புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
34 Posts - 52%
heezulia
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
17 Posts - 2%
prajai
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 11:51 am

* திருப்பூர் கார்மெண்ட்ஸ் நகரம் என்று புகழ்பெற்றது. துபாய், யு.கே., யு.எஸ்., போன்ற நாடுகளில் விற்பனையாகும் உள்ளாடைகள், குழந்தைகளின் ஆயத்த ஆடைகள் பெரும்பாலும் திருப்பூர் தயாரிப்புகளேயாகும்.

* சிறிய ஊர். எனவே ஒருபுறம் சாலை போடும்போதே மறுபுறம் குண்டும் குழியுமாகி விடும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஊர். அதனால் காற்றில் மாசு மிகுந்திருக்கும்.

* வெளிநாட்டுக்குத் தயாராகும் ஆடைகளை உள்ளூரில் விற்பனை இல்லை. ஆர்டர் கேன்சலானால் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துவிடும்.

* தொழில் நகரம் என்பதால் மக்கள் யாரையும் எளிதில் பகைத்துக் கொள்வதில்லை. என் நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் என்ற கொள்கை இங்கு கடைபிடிக்கப்படுகிறது.

* மக்கள் வலியவந்து உதவுவார்கள். அவர்களுக்கு ஏதும் தேவையெனில் தாங்களாகவே வந்து கேட்டும் பெற்றுக் கொள்வார்கள்.

* குழந்தைகளை அடிப்பதில்லை; என் கண்ணு, என் சாமி, அம்மணி என்றுதான் கொஞ்சுவார்கள்.

*பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பண்டிகைக் காலங்களில் மட்டுமே டிபன் என்று இருந்தவர்கள் இப்போது ஹோட்டல், பஃபே என்று கலக்குகிறார்கள்.

* மதிய உணவில் கொள்ளு ரசம், கொள்ளுத் துவையல், கட்டித் தயிர் உண்டு. கம்பு சாதமும், அரிசியும், பருப்பும், சுவைமிகுந்த உணவு வகைகளாகும். நொறுக்குத் தீனிகள் பெரும்பாலும் வீடுகளில் செய்வது இல்லை.

* தேனீ போல் சுறுசுறுப்பாக உழைக்கும் மக்கள், ஆர்டர் குறையும் காலங்களில் திருப்பதி, குற்றாலம், கோவா என்று கூட்டம் கூட்டமாக டூர் கிளம்பி ஜாலியாகக் கழிப்பார்கள்.

* நாள் கிழமைகளில் மஞ்சள் நிற சாணிப் பவுடர் கரைந்து வாசல் மெழுகி சுண்ணாம்பில் கரை கோடு இழுப்பர். இதனை வீடு பூசி வழிப்பது என்பர்.

* பெண்கள் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொடுக்க விரும்புவர். திருமணத்தில் மணமகள் அலங்காரத்திற்குக் குறைந்தது 5000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை செலவிடுகின்றனர். கவுண்டர் இன மக்கள் நூறு பவுன், ஒரு கார், மணப்பெண்ணுக்கு சீதனமாகத் தருகின்றனர்.

* திருமணம் இருவீட்டார் செலவு. ஜவுளி எடுக்கப் போவதே ஒரு திருவிழா போலத்தான். குறைந்தது ஆயிரம் பத்திரிகைகள் அடிப்பது வழக்கம். பத்திரிகை வைத்தால் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். திருமண வீடுகளில் சடங்கு வீடுகளில் முடிதிருத்துபவருக்கு முன்னுரிமை அதிகம்.

* வாழ்க வளமுடன், வாழும் கலை, ஈஷா யோகா, இராமகிருஷ்ணா மிஷின், பிரம்மகுமாரிகள், பதஞ்சலி யோகா எனப் பல்வேறு அமைப்புக்கள் இச்சிற்றூரில் உண்டு.

* வடக்கு ரோட்டரி, தெற்கு ரோட்டரி, மெட்டல் டவுன் ரோட்டரி, திருப்பூர் குமரன் ரோட்டரி எனப் பல சமூக சேவை சங்கங்கள் உண்டு. மக்கள் எதிலாவது ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

* திருப்பூர்காரர்கள் பக்திமான்கள். சடையப்பன் கோயிலில் சிறகடித்து (மந்திரித்து) கயிறு கட்டிக் கொள்வது எல்லோரும் விரும்புவதாகும்.

* நொய்யல் ஆற்றின் கரையோரம் கொண்டாடப்படும் பூப்பறிக்கும் நோம்பி, நிலாச் சோறு, மங்கலிய நோம்பி, கடாவெட்டு, கொண்டத்துக் காளியம்மன் தீமிதி திருவிழா போன்றவை இங்கு பிரபலமான விழாக்களாகும்.

* பள்ளிக் குழந்தைகளை பெங்களூர், மைசூர் என டூர் அனுப்பி விட்டு தங்கள் காரில் பின்தொடர்ந்து வரும் பெற்றோரும் உண்டு.

* ஓர் இடத்திற்கு வழி கேட்டால் திசையாலே வழி சொல்லுவர் (மேக்கால போயிதெக்கால திரும்பு)

* வெளியூரில் இருந்து வருபவர்கள் குறைப்பட்டுக் கொள்ளும் விஷயம் டவுன் பஸ் வசதி இல்லை என்பதுதான். ஆனால் உள்ளூர்க்காரர்கள் எல்லார் வீடுகளிலும் டூவீலர் உண்டு. 40 சதவிகித வீடுகளில் கார் உண்டு.

* கே.பி.ஆர். போன்ற மிகப் பெரிய நூல் ஆலைகளில் பெண்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடி, ஓடி வேலை செய்வது வியப்புக்குரிய ஒன்றாகும்.

* எல்லோரையும் நாம், நன்றாக இருக்கிறீர்களா? என்று விசாரிப்பது போல் கம்பெனி முதலாளிகளைக் கண்டால் முதலில் கேட்கும் வார்த்தை பெட்டி போயாச்சா? என்பதுதான். (வெளிநாட்டுக்கு பனியன் அனுப்பவதைத்தான் இப்படிக் கேட்பார்கள்)

* கடைகளில் பொருள்கள் தரமானதாகவும், விலை அதிகமாகவும் இருக்கும். அதனால் மக்கள் பேரம் பேசுவது இல்லை. பொதுவாகவே, எல்லோரிடமும் பணம் புழங்கும்.

திருப்பூர் தமிழில் சில வார்த்தைகள்:
* அக்கட்டாலே போ - அந்தப் பக்கம் போ
* செருப்பு தொடு - செருப்பு அணிந்து கொள்
* சில்லறை முறி - சில்லறை மாற்று
* எச்சுக் கம்மி - கூட குறைய
* நியாயம் அடிக்காதே - ஊர்க்கதை பேசாதே!

அழ. நாகு இராமசாமி



திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sun Dec 11, 2011 11:59 am

ரொம்ப விலாவாரியா சொல்லி இருக்கீங்க சிவா புன்னகை

நன்றி அன்பு மலர்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 12:02 pm

சிறிய ஊர். எனவே ஒருபுறம் சாலை போடும்போதே மறுபுறம் குண்டும் குழியுமாகி விடும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஊர். அதனால் காற்றில் மாசு மிகுந்திருக்கும்.

நொய்யல் என்ற ஒரு "வற்றாத ஜீவநதி"யை மறந்துவிட்டீர்கள் அண்ணா,..

சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 11, 2011 12:07 pm

திருப்பூர் பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க சிவா. நன்றி



திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Uதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Dதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Aதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Yதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Aதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Sதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Uதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Dதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Hதிருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Dec 11, 2011 1:02 pm

திருப்புரே பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி . மேலும் சில தகவல்கள்

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் (Knitewar Capital)

அடிப்படைத்தகவல்கள்
தலைநகர் திருப்பூர்
மக்கள்தொகை 3,46,551
ஆண்கள் 52%
பெண்கள் 46%
எழுத்தறிவு விகிதம் 76%
புவியியல் அமைவு
அட்சரேகை 110.10.750N
தீர்க்க ரேகை 770.33.980E



இணையதளம்
www.tirupur.tn.inc.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtup@tn.nic.in
தொலைபேசி: 1421-2218811
எல்லைகள்: இதன் வடக்கே ஈரோடு மாவட்டமும், மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டமும்,கிழக்கு மற்றும ்தெனி கிழக்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், மென்மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருடுபோன பாண்டவர்களின் கால்நடைச் செல்வங்கள் 'திருப்பியும் கிடைத்த ஊர்' என்பதால் இதற்ககுதிருப்பூர் எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப் பேட்டை தாலுகாக்களைப் பிரித்து 2008 அக்டோபரில் திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் 32 ஆவது மாவட்டம்

முக்கிய ஆறுகள்: நொய்யல், அமராவதி, வாஞ்சிப்பாளையம், கூலிப்பாளையம், ஊத்துக்குளி, சோமனூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

திருப்பூர்: முக்கிய வணிக மையம். பனியன் பின்னலாடைத் தொழிலுக்கு உலகப் புகழ் பெற்றது. வருடத்திற்கு ரூ. 12,000 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி.

உடுமலைப்பேட்டை: மூன்று பக்கமும் மலைகளால் (மேற்குத் தொடர்ச்சி மலை) சூழப்பட்ட தொழில் நகரம். டெக்ஸ்டைல், காகிதம், விவசாயச் சார்ப்பு தொழிற்சாலைகள் மிகுதி. திருமூர்த்தி அணைக்கட்டு, அமராவதி அணைக்கட்டு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள்.
வால்பாறை: கோயம்புத்தூரிலிருந்து 15.கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள வால்பாறை பச்சைப்புல் சூழ்ந்த அருமையான சுற்றுலாத்தலம்.

திருமுருகன்பூண்டி: கருங்கல் சிற்பத் தொழிலளளர்கள் நிறைந்த ஊர். சுமார் 250 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலைகள்

C&A, Walmart, Switcher, Diesel, Aemy, tommy, Hilfiger, M%S, FILA, H&M, Reebok, VACUE - திருப்பூரிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் சில பன்னாட்டு நிறுவனங்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளுடி செய்த துணித் தரங்களை விற்பனை செய்யும் காதர் பேட்டை பகுதி குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்
கடல் மட்டத்திலிருந்து 310மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒரே சைனிக் பள்ளி அமராவதி நகரில் அமைந்துள்ளது.
மாமுனிவர் அகஸ்தியரால் புகழ்பெற்ற இடம் ஊத்துக்குளி
அமராவதி முதலைப் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
டெக்ஸ்டைல் நகரம்
அண்ணாதுரை தனது அரசியல் குரு ஈ.வெ.ரா. பெரியாரை முதன்முதலாக சந்தித்த இடம் திருப்பூர்.
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
முப்பதுக்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன.
தீரன் சின்னமலை பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடி, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்.



நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: தாராபுரம், திருப்பூர்.
தாலுகாக்கள்: திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை
மாநகராட்சி-1: திருப்பூர்
நகராட்சிகள்-6: நல்லூர், தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, வேலம்பாளையம், வெள்ளக்கோவில்,
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், குண்டாட்டம், மடத்துக்களும், மூவனூர், பல்லவடம், பொங்கலூர், திருப்பூர் உடுமலைப்பேட்டை ஊத்துக்குளி, வெள்ளக்கோவில்.

திருப்பூர் குமரன்
1904-இல் சென்னிமலையில் பிறந்த இவரது இயற்பெயர் குமரேசன். பெற்றோர் :நாச்சியமுத்து முதலியார் - கருப்பாயி அம்மாள். மனைவி: இராமாயி அம்மாள்.
காந்திஜி வட்டமேஜை மகாநாட்டிற்கு சென்று திரும்பியபோது சட்ட மறுப்பு இயக்கம் புதிய எழுச்சி பெற்றது. சட்ட மறுப்பு இயக்கத்தை தடைசெய்ய பிரிட்டீஷ் அரசு ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குத் தடைவிதித்தது. அரசுத்தடையை மீறி திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கம் 1932, ஜனவரி 10 ஆம் தேதி ஊர்வலம் நடத்தியது. இந்த ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் குமரனின் மண்டை பிளந்தது; அடிமேல் அடி விழுந்த போதும் தன் கையில் இருந்த மூவர்ணக்கொடியை குமரன் விடவேயில்லை. இதன் மூலம் வரலாற்றில் 'கொடி காத்த குமரனானார்.

http://www.thangampalani.com/2011/11/story-of-tirupur-district.html


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 1:17 pm

எல்லாமே நல்லதாச் சொன்ன எப்படி சிவா அவர்களே?

திருப்பூர் தண்ணீர் பிரட்சனை குறித்து எதுவுமே நீங்கள் சொல்லவில்லை. ஒரு வாரம், பத்து நாளுக்கு ஒரு தடவைதான் தண்ணீர் வரும் குழாயில்.

இந்தியாவிலேயே வைத்து மிகவும் திமிர் பிடித்த ஆட்டோ ஓட்டுபவர்கள் உள்ள நகரம் திருப்பூர் தான். மீட்டர் என்பதே என்ன என்று கூடத் தெரியாது இவர்களுக்கு. மனம் கூசாமல் 100ரூ , 200ரூ என்று ஏமாத்துவார்கள்.

செங்கொடியின் தாக்கம் அதிகம் உள்ள ஊர். வருடா வருடம், தீபாவளி, மற்றும் பொங்கல் சமயங்களில் செங்கொடி வீரர்கள் பனியன் கம்பனிகளை இழுத்து மூடி விடுவார்கள். தொழிலாளிகளிடம் சுரண்டல் வேறு. இந்தக்காலத்தில் திருட்டு, நகையை பெண்களிடம் இருந்து வழிப்பறியாகப் பிடுங்குதல் அதிகம் நடக்கும். கடத்தல் கூட உண்டு என்கிறார்கள்.

மிகச் சமீபத்திய ஆய்வின்படி அதிகமாகத் தற்கொலைகள் நடக்கும் நகரம் திருப்பூர் தானாம். பெண்களுக்கு அதிகமாய் பாதுகாப்பு இல்லாத இடமும் இதுதானாம். இரவு எட்டு மணி அளவில் ஒரு இளம்பெண் தனியாக ஒரு இடம் இருந்து மறு இடம் செல்லும்போது பெற்றோர்கள் வயித்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டிய நிலை என்கிறார்கள்.

அதே,இரவு எட்டு மணியளவில், நீங்கள் SAP theater, மற்றும் Puspha theater பகுதிகளில் போனால் நம்ம குடிமகன்களின் வீர விளையாட்டுக்களைப் பார்க்கலாம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:22 pm

திருப்பூர் பற்றி மேலதிக விளக்கங்கள் தந்ததற்கு நன்றிகள்!



திருப்பூர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக