புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
50 Posts - 42%
prajai
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
Jenila
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
M. Priya
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
kargan86
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
jairam
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
8 Posts - 5%
prajai
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
6 Posts - 3%
Jenila
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
kargan86
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_m10தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:47 am

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு DSC_1075-200x300

முன்னுரை:

14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.

இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர் 1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன. இதனைத் தொடாந்து தஞ்சை, செஞ்சி, ஆகிய நாயக்க அரசுகள் தோன்றின.

ஜமீன்தாரி முறை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 1801ல் கர்நாடக ஒப்பந்தத்தின் படி தென்தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கைவசம் ஆயிற்று. அதுவரை இருந்த பாளையஙகள் அனைத்தும் 1802 ல் ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது. அதன்படி தலைவன் கோட்டை ஜமீன் உருவானது. தலைவன் கோட்டை ஜமீன் திருநெல்வேலி பாளையங்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் வளர்ச்சி, நிர்வாக முறை மற்றும் சமயத் தொண்டுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வின் நோக்கம் :

19 ம் நூற்றாண்டில் ஸ்தல நிர்வாக முறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கியது ஜமீன்தாரி முறையாகும். தலைவன் கோட்டை ஜமீன் சங்கரன்கோவில் சங்கர நாராயணர்; கோவிலில் முதல் மரியாதை பெற்ற ஜமீன் ஆகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தலைவன்கோட்டை ஜமீன் வரலாறு இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்த குறையைப் போக்கும் வகையில் தலைவன் கோட்டை ஜமீன்களின் மரபு வழி வரலாறும், ஆட்சி நிர்வாகம் போன்ற பல்வேறு தகவல்களையும் தொகுத்துக் கூறுவதே இந்த ஆய்வின் நோக்கம்.

மேலும் நம்மைச் சுற்றியுள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் தெரிந்து கொள்வது மட்டுமின்றி இப்பகுதி மக்களும் தெரிந்து கொள்ள இவ்வாய்வு உதவும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:49 am

பாளையக்காரர்கள் முறை :

பாளையக்காரர்கள் எழுச்சி :

கி.பி. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்தில் தொடர்ந்து ஏற்பட்ட அன்னியப் படையெடுப்புகளும், புரட்சிகளும், பஞ்சங்களும் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தின.

இதனால் நாட்டை ஆண்ட அரசர்கள் செயலிழந்தனர். இச்சூழ்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் பலர் தோன்றி ஆங்காங்கே அமைதியை நிலைநாட்டினர். சிலர் பேரரசிற்குத் துணை நின்றனர்.

நாளடைவில் அரசு நலிவடையவே இவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சிறிய நிலப்பகுதிகளை ஆட்சி புரிந்து வந்த இவர்களைப் பாளையக்காரர்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.

இவர்கள் ஆட்சிபுரிந்து வந்த நிலப்பகுதி பாளையம் அல்லது ஜமீன்தார் எனப்பட்டது. தமிழகத்தில் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்ட பாளையக்காரர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

இவர்கள் நாயக்கர்களுக்கு உறுதுணையாய் இருந்தனர். விஜய நகரப் பேரரசின் தளபதியாகவும், ஆளுநராகவும் மதுரையில் செயல்பட்டு வந்த விஸ்வநாத நாயக்கர் முதல் முறையாக இப்பாளைய முறையை அங்கீகரித்தார்.

இவர் தனது ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டில் காணப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட எழுபத்திரண்டு பாளையங்களை அங்கீகரித்தார் என சான்றுகள் தெளிவுப்படுத்துகின்றன.

நாயக்கரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்ட இவர்கள் பாளையங்களை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர்.

பாளையங்களில் அமைதியை நிலைநாட்டுதல், வரி வசூல் செய்தல், போர் காலங்களில் நாயக்கர்களுக்குப்படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கிய பணியாகும்.

தமிழகத்தில் காணப்பட்ட பாளையங்கள் அளவில் ஒன்று போல் காணப்படவில்லை. சில பாளையங்கள் சிறியதாகவும், வேறுசில அளவில் பெரியதாகவும் காணப்பட்டன.

பொதுவாக பாளையக்காரர்கள் விவசாய வளர்ச்சிக்கு அதிக அக்கறை காட்டினர். இவர்கள் நிலங்களை பள்ளர்களின் துணை கொண்டு பயிரிட்டனர்.

ஒரு குறிப்பிட்ட அளவு அரிசி ஊதியமாக இவர்களுக்கு அளிக்கப்பட்டது. அக்காலத்து பாளையங்களின் பெரும்பான்மையும் மலைப்பகுதிகளில் காணப்பட்டன. இவைகள் காடுகளாலும் மலைகளாலும் சூழந்து காணப்பட்டன.

அதிக அதிகாரங்களைப் பெற்று திகழ்ந்த இவர்கள் சிற்றரசர்கள் போல் விளங்கினர். படை, போலீஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்த இவர்கள் பாளையங்களின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்குக் கப்பமாகச் செலுத்தப்பட்டு வந்தன. கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்காகவும் இவர்கள் பாடுபட்டனர்.

இக்காலத்தில் தமிழகத்தில் காணப்பட்ட பாளையக்காரர்கள் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் காணப்பட்ட நிலமானியப் பிரபுக்கள் போன்றும், இந்தியாவில் காணப்பட்ட ஜாகிர்தார் (Jagerders) ஜமீன்தார் (Zamindar) போன்றும் காணப்பட்டனர்.

தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் பெறுவது வரையிலும் பாளையக்காரர்கள் சிறப்புற்று விளங்கினர். ஆங்கிலேயர்களின் கொள்கைகள் பாளையக்கார்களின் நலன்களைப் பெருமளவில் பாதித்தன.

இதனால் ஆத்திரமடைந்த பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களின் அரசில் ஆதிக்கத்தை வன்மையாக எதிர்த்தனர்.

இதன் விளைவாக பல புரட்சிகளும், கலகங்களும் தமிழ் நாட்டில் தோன்றின. இப்புரட்சிகள் ஆங்கிலேயர்களால் வன்மையாக ஒடுக்கப்பட்டு அவர்கள் ஆட்சிபுரிந்து வந்த பகுதிகள் ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டன.

பாளையக்காரர்கள் தோற்றம்:

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 72 பாளையங்களில் பிரிக்கப்படாத நெல்லைச் சீமையில் 18 பாளையங்கள் இருந்தன. இந்த 18 பாளையங்கள் உருவாக்கப்பட்ட பாளைங்கள் என்றும், தானாக உருவான பாளையங்கள் என்றும் இருவகைப்படும்.

இதில் மேற்குப் பாளையங்கள் அனைத்தும் விசுவநாதநாயக்கரால் உருவாக்கப்பட்ட பாளையங்களாகவும் இருந்தன. இவை அனைத்தும் பாளையங்களாகும்.

மதுரையை ஆட்சி செய்து வந்த நாயக்கர் தானே உருவான பாளையங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார். அந்த வரிசையில் தலைவன் கோட்டை பாளையமும் ஒன்று.

பாளையக்காரர் முறையை புகுத்தியதற்கான காரணங்கள் :

பாண்டிய மண்டலம் விஜய நகரப் பேரரசினால் வெல்லப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டது. அதனை ஆட்சிபுரிய ‘நாயக்கர்’ என்ற படைத்தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆட்சி ஏற்படும் போது எதிர்ப்புகள் ஏற்பட்டன. எனவே குழப்பத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டும் பொறுப்பைத் தலைவரிகளிடையே ஒப்படைத்தால் நல்லதென்ற எண்ணம் ஏற்பட்டது.

நிர்வாக வசதிக்காக சில குறு நிலப்பகுதியாகப் பிரிக்கப்பட வேண்டும் அங்கு அமைதி நிலவுவதற்காக ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.

விஜய நகரப் பேரரசிலிருந்து தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு, கன்னட தலைவர்களை ஆட்சிப் பொறுப்பில் பதவில் அமர்த்தி சிறப்பிக்க வேண்டும் என்று நினைத்தன.

தனக்கு நன்றியுணர்ச்சியுடன் பணியாற்றுபவருக்கு, பதவி பரிசளித்து சிறப்பிக்க வேண்டிய கட்டாயம் விசுவநாதநாயக்கருக்கு இருந்தது. இறுதியாக விஜய நகரப் பேரரசானது, புதிதாக வெல்லப்பட்ட இடத்தில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட படையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியிருந்தது.

இத்தகைய பேரரசு நிர்வாக நலன்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே பாளையக்காரர் முறையாகும். ‘பாலாமு’ என்ற தெலுங்கு சொல்லிலிருந்து தான் பாளையம் என்ற சொல் உருவானது ‘பாலாமு’ என்றால் ‘ராணுவ முகாம்’ என்று பொருள்படும்.

பாளையக்காரர் முறை:

பரந்து விரிந்த நாயக்கர் ஆட்சிப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது அரசின் முக்கியப் பணியாக இருந்தது. வரிவசூல் செய்வது அதனை அரசு கருவ10லத்திற்கு அனுப்புவதற்கு முதலான பணிகளுக்கு அதிகார வலிமை பெற்றவர்கள் தேவைப்பட்டனர். உள்@ர் நிர்வாகத்தைக் கவனிக்க ஓர் உள்ளாட்சி முறையும் தேவைப்பட்டது. இராணுவப் பளுவைப் பரவலாக்கவும் ஓர் அமைப்பு தேவைப்பட்டது. இத்தகைய அரசியல் நிர்வாக, இராணுவ நோக்கங்களை நிறைவேற்ற உருவாக்கப்பட்டதே பாளையக்காரர் முறை விசுவநாதநாயக்கர் காலத்தில் தளவாய் அரியநாத முதலியார் தமிழ்நாட்டில் 72 பாளைப்பட்டுக்களை உருவாக்கினார்.

இது தமிழகத்தில் புதிதாக இருந்தாலும் ஏற்கனவே விஜய நகரப் பேரரசில் இது போன்ற அமர நாயக்க முறை அமலுக்கு வந்தது. (காகத்திய மன்னன் இரண்டாம் பிரதாபருத்திரன் (1296-1322) நிர்வாக வசதிக்காக நாட்டை 77 பாளையங்களாளப் பிரித்தார் எனத் தெரிகிறது. அரியநாதர் அந்த ஒரு முறையையும் இணைத்து, தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:49 am

பாளையக்காரர் வரலாறு:

தமிழகத்தில் உள்ள பாளையங்கள் :

1 அம்மைய நாயக்கனூர்

2 அக்கிப்பட்டி

3 அழகாபுரி

4 ஆய்க்குடி

5 ஆத்தங்கரை

6 இளசை

7 இரசக்கயனூர்

8 இலக்கயனூர்

9 இடையக் கோட்டை

10 இராமகரி

11 உதயப்பனூர்

12 ஊற்றுமலை

13 ஊர்க்காடு

14 எட்டையாபுரம்

15 ஏழுமலை

16 ஏழாயிரம் பண்ணை

17 கடலூர்

18 கல் போது

19 கன்னி வாடி

20 கம்பம்

21 கண்டமநாயக்கனூர்

22 சொக்கம்பட்டி

23 தலைவன்கோட்டை

24 தேவாரம்

25 தொட்டப்பநாயக்கனூர்

26 தோகை மலை

27 கும்பிச்சி நாயக்கனூர்

28 படமாத்தூர்

29 பாஞ்சாலங்குறிச்சி

30 பாவாலி

31 பெரியகுளம்

32 போடி நாயக்கனூர்

33 ரோசல் பட்டி

34 வடகரை

35 வாராப்பூர்

36 விருப்பாட்சி

37 கவுண்டன் பட்டி

38 கடம்பூர்

39 காம நாயக்கனூர்

40 காடல் குடி

41 காசையுர்

42 குமார வாடி

43 குளத்தூர்

44 குருவிகுளம்

45 கூடலூர்

46 கொல்லப்பட்டி

47 கொல்லங்கொண்டம்

48 கோலார் பட்டி

49 கோட்டையுர்

50 கோம்பை

51 சந்தையுர்

52 சக்கந்தி

52 சக்கந்தி

53 சமுத்தூர்

54 சேத்தூர்

55 சிவகிரி

56 சிங்கம்பட்டி

57 சுரண்டை

58 வெள்ளிக்குன்றம்

59 விரமலை

60 நத்தம்

61 நடுவக்குறிச்சி

62 நாகலாபுரம்

63 நிலக்கோட்டை

64 நெற்கட்டும் செவல்

65 மணியாச்சி

66 மருங்காபுரி

67 மன்னார் கோட்டை

68 மலைப்பட்டி

69 மருதவானையுர்

70 முதுவார் பட்டி

71 முல்லையுர்

72 மேல் மாந்தை

மேலே அடிக்குறிப்பிட்ட 18 பாளையங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் தலைவன்கோட்டை ஜமீன்.

பாளையக்காரர்கள் கோட்டைகள்

பாளையக்காரர்கள் தங்கள் கோட்டைகளை சமவெளிப்பகுதிகளிலும், குன்றுகளின் ஓரங்களிலும், அமைத்தனர். ஏனெனில் போர் முறைகளை எளிதில் கையாளுவதற்காவே தனது கோட்டைகளை எளிதில் நெருங்க முடியாத படி சுற்றிலும் வேலிகளையும், காடுகளையும் அமைத்தனர். இக்கோட்டைகள் பீரங்கிக் குண்டுகளைத் தாக்குப்பிடிக்கும் அளவிற்குக் கட்டப்பட்டது எவ்வாறு என்றால், களிமண், பனை ஓலை, வைக்கோல் ஆகியவற்றை நன்றாகக் குழைத்து, நல்ல அகலமாக சுமார் 4 அடி அகலத்தில் கட்டப்பட்டது. உள்கோட்டை கட்டும் போது இவற்றோடு பதனீர் விட்டு குழைத்து கட்டப்பட்டது. இதனால் பீரங்கிக் குண்டுகள் பாயும் போது, அதில் சிதறி வெளியேற முடியாதபடி குண்டுகள் அனைத்தும் சுவருக்குள்ளேயே இருந்து விடுகிறது. இதனால் எதிரிகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதிரியான கோட்டைகளைப் பாளைக்காரர்கள் அமைத்தனர்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:50 am

தலைவன் கோட்டை ஊரின் அமைப்பு :

தமிழ்நாட்டின் தென்கோடியில் திருநெல்வேலி மாவட்ட, சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் தலைவன் கோட்டை. இதன் பரப்பளவு 1.5 கி.மீ கொண்டது சங்கரன்கோவிலுக்கு வடமேற்கு 11 கி.மீ தூரத்திலும் புளியங்குடிக்கு வடகிழக்கே 6 கி.மீ தூரத்திலும் தலைவன் கோட்டை அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி 4098 பேர் வசிக்கின்றனர். இந்த ஊரில் பல இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இங்கு தேவர், ஆசாரி, பள்ளர், பறையர், அருந்ததீர், சக்கிலியார், வண்ணன், சக்கிலியர், ஈழுவை பிள்ளை, தச்சர், பொற்க்கொல்லர் ஆகிய இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மை மிக்கவர்கள் தேவர் ஆவர். மேலும் இங்கு இரு துவக்கப் பள்ளியும், ஒரு நடுநிலைப்பள்ளியும், ஒரு மேல்நிலைப்பள்ளியும், ஐந்து சத்துணவுக் கூடமும், தலைமை தபால் நிலையம் ஒன்று, கிராம தபால் நிலையம் ஒன்று, மின்சார அலுவலகம் ஒன்று, கூட்டுறவு வங்கி ஒன்று, இரு நியாய விலை கடை, கிராமபுற கால்நடை மருத்துவமனை, நூலகம் இரண்டு, மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடமும் உள்ளது. இதன் நேரடி கட்டுப்பாட்டில் முள்ளிக்குளம், நகரம், துரைச்சாமியாபுரம், மலையடிக்குறிச்சி, தாருகாபுரம், வெள்ளானைக் கோட்டை, பட்டக்குறிச்சி போன்ற முக்கிய கிராமங்களின் நலன் இந்த ஊரின் சுகாதார நிலையம் மூலம் பேணப்படுகிறது. இவ்வ10ர் ஜமீன் காலத்தில் 18 பட்டிக்குத் தலைநகராக விளங்கியது. தலைவன் கோட்டை

இன்று தனிப்பஞ்சாயத்தாக உள்ளது. இப்போது பஞ்சாயத்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கோ.ப10சைப்பாண்டியன் என்பவர் உள்ளார்.

மறவர் – பெயர்க் காரணம் :

மறவர் என்பவர் திராவிட இனத்தில் முதல் இனமாக இருக்கலாம் என்றும், இவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ராமன் ராவணனுக்கு எதிராக நடந்த போரில் ராமனுக்கு உதவி செய்ததால் இராமபிரான் இவர்களுடைய சேவையைப் பாராட்டி உங்களை மறவேன் என்று சொன்னதால் இவர்கள் ‘மறவன்’ என்று அழைக்கப்பட்டனர். மற்றும் மறவன் என்ற இப்பெயர் வீரம், கொடூரம் கொலை செய்தல், கொள்ளை அடித்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். முன்காலத்தில் இந்த இனம் படைக்கலன்களில் அதிகப் பங்கு எடுத்ததால் இப்பெயர் வந்திருக்காலம் என்று எட்கர் தார்ஸ்டன் கூறுகிறார்.

குகன் வழித்தோற்றம் :

இவர்கள் குகன் வம்சாவழியினர் என்தற்கு, இராமாயணத்தில் இராமன் இலங்கைக்கு செல்வதற்கு குகன் உதவி செய்ததாகவும், அப்போது இராமன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வந்து, உன்னைச

சந்திப்பேன் என்று சொன்னான். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வராததைக் கண்ட குகன் தீ மூட்டி தற்கொலை செய்ய இருந்த காலத்தில் அனுமன் அதைக் தடுத்து நிறுத்தினார். பின்னால் இச்செய்தியை இராமனுக்குச் சொன்னார்கள். இதைக் கேட்ட இராமன் குகனின் வீரத்தைக் குறிக்கும் விதமாக ‘மறவன்’ என்று அழைத்தார். இவர் வழி வந்தவர்கள் தான் மறவர்கள்.

இவ்வாறு இவ்வினத்தின் பெயர் வரலாற்று ஆசிரியர்களின் பல்வேறு கருத்துக்களையும், கர்ணபரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளது.

முக்குலத்தோர் பிரிவு :

இவ்வினத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர், அகமுடையார். இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய10ர் சென்றுவிட்டார். அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி வந்தபோது ஒரு குழந்தை கதவுக்கு பின்னால் கள்ளத்தனமாக ஒளிந்து இருந்ததால் கள்ளன் என்றும் மற்றொருவன் மரக்கிளையின் மீது அமர்ந்து இருந்ததால் மறவன் என்றும், மற்றொருவன் தைரியமாக வீட்டின் முன்புறம் நின்று கொண்டு இருந்ததால் அகமுடையான் (அகந்தை) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு எட்கர் தார்ஸ்டன் செவிவழிச் செய்தியைக் கேட்டு தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருந்தாலும் வரலாற்று நோக்குடன் பார்க்கும் பொழுது இக்கொள்கை ஏற்புடையது அல்ல. திரு.வேங்கடசாமி நாட்டார் தன்னுடைய கள்ளர் சரித்திரத்தில் சோழ மன்னர்கள், கள்ளர் வகுப்பை சார்ந்தவர் என்றும் மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மறவர் வகுப்பைச் சார்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனிவாச அய்யங்கார் அவர்களும் இதே கருத்தை தன் படைப்பு “செந்தமிழ்” என்ற நூலில் தொகுதி ஐஐ பக்கம் 175 ல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே “களவர்” என்பவர் “உள்ளம் கவர் கள்வர்” அதாவது தன்னுடைய நற்செயல்கள் மூலம் அதாவது நிர்வாகம் ஒற்றரிதல், நீதி நேர்மை ஆகியவற்றில் எல்லோர் இதயத்திலும் குடியிருப்பவர் என்ற உயரிய பொருளிலேயே இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான் என்ற வார்த்தையில் மரம் என்ற சொல்லில் ரகரம் இடையினம். ஆனால் மறவன் என்ற சொல்லில் உள்ள எழுத்து வல்லின றகரமாக இருப்பதால் இவ்வொப்புமை ஏற்புடையதல்ல. மரம் என்பதன் பொருள் மறம் என்பதோடு எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது. ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது திண்ணம்.

மேலும் மறவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த முதல் குடிமக்கள் என்று எட்கர் தார்ஸ்டன் கூறியுள்ளார். ஆனால் இந்திரன், அகலிகை ஆகிய ஆரியர் இருவர் சேர்க்கையால் தோன்றிய இனம் மறவர் என்று சொல்வது இவர்களை இழிவுபடுத்துவதற்காகவே சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:52 am

ஜமீன்-தோற்றம் :

ஜமீன் தோன்றுவதற்கு முன் வாழ்ந்தவர்கள்

தலைவன் கோட்டையின் வரலாறு ஜமீன் தோன்றிய பிறகே வந்தது. ஆனால் அவர்களின் தோற்றத்திற்கு முன்பு இங்கு பலர் வாழ்ந்திருக்கின்றனர். அதாவது கீழவை நாட்டில் இருந்து வருவதற்கு முன்பு இங்கு சித்தர்களும் சமணர்களும் வாழ்ந்து இருக்கின்றனர். இவர்கள் தலைவன் கோட்டை அருகில் உள்ள தாருகாபுரம் மலையில் உள்ள குகைகளில் வாழ்ந்திருக்கின்றனர். அங்கு முதுமக்கள் தாழிகள் இருந்தாகக் கூறப்படுகிறது. இவர்கள் பயன்படுத்திய சில பொருள்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது அப்பொருட்கள் சென்னை அகழ்வாரய்ச்சி மையத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் கோட்டை பெயர் வரக்காரணம் :

இராம நாட்டில் உள்ள ஆப்ப நாடு, கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இங்கு பிழைப்பிற்காக வந்தவர்கள். தாருகாபுரம் அருகில் வந்து தங்கினர். உடனே தமக்கென்று ஊர்ப்பெயர் வேண்டுமென்று நினைத்த அவர்கள் வம்சத்தை வைத்து ஊர்பெயரும் வைத்தனர். அதாவது தலைவனார் என்ற பெயரால் தலைவன் கோட்டை என்று பெயர் வைத்தனர். பின்பு இதுவே பதினெட்டு பட்டிக்குத் தலைநகராக விளங்கியது இவ்வாறு தலைவன் கோட்டை பெயர் உருவானது.

ஜமீன் குடும்பத்தார் வருகை
“பதினெட்டு நற்பதியைப் கொண்ட
பலவளம் நிறைந்த நாட்டை
அதிபதியாய் ஆளப் பெற்றார்
ஆப்ப நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்”

ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். பாண்டிய நாட்டின் பகுதிகளில் ஒன்று தலைவன் கோட்டை இதன் அருகாமையில் உள்ளது. தாருகாபுரம் இவ்வூரில் குடியேறி வாழ்ந்தார் அவர்களில் ஒருவர் இந்திரராமசாமி

பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது. இவர்கள் மறவர் இனத்தில் தலைவனார் என்ற வம்சத்தைச் சார்ந்தவர்கள்.

ஜமீன் தோற்றம் :

தலைவன் கோட்டை ஜமீன் 13 ம் நூற்றாண்டில் 1127 ல் கொல்லம் ஆண்டு 382 ல் ஜமீன் தோன்றியது.

தலைவன் கோட்டை உருவாகக் காரணம் என்னவென்றால் தாருகாபுரத்தில் உள்ள கருப்புடையான் கோவிலுக்கு வடபுறம் முட்டுப்பாறைக்காடு என்னும் இடத்தில் ஒரு சிறிய குகை இருந்தது. அதில் வெள்ளைக் கொம்பன் என்ற பன்றி வாழ்ந்தது. அது அப்பகுதியில் பயிர் பச்சைகளை அழித்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்தப் பன்றியை அடக்க முடியாமல் மக்கள் அல்லல் பட்டார்கள். பாரதத்தின் வடக்கேயுள்ள காசி வடகாசி, தென்பகுதியில் உள்ள காசி தென்காசி, இந்த தென்காசியை மையமாக (தலைநகராக) வைத்து ஆட்சி செய்து வந்தவர் சீவல பாண்டிய மன்னர். இவரும் அப்பன்றியின் செயலை அறிந்திருந்தார். அவ்வேளையில் (சமயத்தில்) தலைவன் கோட்டை பகுதியில் வாழ்ந்த இந்திர ராமசாமி பாண்டியார் என்பவர் விவேகத்தோடு, தனது வீரத்தைப் பயன்படுத்தி பன்றியை தனது வேலால் குத்திக் கொன்றார். இதனால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள் அப்பகுதி மக்கள். இச்செய்தி காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. அப்போது தலைவன் கோட்டை உட்பட தென்காசியைத் தலைநகராக வைத்து ஆட்சி செய்து வந்த சீவலபாண்டிய மன்னர் இந்திரராம சாமி பாண்டியனின் வீரத்தை அறிந்து, சந்திரன் என்ற இந்திர ராமசாமிபாண்டியன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி 18 ஊர்களுக்கு ‘திசை காவலாக’ நியமித்து, செப்புப் பட்டயம் வழங்கினார். இதன் தலைநகராக தலைவன் கோட்டை இருந்தது. இவ்வாறு தலைவன் கோட்டை ஜமீன் உருவானது.

பட்டம் சூட்டும் முறை :

தலைவன் கோட்டை ஜமீனில் ஜமீன் இருக்கும் காலத்தில் தனது ஆட்சி முடிந்தவுடன் யார் மன்னராக வர வேண்டும் என்று மன்னர் யாரை கூறுகின்றாரோ அவரே மன்னராக பொறுப்பேற்க முடியும். மன்னர் யாரை வாரிசாக நியமிக்கின்றாரோ, அவர்தான் மன்னராக வரமுடியும். மன்னராகத் தேர்ந்தெடுக்க்பட்டவருக்கு ஒரு பிராமணர்தான் முடிசூட்டுவார். மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் சில கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதாவது இறந்த உடலை பார்க்க கூடாதென்றும், கண் தெரியாதவர்களைப் பார்க்கக் கூடாது என்றும் இருந்தது. மேலும் மன்னருக்கு உரியதான தண்டிகை, மேளா, பல்லக்கு இதை மன்னர் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்றவர் எவரும் பயன்படுத்தக்கூடாதென்றும் நடைமுறை இருந்தது.

முதல் மரியாதை :

தலைவன் கோட்டையை ஆட்சி செய்து வந்த ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும் முதல்மரியாதை கொடுக்கப்பட்டது. அதாவது ஆண்டுதோறும் சங்கரன்கோவிலில் ஆடிமாதம் தேர்திருவிழா நடைபெறும் அதில் தலைவன் கோட்டை மன்னர் வடம் பிடித்துக் கொடுத்தவுடன் தான் தேர் ஓடும் அவ்வாறு முதல்மரியாதை கொடுக்கப்பட்டது. இது 1910 வரை நடைமுறையில் இருந்தது. தலைவன் கோட்டையைச் சுற்றியுள்ள கோயில்களில் அனைத்திலும் மன்னருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. இப்போது அந்த முறை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் கோட்டை ஜமீன் எல்லைகள் :

தலைவன் கோட்டையைச் சுற்றி பரந்து விரிந்த செல்வச் செழிப்பு மிக்க பகுதியாக இருந்தது. இந்தப் பகுதிகளில் தான் ஜமீனின் எல்லைகளும் அமைந்திருந்தது. ஜமீனுக்கு சொந்தமாக 18 பட்டிகள் இருந்தது. இதன் எல்லைகளாக கீழ் எல்லையாக சங்கரன்கோவில் மேல கோபுரமும், மேற்கு எல்லையாகக் கருமலையும் (மேற்கு தொடர்ச்சி மலையும்) தெற்கு எல்லையாக பாம்புக் கோவிலும், ஆண்டார்குளமும் வடக்கு எல்லையாகக் கூனியாறும் அமைந்திருந்தன.
18 பட்டிகள் கீழ்வருமாறு

ஜமீனின் 18 பட்டிகள் :

தலைவன் கோட்டை ஜமீனுக்கு உட்பட்ட பகுதிகளாக 18 பட்டிகளை ஆள இந்திர ராமசாமிப்பாண்டியருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த 18 பட்டிகள்.
1. தலைவன் கோட்டை
2. முள்ளிக்குளம்
3. ராமசாமியாபுரம்
4. வடமலாபுரம்
5. துரைச்சாமியாபுரம்
6. ஆண்டார் குளம்
7. ரெட்டியபட்டி
8. அய்யாபுரம்
9. வெள்ளக்கவுண்டன்பட்டி
10. முத்துச்சாமியாபுரம்
11. மருதநாச்சியார் புரம்
12. தாருகாபுரம்
13. வெள்ளாணைக்கோட்டை
14. அரிய10ர்
15. பட்டக்குறிச்சி
16. மலையடிக்குறிச்சி
17. இந்திரபுரம்
18. நாதபுரம்

இவ்வாறு 18 பட்டிகளை தலைவன் கோட்டை தலைமையிடமாக வைத்து ஜமீன்தார் ஆட்சி செய்து வந்தார். இதில் இந்திரபுரம், நாதபுரம் ஆகிய இரண்டு ஊர்களும் இன்று அழிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:54 am

இயல் – 2
அரசியல் ஆட்சிமுறை:

தலைவன் கோட்டையை ஆட்சி செய்து வந்த ஜமீன்கள் ஒரு சிறப்பான ஆட்சியைச் செய்து வந்தனர்.

பொருளாதார முறை:

தலைவன்கோட்டையை ஆட்சி செய்த இந்திர ராமசாமிபாண்டிய மன்னர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் சிறந்த முறையைக் கையாண்டுள்ளனர். அதாவது ஜமீனுக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்கு விட்டு அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து, தனது ஆட்சியை நடத்தியுள்ளனர். அவர்கள் மக்களை எவ்விதத்திலும் துன்புறுத்தவில்லை. மற்றும் நிலவரி வசூலிப்பதற்கு வசதியாக நிலம் அதன் தன்மையைப் பொறுத்து நன்செய் எனவும், புன்செய் எனவும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதன் தன்மையைப் பொறுத்து வரிகள் விதிக்கப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு ஜமீன்தாரின் சொந்த செலவிற்கெனவும் ஓதுக்கப்பட்டன ஜமீன்தார் தங்களது வருவாயில் ஒரு பகுதியை நாட்டின் நலனுக்கென செலவு செய்தன. இதற்கு பொதுச் செலவு என்று பெயர். மேலும் தலைவன் கோட்டைக்குட்பட்ட கோவில்களின் நிர்வாகத்தை ஜமீன்தார்களே வைத்திருந்தனர். கோவில்களில் உள்ள செலவுகளை ஜமீன்தாரே பொறுப்பேற்று நடத்தியுள்ளார்கள்.

கப்பம் கட்டுதல்:

ஜமீனின் நிர்வாகம் அனைத்தையும் ஜமீன்தார்களே வைத்திருந்ததால் ஆங்கிலேய அரசுக்குத் தவறாமல் கப்பம் கட்டி வந்தனர். இவர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட முதலில் மறுத்தனர். ஆங்கிலேயர்களை மறைமுகமாகவும் எதிர்த்தனர். ஆனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஓரளவு கப்பம் கட்டினார்கள். எனவே கப்பம் கட்ட ஜமீன் தனது நிலவருவாயில் இருந்து கப்பம் கட்டியுள்ளார். அதற்காக நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, பொது மக்களிடமும் இருந்து, வரிவசூல் செய்யப்பட்டு கப்பம் கட்டினார்கள்.

ஜமீன் கால வரலாற்றின் பொற்காலம்:

தலைவன் கோட்டை ஜமீனை ஆட்சி செய்த அனைத்து ஜமீன்தார்களுக்கும் இந்திர ராமசாமிபாண்டியன் என்ற பெயர் தான் இருந்தது. இதனால் ஜமீன் தார்களை இப்பெயர்களினாலேயே மக்கள் அழைத்தனர். பேய்த்துரை (இந்திரராமசாமி பாண்டியன்) என்ற பட்டப் பெயரைக் கொண்ட இவருடைய காலத்தை மக்கள் பொற்காலம் என்று

வர்ணிக்கிறார்கள். ஏனெனில் இவருடைய ஆட்சி காலத்தில் ஜமீனுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் அமைதியாகவும், செழிப்பாகவும் இருந்தது. குறிப்பாகச் சொன்னால் ஜமீனுக்கு உட்பட்ட பகுதியில் எந்த ஒரு குழந்தையும் அழுகுரல் கேட்டாலோ அந்த குழந்தையின் தாய்க்குப் பிரம்படி கொடுக்கப்பட்டது. ஏனென்றால் குழந்தைகள் கடவுளுக்கு சமம் என்றும், கடவுளை அழவைக்கக் கூடாதென்றும் சொன்னார். இவ்வாறு தனது ஆட்சிக் காலத்தைச் சிறப்பாகச் செய்ததன் காரணமாக இவரது காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. மேலும் இவர்தான் இன்று தாருகாபுரத்தில் உள்ள ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்நாதர்’ கோவிலைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமுறை:

நீதிமுறை சாதாரணமாகவே இருந்துள்ளது. எந்தவொரு கடுமையான தண்டனையும் கொடுக்கப்படவில்லை. மேலும் மக்கள் ஏதும் தவறு செய்யவில்லை. அப்படியே யாரவது மற்றவர் பொருளை களவு செய்தாலோ அல்லது மற்றவரை ஏமாற்றினாலோ அவர்களுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. அபதாரமும் விதிக்கப்பட்டது. மக்கள் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆகவே நீதிமுறையில் சில மாற்றங்களும் ஏற்பட்டன.

தலைவன் கோட்டை ஜமீனுக்கும் மற்ற ஜமீனுக்கும் உள்ள தொடர்பு

தமிழகத்தின் தென்பகுதி தேவர் பாளையம் என்றும், நாயக்கர் பாளையம் என்றும் இருந்தது. இவ்வாறு இருந்த போதும் தலைவன் கோட்டை ஜமீனுக்கு மற்ற ஜமீனான சொக்கம்பட்டி, நெல்கட்டும் செவல், சேத்தூர், சிவகிரி, ஊத்துமலை, கடம்ப10ர், மணியாச்சி, சிங்கம்பட்டி போன்ற ஜமீன்களுக்கு நெருங்கிய உறவு இருந்தன. மேலும் அவர்கள் உறவு மேலோங்கவும் ஒரு ஜமீன் மற்ற ஜமீனின் திருவிழாக்களைக் காண

வேண்டுமென்று திருவிழாக்களை மாற்றி அமைத்தனர். குறிப்பாக வைகாசி விசாகம் முதல் நாள் தலைவன் கோட்டை ஜமீனால் கொண்டாடப்படும், இரண்டாவது தான் சேத்தூர் ஜமீனால் கொண்டாடப்படும். இதனால் இரண்டு மன்னர்களும் கலந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு மற்ற ஜமீனோடு சுமூகமான உறவு வைத்திருந்தது தலைவன் கோட்டை ஜமீன்.

பூலித்தேவனுக்கு உதவி:

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் விடுதலை முழக்கமிட்டவர் மாவீரன் பூலித்தேவன். இவருக்குத் தலைவன் கோட்டை ஜமீன்தார் நேரடியாக சில உதவிகளை செய்தார். ஒரு சில நேரத்தில் மறைமுகமாகவும் உதவினார்கள். ஏனெனில் ஆங்கிலேயர்கள் தனது பகுதிகளுக்கும், மக்களுக்கும் நெருக்கடி தருவார்கள் என்று மறைமுகமாக பல உதவிகளைச் செய்தார். ஆனால் ப10லித்தேவர்க்கு தலைவன் கோட்டை ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்க சில கருவிகளைக் கொடுத்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர்கள் ப10லித்தேவரைத் தேடி வரும் போது தலைவன் கோட்டை பகுதியில் உள்ள தாருகாபுரம் மலையிலிருந்து தீப ஒளி (தீப்பந்தம்) காட்டப்படும். அவ்வாறு காட்டும்போது பூலித்தேவா

அதை அறிந்து கொண்டு உடனே உஷாராகி கொள்வார். இவ்வாறு பூலித்தேவருக்கு மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்தன.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:56 am


இயல் – 3

சமயம்:

அன்றைய சமயத் தொண்டு:

தலைவன்கோட்டை ஜமீன்தார்கள் பலசமயத் தொண்டுகளைச் செய்துள்ளார். ஜமீன்தார்கள் தாருகாபுரத்தியில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்நாதர்’ திருக்கோவில் ஒன்றைக் காட்டியுள்ளனர். இது இன்று ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தலைவன் கோட்டையில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஜமீனின் சொந்த இடங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சங்கரன்கோவில் கோமதியம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் கட்டுவதற்குத் தலைவன்கோட்டை ஜமீன் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மன்னர் பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பல கிணறுகள் வெட்டப்பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. அது இன்றும் உள்ளது.

இன்றைய சமயம்:

தலைவன் கோட்டையில் இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் உள்ளன. 17 இந்துக் கோவிலும் 3 கிறிஸ்துவ ஆலயமும் உள்ளன.

இந்துக் கோவில்:


இங்கு பாரம்பரியாமான இந்துக்கள் வாழ்ந்து வந்ததால் இந்துக்கள் பெரும்பான்மை பெற்று உள்ளன. இந்து கோவில்கள் 17 கோவில்கள் உள்ளன. அவை பின் வருவன.

1. தலைவன் கோட்டைக்கு பாத்தியப்பட்ட தாருகாபுரத்திலுள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்நாதர் திருக்கோவில்
2. அருள்மிகு திருவாய் மொழி அம்மன் திருக்கோவில்
3. அழகு சுந்தரர் ஆனந்த விநாயகர் திருக்கோவில்
4. வெங்கடேஸ்வர பொருமாள் திருக்கோவில்
5. வெண்ணிமலை அய்யனார் திருக்கோவில்
6. ஓடையடிக் கருப்பசாமி திருக்கோவில்
7. ஸ்ரீ சக்கம்மாள் திருக்கோவில்
8. ஸ்ரீ பண்ணைக்கிணற்று அலங்காரி அம்மன் திருக்கோவில்
9. ஸ்ரீ அலங்காரி அம்மன் திருக்கோவில்
10. பாலூடையார் அய்யனார் திருக்கோவில்
11. பேச்சியம்மன் கோவில்
12. கடம்பூர் கருப்பசாமி திருக்கோவில்
13. புற்றுக்கோவில்
14. முனியசாமி கோவில்
15. அய்யனார் கோவில்
16. ஆண்ட்ராஜா திருக்கோவில்
17. முருகன் திருக்கோவில்
இவைகள் அனைத்தும் இந்துக் கோவில்கள் எனப்படும்.

கிறிஸ்துவ ஆலயம்:

1. R.C சர்ச்சு
2. C.S.I சர்ச்சு
3. A.C சர்ச்சு

திருவிழாக்கள்:

இவ்வ10ரில் மிகச் சிறப்பு அம்சங்கள் ஒன்றாக இவ்வ10ர் கோவில் திருவிழா ஆகும் தலைவன் கோட்டைக்கு பாத்தியப்பட்ட தாருகாபுரத்திலுள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்நாதர் திருக்கோவில் பஞ்ச சீலக் கோவில்களில் ஒன்றாகும் இக்கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் அன்று 10 நாள் திருவிழாவாக நடைப்பெறும். விசாகத்தன்று தேரின் வலம் பிடித்து இழுக்கும் போது தேரின் இருபுறமும் உள்ள வலத்தை தலைவன் கோட்டை மக்களும், நடுப்பகுதியில் அமைந்துள்ள வலத்தை (வலம் என்றால் தேரில் கட்டப்பட்டிருக்கும் கயிறு) 17 பட்டி கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இழுப்பார்கள்.

அடுத்தப்படியாக இவ்வ10ரில் அமைந்துள்ள அருள்மிகு திருவாய் மொழி அம்மன் திருக்கோவில் சிறப்பு பெற்றது. இக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 2 ம் செவ்வாய்க்கு காப்பு கட்டி 3 ம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும். இக்கோவில் ஒரு வார (7 நாட்கள்) விழாவாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் 2 நாள்களுக்கு முன் வீர

விளையாட்டுகள், கபடி – கபடி,கண்ணைக் கட்டி பானையை உடைத்தல், ஓட்டப் போட்டி, இசை நற்காலி போட்டி, மிதி வண்டி போட்டி ஆகியவை நடைப்பெறும். 5 ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இக்கோவில் திருவிழாவின் போது வெளிநாடுகளில் வேலை செய்யும் இவ்வ10ர் ஆண்கள் பாட்டுக் கச்சேரி, ஆடல்பாடல், பட்டிமன்றம் ஆகிய கச்சேரிகளை நடத்துகின்றனர்.

திருவிழாவின் முதல் நாள் அன்று (திங்கள் கிழமை) மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு ப10ஜை நடைப் பெறம். இரவு 9 மணிக்கு ஆடல், பாடல் கச்சேரி நடைப்பெறும். 3ம் செவ்வாய் அன்று மாலை 5 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் இரவு 7 மணி அளவில் கோவிலில் மாவிளக்கு எடுத்தல் இரவு 2 மணி அளவில் சப்பரம் ஊர்க்குள் உளவுதல் மறுநாள் புதன் கிழமை அன்று காலை 9 மணிக்கு பொங்கல் விடுதல் மதியம் 12 மணிக்கு கிடா வெட்டுதல் மற்றும் குருப10ஜை மதியம் 4 மணிக்கு மஞ்சள் விரட்டு நடைப்பெறும் இவ்வாறு இக்கோவில் ஒவ்வொரு வருடமும் பொது மக்களிடம் (தேவர் இன மக்களிடம்) வரி வசூலித்;துக் கொண்டாடப்படும்.

ஆவணி மாதம் அழகு சுந்தர ஆனந்த விநாயகர் கோவிலும், புரட்டாசி 3ம் சனிக்கிழமை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலும் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம், மாசி மாதம் மகா சிவராத்திரியும், பங்குனி மாதம் பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் திருவிழாக்கள் 3 நாள் நடைப்பெறும்.

கிறிஸ்துவ ஆலயம்:

கிறிஸ்துவ மத மக்கள் இவ்வ10ரில் குறைந்த அளவு வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 ல் கிறிஸ்துமஸ், ஏப்ரல் மாதம் புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.

குகைக்கோவில்:

முற்காலப் பாண்டியர் காலத்தில் கோவில் கலைசிறப்புற்று விளங்கியது. குகைக்கோவில் ஒற்றைக் கல் கோவில் கட்டுமான கோவில் போன்ற மூன்று வகையான கோவில்கள் காணப்பட்டன.

குகைக்கோவில்கள் சாளுக்கியர்கள் மற்றும் இராஷ்டிரக் கூடர்களின் கலையைப் பிரதிபலிக்கின்றன. இந்த குகைக் கோவில்கள் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆகியவற்றை கொண்டுள்ளன. இவை ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளன. அவை சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள மலையடிக்குறிச்சியில் ஒரு குகைக்கோவில் உள்ளது. இங்குள்ள கருவறையின் லிங்கம் உள்ளது. தூண்களில் மிக அழகான தாமரை இதழ்கள் வெட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர்களின் முக்கியக்கட்டுமானக் கோவில்களாகும்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:58 am


இயல்-4

சமுதாய நிலை:

தலைவன்கோட்டை பகுதியில் பழக்கங்கள்:

தலைவன் கோட்டை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மன்னனின் புகழ் பரவி இருந்தது. இதனால் தன் குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு மன்னர் பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது.

குறிப்பாகச் சொன்னால் முதல் குழந்தை ஆண் என்றால் ராமசாமி என்றும், பெண் என்றால் ராமாத்தாள் என்றும் பெயர் வைக்கப்படுகிறது. இவ்வாறு பெயர் வைக்கவில்லை என்றால் குழந்தை தாய்ப்பால் அருந்தாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இந்த பெயர் வைக்கும் முறை இன்றும் இந்த பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு:

தலைவன்கோட்டை மன்னர்கள் தனது பகுதிகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் ராம நாட்டில் பெண் எடுத்ததால் ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலம் இராம நாட்டு சேதுபதியால் திறக்கப்பட்டது. இதில் தலைவன் கோட்டை மன்னர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு தலைவன் மன்னர்கள் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து தலைவன் கோட்டை ஜமீனுக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கும் நல்லுறவு இருந்தது என்பது விளங்குகிறது. சிங்கம்பட்டி, சேத்தூர், கடம்ப10ர், கங்கைக் கொண்டான் ஆகிய ஜமீனின் இல்ல விழாக்கள், அந்த பகுதி திருவிழாக்களிலும் தலைவன் கோட்டை ஜமீன்தார் கலந்துக் கொண்டனர். சொக்கம் பட்டி ஜமீனுடன் நல்லுறவு வைத்திருந்தன.

மன்னரின் ஆயுட்காலம்:

தலைவன்கோட்டை ஜமீனை ஆட்சி செய்த மன்னரின் ஆயுட்காலம் ஒரு வியப்புக்குரியதாக உள்ளது. அதாவது ஒவ்வொரு மன்னரும் தனது 35 வயதிலேயே இறந்திருக்கிறார்கள் ஒரு சில வாரிசுகளைத் தவிர மற்ற மன்னர்கள் இளம் வயதில் மாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது வாரிசுகளான இப்போதுள்ள வாரிசு 93 வயதுடன் இருந்தார். அவர் 25.1.2010 அன்று காலமானார். அவர்தான் மன்னர்களிலேயே அதிக வயதுடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமீன்தார்களின் திருமண முறை:

தலைவன் கோட்டை ஜமீன்தார்களின் திருமண முறை தலைவன் கோட்டை ஜமீன் குடும்பத்திற்கும் இராமநாதபுரம் சேதுபதி ஜமீன் குடும்பத்திற்கும் அதிக திருமண முறை இருந்து வருகின்றது. மேலும் ஜமீன்தார் பலதார முறையைப் பின்பற்றினார். அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெண்ணை மணந்தார். ஏனெனில் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக அவ்வாற செய்தார் என்று இப்போதுள்ள ஜமீன்தார்

இந்திரராமசாமி பாண்டியன் மூலம் அறிந்து கொண்டோம். மேலும் நாயக்கருடனும் திருமணமுறை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் திருமணம் செய்தனர். ஜமீன்தார்களின் திருமண முறையில் சில வரைமுறைகளைப் பின்பற்றினார். அதாவது மண மகன் நல்ல மனதுடன் இருக்க வேண்டும் கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாதென்று இருந்தது.

கல்வி முறை:

தலைவன்கோட்டை ஜமீன்தார்கள் கல்வி கற்றவர்களாக திகழ்ந்தனர். தென்னிந்தியாவில் ஜமீன்களுக்கு என்று “நிய10ட்டன் கல்லூரி” ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது. அவை

1. ஜமீன்தார் கல்லூரி
2. லண்டன் கல்லூரி
3. பிரின்சல் கல்லூரி என்று பல விதமாக கூறுவார்கள்

இதன் முதல்வர் “மில்தன்” என்பவர் ஆவார். இவர் சிறந்த கல்வி கற்றவர். நற்பண்புகள் கொண்டவர் மாணவர்களிடம் நண்பன் போன்று நடந்துக் கொள்பவர். இந்தக் கல்லூரியில் ஜமீன் மாணவர்களுக்கு பல விதமான கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.

அவை:

1.ஆங்கில மொழி பயிற்சி
2.ஆங்கிலயர்க்கு எப்படி விசுவாசமாக இருப்பது என்றும், நல்ல குடிமகனாக இருப்பது என்றும், கற்றுக் கொடுக்கப்பட்டது.
3.துப்பாக்கி சூடும் பயிற்சி

ஆகியவை ஜமீன் மாணவர்களுக்கு கல்வி முறைக் கற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த நிய10ட்டன் கல்வி முறை சில ஆண்டுகளே செயல்பட்டன. ஏனென்றால் நிய10ட்டன் கல்லூரி முதலர் மில்தனின் மனைவி “திலேதா” என்பவரின் நடத்தை சரியில்லை. திலேதா என்பவர் சில ஜமீன் மாணவர்களிடம் பழகிக் கொண்டு மில்தனை பகைத்துக் கொண்டு வெறுப்புக் காட்டினார். குறிப்பாக கடம்ப10ர், சேத்தூர் ஜமீனுடன் திலேதா தொடர்புக் கொண்டிருந்தார். இதனை மில்தன் பலமுறை கண்டித்தார்.

எனவே இவரை கொலைச் செய்ய மில்தான் மனைவி திலேதா, மற்றும் கடம்ப10ர், சேத்தூர், சிங்கம்பட்டி அரசர்கள் ஆகியோர் சதிச்செய்தன. எனவே கோடைக்காலத்தில் நள்ளிரவில் மில்தன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கடம்ப10ர், சேத்தூர், சிங்கம்பட்டி அரசர்கள் அவர் வீட்டின் பின்புறமாக சன்னல் வழியாக வந்து நின்றனர். பின்பு மில்தன் மனைவி திலேதா என்பவர் சன்னல் கதவை திறந்து விட்டார்.

பின்பு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்;ந்து மில்தனை கை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். எனவே மில்தன் இறப்புக்குப் பின் நிய10ட்டன் கல்லூரி புகழ் மங்கி மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது.

எனவே ஜமீன் குடும்பத்தார் கல்வி கற்கும் கல்லூரி இல்லாமல் போனது. இதனால் தலைவன் கோட்டை ஜமீன்தார் கல்வி பாதியில் விட்டு தனது தேசம் திரும்பினார்கள்.

இன்றைய கல்வி நிலை:

தலைவன் கோட்டையில் இரு பள்ளிகள் உள்ளன. இவ்வ10ர்க்கு உட்பட்ட இரு பள்ளிகள் முள்ளிக்குளத்தில் அமைந்துள்ளன. அவை இரு துவக்கப் பள்ளியம், ஒரு நடுநிலைப்பள்ளியும், ஒரு உயர்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன.

இவ்வ10ரில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியான 1940 ல் முருகையாப்பாண்டியன், செல்லத்துரை என்பவரால் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்து பள்ளி என்று ஆரம்பித்தனர். பிறகு செல்லத்துரை என்பவர் முருகையா பாண்டியன் என்பவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு விலகி விட்டார். பிறகு அது ளு.ஆ.நடுநிலைப்பள்ளியாக பெயர் மாற்றப்பட்டது.

இப்பள்ளியில் 1 முதல் 5 வரை 2.10.1940 ல் அரசு அங்கீகாரம் பெற்றம். 6 முதல் 8 வரை 21.6.1988 ல் அரசு அங்கீகாரம் பெற்றது.

இன்று இப்பள்ளியில் 321 மாணவ, மாணவிகள் கல்வி பெறுகின்றனர். இப்பள்ளியின் பரப்பளவு 350 சதுரமீட்டர் ஆகும். இவற்றில் தோட்டப்பரப்பளவு 160 சதுர மீட்டர் 2 ஏக்கர் விளையாட்டு அரங்கமும் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 9 வகுப்பறைகள் உள்ளன. 209 மாணவ, மாணவிகள் சத்துணவு பெறுகின்றன. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக 4.1.2008 அன்று முதல் இன்று வரை சு.முருகலட்சுமி என்பவரர் பணியாற்றுகின்றார். இவ்வ10ர் பள்ளிகளிலும் இவ்வ10ர்க்கு உட்பட்ட நான்கு பள்ளிகளில் சேர்ந்து மாணவ மாணவர்களும், மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். ஆனால் அருகிலுள்ள பெரிய நகரமான சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிக்கும் சென்று பயிலும் மாணவ, மாணவியர் நூற்றுக்கு மேற்பட்டோர் இவ்வ10ரில் உண்டு.

மேலும் பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்திட மாணவர்களையும் பெற்றோரையம் ஈர்க்கக்கூடிய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக பாடத்திட்டம் சாராத பொது அறிவுக்கல்வி, இலக்கியக் கூட்டம் முதலிய கலைகளுக்கான அறிமுகக் கல்வி ஆகியவை உள்@ர்க் குழந்தைகள் வெளிய10ர் செல்வதை குறைக்க உதவும்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 4:59 am

இயல்-5

தலைவன்கோட்டை மக்களின் இன்றைய சமுதாய, பொருளாதார, சமய, பழக்க வழக்கங்கள்:

இன்றைய சமுதாய நிலை:

தலைவன்கோட்டையில் பல இனத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றன. அவர்களில் தேவர் (மறவர்), ஆசாரி, பள்ளர், பறையர், வன்னார், அருந்ததீர், குறவர், ஈழுவ பிள்ளை ஆகியோர் இங்கு வாழ்கின்றன. இவர்களில் பெரும்பான்மை சமுதாயத்தினர்கள் தேவர் ஆவர்.

மறவர்:

மறவர் முழுநேரபடை வீரர்களாக அமர்த்தப்பட்டிருந்தனர். நால்வகைப் படைகளிலும் பெருமக்களாக இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

செருக்களத்திற்கு சென்று போரிடும் தொழிலைத் தம் முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் மன்னரால் படையில் முறையாக அமர்த்தப்பட்ட வீரர்களாய் இருந்தனர்.

மறவர் குலம்:

மறவன்:

இடம் : பாண்டிய நாடு
தொழில் : போர்த்தொழில் இன்று – காவல், பயிர்த்தொழில், கல்வித்தொழில், டவர் லையன் தொழில்

38 பிரிவுகள்:

நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது, கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.

ஐந்து நாடுகள்:

செம்பி நாடு, அம்பநாடு, கிழுவை நாடு, ஆமை நாடு, அகப்பநாடு.

ஐந்து கோட்டைகள்:

செம்பி நாட்டுக்கோட்டை, கொண்டையன் கோட்டை கருத்தக்கோட்டை, செகக்கோட்டை, அணிநிலக்கோட்டை.

50 கிளைகள்:

செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், பறைகுளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

கொத்தும் கிளையும்:

1. மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை கற்பகக் கொத்து

2. வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை முந்திரியக் கொத்து

3. வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை கமுகங்கொத்து

4. சேதரு கிளை
வாள் வீமன் கிளை சீரகக் கொத்து

5. கொடையன் கிளை
அரசன் கிளை ஏலக்கொத்து

6. ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை தக்காளி கொத்து

7. சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை மிளகுக் கொத்து

8. ஒளவையார் கிளை
சாம்புவான் கிளை தென்னங்கொத்து

9. நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை மல்லிகை கொத்து
பட்டம் : தேவன், தலைவன், கரையாளன், சேர்வைக்காரன்

மறவரின் வீரம்:

அஞ்சத்தக்க கொடிய போர்க்களம் வேலோடு வேல் மோத நடந்த போரில் பலர் இறந்து விட்டனர். அப்படி வீழ்ந்து கிடக்கின்ற வீரர்கள் முகங்களின் திறந்த விழிகளில் புருவங்கள் வளைந்திருக்கின்றன. அப்படி வளைந்திருக்கின்ற புருவங்களைக் கண்டு, நரிகள் பயந்து நிற்கின்ற அழைக்கின்றனவாம். போரிட்டு மடிந்தாலும் வீரமறவர்கள் திறந்த

விழிமூடுவதில்லை. அது வீரத்திற்கு இழுக்கு என்பதால், எனவே அவர்கள் போரிடும் போது கோபத்தால் நெறிந்த புருவங்கள் அவர்கள் உயிர் போன பின்பும் வளைந்தவில் போல இருப்பதைக் கண்டு அவர்கள் உடலைத் தின்ன வந்த நரிகளும் பயந்தன என்பன மறவரின் வீரத்திற்கு விளக்கம்.
பாடலைப் பாருங்களேன்.

“வெகு வரு வெஞ்சமத்து
வேல் இலங்கவிழ்ந்தார்
புருவமுறிவு கண்டு
அஞ்சி – நரிவெரி இச்
கேட்கணித்தாய் நின்றழைக்கும்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்” – முத்தொள்ளாயிரம்

பள்ளர்:

தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மக்கள் ஊரில் 15 வீட்டு மேற்பட்டவர்கள் உள்ளன. இவர்கள் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளனர். இவர்கள் இந்து மதத்தில் உள்ளனர். ஊருக்கு மேற்குப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலையும், வடக்கு பகுதியிலுள்ள ஆண்டராஜா கோவிலின் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

பறையர்:

பறையர் சாதியை சார்ந்த மக்கள் 30 வீட்டுக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். இவர்கள் இந்து, கிறிஸ்துவம் போன்ற மதத்தில் உள்ளனர். இவர்கள் முருகன் மற்றும் அய்யனார் தெய்வத்தையும், ஏசுநாதரையும் வணங்குகின்றனர். இவர்கள் பள்ளர்கள் வாழ்கின்ற பகுதிக்கு கிழக்கில் வாழ்கின்றனர்.

கொல்லர்:

இவ்வ10ரில் பொற்கொல்லர், மரக்கொல்லர் (தச்சர்) ஆகியோர் வாழ்கின்றன. பொற்கொல்லர் 2 வீடும், மரக்கொல்லர் 20 வீடுகளுக்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்றன. இவர்கள் தலைவன் கோட்டைக்கு அருகில் உள்ள கிராம், முள்ளிக்குளத்திலுள்ள மாதா கோவிலை வணங்குகின்றனர்.

கிராம ஆட்சி வரலாறு:

கிராம ஆட்சி முறை இந்தியாவின் முதன் முறையாக மௌரியர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சோழர்காலத்தில் இது மிக சிறப்பாக செயல்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. சோழர்களின் ஆட்சி முறையில் நிர்வாகமே சிறந்த நிர்வாகமாக கருதப்பட்டன. இதற்குப்பின்னால் இசுலாமியர்களின் தாக்கத்தால் கிராம ஆட்சி முறை நலிவடைந்தது. அதன் பின் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராம ஆட்சி முறைக்கு சிறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின் 19 ம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் ஆங்கிலேயர் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக 1830 க்கு பின்னால் தொடர்ச்சியாக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் சுதந்திரத்திற்குப் பின்னால் காந்தியடிகள் கிராம ராஜ்ஜியத்தை ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த கனவு கண்டார். அவருடைய கனவை நனவாக்கும் முகமாக பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு திரு. பீ.வி நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கிராம ராஜியம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு தான் தலைவன் கோட்டையிலும் பஞ்சாயத்து முறை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுபிரிவாக உள்ளது. இப்போதைய பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திரு.கோ.ப10சைப் பாண்டியன் ஆவார்.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:01 am

ஊராட்சி நிர்வாகம்:

கிராம சபை:

இந்திய அரசியலமைப்பு 72 வது திருத்த சட்டத்தின் படி கிராம ஊராட்சிகளில் கிராம சபை அமைக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. 1994ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 3 ன் படி கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலிலுள்ள மொத்த வாக்களர்களையும் உள்ளடக்கிய அமைப்பு கிராம சபையாக செயல்படுகிறது.

சபையின் செயல்பாடு:

கிராம சபையினை ஊராட்சி மன்ற தலைவர் கூட்டி, தலைமையேற்று நடத்தி வருகிறார். ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாத சூழ்நிலையில் துணைத்தலைவரும், இவ்விருவரும் இல்லாத சூழ்நிலையில் மற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மூத்த உறுப்பினர் தலைமை ஏற்று கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது அரசு விதி.

கிராம சபை கூட்ட நாட்கள்:

அரசாணையின் படி கிராம சபை கூட்டம் ஓராண்டில் குறைந்த பட்சம் நான்கு முறை நடத்தப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க

மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், தேவர் ஜெயந்தி மற்றும் நமது தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் ஆகிய ஐந்து நாட்களில் தவறாத கிராம சபை கூட்டப்படுகிறது.

மேலும் இரு கிராம சபைக் கூட்டங்களுக்கிடையே ஆறு மாதத்திற்கு மேல் கால இடைவெளி கூடாது ஊராட்சி மன்றத்தலைவர் ஏதேனும் ஒரு காரணத்தால் கிராம சபையைக் கூட்ட தவறினால் ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் வேண்டும்.

முக்கியத்துவம்:

கிராம சபையானது கிராம மக்களின் முக்கிய கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கும் அரங்கமாக செயல்பட்டு வருகிறது. கிராம சபை மூலம் கிராம மக்கள் அனைவரும் நேரடியாக கிராம நிர்வாகத்தை நடத்த வாய்ப்பு உள்ளது. கிராம ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள், வரவு செலவுகள் மற்றம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலம் திட்டச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை விவாதித்து அக்குறைபாடுகளைக் களைந்து அத்திட்டத்தின் முழுப்பயனும் மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பணிகள்:

கிராம சபையின் கூட்டப்பொருள் ஊராட்சி மன்றக் குழுவின் ஓப்புதலோடு, ஊராட்சி மன்றத் தலைவரால் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராம நிர்வாகத்தை நடத்த வாய்ப்பு உள்ளது. கிராம ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள், வரவு செலவுகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலம் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை விவாதித்து அக்குறைபாடுகளைக் களைத்து அத்திட்டத்தின் முழுப்பயனும் மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள்

ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுச் சொத்துக்கள்

1.ஊராட்சி மன்ற அலுவலகம்

1990 அன்று இரண்டு அறைகளுடன் மின் வசதியுடன் இக்கட்டிடம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது.

2.தொலைக்காட்சி அறை

1992 ம் ஆண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தோடு தொலைக்காட்சி அறை கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

3.சிறிய தண்ணீர் தொட்டி

இக்கிராமத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு குதிரை சக்தி திறன் உள்ள மோட்டார் பொறுத்தப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

4.பொது விநியோகக் கடை

1999-2000 ஆண்டில் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் தலைவன் கோட்டைக் கிராமத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடம் நன்கு செயல்பட்டு வருகிறது.

வானொலி அறை

தலைவன் கோட்டையில் உள்ள வானொலி அறை தற்போது தொலைக்காட்சி அறையாக செயல்பட்டு வருவதோடு அறை நல்ல நிலையில் உள்ளது.

பயணியர் நிழற்குடை

தலைவன் கோட்டையின் மெயின் ரோட்டில் தென்புறம் அமைந்துள்ள இக்கட்டிடம் 1985-1986 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு நல்ல முறையில் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சுய உதவிக்குழு கட்டிடம்

சம்பூரண கிராமின் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் 2002-03 ம் ஆண்டில் ரூ.1,00,000 மதிப்பீட்டில் தலைவன் கோட்டை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் மேற்கண்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தும் எவ்வித ஆக்கிரமிப்பும் இன்றி அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.



தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக