புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
21 Posts - 66%
heezulia
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
63 Posts - 64%
heezulia
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_m10நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 30, 2011 5:27 am

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன்
நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு
கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு
பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு
புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு
சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு
எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு
சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு
அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு
யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு
நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு
முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு
குடிக்கும்போது அழுதுகொண்டு
புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு
அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு
சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு
பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு
எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு
தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு
தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு
யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு
யாரையாவது இணங்கச் செய்துகொண்டு
கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு
சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு
பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு
தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு
கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு
போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு
எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு
தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு
மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு
நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு
பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு
யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு
உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு
மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு
யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு
பொது அறிவை வளர்த்துக்கொண்டு
எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு
சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு
நிழல்களுக்குப் பயந்துகொண்டு
எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு
உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு
எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு
தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு
அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு
புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு
திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு
வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு
நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு
ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு
வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு
யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 30, 2011 10:04 am

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 224747944யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 30, 2011 11:57 am

ரூம் போட்டு யோசிப்பாங்களோ !
யதார்த்த வாழ்க்கையை இப்படியும் சொல்லலாம் ?!



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 30, 2011 12:22 pm

இவையெல்லாம் இருந்தால் தான் மனிதன் ஆவான்!! இல்லை எனில் மிருகமாவன்!!

அருமை!! அருமையிருக்கு அருமையிருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 2:12 pm

இதனாப்பா எதார்த்த வாழ்க்கை.இதுதானே ஒரு சாதாரண மனிதனின் நிலை.நாம இப்படி இல்லைன்னா உலகமே நம்மளை பைத்தியம் என்று சொல்லுமே




நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Uநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Dநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Aநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Yநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Aநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Sநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Uநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Dநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Hநாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 30, 2011 6:38 pm

உதயசுதா wrote:இதனாப்பா எதார்த்த வாழ்க்கை.இதுதானே ஒரு சாதாரண மனிதனின் நிலை.நாம இப்படி இல்லைன்னா உலகமே நம்மளை பைத்தியம் என்று சொல்லுமே

உண்மைதான். இதுதான் வாழ்க்கை ! இதுதான் உலகம் !

நன்றிகள்! படித்து ரசித்த உறவுகளுக்கும் ! கவிதை தந்த மனுஷ்ய புத்திரனுக்கும் !


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Apr 30, 2011 7:45 pm

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196 நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196 நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196 நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196 நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196 நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 677196




நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 10:41 pm

அதானே நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-மனுஷ்ய புத்திரன் 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 30, 2011 10:46 pm

மஞ்சுபாஷிணி wrote:அதானே நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

அட... ஆமால்ல....நாம ஏன்...இப்படி இருக்கிறோம்! அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக