புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவலிகளின் வகைகள் Poll_c10தலைவலிகளின் வகைகள் Poll_m10தலைவலிகளின் வகைகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிகளின் வகைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:07 am

கண்கள் சார்ந்த தலைவலி


கண்களில் சில குறிப்பிட்ட வகை கோளாறுகள் ஏற்படும்போது தலைவலி உணர்வுகள் தோன்று வதுண்டு. கண் சார்ந்த கோளாறுகள் காரணமாக ஏற்படும் தலைவலி அவ்வளவு தீவிரமாக இருக்காது. பெரும் பாலும் நெற்றிப் பகுதியில் தோன்றும் இந்த வலி தாங்கக் கூடிய அளவுக்கே இருக்கும். தலைவலி தீவிரமாக இல்லாதிருந்து எளிய சிகிச்சைகள் மூலம் அதைக் குணப்படுத்த முடியவில்லை என்றால் கண்கோளாறு இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று உணர வேண்டும். நமது சந்தேகம் சரிதானா என்பதை ஒரு நல்ல கண் மருத்துவரிடம் காட்டி சோதனை செய்து கொள்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

நமது கண்களைச் சூழ்ந்து அமைந்திருக்கும் தசைப்பகுதியும், நரம்புகளும் மிகவும் மென்மையானவை. இந்தத் தசைப்பகுதியும் நரம்புகளும் கண் களின் கோளாறு காரணமாக அதிர்ச்சி நிலை அடைய நேரிடும். அதுவே தலைவலிக்கு காரணமாக அமையும்.

நம்முடைய கண்களின் உள்ளே ஒருவகையான நீரோட்டம் இருக்கிறது. இதன் மூலம் கண்களின் உள் அமைப்புகளுக்கு வேண்டிய சத்துப் பொருட்களையும், பிராண வாயுவையும் கொண்டு செல்லும் பணி மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கண்ணின் உட்புற அமைப்புகளில் சேரும் கழிவுப் பொருட்களையும் வெளியில் கொண்டு வந்து சேர்க்கவும் உதவு கிறது. இந்த நீரில் அழுத்தம் மிகும் போதும், அழுத்தம் குறைவதாலும் கண்ணில் வலியைத் தோற்றுவிக்கப்படும். இத்தகைய கண் வலியும் தலைவலியாக உணரப்படும்.

கண்களில் இயற்கையாக அமைந்துள்ள சில தசைகள் கண்களை நாற் புறமும் திருப்பவும், கண் குழிக்குள் இழுப்பது போன்ற பணிகளை செய்கின்றன. இந்தத் தசைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சீராக இயங்கினால் தான் நம்மால் எந்தப் பொருளையும் சரியாக பார்க்க முடியும். ஏதாவது ஒரு காரணத்தால் இரண்டு கண்களும் சீராக இயங்க வேண்டிய நிலையின் போது சில தசைகள் மட்டும் அதிகமாக இறுகி செயல்படலாம். இதனால் சில தசைகள் அதிகமாக இழுக்கப்பட வேண்டியிருக்கும். இப்படி தசைகளில் ஏற்படுகிற குழப்பம் காரணமாக தலையின் நெற்றிப் பகுதியில் வலியுணர்வு உண்டாகிறது.

கண்ணின் உட்புறம் பார்வையை சுருக்கவும், விரிக்கவும் உதவும் கண் வில்லையை இயக்கும் வேலையை சிறுதசைகள் செய்கின்றன. கண்களில் அமைந்துள்ள இந்த தசைகள் அதிகமான வெளிச்சம் கண்ணுக்குள் புகாமல் தடுக்கவும், வெளிச்சம் குறைவான நேரத்தில் கண்வில்லையை பெரிதாக விரியச் செய்து பொருட்களை தெளிவாக பார்க்க உதவு கின்றன. இவற்றில் சில தசைகள் கண்களுக்கு அருகில் உள்ள பொருட்களை பார்க்கவும், மற்றவை தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கவும் ஏற்ற வகையில் பார்வையை ஒழுங்கு செய்கின்றன.

ஆனால் இந்த இயல்புக்கு மாறாக கண்களை நாம் அதிகமாக செயல்பட வைக்கும்போது கண்தசைகள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற தீவிர இயக்கம் காரணமாகவும் தலைவலி தோன்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:09 am

கண் சார்ந்த தலைவலிக்கு ஓய்வே மருந்து


சிலருக்கு கண்பார்வை குறைவாக இருக்கும். அவர்களால் பொருட்களை நன்றாக பார்க்கவும், புத்தகங்களை சரியாக படிக்கவும், கண்களை இடுக்கி சிரமப்பட்டுப் பார்க்க முயற்சி செய்வார்கள். இந்த மாதிரியான முறை காரணமாகவும், கண் தசைகள் பாதிக்கப்பட்டு தலைவலி ஏற்படலாம்.
ஒரு பொருளை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பதாலும், அதிகமான வெளிச்சத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்ப தாலும் கண்ணில் சூழ்ந்த தசைகளும், நரம்புகளும் அழற்சிக்குள்ளாகி அதன் காரணமாகத் தலைவலி வருவதுண்டு.

கைக்கடிகாரங்களைப் பழுது பார்க்கும் தொழில் இருப்போரும், கைக் கடிகாரங்களை செய்யும் தொழிலில் இருப்போரும் அல்லது தையல் தொழில் செய்வோரும் கண்களை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்து உற்று பார்ப்பதாக இருப்பதால் கண் சார்ந்த நரம்புகளும், தசை களும் இறுக்கமடைந்து கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாகவும் தலைவலி வரக்கூடும்.

இதுபோன்ற கண் தொடர்பான லேசான பாதிப்பு உள்ளவர்கள் தான் நாள்போக்கில் தலைவலிக்கு ஆளாகிறார்கள். இதற்கு பழக்க வழக்கங் களை மாற்றிக்கொண்டு கண்களுக்கு நல்ல ஓய்வு அளித்தாலே போதும், தலைவலி தானாக மறைந்து விடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:11 am

காது-மூக்கு-தொண்டை தலைவலி


தலையில் வலிகள் ஏற்படுவதற்கு தலைக்குள் ஏற்படும் கோளாறுகள் மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. மற்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்-நொடிகளும் தலைவலிகளை தோற்றுவிக்கும். அதன் அடிப்படையில் காது-மூக்கு-தொண்டை, பல் ஆகிய உறுப்புகளில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டாலும் தலைவலி உண்டாகலாம்.

நமது மூக்கின் உட்புறம் மூக்கை சூழ்ந்தும் பற்களை சூழ்ந்தும் நுண்ணிய நரம்புக் கிளைகள் படர்ந்து கிடக்கின்றன. இவை காதுகளை சுற்றிலும் கூட இருக்கின்றன. இந்த நரம்புக் கிளைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக அமைந்து உள்ளன. மூக்கிலோ, தொண்டையிலோ, காதிலோ, பல்லிலோ ஏதாவது பிணிகள் ஏற்படும்போது அவற்றைச் சூழ்ந்து அமைந்து இருக்கும் நுண்ணிய நரம்புக்கிளைகள் அதிர்ச்சி அடைகின்றன. அந்த உறுப்புகளில் வலி ஏற்படுகிற போது அது நுண்ணிய நரம்புக் கிளைகள் வழியாக முகம் முழுவதிலும் பரவி விடுகிறது. அதனால் முகம் முழுவதும் வலி தோன்றும். சில நேரங்களில் வலி முகத்தில் தோன்றாமல் தலைவலியாக உருவெடுக்கும்.

காது-மூக்கு-தொண்டை ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்பட்டு அதன் காரணமாக நுண்ணுயிரிகள் பெருகும்போது தலை ரத்தக்குழாய் வழியாக தலைப்புறத் தசைகளுக்குச் சென்று இறுக்கத்தை விளைவிப்ப தால் அதைத் தலைவலியாக நாம் உணருகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:12 am

சைனஸ் தலைவலி


நம்முடைய மூக்கைச் சேர்ந்த காற்றுப் பாதையைச் சூழ்ந்து சில காற்றறைகள் அமைந்துள்ளன. அவற்றை பொதுவாக சைனஸௌ என்று சொல்கிறோம்.
மூக்கின் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் காற்றை வடிகட்டி தூய்மை படுத்துவதற்கும், அக்காற்றின் வெப்ப நிலையைச் சரி செய்வதற்கும், நாம் எழுப்பும் குரல் ஒலியைச் சீரான ஒலியாக வெளிக் கொண்டு வருவதற்கும் உதவி புரியும் நோக்கத்தோடு காற்றறைகள் இயற்கையாக அமைந்து இருக்கின்றன. இந்தக் காற்றறைகள் எலும்புகளின் உட்புறம் அமைந்துள்ளன. இவை தேனீக் கூடுகள் போல சிறு சிறு நுண்ணறை கள் பல ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டனவாக அமைந்துள்ளன.

இவற்றைச் சார்ந்து எலும்பின் உட்பரப்பில் மெல்லிய ஜவ்வுகள் அமைந்துள்ளன. இந்தச் ஜவ்வுகளில் ரத்தக் குழாய்களும் நரம்பு முனை களும் செறிவாக காணப்படுகின்றன. இந்த ஜவ்வுகளிலிருந்து மெல்லிய சளி போன்ற நீர் தொடர்ந்து சுரப்பதால் மூக்கைச் சார்ந்த மூச்சுப் பாதைகளில் மூச்சுக் காற்று எளிதில் வந்து செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தக் காற்றறைகள் பலவும் வேறுபட்ட ஓட்டைகளின் வழியாகவும் இடுக்குகள் வழியாகவும் நம்முடைய மூக்கின் உட்பகுதி யுடன் தொடர்பு கொண்டுள்ளன.

சில நேரங்களில் இந்த ஓட்டைகள் அடைப்பட்டு விடுவதுண்டு. அதன் காரணமாக காற்றோட்டம் குறைந்து வெற்றிடம் உருவாகும். அப்படிப் பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு தாங்க முடியாத தலைவலி உண்டாகும். மேலே குறிப்பிட்ட காற்றறைகள் வழியாக காற்று உள் புகுந்து ஏதாவது ஒரு காரணத்தால் எளிதாக வர இயலாத நிலை அமைந்து விட்டால் அந்த அறைகளுக்கென காற்று அழுத்தம் மிகுந்து அதன் காரணமாகத் தலைவலி உண்டாகும்.

இதுபோன்ற தலைவலிகளுக்கு அமைதியாக படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டாலே சரியாகி விடும். அல்லது நீங்கி விடும். அல்லது மூக்கில் உள்ள தசைகளை மரத்துப் போகச் செய்யக் கூடியதாக உள்ள மருந்து களை மூக்கு சவ்வின் மீது சொட்ட விட்டால் அல்லது தேய்த்து விட்டால் தலைவலிகள் மறைந்து விடக்கூடும். சில சமயம் சொட்டு மருந்துகளையும் கூட பயன்படுத்தலாம். அப்படியும் குணமாகா விட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:14 am

தலைவலிகளின் அடிப்படை

பொதுவாக தலைவலிக்கு நரம்பியல் தூண்டல்களே காரணம் என்று முந்தைய வாரம் பார்த்தோம். இனி தலைவலி தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வோம்.

மூளையைச் சூழ்ந்து மெல்லிய ஜவ்வு போன்ற அமைப்பும், சிலந்தி வலை போன்ற அமைப்பை உடைய ஜவ்வும் காணப்படுகிறது. இந்த ஜவ்வுகளில் வலியைத் தோற்றுவிக்கும் நரம்புகள் குறைவு. இந்தக் காரணத் தால் இத்தகைய ஜவ்வுகளை வெட்டினாலோ, இழுத்தா லோ வலி ஏற்படுவதில்லை. ஆனாலும் ஜவ்வுகளின் அடியில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தக்கசிவு உண்டானால் அல்லது அந்த இடத்தில் நுண்ணுயிர்கள் சேர்வதால் ஏற்படும் அழற்சி காரணமாக இந்த ஜவ்வு களில் அமைந்திருக்கும் நரம்புகள் வலியுணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த சமயத்தில் தலையில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

இது போக மூளையைச் சுற்றிலும் ஒருவித முரட்டுச் ஜவ்வு காணப்படுகிறது. இந்தச் ஜவ்வின் சில பகுதி களில் வலியுணர்வு நரம்புகள் உள்ளன. அதே நேரம் சில இடங்களில் மட்டும் இத்தகைய நரம்புகள் இருக்காது. வலியுணர்வு நரம்புகள் அமைந்துள்ள பகுதியில் ஏதாவது நோய் ஏற்பட்டாலும், எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு எலும்பு முறிந்து மேற்கண்ட ஜவ்வு கிழிந்தாலும் அல்லது நுண்ணுயிர்கள் சேர்வதன் காரணமாக அழற்சி ஏற்பட்டாலும், அல்லது கட்டி போன்றவைகள் தோன்றினாலும் தலைப் பகுதியில் கடுமையான வலி தோன்றும்.

கழுத்தைச் சுற்றிலும் பின்னிய நிலையில் நரம்புகள் அமைந்து உள்ளன. இந்தப் பகுதியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலம் தலைவலி உணர்வு ஏற்படலாம். நடுக் காதில் சீழ்ப்பிடித்தாலும் மூக்கைச் சுற்றிய காற்றறை களில் அழற்சி ஏற்பட்டு சீழ்ப் பிடித்தாலும் கூட தலையில் வலி இருக்கும்.

சில நேரங்களில் முகத்தில் தோன்றும் பருக்களை சிலர் கிள்ளி விடுவார்கள். இதன் காரணமாக கிள்ளப்பட்ட இடத்தில் புரையோடி விடும். அப்பொழுதும் தலைவலி தோன்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:16 am

எளிய தலைவலிகள்

தலைவலி ஏற்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உண்டு. அதுபோல பலவிதமான சூழ்நிலைகளும் காரணமாக அமைவது உண்டு. தலைவலி ஏற்படும் போதெல்லாம் ஆஸ்ப்ரோ, ஆஸ்பிரின் மாத்தி ரைகளை உட்கொண்டு விட்டால் போதும், தலைவலி குணமாகி விடும் என்று நினைக்கக் கூடாது. என்ன காரணத்தினால் தலைவலி ஏற்பட்டு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சரியான மருந்தை உட்கொண்டால்தான் தலைவலி குணமாகும். சகட்டு மேனிக்கு ஏதாவது ஒரு மாத்திரை யை உட்கொண்டு விடுவதாலேயே தலைவலி குணமாகி விடும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

நமக்கு எந்தவிதமான பிணிகள் ஏற்பட்டாலும் நாமாகச் சிகிச்சை அளித்துக் கொள்வது சரியான பழக்கம் இல்லை. நோய் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் மருத்துவரையோ, மருத்துவமனைகளையோ நாடி அவர்கள் ஆலோசனைப்படிதான் சிகிச்சை மேற் கொள்ள வேண்டும் என்றhலும் என்ன காரணத்தினால் நமக்கு நோய் ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஓரளவுக் காவது தெரிந்து கொண்டால் டாக்டர்களை சந்திப்ப தற்கு முன்பாக உபசாந்தியாக ஏதாவது ஒரு முதல் சிகிச்சை செய்து கொள்வது சாத்தியமாகும்.

சிலவகை நோய்களை மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமலேயே உபசாந்தியாக சில நடைமுறை களைக் கையாண்டு குணப்படுத்திக் கொள்ள முடியும்.

உதாரணமாக மன உளைச்சல் காரணமாக, எதிர் பாராத பதட்டம் காரணமாக தலைவலி உண்டாகக் கூடும். இந்த மாதிரி சமயங்களில் மன நிலையை அமைதிப்படுத்திக் கொண்டாலே தலைவலி குணமாகி விடும். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் காபி அருந்தாவிட்டால் தலைவலி ஏற்படும். அதுபோன்ற தலைவலிக்கு மருந்து தேட வேண்டிய அவசியமே இல்லை. சூடாக கொஞ்சம் காபி குடித்தாலே போதும் தலைவலி பறந்து விடும்.

அஜீரணக் கோளாறுகள் காரணமாகச் சிலருக்கு தலை வலி ஏற்படும். அப்போது அஜீரணத்தை அகற்றுவதற்கு உண்டான நடைமுறைகளை மேற்கொண்டால், அல்லது ஒருவேளை பட்டினி இருந்தால் தலைவலி மறைந்து விடும்.

இவ்வாறு மிக எளிய காரணங்களுக்காக ஏற்படும் தலைவலிகளை நமக்கு நாமே சரிப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் தலைவலி ஏற்பட்டதற்கான கார- ணத்தை மட்டும் தெளிவாக விளங்கிக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:18 am

தலைவலிகள் தோன்றுவது ஏன்?

நம்முடைய உடலில் பல்வேறு சந்தர்ப்பங் களில், பல்வேறு உறுப்புகளில் காரணத்துடனோ, காரணமின்றியோ வலிகள் உண்டாவது வழக்கம். இந்த இடத்தில் வலிகள் என்று சொன்னால் அதுவே ஒரு நோய் என்று நம்பி விடுகிறோம். முதலில் உடலின் எந்த உறுப்பில் வலி ஏற்பட்டாலும் அதுபற்றி நாம் பதட்டம் அடை கிறோம். கவலைப்படுகிறோம். ஏதோ ஒரு கடுமையான நோய்க்கு இலக்காகி விட்டதாக அஞ்சி விடுகிறோம். வலி சின்னதாக இருந்தாலும் பெரிய வலியாக நினைத்துக் கொண்டு தாங்க முடியாமல் வேதனைப் படுகிறோம்.

உடலின் இயக்கத்தில் தற்செயலாக ஏற்படும் கோளாறு காரணமாகவும் வலி உண்டாகலாம். அல்லது உள் உறுப்புகளில் ஏதோ ஒன்று நோய் வாய்ப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறியாக கூட அந்த வலி இருக்கலாம். உதாரண மாக மார்பின் இடதுப் புறத்தில் வலி உண்டானால் உடனே மார்புப் பகுதியில்தான் கோளாறு இருக்க வேண்டும் அவசியமில்லை. இரைப்பையில் தோன்றும் அழற்சி கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் வலி ஏற்பட்டிருக்கிற உறுப்புகளில் மட்டுமே ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று முடிவு கட்டிவிடாமல் வலிக்கான காரணம் என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொள்ள முயல வேண்டும். பொதுவாக நம்முடைய உடலில் தோன்றக் கூடிய வலி உணர்வுகள் இயற்கை நமக்கு அளிக்கும் எச்சரிக்கை உணர்வுகள் ஆகும்.

இதுபோன்று உடலின் பிற உறுப்புகளில் எழும் வலி உணர்வுகளை எல்லாம் நாம் அறிந்துணர உதவி செய்யும் மூளை, தனக்குள்ளேயே எழும் வலியுணர்வை அறிந்து கொள்ள முடியாததாக உள்ளது. நாம் ஒருவருடைய தலையில் அறுவைமுறை மூலம் மூளைப் பெட்டகத்தைத் திறந்த பிறகு மூளையை வெட்டினாலும், குத்தினாலும் அவருக்கு அதனால் வலி ஏற்படுவதில்லை. எனவேதான் மூளை சம்பந்தப்பட்ட சில அறுவை முறைகளை நாம் நோயாளிகளுக்கு மயக்கம் கொடுக்கா மலேயே, அவர்கள் நினைவுடன் இருக்கும்போதே செய்து முடிக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:18 am

நரம்பு முனைகளின் மூலம் உடலுக்குள் புகும் வலி உணர்வுகள், நரம்பு நார்களின் வழியே செலுத்தப் பெற்று நம்முடைய உடல்பகுதிகளின் பெரிய நரம்புகளைச் சென்றடைகிறது. இதிலிருந்து நமது தண்டுவடம், மூளை முதலியவற்றிற்கு வலியுணர்வு செலுத்தும் இந்த பெரிய நரம்புகள் உடலின் பல்வேறு மட்டத்திலுள்ள பல உறுப்புகளிலிருந்தும் நரம்புச் செய்திகளைப் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக நம் நெஞ்சுக் கூட்டைச் சேர்ந்த தசை எலும்புகளிலிருந்து வரும் வலியுணர்வு நரம்புகளும், நமது இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளில் இருந்து வரும் வலியுணர்வு நரம்புகளும் ஒரே இடத்தில் நம் தண்டுவடத்தைச் சென்றடைகின்றன. இது போலவே நமது முகத்தைச் சார்ந்த தோல் பரப்புகளிலிருந்து வரும் வலியுணர்வு நரம்புகளும் ஏறத்தாழ ஒரே பகுதியில் தலைப்புறப் பெரிய நரம்புகளையும் மூளை யையும் சென்றடைகின்றன.

இயற்கையின் இவ்வகை அமைப்பினால் நோய்களின் போக்கில் சின்னக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலின் உள்ளுறுப்புகளில் நோய் எழுந்து அதன் விளைவாக வலி ஏற்பட்டால் அந்த வலியுணர்வு குறிப்பிட்ட நரம்புகளின் வழியே குறிப்பிட்ட நரம்புச் சந்தியை அடையும்போது அதே நரம்புச் சந்திக்கு வந்தடையும் மேல் தோல்புற வலியுணர்வு நரம்பு களும் அங்கு வந்து சந்திக்கின்றன. எனவே உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோயினால் தோன்றும் வலியானது அந்தந்த உறுப்புகளைச் சார்ந்த தோல் புறப்பகுதியில் தோன்று வது போல நமக்கும் தெரியும். இதனை வேறிடத்து உணரப்படும் வலி என்று சொல்கிறார்கள்.

இந்த உண்மை தலைவலியைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பல்நோய், தொண்டை நோய், காது நோய் முதலியவற்றால் எழும் வலியானது தலைவலி போல உணரப்பட வாய்ப்பு உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:19 am

ஒற்றைத் தலைவலி எப்படி ஏற்படுகிறது?


தலையில் ஏதாவது ஒரு பகுதியில் மெல்லிய காயம் ஏற்பட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விட்டாலும் தலை முழுவதிலும் வலியுணர்வு தோன்றும். சாதாரண மாக மண்டை ஓட்டு எலும்புக்கு வலியை உணரும் சக்தி கிடையாது. ஆனாலும் அந்த எலும்பின் உள்ளும், புறமும் ஒட்டியுள்ள தசைப்பகுதியில் நரம்புகள் செறிந்து உள்ளன. இந்தப் பகுதியில் ஏதாவது அழற்சி ஏற்பட்டாலும் தாங்க முடியாத தலைவலி உண்டாகும்.

மண்டை ஓட்டுக்கு வெளியில் இருக்கும் ரத்தக் குழாய் களைச் சுற்றிலும் நரம்புகள் வலைப்பின்னல் போல அமைந்து இருக்கின்றன. இந்த நரம்புக் குழாய்கள் திடீரென சுருங்கினாலும் பிரிந்தாலும் கடுமையான தலைவலி ஏற்படும். இந்தக் காரணத்தால் உண்டாகும் வலி நெற்றியின் முன் பக்கத்தில் உணரப்படுவதால் இதை ஒற்றைத் தலைவலி என்று கூறுவார்கள்.

சில நேரங்களில் பக்கவாதம் வருவதற்கு முன் கடுமை யான தலைவலி ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் மூளையின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்படுவதுதான். ரத்த அழுத்த நோய் ஏற்படுவதன் காரணமாகவும் தலைவலி தோன்றலாம்.

இவற்றை வைத்து தலைவலி ஏற்படுவதற்கு ஒரே ஒரு காரணம் இல்லை. பலவிதமான காரணங்களாலும் பல வகையான தலைவலிகள் வரலாம் என்பதை உணர முடிகிறதல்லவா?

தற்காலத்தில் மனிதர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்க வேண்டி இருப்பதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மன அளவில் உண்டாகும் இந்த பாதிப்புக்கும் தலைவலிக்கும் நெருக்கமாக தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 25, 2008 1:21 am

மன அழுத்தமும் தலைவலியும்


எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர் பார்த்த வண்ணம் அவனுடைய வாழ்க்கை ஓட்டம் அமைந்து இருக்கிறது. இப்படி எந்நேரமும் ஓய்வு இல்லாமல் பரபரப்பாக செயல் படுவதால் உடலில் உள்ள உணர்ச்சி நரம்புகள் தீவிரமான மன அழுத்த நிலையை அடைந்து விடுகின்றன. இதன் எதிரொலியாக தலைப்பகுதியில் ரத்த ஓட்டச்செயலில் குழப்பம் ஏற்பட்டு அதனால் தலைவலி ஏற்படும்.

பொதுவாக தலைப்பகுதியில் ரத்த ஓட்டக் குழாய்களில் ஏற்படும் கோளாறு காரணமாகவே ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

உடலில் காய்ச்சல் ஏற்பட்டால் அதன் முன் அறிகுறி யாகத் தலைவலி ஏற்படுவதுண்டு.

பட்டினி கிடக்க நேர்ந்தாலும் தலையில் வலி தென்படும்.

இப்படி பல காரணங்களால் தலைவலி தோன்றலாம்.

இதுபோன்ற சாதாரண காரணங்களால் ஏற்படும்; தலைவலிகள் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே இருந்து விட்டு பிறகு மறைந்து போகும். இப்படி இல்லாமல் லேசான சிகிச்சைகளை மேற் கொண்டும் தலைவலி குறையாமல் தொடர்கிறது என்றால் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக நோயின் அறிகுறி என்று கருத வேண்டும் அந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு டாக்டர்களையோ, மருத்துவமனைகளையோ அணுகி நோயின் உண்மை நிலையை கண்டறியும் வண்ணம் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில நேரம் தலைக்குள் கட்டியோ அல்லது புற்றுநோய் தொடர்பான அறிகுறியோ ஏற்படும் தொடக்க நிலையை தலைவலிகள் உணர்த்தும். அதைப் போய் சாதாரண தலைவலி என்று நினைக்கக் கூடாது. ஆழமான பரிசோதனைக்குப் பிறகுதான் தலைக்குள் உள்ள கட்டி போன்ற பிணிகள் தீவிரமடைந்து இருப்பது தெரிய வரும்.

ஆகவே தலைவலிகள் நீண்ட காலமாக நீடித்தால் கேள்விப்பட்ட மருந்து- மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு காலத்தை தள்ளாமல் அவசர புத்தியுடன் செயல்பட்டு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதால் பெரிய பெரிய நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக