புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
prajai
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Jenila
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
kargan86
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
jairam
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
9 Posts - 5%
prajai
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
Jenila
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_m10நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 1:10 am

பணக்காரராக இருப்பதற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால், பரம ஏழைகள் ஒரு போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஓரளவு பணம் நமக்குத் தேவை.

இந்தியா போன்ற நாடுகளில், ஒழுகாத ஒரு வீடும், புழுக்கத்தையும் கொசுக்களையும் விரட்டுவதற்கு ஒரு மின்விசிறியும் போதும் என்று கோடிக் கணக்கானவர்கள் எண்ணுகிறார்கள்.

சில புதிய ஆடம்பரப் பொருள்களை வாங்க முடியுமானால், ஒரு புன்னகையின் கீற்று நம் முகத்தில் சில விநாடிகள் நெளியக் கூடும். ஆனால், நிரந்தரமான மகிழ்ச்சியைப் பணத்தினால் வாங்கித் தரமுடியுமா? ஒரு போதும் முடியாது.

இதில் ஒரு வேடிக்கையான முரண் என்னவென்றால் பணம் நம்முடைய மொத்த மகிழ்ச்சியில் ஒரு சிறிய பகுதிக்கும் பொறுப்பாளியாக இருக்கும் அதே நேரத்தில் அதன் வலிமையால் ஒரு மனிதனுடைய எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாகக்கூட அமைந்து விடும்.

ஓயாமல் பணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோமானால் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்ப அனுபவங்களை நாம் இழக்கும்படியாகக் கூட நேரலாம்.

யதார்த்தமான அணுகுமுறை என்னவென்றால் பணத்தின் வரவு, செலவுகளில் நாம் எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறோமோ, அந்த அளவுக்குப் பணத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறையும். பிரச்னைகள் குறையக் குறைய நாம் மகிழ்ச்சியுடன் எல்லைகளை விரித்துக் கொண்டே போகலாம் அல்லவா?

உலகப் பொருளாதாரச் சந்தையில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களைப் பற்றி இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. சாதாரண மனிதர்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் நெளிவு, சுளிவுகளை நன்றாகப் புரிந்து கொள்வது முடியாத காரியம். பொருளாதார நிபுணர்களின் தலைவலி அது.

நாம் செய்யக் கூடியது என்னவென்று பார்ப்போம். சந்தை நிலவரங்களையோ, பங்கு மார்க்கெட்டின் உயர்வு, தாழ்வுகளையோ நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது. நாம் எவ்வளவு சேமிக்கமுடியும் என்பதும், எவ்வளவு முதலீடு செய்யமுடியும் என்பதும் நம் கையில்தான் இருக்கிறது. நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நாம் கட்டுப்பாடு செய்ய முடியாவிட்டாலும் கூட அதே நிறுவனம் வேலைநிறுத்தங்களால் தற்காலிகமாக இழுத்து மூடப்படும் போது, நம்முடைய அத்தியாவசிய செலவுகளுக்கான பணத்தை நம் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்கள் தமது பொருளாதாரத்துக்கு ஆழமான அடிப்படை போடுவது எப்படி என்பது குறித்து தீன் ஷெர்மான் சாட்ஸ்கி என்னும் நிபுணரின் கருத்துக்களை சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.

1).வரவு, செலவுகளை ஒழுங்குபடுத்துங்கள்:

இதற்காகத் தனிப்பட்ட திறமையாளர்கள் எவரையும் நீங்கள் சம்பளம் கொடுத்து நியமிக்கத் தேவையில்லை. வேறு செலவுகள் எதையுமே இதன் பொருட்டுச் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்கு நன்கு புரியும்படியான ஒரு ஒழுங்கு முறையை அமுல் செய்தாலே போதும். உங்களுக்குத் தேவையான எந்த ஒரு முக்கியமான ஆவணமும் இரண்டு நிமிஷங்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கும் படி, ஆவணங்களை சீர் செய்ய வேண்டும்.

நான்கு கோப்புகள் மட்டுமே உங்களுக்குத் தேவை. அவை

அ) வருமானம்
ஆ) செலவுகள்
இ) கடன்கள்
ஈ) சேமிப்பு.

உங்களது குப்பைக் காகிதங்களைப் பரிசீலனை செய்து பெரும்பாலானவற்றைக் கிழித்துப் போடுங்கள். பழைய ரசீதுகள், விளம்பர நோட்டீஸ்களை முதலில் கிழியுங்கள். ஒரு எளிமையான கோப்பு முறையைத் தொடங்கி முதலீடுகள் குறித்த ஆவணங்களைத் தொகுத்து இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள், கிரெடிட் கார்டுகளை அவற்றிற்குரிய பைல்களில் வையுங்கள்.

தினந்தோறும் பதினைந்து நிமிட நேரம் தபால்களுக்காகவும், பைல்களுக்காகவும் செலவிட வேண்டும். அன்றைக்கு வந்த தபால்களில் பதில் எழுத வேண்டியதை மட்டும் எடுத்து உடனே பதில் எழுதுங்கள், மற்றையவை நேரடியாகக் குப்பைக் கூடையில் விழவேண்டியதுதான்.

உங்கள் பில்களை அவை வந்ததும் கொடுத்து விடுங்கள். மாதக் கடைசி வரையில் அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது. இதனால் உங்களது ரத்த அழுத்தம் ஏறாமல் இருக்கும். உங்களால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெறும். நிலுவையிலுள்ள பில்கள் உங்களையும் அறியாமல், உங்களின் அடிமனத்தை அரித்துத் தின்னும். மேலும் சேர்ந்தாற் போல் எல்லாக் கடன்களையும் அடைக்கும் போது இவ்வளவு பணமும் போய்விட்டதே என்ற அதிர்ச்சியும் உண்டாகும். அதனால் ஏற்படக்கூடிய மனத் தளர்ச்சியிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். பில்களை உடனுக்குடன் தீர்த்து விடுவது உங்களது ஆரோக்கியத்துக்கு டானிக் போன்றது.

2)புத்திசாலித்தனமாகச் செலவு செய்யுங்கள்:

உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை சுவைத்து உண்ணும்போது மனமும் உடலும் மகிழ்கின்றன என்பது உண்மைதான். அதுவே நாளைக்கு வரப்போகும் நோய்களுக்கும் காரணம் என்பதும் உண்மையின் மறுபக்கம் தானே? வரவுக்குள்ளே செலவு செய்வது உங்களுக்குத் துன்பத்தை ஒரு போதும் வரவழைக்காது. உங்களது பணப்பையின் பருமனைக் குறைக்கும் முக்கியமான ஆடம்பரச் செலவுகள் என்னென்ன என்பதை உடனடியாகப் பட்டியலிடுங்கள்.

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் உங்களின் ஆடம்பரங்களுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே பெரிய சேமிப்புத்தான்!

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 1:11 am

3) கடன்களைக் குறையுங்கள்:

மற்றவர்களைவிட எனது மொத்தக் கடன் சுமை குறைவுதான் என்று எண்ணிப் பெருமைப்பட வேண்டாம். (வீட்டுக் கடன் மோட்டார் வாகனம் வாங்கிய கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க நுகர்வோர் கடன்) இவைகள் எனக்கு அதிகமாக இல்லை என்பதினால் நான் வசதி உள்ளவனாக மாறிவிட முடியாது. இந்தக் காலத்தில் சொந்தமாக வீடு வேண்டும் என்றாலும், அல்லது பூர்வீக சொத்தான வீட்டைப் பழுது பார்த்துப் புனரமைப்பு செய்வது என்றாலும் கடன் வாங்காமல் முடியாது. கிரெடிட் கார்டு கடன்கள் வேறுவிதமான தொந்தரவு.

பொருளாதார விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்று வாழ்வில் நிம்மதியுடன் முன்னுக்கு வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சுயமரியாதை, கௌரவம் இந்தப் பண்புகளுடன் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், உங்கள் கடன்களைக் குறைத்தேயாக வேண்டும். வேறு வழி எதுவுமே இல்லை!

உங்களுடைய மாத வருமானத்திற்குள் செலவுகளை அடக்க முடியாதபடி நீங்கள் தொடர்ந்து துன்புற்றால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன? புதிய கடன்களை வாங்காதீர்கள். செலவுகளைக் குறையுங்கள். தேவையானால் உங்களிடம் இருக்கும் கிரெடிட் கார்டுகளை ஒரு அலமாரியில் வைத்துப் பூட்டிவிடுங்கள். அல்லது வட்டி விகிதம் எந்த பாங்கில் மிகக் குறைவாக உள்ளதோ அதை வாங்குங்கள். வரிச் சலுகைகள் ஏதாவது கிடைக்க வழியுண்டா என்று பாருங்கள். கூடிய வரையில் அபராத வட்டி முதலிய தண்டச் செலவுகளை எப்படித் தவிர்க்கலாம் என்று யோசனை செய்யுங்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். புதிய கடன்களுக்குள் மாட்டிக் கொள்ளாதிருந்தால், சரி.

4) ஐந்து சதவீதம் கட்டாயம் சேமியுங்கள்:

பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினாலே அது நல்ல காலத்தின் அறிகுறிதான். சேமிக்கத் துவங்கும் போதே, உங்களது பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மெல்ல விடுபடத் தொடங்கி விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். சேமிப்பதற்கு மிகவும் சுலபமான வழி, உங்கள் வருமானத்தில் ஐந்து சதவீதத்தை வேறு யோசனை எதுவும் தோன்றுவதற்கு முன்னால் அதை பாங்கிலோ, தபால் ஆபீஸிலோ கட்டி விடுவதுதான். அலுவலகத்திலே கட்டாய சம்பளப் பிடிப்புத் திட்டம் ஏதாவது நடைமுறையில் இருந்தால் அதில் சேர்ந்து விடுவது மிகவும் நல்லது. உங்கள் கைக்கு வந்து சேராமலே அது சேமிக்கப்படும். மன உறுதி இல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த வழி. அத்துடன் நல்ல மியூச்சுவல் பண்ட் திட்டம் ஏதாவது இருந்தாலும் அதிலும் நீங்கள், வருவது வரட்டும் என்று சேர்ந்து விடுவது நல்லது. மீதமுள்ள பணத்திற்குள்தான் நீங்கள் சமாளித்தாக வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைக் கையாள்வதற்கான திறமை உங்களுக்கும் வசப்படும். அதற்குப் பிறகு சேமிப்பு செய்வது என்பது உங்களுடைய பழக்கங்களில் ஒன்றாகிவிடும்.

இந்த ஐந்து சதவீதம் சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ச்சியாக நீங்கள் ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தி விட்டால் போதும்; பிறகு சேர்ந்திருக்கும் தொகையும் அதற்குரிய வட்டியும் சேர்ந்து உங்களை இன்னும் கொஞ்சம் சேமிக்கத் தூண்டும். முதலில் ஆறு சதவீதமாக்குங்கள். இரண்டாண்டுகள் கழித்து ஏழு சதவீதமாகவும், நான்காண்டுகள் கழித்து எட்டு சதவீதமாகவும் மாற்றிவிடுங்கள். அதற்கப்புறம் உங்களது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்காது.

5)உங்கள் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்:

பொருளாதார நிபுணர் பென் ஸ்டீன் சொல்கிறார்: ''வாழ்க்கையிலிருந்து பயனை அடையப் போகிறீர்கள் என்பதற்கு முதல் படி என்னவென்றால் நமக்கு என்ன வேண்டும் என்ற தீர்மானம்தான்.''

ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை எப்படியாவது சேமிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பேச்சுக்காக அதை லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் உங்களது பொருளாதார லட்சியத்தை ஒரு டயரியில் எழுத வேண்டும். அதை அடைவதற்கு நீங்கள் என்ன உத்தேசித்திருக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக எழுத வேண்டும். மாதம் ரூ. 2000/- வீதம் ஐம்பது மாதம் சேமிப்பேன் என்றும் எழுத வேண்டும். இந்தத் தீர்மானத்தை செயல்படுத்தத் தொடங்கினவுடன், உங்களது அனாவசிய, ஆடம்பரச் செலவுகள் ஏதாவது இருந்தால் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

இதன் காரணமாக ஒரே கல்லில் நீங்கள் மூன்று மாங்காய்களை அடிக்கிறீர்கள்.

அ) பணம் சேமிக்கப்பட்டு எதிர்காலத்தை வளமாக்க உதவுகிறது.

ஆ) தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படுகிறது.

இ) சமுதாயத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயர்கிறது.

6) மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்:

உங்களுக்கு உபதேசம் செய்வது எனது நோக்கமல்ல! இருந்தாலும் எது உண்மையோ அதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பது முட்டாள்தனம் இல்லையா? இருப்பதில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் வேண்டும் என்று ஓயாமல் பறக்காதீர்கள். நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் விவேகமான, முன்யோசனையுடன் கூடிய முடிவுகளால் மட்டுமே நமது எதிர்கால வாழ்க்கை வளத்துடன் இருக்க முடியும். எனவே செலவுகளைச் சுருக்கிச் சேமிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். அதன் மூலம் பிரச்சினைகள் குறைந்த, எதிர்கால வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்.

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 5:45 pm

நல்ல தகவல்...... நன்றி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 7:45 pm

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? 1162biநடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? 1162biநடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? 1162biநடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? 1162bi

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 8:21 pm

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? 1162bi

நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரராவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக