ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

Top posting users this month
ayyasamy ram
வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_m10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10 
T.N.Balasubramanian
வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_m10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10 
mohamed nizamudeen
வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_m10வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி

2 posters

Go down

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Empty வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி

Post by DERAR BABU Sat Nov 24, 2012 4:46 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து நிலவேம்பு கஷாயத்துக்கு மக்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் மட்டும் தினமும் சுமார் 1500 பேர் நிலவேம்பு கஷாயத்தை வாங்கி அருந்துகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வடகிழக்குப் பருவமழை நேரத்தில் கடுமையான பனி காணப்படுவதால் வைரஸ் காய்ச்சல் இம் மாவட்டத்தில் பரவி வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக வழக்கமான எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமான மழைக்கால நோய்களான மலேரியா, டெங்கு, டைபாய்டு காய்ச்சலுடன் வைரஸ் காய்ச்சலும் அதிகளவில் காணப்படுகிறது.
மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் அமர்வதற்குகூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, இருமல், மூட்டுவலியாலும் சிரமப்படுகின்றனர்.
வழக்கமாக வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் 3 நாள்களில் குணமாகிவிடும். ஆனால், தற்போது வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் 5 நாள்கள் வரை நீடிக்கிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளை வைரஸ் காய்ச்சல் பாடாய்ப்படுத்தி வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டால் வழக்கமாக அளிக்கப்படும் பாரசிட்டமால் போன்ற அலோபதி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தற்போது காய்ச்சல் வைரஸ்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், பாதிக்கப்படுவோரை இந்தக் காய்ச்சல் அதிக நாள்கள் முடக்கிப் போட்டுவிடுகிறது.
நிலவேம்பு கஷாயம்: இதன் காரணமாக மக்கள் தற்போது சித்த மருத்துவத்தை நாடத் தொடங்கியுள்ளனர். காய்ச்சல் நோய்க்கு அருமருந்தாக நிலவேம்பு கஷாயம் திகழ்கிறது.
நிலவேம்பு கஷாயத்துக்கு மக்கள் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தினமும் சராசரியாக 1500 பேர் நிலவேம்பு கஷாயம் வாங்கி அருந்துகின்றனர்.
வழக்கமாக இந்த மருத்துவமனையில் தினமும் 100 முதல் 200 பேருக்கு மட்டுமே நிலவேம்பு கஷாயம் வழங்கப்படும். ஆனால், தற்போது தினமும் சராசரியாக 1500 பேர் நிலவேம்பு கஷாயத்தை வாங்கி அருந்துகின்றனர். தினமும் 30 முதல் 40 லிட்டர் வரை நிலவேம்பு கஷாயம் மக்களுக்காக முற்றிலும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது என்றார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலர் எஸ். சுரேஷ்குமார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வல்லமை நிலவேம்பு கஷாயத்துக்கு உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தற்போது நிலவேம்பு கஷாயம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நிலவேம்பு கஷாயம் குடித்தால் காய்ச்சல் உடனடியாகக் குறைகிறது. மூட்டுவலி, உடல்வலி, இருமல் போன்றவை குணமாகிறது.
அரசு சித்த மருத்துவக் கல்லூரி வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம். இதற்காக தினமும் 25 கிலோ மூலிகைகள் தமிழ்நாடு மூலிகைப் பண்ணையில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.
மக்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டுள்ளபோதிலும் மூலிகைத் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை. மூலிகைப் பொடியை இங்கேயே காய்ச்சி வடிகட்டி தயார் செய்து நோயாளிகளுக்கு கொடுக்கிறோம்.
அரசு சித்த மருத்துவமனை மட்டுமன்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் நிலவேம்பு பொடியைக் கொடுத்துள்ளோம். அங்கேயே காய்ச்சி நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைந்து இலவச முகாம்களையும் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக அளித்து வருகிறோம். பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை, சந்திப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை நான்கு முகாம்களை நடத்தியுள்ளோம் என்றார் அவர்.
9 வகை மூலிகை
நிலவேம்பு கஷாயம் என்பது 9 வகை மூலிகைகள் அடங்கிய மருந்தாகும். நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து, அரைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தப் பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து காய்ச்சி வடிகட்டி கஷாயமாக குடிக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை மற்றும் மாலையில் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு கொடுத்தால் போதும். எத்தகைய காய்ச்சலும் முற்றிலும் குணமாகிவிடும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி அனைவரும் நிலவேம்பு கஷாயத்தை தினமும் குடிக்கலாம். அதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளரும் என்றார் மருத்துவர் சுரேஷ்குமார். தினமணி .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்:  நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி Empty Re: வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்: நிலவேம்பு கஷாயத்துக்கு கடும் கிராக்கி

Post by றினா Sat Nov 24, 2012 8:34 pm

இதற்கு "திருநெல்வேலிக் காய்ச்சல்"னு பேரு வச்சுக்கலாமா...?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum