக்கும்.
துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும்.
பற்கள் முளைப்பதன் அறிகுறி தென்பட்டாலே, குழந்தை வலியால் அடிக்கடி அழத் தொடங்கும்.
குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்தைக் கொடுக்கலாம்.
பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். பால் குடிப்பதைக்கூட குழந்தை மறுக்கும்.
சில நேரங்களில் வயிற் றுப்போக்கு ஏற்படலாம்.
.
பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் தூக்கம் இல்லாமல், புரண்டு புரண்டு படுக்கும். நடுராத்திரியில் எழுந்து அழத்தொடங்கும்.
.
7-வது மாதம் – எந்த உறுதுணையும் இல்லாமலே குழந்தை உட்காரப் பழகிக்கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நின்று, தானே நேராக நிற்கப் பழகும்.
.
8 – 9 மாதங்களில், நன்றாகவே உட்காரும். கால்களில் மொத்த எடையையும் தாங்கிக்கொள்ளப் பழகும்.
எதைக் கொடுத்தாலும், அதைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.
சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும், அடுக்கவும் கற்றுக்கொள்ளும்.
பத்தாம் மாதம், நன்றாகத் தவழ்ந்துபோய் எல்லாப் பொருட்களையும் எடுக்கஆரம்பிக்கும்.
எதையாவது பிடித்தபடி ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்துக்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக்கொள்ளும்.
.
11 – 12 மாதம் – உட்கார்ந்த நிலையில் திரும்பவும், நன்றாக முழங்கால் களை ஊன்றித் தவழவும் முடியும். நேராக நிற்கும்.
தரையில் எதையாவது எழுதுகிற மாதிரி செய்யும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும், நேராக நிற்கப் பழகும்.
ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக்கற்றுக்கொள்ளும்.
.
2 – 3 வயதில், அம்மா அப்பா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு, அதற்குப் பதில் சொல்லத் தொடங்கும்.
பெற்றோர் அதிகம் பேசுவதால் மட்டுமே, குழந்தை நல்ல பேச்சுத் திறனுடன் பிரகாசமாகஜொலிக்கும்.
இந்த வயதில் குழந்தையுடனான உரையாடல் இல்லாமல்போனால், குழந்தை பேசுவதும் தாமதமாகி விடும்.
குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், ‘ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோச னை பெறுவது அவசியம்.
.
குழந்தைகளிடம் பாதுகாப்புடன் பழகுங்கள்
கிடைப்பதை எல்லாம்வாயில் வைக்கும் பழக்கம், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான்.
ஒருவிதப் பயத்தினாலும் சில குழந்தைகள் விரலைச் சூப்பலாம். ஆனால், அதுவே தானாகச் சரியாகி விடும்.
‘விரல் சூப்பினா ல் வாய் பெரிதாகிவிடும் கண்ணா.
கிருமிகள் வயித்துக்குள்ள போய் ஃபைட் பண்ணும்’ என்று மென்மை யாக ஒரு கதை போல் சொன்னால், நிச்சயம் குழந்தைகள் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.
.
குழந்தைகளுக்கான மென்மையான பிரஷினால் பல் தேய்த்து, வாய் கொப்பளித்த பின்னரே வயிற்றுக்கான ஆகாரத்தைத் தரப்பழக்குங் கள்.
பல் துலக்காமல் சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் போய் பல்வேறு பிரச்னை களை உண்டாக்கும்.
.
இரண்டு வயது குழந்தைகள் 10 மணி நேரம் நன்றாக உறங்குவார்கள். சில குழந் தைகள் அதிக நேரம் தூங்க மாட்டார்கள்.
அதற்கு வீட்டுச்சூழல், அறையின் உஷ்ண ம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாதது காரணம் இருக்கும்.
குழந்தை குறைவான நேரமே தூங்கினாலும், சுறுசுறுப்பாக இருந்தால், அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை.
சில குழந்தைகள் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். சில நேரங்களில் பச்சை யாகவும் மலம் வெளியேறும்.
எப்போதாவது இப்படி நிகழ்ந்தால் ஆபத்து இல்லை.
ஆனால், தொடர்ச்சி யாகப் பச்சை நிறத்தில் இருந்தாலோ, வயிற்றை இளக்கிச்சென்றாலோ மருத்துவரிடம் காட்டுவதே நல்லது.
ஒரு வயதான பிறகு சிறு நீர், மலம் கழிப்பது எப்படி என்பதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள் .
.
ஓடிப்பிடித்து விளையாடுவது, விளை யாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் ஓவியம், பெயிண்டிங் கற்றுத் தருவது, இசையைக் கேட்கச் செய்வது, களிமண் அல்லது சப்பாத்தி மாவைப் பிசைந்து பலவிதமான உரு வங்கள் செய்யச் சொல்வது, பேப்பர் களை மடக்கி விமானம், கப்பல், பூக் கள் செய்யக் கற்றுக்கொடுப்பது எனக் குழந்தைகளுக் கான உற்சாக வழிகளைத் திறந்து விடுங்கள்.
குழந்தைகளுக்குப் பயனாக இருக்கும் பட்சத்தில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார வையுங்கள்.
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
.
சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இனிப்பு, உவர் ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைக்கு பேச்சில் பிரச்னை இருக்காது.
ஏதாவது ஒரு சுவை மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைக்குப் பேச்சு தெளிவாக இருக்காது.
கோர்வையாக வார்த்தைகளைப் பேசத்தாமதம் ஆகலாம். ஆகவே, அனைத்து சுவைகளையும் சுவைக்கப் பழக்குங்கள்.
.
குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ… அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள்.
சாப்பிட்டு முடித்த உடன், ‘வெரிகுட்’ சொல்லுங்கள். ‘சமத்து’ எனக்கொஞ்சுங்கள்.
குழந்தைத் தானாக முன் வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ, திட்டாதீர்கள்.
சிந்தாமல் சிதறாமல் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள். துவைத்த துணிகளை மடித்து, குழந்தைகளை பீரோவில் அடுக்கச் சொல்லுங்கள்.
சுவாரஸ்ய அனுபவமாக நினைத்து குழந்தைகள் அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்கள்.
வேலை, விளையாட்டு, உணவு என அனைத்தின் வழியாகவும் பழக்கங்களை உருவாக்கலாம்.
.
சமைக்கும்போது, ‘இதுதக்காளி, இது வெண்டைக்காய்… இதை நான் நறுக்கப்போறேன்’ என்று காய்கறிகளைக் காட்டி, வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
குழந்தை சுயமாகச் சிந்திக்கவும், அனைத்து செயல்களைத் திறமையாகச் செய்யவும் இது வாய்ப்பாக அமையும்.
‘செய்யாதே’ எனத் தடுப்பதற்கு முன் எதைச் செய்யலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
ஒரு பாராட்டும் முத்தமும் குழந்தையின் பிரகாசமான வாழ்க்கை க்கு வழிவகுக்கும்.
.
குழந்தைகளின் உணவும் ஊட்ட‍மும்
.
குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்குக் கட்டாய உணவு தாய்ப்பால் மட்டுமே.
முதல் 6 மாதங்கள் தாயிடம் இருந்து பால் கடிப்ப தால், வைட்டமின் சி கிடைத்துவிடும்.
அதன் பிறகு தாய்ப்பாலுடன், காய்கறிகள், பழங்கள், சீரான திட உணவைக் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.
.
கஞ்சிகளைக் கொடுக்கலாம். தானியங்களை நன்றாக அரைத்து, சலித்து, அந்த மாவில் கஞ்சியாக நீர்க்கக் காய்ச்சிக் கொடுக்க வேண்டும்.
.
வாழைப்பழம், சப்போட்டா இவற்றை நன்றாக மசித்துத்தரலாம். நன்றாக வேகவைக்கப்பட்ட முட் டையின் மஞ்சள்கருவை மசித்துத்தரலாம்.
.
குழைய வடித்த சாதத்தில் பருப்பை மசித்து, நெய்சேர்த்துத் தரலாம்.
இதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பச்சைக்காய் கறிகளையும் லேசாக வேகவைத்து மசித்துச் சேர்க்கலாம்.
.
இரண்டு ஸ்பூன் கேழ்வரகை முந்தைய நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துக்கொள்ளுங்கள்.
சிறிது தண்ணீரை அடுப்பில் வைத்து, அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடி கட்டி, அந்தப் பாலை விட்டுக் கைவிடா மல் 2 நிமிடம் கிளற வும்.
இதில் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.
.
வளரும் குழந்தைக்குப் பால் போஷாக்கான உணவு. ஆனால், பாலை நன்றாகக் காய்ச்சித்தான் தரவேண்டும்.
அதேபோல் முட்டையை வேகவைத்து அதைக் குளிர வைத்துத்தர வேண்டும்.
.
தண்ணீரையும் நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
.
குழந்தைக்கு 7 முதல் 8 மாதங் கள் நிறைவடைந்ததும், தயிர் சாதம் கொடுக்கலாம். சிலர் சளி பிடிக்கும் என்று தவிர்த்து விடுவார்கள்.
தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் புண் வராமல்தடுக்கும். அதிக அளவு பழச்சாறுகள், காய்கறிகளில் சூப் செய்து தரலாம்.
அந்த சீசனி ல் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் குழந்தைக்கு ஏற்றபடி செய்து தரலாம்.
.
9 முதல் 10-வது மாதத்தில் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா போன்ற வெரைட்டியான பழங்கள், வைட்டமின் சி அடங்கிய நெல்லிக் காய் மசித்துக் கொடுக்கலாம். பழச்சாறாகவும் கொடுக்கலாம்.
.
எந்தப் பழத்தில் சாறு தயாரித்துக் கொடுத்தாலும், அதை வடிகட்டிய பிறகே தரவேண்டும்.
கொட்டை கள் சரியாக அரைபடாமல் இருந்தால், குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கும் அபாயம் இருக்கிறது.
பழங்களைத் தரும்போது அதை நன்றாகக் கழுவி மசித்த பிறகே தரவேண்டும்.
இட்லி, உப்புமா, சப்பாத்தி, தயிர், வேகவைத்த முட்டை, முள் நீக்கப்பட்ட மீன்தரலாம்.
.
குழந்தைகளின் வளர்ச்சிக்கான காலகட் டம் 7 மாதம் முதல் ஒன்றரை வயது வரை. இதில் புரதசத்து மிகவும் அத்தியாவசியம்.
வைட்ட மின் சி, பி காம்ப்ளெக்ஸ், கொழுப்பு என நிறைய சத்துக்கள் தேவைப்படும்.
6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு மற்ற உணவுகள் தேவைப்பட்டாலும், சத்து , புரதம் மற்றும் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து போன்றவைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்த மூலப்பொருள்.
குழந்தை தாய்ப் பால் குடிக்கும் வரை நோய்களில் இருந்து தாய்ப்பால் பாதுகாப்பு அளிக்கிறது.
6 மாதத்தில் இருந்து ஒரு வயது வரை மற்ற உணவுகளுக்கு முன்பாக தாய்ப்பால் தரவேண்டும்.
குழந்தையின் உணவில், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கிடைக்க, தோல் நீக்கி, வேக வைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள், எண்ணெய், மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும்.
இரண்டாவது வயதில், தாய்ப்பாலை உணவுக்குப் பிறகும் மற்ற நேரங்களிலும் தரவேண்டும்.
.
1 வயது முதல் மூன்று வயது வரை
.
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக்கூடாது. ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம்.
நாம் சாப் பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது.
ஒரே மாதிரியாகச் செய்யாமல், வித விதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது.
கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
.
எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ் சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்த வுடன் திணிக்கக் கூடாது.
.
இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம்.
குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப்பழங்களைக் கொடுக்கலாம்.
.
கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற் றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சி க்கு நல்லது.
காலையில் ஒன்றே கால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்பு மா, சேமியாவும் தரலாம்.
இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால்கப் பழச்சாறு மற்றும் கால்கப் பழக்கலவை தரலாம்.
மதிய உணவில் ஒரு முட்டை /மீன்/ மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும்.
வெண் ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ள லாம்.
.
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும்.
அதே நேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம்.
அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக் கும்.
.
குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற் றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை விட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத் த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத் திருக்கும்.
.
ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடை களில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்க ளைக் கொடுக்கவே கூடாது.
.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முரு ங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டி விடலாம்.
.
சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
.
குழந்தைகளுக்கான கை வைத்தியம்
அம்மைத் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் புண் ஆகாமல் இருக்க, வேப் பிலையுடன், பசு மஞ்சளை சேர்த்து அரை த்துத் தடவினால், விரைவில் தழும்பு ஆறி விடும்.
.
சுக்கு, சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றைப் பாலில் போட்டு வேகவிட்டு, நிழலில் உலர்த்தவும்.
பச்சிளம் குழந்தைக்குத் தலைக் குளிப்பாட்டும் போது பாலில் வேக வைத்த சாமான்கள், கட்டிப் பெருங்காயம், இவற்றை சந்தனக் கல்லில் ஒருமுறை இழைத்து தாய்ப்பால் சேர்த்துப் புகட்டலாம்.
சுக்கு, பெருங்காயம் வாயுவைக் கலைக்கும். சித்தரத்தை சளி வராமல் தடுக்கும். ஜாதிக்காய் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
மாசிக் காய் வயிறு பிரச்னை இல்லாமல் செய்யும்.
.
சளி
.
குழந்தை பிறந்து ஐந்தாவது நாள் வெற்றிலைச் சாறு, தாய்ப்பால், ஒரு கடுகு அளவு கோரோஜின் கலந்து புகட்டினால், சளி வெளியேறி விடும்.
.
கற்பூர வல்லி இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், சளிகரையும்.
.
ஆறுமாதம் முடிந்த குழந்தைகளுக்கு நொச்சி இலை, நுணா இலை, ஆடா தோடா இலை இந்த மூன்றை யும் தண் ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுத் தால், சளி கரை யும்.
.
கண்டங்கத்திரி இலையை நீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடி கட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.
தூதுவளை இலையை நீர் விட்டுக் கொதிக்கவைத்து, தேன் கலந்து வடிகட்டிக் கொடுத்தால், சளி கரையும்.
.
வயிறு
.
பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கு, ஒரு சொட்டு விளக்கெண்ணெயில் சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்றாகக் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுங் கள்.
குழந்தையின் வயிற்றில் தங்கியிருக்கும் கறுப்பு மலம் வெளி யேறிவிடும்.
.
ஏழாம் நாள் தாய்ப்பாலுடன் ஒரு சொட்டு துளசிச்சாறு கலந்து புகட்டனால், சளிகரையும்.
.
கொய்யா இலையுடன் தண்ணீ ர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால், பேதி நின்று விடும்.
.
வயிற்றுவலியால் அழும் குழந்தைக்கு நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் தடவலாம்.
.
வசம்பை உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் ஏற்றிய விளக்கில் சுட்டு வைத்துக்கொள்ளவும்.
குழந்தை வயிற்று வலியால் அழும் போது, சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்துத் தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை புகட்டலாம்.
சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் சிறிது தேன் கலந்து, குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.
.
குழந்தைக்கு வயிறு மந்தமாக இருந்தால், வெற்றிலை, ஓமம், பூண்டு, உப்புக்கல் சேர்த்து அரைத்து வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர் த்துப் புகட்டினால் வயிறு மந்தம் சரியாகி விடும்.
.
வயிற்றில் பூச்சி இருந்து குழந்தை அழு தால், வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து சுடுநீர் விட்டு அரைத்து, வடிகட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி இருக்காது.
செல்லக்குழந்தையிடம் நீங்கள் காட்டும் அக்கறையான கவனிப்பே. .. ஆரோக்கியம் காத்திடும். வாழ்த்துகள்!
.
நன்றி : ரேவதி, உமாஷக்தி

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 15, 2013 2:49 pm

குழந்தையை பெற்ற அனைத்து தாய்மார்களும் பின்பற்ற வேண்டிய அவசியமான குறிப்புகள்...
பகிர்வுக்கு நன்றிகள் பல... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 15, 2013 4:15 pm

அன்பு மலர் மிக மிகப் பயனுள்ள தகவல்களைப் பகிர்தமைக்கு மிக்க நன்றி..
சூப்பருங்க



சதாசிவம்
குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 4:08 pm

மிகவும் உபயோகமான பதிவு குணா அண்ணா

பகிர்ந்ததற்கு மிக்க நன்றி




குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Mகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Uகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Tகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Hகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Uகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Mகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Oகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Hகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Aகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Mகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) Eகுழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக