புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
4 Posts - 3%
prajai
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
jairam
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
8 Posts - 5%
prajai
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_m10ஏழாம் அறிவு - விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு - விமர்சனம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 11:03 am




தமிழ் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ஏகப்பட்ட ஹைப்புகளுடன் வியாபாரம் செய்யப்பட்டப் படம். சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ருதி, ஹாரிஸ் ஜெயராஜ், உதயநிதி ஸ்டாலின், ரவி கே. சந்திரன் என்று பெரிய படையே இதன் பின்னணியில். ரிலிஸுக்கு முன்னமே சுமார் 80 கோடி வியாபாரம் முடிந்திருக்கிற படம். இப்படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு ரிலிஸின் முன்னமே பெரும் லாபத்தை கொடுத்தப் படம். அநியாயமாய் 200ரும் முன்னூறும் கொடுத்த பார்த்த ரசிகர்களுக்கு ஜீரணிக்குமா? என்பதை பார்ப்போம்.


ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன் போதிதர்மன் எனும் பல்லவ இளவரசர் வாழ்ந்து வந்தார். அவர் சண்டைப் பயிற்சி, மருத்துவம், என்று பல கலைகளில் சிறந்து விளங்கினார். ஆய கலைகள் அனைத்திலும் சிறந்த விளங்கிய அவர் தன் தாய் தந்தையின் ஆசைப்படி சீனாவுக்கு தரை மார்கமாகவே மூன்று வருட பயணம் மேற்கொண்டார். சீனாவில் ஒரு சிறிய கிராமத்தை அடைந்தார். இவரை கெட்டவராக பார்த்த மக்களுக்கு ஒரு முறை பெயர் தெரியாத வியாதி ஒன்று வர, அதை தன்னுடய மருத்துவ முறையால் தீர்த்து வைத்தார். அதன் பிறகு அந்த வைத்திய முறையை அங்குள்ள மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு தீயவரகளால் பங்கம் வரும் போது தன் களறி பயிற்று மூலம் குங்பூ எனும் கலையை காட்டி, நோக்கு வர்மம் எனும் கலையை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார். இவ்வளவு செய்த மக்கள் அவர் தங்கள் ஊரில் இற்ந்து புதைத்தால் தங்கள் நாட்டிற்கு ஏதுவும் வராது என்று தவறாக நினைத்து சாப்பாட்டில் விஷம் வைக்கிறார். அதை தெரிந்து கொண்ட போதிதர்மர் அவர்களுக்காக உண்டு சாகிறார். அங்கேயே புதைக்கப் படுகிறார்.
கடவுளாய் வழிபடப்படுகிறார். இதுதான் போதிதர்மனின் வாழ்க்கை வரலாறு. என்னடா ஏதோ வரலாற்று பாடத்தை மக்கப் செய்வது போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? படம் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

நிகழ்காலத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் கலைஞன். ஸ்ருதி ஒரு டி.என்.ஏ பற்றிய ரிசர்ச் மாண்வி. சூர்யாவுக்கும் அவருக்கும் காதல். அப்படியென்று சூர்யா நினைத்துக் கொள்ள, இல்லை என்று தெரிந்து சோக கீதமெல்லாம் பாடி, பின்பு தெரிந்து கொள்கிறார் தான் போதிதர்மரின் வாரிசு என்றும். அவரது டி.என்.ஏவும் தன் டி.என்.ஏவும் எண்பது சதவிகிதம் சூட் ஆகிறது என்றும். அவரின் டி.என்.ஏவில் உள்ள திறமைகளை தூண்டிவிட்டால் இவரும் ஒரு போதி தர்மர் ஆகிவிடலாம் என்று சுருதி மூலமாய் தெரிந்து கொள்கிறார். சீனாவிலிருந்து டோன்லி எனும் ஒரு சைனாக்காரன் இந்தியாவில் நாய் மூலமாய் போதிதர்மர் மருந்தளித்து குணப்படுத்திய வியாதியை பரப்பி, அதற்கான மருந்தை சீனா விற்று, இந்தியாவை தன் இஷ்டப்படி ஆட்டலாம் என்று அவர் ஒருவரை மட்டும் அனுப்புகிறது. அவனுக்கு இட்ட இன்னொரு கட்டளை போதிதர்மனின் டி.என்.ஏவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சுருதியை கொல்வதும் ஒரு காண்ட்ராக்ட். அவன் இந்தியாவில் அந்த நோயை பரப்பினானா? ஸ்ருதியை கொன்றானா? போதிதர்மனின் டி.என்.ஏவை செலுத்தி அதன் மூலம் முழு போதிதர்மன் ஆனாரா சூர்யா? என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதிலளித்துள்ளார்கள்.


பெரிதாய் பில்டப் செய்யப்பட்ட போதிதர்மர் கேரக்டரில் சூர்யா நன்றாக இருக்கிறார் பார்க்க. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. போதி தர்மர் எபிசோட் டெப்த் இல்லாமல் வெறும் ஆர்ப்பாட்டமாகவே இருக்கிறது. சிக்ஸ் பேக்கில் கட்டுமஸ்தாய் குங்பூ கலைஞர என்பதை நம்ப வைக்கிறார். அவ்வளவுதான். அவரை பற்றி பெரிய டீடெயில் இல்லை. நிகழ்காலத்தில் சர்கஸ் கலைஞராய் வரும் சூர்யா ஆடுகிறார், பாடுகிறார். அருமையாய் சண்டை போடுகிறார். ஆங்காங்கே ஸ்ருதியை காதலிக்கிறேன் என்று காமெடி செய்கிறார். பெரும்பாலும் தன் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை சரியானபடி உபயோகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பாடல் காட்சிகளில் ஸ்ருதிக்கும், சூர்யாவுக்கும் எந்த வித “கெமிஸ்ட்ரி”யும் வரவில்லை. பாவம் மனுஷன் கமல் பொண்ணு என்ற எண்ணத்திலேயே நடித்திருக்கிறார் போலும்.ஸ்ருதி அழகாக இருக்கிறார். ஸ்பஷ்டமாய் அழுத்தம் திருத்தமாய் டாமினண்ட் வாய்ஸில் பேசுகிறார். பாடல் காட்சிகளில் ராவிஷிங் பியூட்டியாக இருக்கிறார். சில பல காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.

அதே போல படு பயங்கர வில்லனாய் வரும் ஜான். மனுஷன் பேசாமலேயே நிறைய விஷயங்களை செய்கிறார். ஆனாலும் படம் நெடுக டெர்மினேட்டர் டூவை ஞாபகப்படுத்துகிறார். தக்குணூண்டு கண்ணை வைத்துக் கொண்டு ஊரிலுள்ள் எல்லாரையும் சடுதியில் நோக்கு வர்மம் செய்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறார். க்ளைமாக்ஸ் பைட்டில் புழுதி பறக்க சண்டை போடுகிறார்கள் கிராபிக்ஸில்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. பெரிய லெட்டவுன். பின்னணியிசை அதை விட கொடுமை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்திருக்கும் பின்னணியிசை படு இம்சை. ஓகே என்ற “யம்மா..யம்மா’ பாடலும் அபத்த தருணத்தில் வருவதால் உட்கார முடியவில்லை.

ஆண்டணியின் எடிட்டிங் ஓகே. ரவி.கே.சந்திரன் வெகு நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் இந்தி படங்களைப் பாருங்கள். அப்படி கண்ணில் ஒற்றிக் கொள்ளூமாறு இருக்கும் ஒவ்வொரு ஷாட்களும். இதில் எல்லாமே மிஸ்ஸிங் அவசர அடியாய் அடித்த எபெக்ட் மட்டுமே தெரிகிறது. அதிலும் வில்லன் நோக்கு வர்மத்தில் மாறி மாறி ஆட்களை வசீகரித்து சூர்யா, ஸ்ருதியை கொல்ல செய்யு முயற்சி சீனில் க்ராபிக்ஸ் படு சொதப்பல். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு பரவாயில்லை.


எழுதி இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். வழக்கமாய் முருகதாஸ் படங்களில் ஒரு டஃப் மேட்டரை சொல்வதற்கு பக்கா மசாலாவான ஒரு பில்டப் செய்து திரைக்கதையமைப்பார். உதாரணம் கஜினி. மொமண்டோவிலிருந்து அந்த கேரக்டரின் ப்ரச்சனையை எடுத்தாலும் அதை திரைக்கதை அமைத்தவிதத்தில் மிரட்டியிருப்பார்.க்ளைமாக்ஸை தவிர.

அதே போலத்தான் ரமணா போன்ற படங்களிலும். அதைப் போல இதிலும் ஒரு வியாதியை பரப்பி அதனை குணமாக்க மருந்து கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் வில்லனுக்கும் அதை தடுக்க நினைக்கும் ஹீரோவுக்குமான கன்பர்ன்டேஷன் தான் என்றாலும் அதற்கு டி.என்.ஏ, போதி தர்மர், தமிழ், தமிழர், என்று உணர்வுப் பூர்வமாய் உசுப்பேத்திவிட்டு ரணகளப் படுத்து முயன்று அரைகுறையாய் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. போதி தர்மர் எதற்காக சைனா போனார்? அவரை சைனாவுக்கு அனுப்பி வைத்ததற்கான காரணம் என்ன? அவர் தரையில் புழுதியை கிளப்பி அதை காற்று பந்தாக்கி எதிரியின் மேல் அனுப்புவது குங்பூவில் இருக்கிறதா? ஏதோ சித்து விளையாட்டு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளாம். அப்புறம் சூர்யாவை மட்டுமே நம்பி ஒரு சர்க்கஸ் கம்பெனி நடக்கிறது. அவரே மக்கள் கூட்டத்தை கூட்ட, நடு ரோடில் ரிங்கா ரிங்கா என்று பாடுகிறார்.

சர்க்கஸில் பார் விளையாடுகிறார். யானைக்கு உடம்பு சரியில்லை என்றால் அழைத்துப் போகிறார். அப்புறம் பாதி படத்திற்கு மேல் ஸ்ருதியுடன் சுற்றுகிறார். போதி தர்மரின் டி.என்.ஏ சேம்பிள்கள் சைனாவில் தான் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டி.என்.ஏ சேம்பிள்கள் எப்படி ஸ்ருதிக்கு கிடைத்தது? இடைவேளைக்கு பிறகு அடுத்து என்ன காட்சி வரும் என்பதையும். க்ளைமாக்ஸில் சூர்யா, ஜான் சண்டைக் காட்சியின் முடிவில் என்ன ஆகும் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். அவ்வளவு டெம்ப்ளேட். உதாரணமாய் லிப்டிற்கு சுர்யாவும், ஸ்ருதியும் காத்திருப்பது, லிப்ட் வர நேரமாகும் போது கிளம்ப அந்த லிப்ட்டில் வில்லன் வருவது. போன்ற பல காட்சிகள். ஒரு செகண்ட் பார்த்தாலே ஹிப்னடைஸ் செய்ய முடியுமா? இப்படி தொடர்ந்து பல கேள்விகள் ஓட்டை மேல் ஓட்டையாய் வந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் போதியும், பாடல்கள், ரம்பராய் இழுக்க, இரண்டாவது பாதிதான் படு சூடான சேஸிங். ஆரம்பிச்ச போது பர்ப்ரவென போகும் படம். பின்னர் நான் யோசிக்கும் அத்தனை காட்சிகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க, பெரிய த்ரில் ஏதுமில்லாமல் பொசுக்கென முடிந்து போகிறது.
நல்ல விஷயங்கள் என்றால் இம்மாதிரியான சாதாரண கதைகளுக்கு வேறு ஒர் கலர் கொடுக்க முயன்ற முயற்சி. போதி தர்மர் பற்றிய பில்டப்புகள். நம் நாட்டில் இல்லாத விஷயங்களா? அதுவும் தமிழன் வரலாற்றில் அவன் செய்யாதது எதுவுமே இல்லை என்று இடைவேளைக்கு பிறகு தமிழ் உணர்வை தூண்டிவிட்டு செய்யப்பட்ட திரைக்கதை. (இப்படம் தெலுங்கில் டப்பாகி பேசும் போது “மன தெலுகு தேசமுலு” என்று வரும்) நம் வரலாற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளாதது. மஞ்சளே விவசாயம் செய்யாதவன் அதற்கு பேட்டண்ட் வாங்கிய கொடுமை.

உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை அழிக்க நினைப்பது, டி.என்.ஏ சமாச்சாரங்கள் போன்ற பல நல்ல விஷயங்களை உறுத்தாமல் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் வைத்தது. அந்த அடையாறு யானை சவாரிக் காட்சி, வில்லன் நோக்கு வர்மத்தில் ஒவ்வொரு ஆளாய் ஏவி ஸ்ருதியையும், சூர்யாவையும் கொல்ல முயலும் காட்சி, சென்னைக்குள் இருக்கும் காடு என்கிற மேட்டர். சென்னை வாசிகளுக்கு கூட அவ்வளவாய் தெரியாது. இருந்து இரண்டாவது பாதியில் கொடுத்த பரபரப்பான மசாலா திரைக்கதையினால் படம் தப்பிக்கிறது.

மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்ற உண்மையை இப்படத்தின் மூலம் நிறுபித்திருப்பது.

நன்றி :கேபிள் சங்கர் :http://www.cablesankar.blogspot.com/



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 26, 2011 11:13 am

படம் பார்த்து விட்டு வந்து படித்து கொள்கிறேன்... ஜாலி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 12:31 pm

:நல்வரவு:
ரா.ரமேஷ்குமார் wrote:படம் பார்த்து விட்டு வந்து படித்து கொள்கிறேன்... ஜாலி நன்றி
சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Oct 26, 2011 12:44 pm

ரா.ரமேஷ்குமார் wrote:படம் பார்த்து விட்டு வந்து படித்து கொள்கிறேன்... ஜாலி நன்றி
இன்னும் பார்க்கலாயா?



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஏழாம் அறிவு - விமர்சனம்  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 26, 2011 2:12 pm

ந.கார்த்தி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:படம் பார்த்து விட்டு வந்து படித்து கொள்கிறேன்... ஜாலி நன்றி
இன்னும் பார்க்கலாயா?
இன்று இரவு தான் படம் பார்க்க செல்கிறேன் கார்த்தி...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 26, 2011 8:29 pm

அப்ப ஏழாம் அறிவு புஸ்வனாமா..! சிரி

கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. போதி தர்மர் எதற்காக சைனா போனார்?
ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 9:16 pm

அருண் wrote:அப்ப ஏழாம் அறிவு புஸ்வனாமா..! சிரி
:ஒரு விமர்சனத்தை வைத்து முடிவுக்கு வரவேண்டாம் அருண் ! பொறுத்திருந்து பார்ப்போமே ! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 26, 2011 9:42 pm

கே. பாலா wrote:
அருண் wrote:அப்ப ஏழாம் அறிவு புஸ்வனாமா..! சிரி
:ஒரு விமர்சனத்தை வைத்து முடிவுக்கு வரவேண்டாம் அருண் ! பொறுத்திருந்து பார்ப்போமே ! சிரி
நான் இப்பொழுது தான் படம் பார்த்து விட்டு வந்தேன் இன்னும் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடுகிறேன்... புன்னகை
அருமையான படம்... ஜாலி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 27, 2011 12:38 am

"ரா.ரமேஷ்குமார்"
நான் இப்பொழுது தான் படம் பார்த்து விட்டு வந்தேன் இன்னும் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடுகிறேன்... புன்னகை
அருமையான படம்... ஜாலி
தம்பி உன்கிட்ட இருந்து எதிர் பார்த்திருந்த பதில் தான்..! சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 27, 2011 7:57 am

1600 வருடங்களுக்கு முன்பு பல்லவ நாட்டில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற போதிதர்மன் என்ற பல்லவ இளவரசர் தாயின் அணைக்கு இணங்க தரை வழி மார்க்கமாக சீன தேசம் செல்கிறார்.சீன தேசம் செல்வதற்க்கு முன்பாக தன் மருத்துவ முறைகளை புத்தகமாக கொடுத்து விட்டு செல்கிறார்.
சினாவில் உள்ள ஒரு கிராமத்திற்க்கு அவர் செல்லும் போது அந்த கிராமத்திற்க்கு ஆபத்து வரபோகிறது என்று அவர்கள்(கிராமவாசிகள்) ஒரு விதமுறையை பயன்படுத்தி கண்டறார்கள்.
போதிதர்மரும் அந்த சமயத்தில் செல்ல அவர் மூலம் தான் ஆபத்து வரபோகிறது என்று எண்ணிய கிராம மக்கள் அவரை அனுமதிக்காமல் புறக்கணிக்கிறார்கள்.
பின் ஒருவித புதிய கொடிய நோயினால் சிறுமி ஒருவர் பாதிக்கபடுகிறார் அங்கு உள்ள மருத்துவர்கள் அந்த சிறுமியை எவ்வாறு குணப்படுத்துவது என்று தெரியாமல் சாக்கு பையினால் சுற்றி அவரை குகைக்குள் உயிருடன் வைத்து விட்டு வந்து விடுகிறார்கள்.
அந்த சிறுமியை தான் கற்ற வைத்திய முறையின் மூலம் காப்பாற்றுகிறார் போதிதர்மர்.சிறுமியை அழைத்து கொண்டு மீண்டும் அந்த கிராமத்திற்க்கு அவர் செல்லும் போது அங்கு பல பேர் இந்த நோயினால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கிராமவாசிகள் உணர்கிறார்கள் ஆபத்து போதிதர்மரால் இல்லை இந்த நோயினால் தான் என்று நோயினால் பாதிக்க பட்ட மக்கள் அனைவரையும் காப்பற்றுகிறார் அது மட்டும் அல்லாமல் சீனாவில் உள்ள மற்ற மருத்துவர்களுக்கும் இந்த மருத்துவ முறையை கற்பிக்கிறார்.
சில காலங்கள் சென்ற பின் ஆபத்து ஆனாது கொலைகாரர்கள் வடிவில் வருகிறது.அப்பொழுது போதிதர்மர் தற்காப்பு கலையையும்,நோக்குவர்மத்தையும்(ஹிப்னாடிசம்) பயன்படுத்தி கொலைகாரர்களை அழித்து கிராம மக்களை காப்பாற்றுகிறார்.
அங்குள்ள கிராம மக்களும் தற்காப்பு கலையை கற்று தருமாறு கேட்கிறார்கள் இவரும் கற்பிக்கிறார்.போதிதர்மர் சில காலங்கள் கழித்து அங்கிருந்து செல்ல நினைக்கும் போது அந்த கிராம மக்கள் அவருக்கு உணவில் நஞ்சை கலந்து தருகிறார்கள் இதை அறிந்தாலும் போதிதருமர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நஞ்சு கலந்த உணவை உண்டு மரணிக்கிறார்.
கதைகளம் ஆனது நிகழ்காலத்திற்க்கு வருகிறது
சீனர்கள் இந்தியாவை பழி வாங்க போதிதருமர் அவர்களுக்கு கற்று கொடுத்த கலையை நமக்கு எதிராக பயன்படுத்த திட்டமிடுகிறார்கள்...
அதற்காக குங்பூ கலையில் அதிக திறமை கொண்ட டாங்லீ என்பவரை தேர்ந்தெடுக்கிறார்கள் இந்தியாவிற்க்கு எதிராக அவர்கள் செய்யும் இந்த சதி திட்டத்திற்க்கு "ஆப்பரேஷன் ரெட்" என்று பெயர் வைக்கபடுகிறது.டாங்லீ நோக்குவர்மம் செய்வதை அங்கிருந்தே ஆரம்பிக்கிறார்.
நமது சென்னையில் சர்கஸ் கம்பெனி ஒன்றில் பணிபுறிகிறார் அரவிந் என்ற கதையின் நாயகன் சூர்யா.ஆடிபாடி ஆட்டம் காண்பிக்கும் அவர் குரங்கு வாங்க வரும் சுருதிஹாசனை பார்த்த உடன் வழிகிறார்.
சுருதிஹாசனை சுற்றி சுற்றி வருவது அவரது மொபைல் போனை திருடுவதும் அதை அவர் திருப்பி கொடுக்கும் போது வரும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது.
அவர் மேல் காதலில் விழுகிறார் சூர்யா அனால் சுருதிஹாசனோ காதலிப்பது போல் நடிக்கிறார் என்பதை அறிந்து வருத்தப்பட்டு யம்மா யம்மா என்ற சோகமான பாடலை ரசிக்கும் படியாக பாடியுள்ளர் எஸ்.பி.பி.
சீனன் டாங்லீ போதிவர்மர் சீனாவில் குணப்படுத்திய கொடிய நோய்யை நாய்க்கு ஊசியின் மூலமாக பரப்புகிறார்.7 போலிஸ்காரர்களை நோக்கு வர்மத்தின் மூலமும் குங்பூ கலையை பயன்படுத்தியும் கொன்று"ஆப்பரேஷன் ரெட்"யை துவக்கி வைக்கிறார்.
தமிழ் பேசுவதை கிண்டல் செய்யும் தமிழ் நாட்டு விஞ்னானிகளை திட்டுவதும் தமிழின் பெருமையை பற்றி பேசும் போது அருமையாக நடித்து உள்ளார்.மீண்டும் சூர்யாவை சந்தித்து அவரிடம் உண்மையை கூறுகிறார் ஸ்ருதி அருங்காட்சியகத்தில் பலங்கால பெருட்களை காண்பித்தும் போதிதருமர் சீன தேசம் செல்லும் முன் கொடுத்துவிட்டு சென்ற புத்தகத்தை காண்பித்து அவரிடம் தனது திட்டத்தை கூறுகிறார்.டாங்லீ இவர்கள் இருவரையும் கொல்வதையும் தனது திட்டமாக வைத்து உள்ளார்.டாங்லீ இவர்கள் இருவரையும் பார்த்த உடன் கதையின் வேகம் அதிகரிக்கிறது.இதற்க்குள் நாய் மூலம் கொடிய நோய் ஆனது வேகமாக பரவி பல உயிர்களை கொல்கிறது.ஹிப்னாடிசம் மூலம் பார்க்கும் அனைவரையும் கட்டுபடுத்தி அவர்களை தன் கட்டளை படி செய்ய வைக்கும் போது டாங்லீயின் கண் மிகவும் சிறிதாகிறது(அவருக்கு முதலிலேயே கண் இருக்கிறதா என்று தெரியவில்லை அந்த அளவிற்க்கு சின்னதாக உள்ளது).பாஸ்ட் ட்ராக் ஆலுவலகத்தில் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் சொல்லும் வசணங்கள் தீயேட்டரில் சிரிப்பு சரவெடிகளை உண்டாக்குகிறது.டாங்லீயை அழிக்கவும் நோய்யினை குணப்படுத்துதவும் போதிதருமரை அவரது டி.என்.ஏ வுடன் பொருந்துகிற அவரது வம்சாவளி சூர்யாவின் மூலம் கொண்டு வர முயற்சி செய்கிறார் சுருதி இது தான் அவரது ஆய்வும் கூட...
ஆய்வின் இறுதி நாளில் இதையும் தடை செய்கிறார் டாங்லீ பரபரப்பாக நடு காட்டில் நடக்கும் சண்டையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த போதி தருமரின் திறமைகள் சூர்யாவிற்க்கு வருகிறது.டாங்லீயை அழித்து அந்த கொடிய நோய்க்கான மருந்தை கண்டறிந்து மக்களை காப்பாற்றுகிறார் சூர்யா...
"ஆப்பரேஷன் ரெட்"யை ஆப் செய்கிறார்...
இறுதி சில நிமிடங்கள் சூர்யா சொல்லும் தகவல் அனைத்திலும் அருமை... ரிலாக்ஸ்
படத்தில் பிடித்த சில காட்சிகள்:
போதிதருமராக சூர்யா நடிக்கும் போது அவரது பார்வை
சுருதிஹாசனை சுற்றி சுற்றி வருவது
பேராசிரியரை அலைய விடும் காட்சி
சூர்யாவை நோக்கு வர்மம் செய்ய முயற்சித்து டாங்லீ பல்பு வாங்குவது
வீரம் மற்றும் துரோகம் பற்றி கூறுவது புறமுதுகிட்டு ஓடி வந்ததை நினைத்து வெட்கப்படுவது
பிடிக்காத சில காட்சிகள்:
இடைவேளைக்கு முன்பு வரும் அதிக பாடல்கள்
டாங்லீ அதிகபடியானவர்களை சாலையில் சூர்யா மற்றும் சுருதியை கொல்ல அனுப்புவது...
படத்தை பற்றி பலருக்கு பல கருத்துக்கள் இருந்தாலும் இது அருமையான கதை,அருமையான படம்... சிரி
ஆப்பரேஷன் ரெட்
போதிதருமர் சீனா செல்லும் போது அவர் அணிந்து இருந்த ஆடையின் நிறம் "ரெட்" அவர் குணப்படுத்திய நோய்யை நம் நாட்டிற்கு எதிராக பயன்படுத்துவதும் மீண்டும் போதி தருமரின் திறமைகளை கொண்டுவருவதை தடுப்பதும் தான்"ஆப்பரேஷன் ரெட்"
படத்தில் கதையை பற்றி பல கேள்விகள் எழலாம் அனைத்திற்க்கும் பதில் சொல்ல படத்தின் நேரத்தை மூன்று மணி நேரம் அல்ல மூன்று நாட்கள் தொடர்ந்து ஓடும் படி எடுக்க வேண்டும்...
படத்தில் இரு காலகட்டங்களையும் இனைத்து எடுத்ததற்கு பதிலாக போதிதருமரின் வரலாற்றை மட்டும் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக