புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
23 Posts - 68%
heezulia
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
60 Posts - 63%
heezulia
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_m10 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Oct 2012 - 17:39

இந்த நவராத்திரி கொலுவில் வைக்க பொம்மைகள் செய்யலாம். ஆஹா, பார்த்தீங்களா, பொம்மைன்னு சொன்னதுமே நிமிர்ந்து உட்கார்ந்துட்டீங்க! இதற்கு நமக்கு வேண்டிய முக்கிய ஐயிட்டம். கலர் கலரான களிமண் (க்ளே) ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும். சீக்கிரமாக விரிசல் விழாது, வேண்டிய கலரில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உருட்டிப் போட்டுவிட்டு அமோகமாக பெயின்ட் செய்துவிடலாம், பிட்டுப்பிட்டு விழுந்தாலும் ஒட்டுப் போட்டு ஒப்பேற்றலாம்!

* சரி, முதலில் பிள்ளையார் சுழிப் போடலாமா? மஞ்சள் நிற க்ளேயைப் பிடித்து வைத்தால், மஞ்சள் பிள்ளையார் ரெடி!

இப்ப, முழு உருவ பிள்ளையார். பெரிய உருண்டைத் தொப்பை, அதில் பாதி சைஸ் மார்புப் பகுதி. அதற்கு மேல் தலை, கூம்பு போல் க்ரீடம், முறம் போல இரண்டு காதுகள், ஒரு நீண்ட தும்பிக்கை, உருட்டலும், பிரட்டலுமாக இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று க்ளேவைக் கொண்டு ஜோராக பிள்ளையாரை ரெடி செய்துவிடலாம். புருவங்கள், நெற்றிப் பொட்டு, கண்கள், கழுத்து அணிகலன்கள், பூணூல், இடுப்புப் பட்டை, கைகளில் வளையல்கள், கொழுக்கட்டை, மாம்பழம் இதற்கெல்லாம் கூட க்ளே போதும் இல்லையா... பூணூலுக்கு நூல், கண்களுக்கு குந்துமணி, அணிகலன்களுக்கு சம்கி என்றும் அலங்கரிக்கலாம். பிள்ளையார் ஜொலிப்பார்!

பிள்ளையாரோட தொப்பை கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கணும். “இதென்ன, இப்படி க்ளேவைச் சாப்பிடறாரே’ன்னு நினைக்காதீங்க. குட்டியும் பெரிசுமாக சில ப்ளாஸ்டிக் பந்துகளை வாங்கி, பந்து மேல நல்லா அழுத்தி க்ளேவை பரப்பி உருட்டிட்டா, தொப்பை சூப்பராக அமைந்துவிடும். இதேபோல உருண்டையான எல்லா பொருளுக்கும் பந்து பயன்படும்.

* பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தை பிடித்துவைத்து, குட்டி வேஷ்டியைச் சுற்றிவிட்டு, மாலைகளை போட்டுவிட்டால் அசத்தலாக இபுருக்கும். பல்வேறு சைஸ் சிவலிங்கங்களைச் செய்து “நவ லிங்க தரிசனம்’ வைக்கலாம்.

* மண் பானைகளைச் செய்யலாம். அவற்றை வரிசையாக வைத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் அடியில் இரண்டு மூன்று குச்சிகளை உழைத்து விட்டால் அடுப்பு போல இருக்கும். பானைகள் வரிசைக்குப் பின்னால், பெண்கள் பொம்மைகளை நிற்கவைத்துவிட்டால், பொங்கலோ கூழோ செய்வாங்களே?

* க்ளேயில் சீதாப்பழம், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை என்று ஏகப்பட்டதாக உருட்டிப் போடலாம். ஒரிஜினல் டச் அப்புக்கு, பெயின்டை வைத்து பழங்களுக்கு வர்ணம் தீட்டுங்கள்.

* உங்களுக்கு கை முறுக்கு சுற்றத் தெரியுமா? பிறகென்ன, ஜமாய்த்துவிடலாம்! முழுக்கு ஏழு சுற்று, ஒன்பது சுற்று என்று கூட பண்ணலாம்.

பிரவுன் கலர் க்ளேயில் சிவப்பு க்ளேயைக் கலந்து தட்டினால் அதிரசம்தான்.

பாதுஷா செய்ய வெள்ளைக் களி மண்ணில் கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் களிமண்ணைக் கலந்து, சற்றுத் தடிமனாகத் தட்டிப்போட வேண்டும். ஒவ்வொன்றின் மேலும் “க்ளே ஜெம்ஸ்’ பதித்துவிட்டால் “பட்டர் பாதுஷா’ ரெடி!

மஞ்சள் நிற க்ளேயை டிரேயில் பரப்பி, ஸ்லைஸ் போடுங்க. மைசூர் பாகு ரெடி!

மஞ்சள் க்ளேயை முத்துக்களாக உருட்டிப் போட்டுக்குங்க. ஒரு பந்துமேல், இரண்டை இடுக்கு விடாமல் முத்து முத்தான பூந்திகளைப் பதித்து விடுங்கள். ஹை! குஞ்சாலாடு சூப்பரோ சூப்பர்!

அதுசரி, இத்தனைப் பட்சணங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாண செட்டுக்குத் தட்டுத் தட்டாக சீர் பட்சணம் வைக்கலாம். நீங்க கோயில் சீன் அமைப்பதாக இருந்தால், ஒரு ஓரத்துல ஸ்டால் போட்டு, “ப்ரஸாத கவுண்டர்’ திறக்கலாம்.

* பிரவுன் க்ளேயில் அச்சு அசலாகப் பாம்புப் புற்று அமைக்கலாம். பாம்பு செய்வது ரொம்பவே சுலபம். ஒரு பாம்பை உருட்டி, புற்று ஓட்டைக்குள் அதன் வாலை புகுத்தி, அதன் தலையை வெளியே விரித்து விடுங்கள். மறக்காமல் புற்றின்மேல் ஆங்காங்கு மஞ்சள் குங்குமம் தூவி விடுங்கள்.

* விதவிதமாக ஐசிங் செய்த கேக்குள் வேண்டுமா? ஏதேனும் டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். வட்டம், சதுரம் எதுவானாலும் பரவாயில்லை. அதை கவிழ்த்து வைத்து, அதன் மேல் ஒரே சீராக க்ளேவைப் பரப்பி விட்டால் கேக் ரெடி! அடுத்து கேக்கின் மேல், சாக்லெட் ஐசிங், பட்டர் ஐசிங், பூ, இலை, ரிப்பன் என்று இஷ்டத்துக்கு “க்ளே ஐசிங்’ செய்யலாம்.

ஒரு டேபிளை போட்டு, அதன்மேல் ஒரு பெரிய கேக்கை வைத்து, சுற்றிலும் பொம்மைகளை வைத்துவிட்டால் பர்த்டே பார்ட்டி களை கட்டும்.

* க்ளே இல்லாமல் வேறு டைப்பில் சிவலிங்கம் செய்யணுமா? இதற்குத் தேவை ஒரு சின்ன மூடி (மருந்து பாட்டில், பவுடர் டப்பா இத்யாதி மூடி), முடியை விட பெரிதாக இரண்டு அகல்கள், கொஞ்சம் பட்டர் பேப்பர், வெள்ளை அல்லது பச்சை நிற மெழுகுவத்திகள்.

முதலில் மூடிக்குள்ளும், அகல்களுக்குள்ளும் எண்ணெய்ப் பூசிவிட்டு, அளவாக பட்டர் பேப்பரைக் கத்திரித்து, சுருக்கமில்லாமல், மூன்றினுள்ளும் அழுத்தி விடுங்கள். அதனுள் மேலும் கொஞ்சம் எண்ணெய் தடவ வேண்டும். மெழுகை உருக்கி அவற்றினுள் உள்ளே ஊற்றி, கெட்டியானதும் எடுத்து விடுங்கள். (பேப்பரையும்). இப்போது ஒரு அகலைக் குப்புற வைத்து, இன்னொரு மெழுது அகலின் அடிப்பாகத்தை இலேசாக சூடுபடுத்தி கவிழ்த்து வைத்துள்ள அகலின்மேல் பொருத்திவிடுங்கள். அதன்மேல் மெழுகு மூடியையும் சூடு படுத்தி ஒட்டிவிட்டால் பளிங்கு அல்லது மரகத லிங்கம் ரெடி!

* கோயில் கட்ட ஸ்தல விருட்சத்துக்கு ஒரு மரம் வேணுமா? ஊதுபத்தி தகரக் குழாயை “இப்படி - அப்படி’ நசுக்கி வளைய வைக்கவேண்டும். அதில் “இங்க - அங்க’ ஓட்டைகளைப் போட்டு, ஒரிஜினல் மரக்குச்சிகளை கிளைகளாக நுழைத்து விடுங்கள். பஞ்சை பிய்த்து, பச்சை பெயிண்டை, அவற்றின் மேல் ஸ்ப்ரே பெயின்ட் செய்து காயவிட்டு, மரத்தின் மேல் ஒட்டிவிட்டால் போதும். ஆலமரம் வேண்டுமானால், பிரவுன் க்ளையை விழுதுகள் ஆக்கலாம். அல்லது பிரவுன் கலர் நூலை கடித்து தடிமனாக திரித்துத் தொங்க விடலாம்!

மங்கையர் மலர்



 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 11 Oct 2012 - 11:05

எங்கள் தங்கை எனும் மங்கை விரைவில் வரப் போவதால்
மங்கையர் மலரும் படிக்க ஆரம்பிச்சாச்சா?

செம ஐடியா தான் உங்களுக்கு.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 11 Oct 2012 - 12:45

யினியவன் wrote:எங்கள் தங்கை எனும் மங்கை விரைவில் வரப் போவதால்
மங்கையர் மலரும் படிக்க ஆரம்பிச்சாச்சா?

செம ஐடியா தான் உங்களுக்கு.

அதேதான் தல!



 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 11 Oct 2012 - 13:10

எங்க வீட்ல நவராத்திரி பொம்மையா என்னையே வைக்கப் போராங்களாம். அதனலா நான் பூச்சோங் குக்கு ஓடப் போரேன். அங்க தான் மாமா அங்கள் இருக்காரு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 11 Oct 2012 - 13:24

அடாடா இவ்வளவு சூப்பராக சொல்லி இருக்கீங்க சிவாபுன்னகை இங்கு கடைகளில் கலர் கலரான களிமண் (க்ளே) க்கு டிமான்ட் வரப்போகுது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 11 Oct 2012 - 13:27

களிமண்ணா அக்கா. என் தலையில ரொம்ப இருக்குன்னு எல்லாம் பேசிக்கிறாங்க.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 11 Oct 2012 - 14:31

நல்லா இருக்கு




 நவராத்திரிக்கு நவ ஐடியாக்கள்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக