புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுச் செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:12 pm

பாகிஸ்தான் நிருபர் மீது தாக்குதல், காயத்துடன் தப்பினார்

பாகிஸ்தானில் கடந்த மே மாதம் தான் சையத் சலீம் ஷாசாத் என்ற நிருபர் காரில் சென்ற போது அவரை கடத்தி கொலை செய்தனர். அல்கொய்தா தீவிரவாதிகள் கடற்படைக்குள் ஊடுருவி உள்ளது பற்றி கட்டுரை எழுதினார். இதை தொடர்ந்து தான் அவர் கொலை செய்யப்பட்டார். இப்போது 2-வது நிருபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

வாக்கர் கியானி என்ற நிருபர், இங்கிலாந்து நாட்டின் கார்டியன் பத்திரிகைக்காக நிருபராக பணியாற்றினார். அவர் தன் காரில் சென்ற போது, அவரது காரை 4பேர் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் போலீஸ் சீருடையில் இருந்தனர். அவர்கள் கியானியின் காரை சோதனை போடவேண்டும் என்று கூறினார்கள். இதை தொடர்ந்து அவர் காரில் இருந்து இறங்கியதும் அவரை அந்த கும்பல் அடித்து உதைத்தது. பிறகு அவர் ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரிட்டிஷ் ஏஜெண்டு என்று கூறி சித்ரவதை செய்தனர். பிறகு அவர் பஞ்சாப் மாநிலம் மியான்வாலி என்ற இடத்தில் இறக்கி விட்டு மறைந்து விட்டனர்.

பிறகு அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் வேனில் வந்தனர் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர்கள் யாரும் ஈடுபடவில்லை என்று இஸ்லாமாபாத் போலீஸ் தலைவர் பின் யாமின் கூறினார்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:13 pm

லிபியா ராணுவம் பீரங்கியால் சுட்டதில் 4 பேர் பலி

லிபியா நாட்டில் மிஸ்ராட்டா நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகர் மீது ராணுவம் கிளர்ச்சிக்காரர்களின் பகுதிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் முன்னேறி வந்தது. அப்போது ராணுவ வீரர்கள் தங்களை எதிர்த்த கிளர்ச்சிக்காரர்களை நோக்கி பீரங்கியால் சுட்டது. இதில் 4 கிளர்ச்சிக்காரர்கள் பலியானார்கள்.

இறந்தவர்களின் உடல்களும், காயம் அடைந்தவர்களும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அந்த நகரில் சண்டை தொடர்ந்து நடந்தது.

இதற்கிடையில் நேட்டோ ராணுவம் அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதலில் 7 அப்பாவிகள் பலியானதாக லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர். லிபியா அதிகாரிகள் நிருபர்களை குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்து சென்று சேதங்களை காட்டினார்கள். ஆஸ்பத்திரியில் 3 உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த 3 பேரும் நேட்டோ ராணுவத் தாக்குதலில் பலியானவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் ஒன்று சிறுவனது உடல் ஆகும்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:14 pm

பின்லேடன் கொலை பற்றி விசாரணை நடத்த புதிய விசாரணை கமிஷன்: பாகிஸ்தான் அரசு அமைக்கிறது

அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தது எப்படி? அவரை அமெரிக்கா கொலை செய்தது ஆகியவை பற்றி விசாரணை நடத்த புதிய விசாரணை கமிஷனை பாகிஸ்தான் அமைக்க இருக்கிறது. முன்னதாக ஒரு விசாரணை கமிஷனை பிரதமர் கிலானி அமைத்து இருந்தார். இந்த கமிஷனின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜாவேத் இக்பால் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கமிஷனை அமைப்பதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெறவில்லை என்று கூறி நீதிபதி ஜாவேத் இக்பால் எதிர்ப்பு தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறாமல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கமிஷன் தலைவராக நியமிக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த கமிஷன் கைவிடப்படடது. இப்போது புதிய கமிஷன் அமைக்கப்பட இருக்கிறது. இதில் யார் யாரை நியமிப்பது என்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக சட்ட மந்திரி மவுலானா பக்ஷ் சாண்டியோ தெரிவித்தார்.

புதிய கமிஷன் அபோதாபாத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் எப்படி அரசாங்கத்துக்கு தெரியாமல் போனது என்பது குறித்தும், இந்த தாக்குதலின் பின்னணி ஆகியவை குறித்தும் இந்த கமிஷன் விசாரணை நடத்தும்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 pm

சீனாவில் மழை வெள்ளம், 26 லட்சம் பேர் பாதிப்பு


சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 26 லடசம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. இந்த தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

4 லட்சத்து 22 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கின. கடைகள் மூடப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மழை வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

170 பேர் பலி

மழை வெள்ளம் காரணமாகவும், வீடுகள் இடிந்து விழுந்ததாலும் 170 பேர் பலியானார்கள், மற்றும் காணாமல் போனார்கள். சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், சாலை போக்குவரத்து கைவிடப்பட்டது. ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால், ரெயில் போக்குவரத்தும் கைவிடப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக வந்த வாகனங்கள் வெள்ளத்தில் தட்டுத்தடுமாறி ஜெஜியாங் மாநிலத்தை அடைந்தன.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு


ஜெஜியாங் மாநிலத்தில் இப்போது ஏற்பட்ட வெள்ளம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருந்தது. இதனால் காய்கறி உற்பத்தி 20 சதவீதம் குறைந்தது. இதனால் காய்கறி பழங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி 40 சதவீதம் உயர்ந்தது.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 pm

என்னை பற்றிய தவறான பிரசாரத்தை நிறுத்துங்கள்: நவாஸ் ஷெரீப்புக்கு முஷரப் வேண்டுகோள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பின் புதிய கட்சியான அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் கூட்டம் லாகூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரென்ஸ் முறை மூலம் முஷரப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் என்னை பற்றிய தவறான பிரசாரத்தை நடத்தி வருகிறார். இதை அவர் கைவிட வேண்டும். கார்கில் போரில் பாகிஸ்தான் தோற்றதற்கு நான் தான் காரணம் என்று நவாஸ் ஷெரீப் கூறி வருகிறார். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நான் இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் 1999-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்ததாகவும் பொய் சொல்லி வருகிறார்.

கார்கில் போரில் என்ன நடந்தது என்பது நவாஸ் ஷெரீப்புக்கு தெரியும். இப்போது அவர் எதுவும் தெரியாதது போல பொய் பேசி வருகிறார். லாகூர் தீர்மானத்தில் காஷ்மீர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றதாக அவர் பேசி வருகிறார்

இவ்வாறு முஷரப் கூறினார்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:18 pm

தலீபான் இயக்கத்துடன் பேச்சு நடப்பது உண்மைதான்: அமெரிக்க ராணுவ செயலாளர் தகவல்

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர, தலீபான் இயக்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய் கூறி இருந்தார். இதை, அமெரிக்க ராணுவ செயலாளர் ராபர்ட் கேட்ஸ் உறுதிபடுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "தலீபான் இயக்கத்தலைவர் முல்லா உமருடன், சில நாடுகளின் உதவியுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். இந்த பேச்சு நடந்து வந்தாலும், தலீபான்களுடன் நடக்கும் போரின் கடுமை குறையாது'' என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டாலும், அல்கொய்தா மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் பாகிஸ்தான் அரசும் இணைந்து செயல்படும்'' என்றார்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:19 pm

உடைகளை இலவசமாக பெறுவதற்காக அரை நிர்வாணத்துடன் கடைக்கு முன் வரிசையில் காத்திருந்த பெண்கள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடை தன் வியாபாரத்தை பெருக்குவதற்காக லண்டனில் உள்ள தன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு போட்டி ஏற்பாடு செய்து இருந்தது. எங்களது ரீ ஜெண்ட் ரோடு கிளைக்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை வரைக்குள் முதலில் வரும் 100 பேருக்கு உடைகள் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்தது. அவர்கள் அரை நிர்வாணத்துடன் வந்தால், முழு அளவில் உடலை மறைக்கும் அளவுக்கு உடைகளை இலவசமாக உடுத்திக் கொண்டு செல்லலாம் என்றும் கூறி இருந்தது. .

இநத அறிவிப்பை கேட்டு நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் அரைநிர்வாணமாக கடைக்கு முன் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். காலையில் கடை திறந்ததும் அவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை எடுத்து அணிந்து கொண்டு சென்றனர்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:19 pm

2 கைகளும் இல்லாமல் ஒலிம்பிக் வில் போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றவர்

அமெரிக்காவில் உள்ள அயோவா மாநிலத்தை சேர்ந்தவர் மேட் ஸ்டட்ஸ்மேன். 29 வயதான இவர் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர் ஆவார். இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வில் வித்தை பிரிவில் பங்கு கொள்ள தகுதி பெற்று இருக்கிறார். இப்போது இவர் இத்தாலியில் நடக்கும் ஒத்திகையில் கலந்து கொள்ள அங்கு சென்று இருக்கிறார். லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

இவருக்கு 2 கைகள் இல்லாத போதிலும், இவர் கால் விரல்களால் வில்லைப் பிடித்துக் கொண்டு அம்பை எய்கிறார்.

தன் ஊனம் தன்னை தண்டித்து விடக்கூடாது என்பதில் அவர் கருத்தாக இருக்கிறார். இவர் உடல் ஊனமுற்றவராக இருந்தாலும் உடல் தகுதி பெற்றவர்களுடன் ஒலிம்பிக் போட்டியில் போட்டி போட இருக்கிறார்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:20 pm

பூனை வேண்டுமானால் ரூ.7 கோடி வேண்டும், திருடர்கள் மிரட்டல்

போலந்து நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் டேவிட் கீசியல்வ்ஸ்கி. இவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். இந்த பூனையை திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கே நுழைந்து அந்த பூனையை திருடிக் கொண்டு சென்று விட்டனர். அவர்களுக்கு சமீபத்தில் ஒரு டெலிபோன் வந்தது. அதில் பேசியவன், பூனை தங்களிடம் தான் இருப்பதாகவும், அந்த பூனை வேண்டுமானால் ரூ.7 கோடி பணம் தரவேண்டும் என்று கேட்டான்.

அவன் பைத்தியமாக இருக்க வேண்டும். எங்களிடம் அந்த அளவுக்கு பணம் எங்கே இருக்கிறது. அதோடு அந்த பூனையின் மதிப்பு 35 ஆயிரம் ரூபாய் கூட தாண்டாது. அப்படி இருக்கையில் என்னால் அந்த பூனைக்கு அவ்வளவு தொகை எப்படி கொடுக்க முடியும் என்று சிறுவன் டேவிட் கூறிவிட்டான். இருந்த போதிலும் டேவிட் மனம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக அவன் தாயார் போலீசில் புகார் செய்தார்.

பூனையை திருடியவனை எப்படியும் பிடிப்போம். இந்த குற்றத்துக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க முடியும் என்று போலீசார் கூறினார்.



வெளிநாட்டுச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:11 pm

என்னப்பா நடக்குது ஒரு பூனைக்கு ஏழு கோடியா? டூ மச்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளிநாட்டுச் செய்திகள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக