புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
32 Posts - 51%
heezulia
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
74 Posts - 57%
heezulia
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
என் குரலை கேளுங்கள்  Poll_c10என் குரலை கேளுங்கள்  Poll_m10என் குரலை கேளுங்கள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குரலை கேளுங்கள்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 29, 2011 9:01 pm

(கட்டுரையாளர் : பேரறிவாளன் , ராஜிவ் கொலைக் குற்றவாளி )


அனைவருமே எதிர்த்து நின்றாலும்

சரியானவை சரியானவையே!

அனைவருமே ஆதரித்து நின்றாலும்

பிழையானவை பிழையானவையே''
உண்மை
வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும்
வில்லியம் பென்னின் இந்த சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம்
நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.

அன்புமிக்க
மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம்
செய்துகொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை
உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம்
செய்துகொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என
கருத்தூட்டி வளர்த்த தாயின் தவப்புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா எனத்
தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம்
இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது
திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ்காந்தி கொலை வழக்கின் தூக்குத்தண்டனைக்
கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.

20
ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போல் சாதாரண மனிதனாக வீதிகளில்
அலைந்துகொண்டிருந்த மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக
சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக்கூட அல்ல, ஒரு மனிதனாக சக
மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும்
கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.

உங்களுக்கு
ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த
நிலையிலும் ராஜிவ்காந்தியை மட்டுமல்ல எந்த மனிதரையுமே கொல்ல
கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதி பார்த்ததும் இல்லை.
நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும்
பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்திரிக்க ஆதிக்க சக்திகளுக்குக்
கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள்கொடி உறவாம் ஈழத்தழினம் மேற்கொண்ட
தற்காப்புப் போர்மீது கொண்ட என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.

மின்னணுவியல்
மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி (ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ
ணிறீமீநீtக்ஷீஷீஸீவீநீs ணீஸீபீ சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ) முடித்திருந்தேன்
என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19
வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால்
சித்தரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு
செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக
இருந்து 2005ம் ஆண்டு ஓய்வுபெற்ற நடுவண் புலனாய்வுத்துறையின் துணைக்காவல்
கண்காணிப்பாளர் (ஞிஷிறி/சிஙிமி) கே. ரகோத்தமன்.

ராஜிவ்கொலையில் கைது
செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு 'தடா' சட்டத்தின்கீழ் ஒப்புதல்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும்
பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல்
கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த
அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993ம் ஆண்டு நடந்த அபயா
கொலையினை 'தற்கொலை' என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவருக்குக்
கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே
துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு அக்கொலை வழக்கு
துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு
அருட்சகோதரியின் வழக்கிலே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார்
செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம்
ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட
கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்துவருகிறது. ஜெயின் கமிஷன்
அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு
மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு
வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிலும் சரி இதைவிட
மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டுவரப்பட்ட
தடா எனும் கொடூர சட்டத்தை துணைகொண்டு ஒரு பெருங்கதை என்போன்ற
அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ்காந்தி கொலை
வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவிற்கு வந்த
பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை
தண்டித்துவிட்டது. தனக்கு 'மாமூல்' தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை
கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதியென அறிவித்து 'தடா' சட்டத்தின் கீழ்
சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள்
மறந்திருக்கமாட்டீர்கள்.

சாதாரண பெட்டிக்கடையில் கிடைக்கும் 13
ரூபாய் மதிப்பிலான 'ஐ' வோல்ட் பேட்டரி செல் இரண்டு வாங்கி தந்ததற்காக ஒரு
மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப்
பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற
ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில் அரண்மனைக் கோமான்களைக்
காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்துகிடக்கிறேன்.

எனது வழக்கில்
மூடிமறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் "தூக்குக்
கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" (கிஸீ கிஜீஜீமீணீறீ யீக்ஷீஷீனீ
tலீமீ ஞிமீணீtலீ ஸிஷீஷ்) என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு இதுவரை
தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது.
தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில
மொழியில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு
மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிகத் தாமதமாகவேனும் உண்மைக்குக்
கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.

உச்சநீதிமன்றத்தின்
ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர்.
கிருட்டிண அய்யர் எனது குற்றமற்ற தன்மையை புரிந்துகொண்டு மேதகு குடியரசுத்
தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக
முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள்
எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை
உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும்
எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர்
பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த
அருமருந்தாகும்.

எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ராஜிவ்காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல, அவரை
மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம்
ராஜிவ்காந்தியின் உயிர்ப்பலிக்கு ஈடாக அக்குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத
குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு
மனிதநேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின்
உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளை திருப்புங்கள். "தர்மத்தின்
வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்ற முன்னோர் வாக்கு
உண்மையெனில் என் தரப்பு உண்மைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள்
உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில் அப்போது எனது விடுதலைக்காக உங்கள் வலிமையான
குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக்குமுறலை உலகம்
புரிந்துகொண்டது என வரலாறு குறிக்கட்டும். நீதி வெல்லட்டும்.


நன்றி: த சன்டே இந்தியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக