புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
21 Posts - 66%
heezulia
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
63 Posts - 64%
heezulia
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_m10என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 12:46 pm

சாதிக் மரணம் தற்கொலையே

என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Sadiq_batcha

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய உறவினர் சாதிக்பாட்சா இவர் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
சாதிக்பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்து வதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக தடயவியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். சாதிக்பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த அவர்கள் இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டது உறுதி யானது. இது தொடர்பான அறிக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னியுங்கள் மனிதநேயம் - உண்மை செயதி

ஆமினா பஹ்ராமி என்பது அந்த அழகிய பெண்ணின் பெயர். ஈரானைச் சேர்ந்தவர். அதே நாட்டுக்காரனான மாஜித் முவஹிதி என்னும் வாலிபன் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனுடைய கோரிக்கையை, தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார் ஆமினா. என்னதான் முயன்றும் ஆமினாவின் மனதை வெல்ல மாஜிதால் இயலவில்லை.

அழகுப் பித்துப் பிடித்த மாஜிதுக்குள் அழிவின் வன்மம் தலைத் தூக்கியது. தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பாத ஆமினாவை வேறு யாரும் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்த அவன் அடுத்து செய்ததோ குரூரம். ஆமினாவின் முகத்தின் மீது திராவகத்தை வீசியடித்தான் அந்தக் கயவன். உடலும், தலையும் எரிய, முகம் முழுவதுமாகச் சிதைந்து விகாரமடைந்தார் ஆமினா. அதைவிட, இரு கண்களின் பார்வையும் முழுவதுமாகப் பறி போனது. இது நடந்தது 2004ஆம் ஆண்டு.

ஈரான் காவல்துறை மாஜித் மீது வழக்குப் பதிவு செய்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 2008 நவம்பரில் தீர்ப்பு வந்தது. “கியாஸ்” எனப்படும் இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாய்வின் அடிப்படையில் அந்தத் தீர்ப்பு பாதிப்புக்குள்ளானவரின் விருப்பத்தைக் கேட்டு அமைந்திருந்தது. அதாவது, ஆமினா நாடினால் தன் அழகை அழித்து வாழ்க்கையைச் சீரழித்தவனை மன்னிக்கலாம். மாறாக அவனும் வேதனைப்பட வேண்டும் என்று அவர் கருதினால், தண்டனை தரும் நோக்கில் ஆமினாவின் பார்வையைப் பறித்ததற்குப் பகரமாக மாஜிதுடைய ஒரு கண்ணில் சில அமில ரசாயன சேர்க்கைகளை அரசாங்கத் தரப்பு மருத்துவர் செலுத்துவார். அது அவனுடைய ஒரு கண் பார்வையைப் பறிக்கும்.



மன்னிப்பா? தண்டனையா? பாதிக்கப்பட்ட ஆமினாதான் நீதி வழங்க வேண்டும் என்றது தீர்ப்பு.

இதுபோன்ற காரணங்களால் பெண்கள் மீதான அமில வீச்சு அதிகரித்திருக்கும் ஈரானில் இந்தத் தீர்ப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

தீர்ப்பின் பின்னர் வானொலி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த ஆமினா தீர்ப்பை மகிழ்ந்து வரவேற்றிருந்தார். “பழி வாங்கும் நோக்கம் இல்லையெனினும் தான் வேதனைப்பட்டது போல அவனும் வேதனைப்படவேண்டும்” என்றார் அவர்.

இழந்த பார்வையை மீட்கும் நோக்கில் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேடிச் சென்று வந்த ஆமினாவுக்கு ஆரம்பத்தில் 40 சத வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இறுதியில் அவரது பார்வை முழுவதுமாக பறிபோனதைத் தடுக்க முடியவில்லை.

இப்போது 34 வயதாகும் ஆமினாவின் விருப்பப்படி தீர்ப்பை நிறைவேற்றும் அந்த நாளும் வந்தது.

அதாவது, இஸ்லாத்தின் எதிரிகள் அடிக்கடி அங்கலாய்க்கும் ”கண்ணுக்குக் கண்”

மண்டியிடப்பட்டு அமர்த்தப்பட்டிருந்த, மாஜித் தலை குனிந்தபடி தேம்பித் தேம்பி அழுதபடியிருந்தான். தன்னுடைய சாத்தானியச் செயல் குறித்துப் பரிபூரணமாக அவன் வருந்தினான். இறை மன்னிப்பை யாசித்து உள்ளம் உருகிப் பிரார்த்தித்தபடி இருந்தான். மனித உரிமையின் மகத்துவத்தைச் சொல்லும் இஸ்லாத்தின் குரலான “பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை இறைவனும் மன்னிப்பதில்லை”எனும் நபிமொழியையும் அவன் அறிந்தே இருந்தான்.

மருத்துவரும் ஆயத்தமாக இருந்தார். குற்றவாளியான மாஜிதின் கண்ணொன்றில் சில சொட்டுகள் அமிலக் கலவை இடுவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே மீதமிருந்தன.

அப்போது ஒலித்தது ஆமினாவின் குரல். “அவனை விட்டுவிடுங்கள், அவனை விட்டுவிடுங்கள், நான் அவனை மன்னித்துவிட்டேன்”

இதயங்களைப் புரட்டக் கூடிய இறைவனின் கருணைதான் அங்கே ஆமினாவின் குரலாய் ஒலித்தது.

இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த செய்திதான் இது.

மாஜிதின் கண்களிலிருந்து இப்போதும் நீர் வழிந்தபடி இருக்கிறது. ஆனால் அதில் வன்மம், வக்கிரம் என்னும் திராவகங்களின் எரிச்சல் இல்லை. அதில் அன்பின் ஆனந்தம் வழிகிறது இப்போது.

மன்னிக்கப்பட்ட இதயத்திலிருந்து
ஊற்றெடுக்கிறது கண்ணீர்
மனிதத்தின் வேருக்கு நீராய்.

முதியவர் தற்கொலை - வாழ்வது அவ்வளவு கொடிதா?

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதியவர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



சங்கரன்கோவில் அருகேயுள்ள பாட்டத்தூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ராஜா கோவிலில் உள்ள கருப்பசாமி சிலை முன்பாக ஒரு முதியவர் படுத்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது கருப்பசாமி சிலை முன்பாக முதியவர் இறந்து கிடந்தார்.

அருகில் பிராந்தி பாட்டிலும், விவசாயத்திற்குப் பயன்படுத்தக் கூடிய குருணை மருந்தும் கிடந்தது. நீல நிறத்தில் கட்டம் போட்ட கைலியும், பிஸ்கட் கலரில் கோடு போட்ட சட்டையும், காப்பி கலரில் டவுசரும் அணிந்திருந்த அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் சீற்றம் மஸ்ஜிதுக்குள் வெள்ளம் புகுந்தது

என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Sea_turbulence1

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள மசூதிக்குள் வெள்ளம் புகுந்து நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.



குமரி மாவட்டம், தேங்காய்ப் பட்டணம் கடற்கரை பகுதிகளில் நேற்று கடல் சீற்றம் காணப்பட்டது. கடல் அலைகள் 60மீட்டர் உயரத்திற்கு எழும்பியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகுகள் மாயமானது.

தேங்காய்பட்டணம் புத்தன்துறை சாலையில் கடல் நீர் புகுந்து நாசப்படுத்தியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

தேங்காய்பட்டணம் கடற்கரையில் இருந்த மசூதி ஒன்றுக்குள் கடல் நீர் புகுந்து நாசப்படுத்தியது. அப்பகுதியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கடற்கரையோர மீனவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். மீனவர்கள் இரவில் வீட்டில் தங்க பீதி அடைந்து சர்ச் வளாகத்தில் தங்கி வருகின்றனர்.

கடல் சீற்றம் சற்று குறைந்திருப்பினும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லை.

என் சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவையே: மு.க.அழகிரி

என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Azhagiri2

நான் மற்றும் என் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவைதான் என மத்திய அமைச்சர். மு.க. அழகிரி கூறியுள்ளார். ஊடகங்கள் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க. அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.

என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுரையில் தொடங்கப்படும் சர்வதேச விமான போக்குவரத்து


விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என இந்திய விமான ஆணைய தலைவர் அகர்வால் கூறியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால் ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகனை ஆய்வு செய்த அகர்வால், விரிவாக்கப் பணிகளை விரைவாக செய்து முடிக்கவும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுடன் விமான நிலைய ஆணையகத்தில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால், சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் கடந்த ஆண்டே முடிந்து இருக்க வேண்டும். ஆனால் நிலங்களை கையகப்படுத்தல், விரிவாக்க பகுதிகளில் இருந்த பாறைகள் அகற்றல், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் கால தாமதம் ஏற்பட்டது.

தற்போது இந்த பணிகள் முடிந்து கட்டுமான பணிகள் விரைவாக நடப்பதால் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் உள்நாட்டு முனையத்தின் பணிகள் முடிக்கப்பட்டுவிடும். பன்னாட்டு முனையத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

ஸ்ரீபெரும்புத்தூரில் 2ஆவது விமான நிலையம் அமைக்க விமான ஆணையகம் தயாராக உள்ளது. ஆனால் இதற்கான இடங்களை மாநில அரசு கையகப்படுத்தி எங்களிடம் ஒப்படைத்த பிறகு தான் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்க முடியும்.

மதுரை விமான நிலையம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு ஒராண்டு ஆகிறது. ஆனால் இன்னும் அங்கு பன்னாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பன்னாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்றால் சுங்க தீர்வை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

சுங்க தீர்வை அலுவலகம் அமைக்க மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை அனுப்பி இருந்தோம். இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்று அனுமதி வழங்கி உள்ளது. மதுரை விமான நிலையத்தில் சுங்க தீர்வை அதிகாரிகள் அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்ததும் விரைவில் பன்னாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Aஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Bஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Dஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Uஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Lஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Lஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  Aஎன்ன சேதி இன்னிக்கு ....மஞ்சரி  H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 08, 2011 12:57 pm

ஆமினா பஹ்ராமி தனக்கு இந்த நிலையை ஏற்படுத்திய அவனை மன்னித்து அவனுக்கு சரியான தண்டனையை வழங்கிவிட்டாள் .ஆமினா பஹ்ராமி கருணை உள்ளதிற்கு தலை வணக்குகின்றேன் .







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக