புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
5 Posts - 4%
prajai
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
4 Posts - 3%
Jenila
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
2 Posts - 2%
jairam
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
2 Posts - 2%
kargan86
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
9 Posts - 5%
prajai
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
6 Posts - 3%
Jenila
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_m10தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுமாற்றத்தில் சமச்சீர் கல்வி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 29 Jun 2011 - 22:22

கல்வியாளர்களின் கனவுத் திட்டமாக முன்வைக்கப்பட்ட சமச்சீர் கல்வி இன்று
முட்டுக் கட்டையை எதிர்கொண்டிருக் கிறது. அதிமுக அரசு பதவியேற்றதும் நடந்த
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தரம்
குறைந்தவையாக இருப்பதால் அதை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதுவரை இதன்
அமலாக்கம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சமச்சீர்
கல்விக்காக பாடுபட்டுவந்த கல்வியாளர்கள் பதற்றமடைந்தனர். மாணவர்களும்
பெற்றோர்களும்கூட குழம்பிப்போனார்கள். ‘‘ஏற்கெனவே பத்தாம் வகுப்புப்
பாடப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்ட மாணவர்கள்
தடுமாறிப்போய்விட்டார்கள்’’ என்கிறார் சமச்சீர் கல்விக்கான மாநில மேடையின்
பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. சுமார் 200 கோடி ரூபாய்
மதிப்பிலான பாடப்புத்தகங்களை அச்சடித்து முந்தைய திமுக அரசு
வைத்திருந்தது. இப்போது அவையெல்லாம் வீண். மீண்டும் பழைய பாடப்புத்தகங்களே
திரும்ப அச்சிடப்பட்டு, அதன் காரணமாக பள்ளிகள் திறப்பதும் தள்ளிப்
போயிருக்கிறது.
‘‘சமச்சீர் கல்வி ஓராண்டு தள்ளிப் போகும் என்று
கருதப்பட்டாலும்கூட, இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வாதாடிய
அரசு வழக்கறிஞர், பலவிதமான கல்விமுறைகள் இருந்தால்தான் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் அதில் தேர்வுசெய்யும் வாய்ப்பு இருக்கும் என்று
வாதாடினார். இதைப் பார்த்தால் சமச்சீர் கல்வி வருமா என்பதே சந்தேகமாக
இருக்கிறது’’ என்கிறார் கல்வியாளரான பேராசிரியர் கல்யாணி.
‘‘சமச்சீர்கல்வி
என்பது வெறும் பாடத்திட்டம் மட்டுமல்ல. பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை
மேம்படுத்துவது, வசதிகளை மேம்படுத்துவது போன்ற எல்லாமும்தான். ஒரே நாளில்
இதை கொண்டுவரமுடியாது. இது ஒரு செயல்திட்டமாக தொடர்ந்து செய்யப்
படவேண்டியது. இப்போதைக்கு அதை அமல்படுத்திவிட்டு, தேவையான திருத்தங்களைச்
செய்துகொண்டே போகலாம்’’ என்று சொல்கிறார் பேராசிரியர் கல்யாணி. சமச்சீர்
கல்வி அமல்படுத்துவதை நிறுத்தியிருப்பதை வரவேற்கிறார் மெட்ரிக் பள்ளி
கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் செயிண்ட் ஜான் மேல்நிலைப்பள்ளியின்
தாளாளர் ராஜா. ‘‘கல்வியில் பொதுவாக அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால்
சென்ற ஆட்சியில் நிறைய தலையீடு இருந்தது. சென்ற ஆண்டு சமச்சீர் கல்வி
பாடத்திட்டங்களை அறிமுகப் படுத்திய போது அதிலுள்ள பாடங்களை மூன்று
மாதங்களுக்குள்ளாகவே எங்கள் பள்ளி மாணவர்கள் படித்து முடித்துவிட்டார்கள்.
இதே நிலை தொடர்ந்திருந்தால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு மாணவர்களின்
எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கும். நிறைய மாணவர்கள் இந்த
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தால், சிபிஎஸ்சி பாடத்திட்டம் உள்ள
பள்ளிகளுக்குச் செல்லும் மனநிலை க்கு வந்துவிட்டார்கள். நிறைய மெட்ரிக்
பள்ளிகளும் சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பிக்கும் நிலை
ஏற்பட்டிருந்தது’’ என்கிறார்.
மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பின்
பொதுச்செயலாளர் கிறிஸ்துதாஸ், சமச்சீர் கல்வியின் தரம் பிராந்திய அளவிலேயே
இருக்கிறது என்கிறார். ‘‘சமச்சீர் கல்வியில் எல்.கே.ஜிக்கான பாடத்தை முதல்
வகுப்பில் கற்றுத் தருகிறார்கள். மெட்ரிக் பாடத்திட்டத்தில் 4, 5 ஆம்
வகுப்பில் கற்றுத்தந்ததை இதில் 6ஆம் வகுப்பில் கற்றுத் தருகிறார்கள்.
பத்தாம் வகுப்பில் உயிரியலில் 14 பாடங்கள் இருந்த இடத்தில் 8 பாடங்களே
உள்ளன. இதே நிலை தொடர்ந்திருந்தால் எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு
இணையான தரத்தில் மாணவர்கள் உருவாக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்’’
என்கிறார்.
ஏழைக்கொரு கல்வி; பணக்காரர்களுக்கொரு கல்வி என்று
இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்று கல்வியாளர்கள்
வலியுறுத்துகிறார்கள். தற்போதைய பாடத்திட்டத்தில் கலைஞரின் கவிதை
இடம்பெற்றிருப்பதுதான் அதிமுக அரசுக்குப் பிரச்னை என்றால் அதை
எடுத்துவிட்டு இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டுப் போகலாமே
என்கிறார்கள் அவர்கள்.
சமச்சீர் கல்வி ஆதரவாளரும் அதன் பாடத்திட்ட
தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றவருமான பேராசிரியர் ச.மாடசாமி, ‘‘கடந்த
1970களுக்கு முன்பு வரை தமிழகத்தில் இத்தனை பிரிவுகள் கிடையாது. அரசுப்
பள்ளிகள் அல்லது அரசு உதவியுடன் செயல்படும் பள்ளிகள் என்றுதான் இருந்தன.
நானும் அதில்தான் படித்தேன். எல்லோருக்கும் ஒரேவிதமான பாடநூல்தான்
இருந்தது. இன்று இருக்கிற அறிஞர்கள், கல்வியாளர்கள். பிரபலமானவர்கள் என
பலரும் இந்தப் பள்ளிகளில் ஒரே பாடநூல்களைப் பயின்று வந்தவர்கள்தான். ஆனால்
அதன்பிறகு பணம் வாங்கும் பள்ளிகள் அதிகரித்தன. இதனால் படிக்கும்
மாணவர்களிடையே ஒருவித ஏற்றத்தாழ்வு. மேலும் ஏழைக் குழந்தைகளுக்கு அதிக
பாதிப்பு ஏற்பட்டது’’ என்கிறார்.
‘‘நான் ஆறாம் வகுப்புக்கான
சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவில் இருந்தேன். முக்கிய கல்வியாளர்கள்.
சமூகவியலாளர்கள் எனப் பலரிடம் பேசி பாடங்களை எழுதித் தரச் செய்தோம்.
பாடநூல்கள் அனைத்தும் தரமான ஒன்றாக வெளிவந்தன. முக்கியமாக அந்தப்
பாடநூல்களில் அழகான சிற்பங்கள், படங்கள் போட்டனர். படங்கள் மூலம்
பாடங்களைப் புரியவைப்பது என்பது இருந்தது. பிறகு ஏழு, எட்டு, ஒன்பது,
பத்தாம் வகுப்புக்கான பாடநூல்கள் தயார் செய்யப்பட்டன. எனக்குத் தெரிந்து
எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பாடநூல் ரொம்பவே பிடித்திருந்தது.
நேர்மையாக ஒரு சர்வே எடுத்துப் பாருங்கள். இந்தக் கல்வித் திட்டத்திற்கு
மாணவர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பது தெரியும்’’ என்று மாடசாமி
கூறுகிறார்.
‘‘150 கல்வியாளர்கள் ஓர் ஆண்டுக்காலம் உழைத்து தயார்
செய்த பாடத்திட்டம் இது. தரக்குறைவாக உள்ளது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள
முடியாது. சில குறைகள் இருந்தாலும் நல்ல விஷயங்கள் அதில் உள்ளன.
பொதுப்பள்ளிகள் மாநிலம் முழுக்க இருக்கவேண்டும் என்பதுதான் தமிழகக்
கல்வியாளர்களின் நோக்கம். இதற்குப் பொதுப்பாடத்திட்டம் என்பது முதலடி. அதை
நிகழ்த்துகிற சமச்சீர் கல்வித்திட்டதை நிறுத்துவது சரியல்ல’’ என்கிறார்
அ.மார்க்ஸ்.
இப்போதைக்கு பெரிய பிரச்னையாக எல்லோரும்
ஒப்புக்கொள்வது அரசுப் பள்ளிகளில் தரம் மோசமாக இருக்கிறது என்பதே.
‘‘எல்லாப் பணிகளுக்கும் தகுதித் தேர்வு வைத்து ஆட்களை எடுக்கிறார்கள்.
ஆனால் ஆசிரியர் பணிக்கு மட்டும் அதற்கான படிப்பை முடித்தாலே
எடுத்துக்கொள்கிறார்கள். இதையெல்லாம் சரிசெய்வதும் இந்த சமச்சீர் கல்வியின்
அங்கமாக இருக்கவேண்டும். காமராஜர் காலத்தில் 20 மாணவர்களுக்கு ஓர்
ஆசிரியர் என்று கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால் இன்று வசதிகள் பெருகி விட்டன.
ஆனால் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைதான் இருக்கிறது’’ என்று
வருத்தப்படுகிறார் கல்யாணி.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர்
வீட்டுக்குழந்தைகள் என்றைக்கு தனியார் பள்ளிகளை விட்டு அரசுப் பள்ளிகளில்
படிக்க வருகிறார்களோ அன்றுதான் இந்த பொதுப்பள்ளிகளின் தரம் உயரும். ஏனெனில்
அவர்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவாவது பொதுப் பள்ளிகளின் தரம்
உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதே...

த சன்டே இந்தியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக