புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 5:19 pm

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!' என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்' என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்...

"இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்' என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்' என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்' என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்' என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..''- என்கிறார், அவர்.

"திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை' என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.

பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்' எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்' என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா' என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?' என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை'' -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 5:20 pm

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

"மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்... ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ'' என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே' சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு' என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்' என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?' என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 5:21 pm

தட்டிக்கழிக்க பல காரணங்கள்...

"இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?' என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?' என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்' என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்'. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை' என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்' என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்'. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ' என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது''- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

"நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?', `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்' என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

தினதந்தி

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 5:21 pm

நல்லவேளை எனக்கு திருமணம் ஆகிவிட்டது !! ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 28, 2011 5:44 pm

இல்ல சிவா நீங்க சொல்லி இருக்கறது மாதிரி நூத்துல பத்து பேர்தான்
அதுவும் மிகவும் வளர்ந்த நகரங்களில் மட்டும்தான் நடக்கிறது.
இன்னிக்கும் வரதட்சணை என்ற பேய் பலரது வாழ்க்கைய கேள்வி குறி
ஆக்கிட்டு இருக்குங்கறது உண்மை.என்னதான் உயிருக்கு உயிரா காதலித்தாலும் பெத்தவங்க சம்மததோடு கல்யாணம் நடக்கிறது என்று சந்தோஷ பட்டாலும் கல்யாணம் என்று வரும்போது இந்த ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் பெத்தவங்க பேச்சை தான் கேக்குறாங்க.அவங்க வரதட்சணை கேக்கும்போது வாய திறக்க மாட்டேங்குராங்க.கல்யாணத்துக்கு முன்னாடி ஆணை பெத்தவங்க பண்ற அடாவடிய பாக்குற பொண்ணுக தனி குடித்தனம் வரனும்ன்னு அடம் பிடிக்கிறாங்க

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Uதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Dதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Aதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Yதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Aதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Sதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Uதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Dதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Hதிடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 28, 2011 6:09 pm

அருமையான கட்டுரை, திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 224747944

இதை நான் எனது சொந்த அனுபவத்தில் சந்தித்து இருக்கேன், எனது நண்பர்களும், தோழி கூறும் வரதட்சணை தான் நூத்துல பத்து. மேற்சொன்ன விஷயம் 90 சதவீதம் நடக்கிறது, எனது நண்பர்கள் சின்ன கிராமத்தில் கூட பெண் எடுக்க தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் நகரத்தில் விட்டு எதற்காக இங்கே பெண் எடுக்கின்றனர் என்ற கேள்வி கேட்கின்றனர். மேலும் வரதட்சணை கேட்கவில்லை என்றால் ஏதோ குறை உள்ளதாக கூறுகின்றனர். முதிர்கன்னிகளாக இருப்பதை தான் இன்றைய கன்னிகள் விரும்புகின்றனர். ஒரு பெண் வீட்டார் மாப்பிள்ளை பி. இ படிக்கவில்லை என்று, ஆனால் மாப்பிள்ளை பி.டெக். சொல்லுங்கள் பி.இ க்கும் பி.டெக். என்ன வித்தியாசம். இது போல் அற்ப காரணங்கள் கூறி கல்யாணத்தை தள்ளி போடுகின்றனர். மேட்ரிமோனி போயி பெண்கள் கேட்கும் கண்டிஷன் படியுங்கள். பெரும்பாலான ஆண்கள் அன்றில் இருந்து இன்று வரை கேட்கும் கண்டிஷன் ஹோம்லி, good looking, புதிதாக சேர்த்தது working/not working .

உத்யோகம் புருஷ லக்ஷணம் என்று கூறும் இவர்கள், பிள்ளை பெறுவதும், தாயின் அன்பும் பெண்ணின் கடமை என்பதை மறந்து விடுகின்றனர். இன்றைய பெரும்பாலான கன்னிகள் டிரைவர் வேலை பார்க்க ஒரு ஆளை தேடுகின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 28, 2011 9:14 pm

// ஒரு பெண் வீட்டார் மாப்பிள்ளை பி. இ படிக்கவில்லை என்று, ஆனால் மாப்பிள்ளை பி.டெக். சொல்லுங்கள் பி.இ க்கும் பி.டெக். என்ன வித்தியாசம். இது போல் அற்ப காரணங்கள் கூறி கல்யாணத்தை தள்ளி போடுகின்றனர்.//
பயம் பயம் பயம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 28, 2011 9:31 pm

சதாசிவம் wrote:அருமையான கட்டுரை, திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 224747944

இதை நான் எனது சொந்த அனுபவத்தில் சந்தித்து இருக்கேன், எனது நண்பர்களும், தோழி கூறும் வரதட்சணை தான் நூத்துல பத்து. மேற்சொன்ன விஷயம் 90 சதவீதம் நடக்கிறது, எனது நண்பர்கள் சின்ன கிராமத்தில் கூட பெண் எடுக்க தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் நகரத்தில் விட்டு எதற்காக இங்கே பெண் எடுக்கின்றனர் என்ற கேள்வி கேட்கின்றனர். மேலும் வரதட்சணை கேட்கவில்லை என்றால் ஏதோ குறை உள்ளதாக கூறுகின்றனர். முதிர்கன்னிகளாக இருப்பதை தான் இன்றைய கன்னிகள் விரும்புகின்றனர். ஒரு பெண் வீட்டார் மாப்பிள்ளை பி. இ படிக்கவில்லை என்று, ஆனால் மாப்பிள்ளை பி.டெக். சொல்லுங்கள் பி.இ க்கும் பி.டெக். என்ன வித்தியாசம். இது போல் அற்ப காரணங்கள் கூறி கல்யாணத்தை தள்ளி போடுகின்றனர். மேட்ரிமோனி போயி பெண்கள் கேட்கும் கண்டிஷன் படியுங்கள். பெரும்பாலான ஆண்கள் அன்றில் இருந்து இன்று வரை கேட்கும் கண்டிஷன் ஹோம்லி, good looking, புதிதாக சேர்த்தது working/not working .

உத்யோகம் புருஷ லக்ஷணம் என்று கூறும் இவர்கள், பிள்ளை பெறுவதும், தாயின் அன்பும் பெண்ணின் கடமை என்பதை மறந்து விடுகின்றனர். இன்றைய பெரும்பாலான கன்னிகள் டிரைவர் வேலை பார்க்க ஒரு ஆளை தேடுகின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.

எதார்த்தமான உண்மைகளை அழகாகக் கூறியுள்ளீர்கள்!

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Jun 28, 2011 9:33 pm

அருமையான கட்டுரை தலைவர் சிவா அவர்களே திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள், அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 677196

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jun 28, 2011 11:25 pm

உண்மை தான் சிவா அண்ணா, என்னுடன் படித்த நண்பருக்கு திருமணதிர்காக பெண் பார்க்கும் பொழுது ,மாட்ரிமோனி யில் வரன் தேடினார்கள் . என் நண்பர் மருந்து கம்பனி யில் ,மேலாளர் வேலை பார்க்கிறார் ,நல்ல வருமானம் ,மாதத்திற்கு அரை லட்சத்திற்கு சில ஆயிரம் குறைவு .அவரின் வீட்டில் எதிர் பார்த்தது நல்ல குணம் உள்ள பெண் . ஆனால் பெண்கள் கேட்டு இருப்பதோ மாதம் சம்பளம் 6 லட்சத்திற்கு மேல் வேண்டும் .கல்வி தகுதியில் , இருக்கின்ற அனைத்து படிபுகளைஉம் போட்டு உள்ளார்கள் .இத்தனைக்கும் பெண் படிதிருப்பது வெறும் இளங்கலை பட்டம் மட்டுமே ...
இதை நாம் என்னவென்று சொல்லுவது ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக