புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
20 Posts - 65%
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
62 Posts - 63%
heezulia
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_m10'இறுதிப் போரில் காணாமல் போனோர்'  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இறுதிப் போரில் காணாமல் போனோர்'


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 10, 2011 9:59 am




ரமேஸ் இராணுவத்தால் விசாரிக்கப்படுவதாக காட்டும் படம்
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

அந்த காலப்பகுதியில் அந்தப் பிராந்தியம் இலங்கை இராணுவத்தின் 59 வது டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது குறித்து தமது அமைப்பு சில ஆதாரங்களை பதிவு செய்துள்ளதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

கிறிஸ்தவ மதகுரு

ஆனந்தி என்ற ஒரு பெண்- இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது- இது குறித்துக் கூறுகையில் அந்தப் பகுதிக்கான கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் அவர்களுடன் தனது கணவரும் இராணுவத்தினாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இராணுவத்தினர் அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்றதை தான் பார்த்ததாகவும் கூறினார். ஆனாலும் அதன் பிறகு பல இடங்களில் தான் விசாரித்தும் அவர்களது தகவல்கள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் மனைவியும், இரு குழந்தைகளும் கூட அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

யோகி குறித்தும் தகவல் இல்லை



யோகியின் மனைவிஅந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட யோகரத்தினம் யோகி குறித்து கூறிய இலங்கையின் புனர்வாழ்வு தலைமை ஆணையர், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 11,600 விடுதலைப்புலிகளில் அவர் இல்லை என்று கூறியுள்ளார்.

அந்த பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட மேலும் பலர் குறித்தும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறுகிறது.

கேர்ணல் ரமேஸ் வீடியோ

மற்றுமொரு காணாமல் போன சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் கேர்ணல் ரமேஸ் விடயத்தில் இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ரமேஸை அடையாளம் காண இராணுவத்தினருக்கு உதவியதாக சாட்சிகள் கூறியுள்ளன.

அவரும் மேலும் மூவரும் அருகில் உள்ள ஒரு சிறிய குடிசைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் ரமேஸின் குடும்பத்தினருக்கு அவரைப்பற்றி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், பின்னர் உலக தமிழர் பேரவையால் வழங்கப்பட்ட ஒரு வீடியோவில் ரமேஸை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது போன்ற மேலும் சில வீடியோக்களையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது இந்த அறிக்கையில் இணைத்துள்ளது.



புலிகளின் பேச்சாளர் இளந்திரையன் பற்றிய தகவலும் இல்லைஇலங்கை இராணுவப் பேச்சாளர் இந்த வீடியோவை நிராகரித்துள்ளதுடன் ரமேஸ் மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

காணாமல் போன கோகுலகிருஷ்ணன் என்பவரது மனைவி ஹியூமன் ரைட்ஸ் வாட்சுக்கு சாட்சியமளிக்கையில், தனது கணவர் பார்வையிழந்த நிலையில் இருந்த போதிலும், அவருடன் செல்ல தன்னை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்றும், அதன் பின்னர் அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்னுமொருவர் சாட்சியமளிக்கையில், மே 17 இல் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் வைத்து ஏனையவர்களிடம் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட 5 பேர் பின்னர் காணாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.

அவ்வாறு காணமல் போனவர்களில் ஒருவர் சுதர்சனி கிருஷ்ணகுமார். அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள், ஆனால் தகவல் எதுவும் கிடையாது.

பல காணாமல் போன சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர்களத்தை விட்டு தப்பியோடிய தருணத்தில் தான் நடந்தது.

இந்த காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அரசாங்கம் இந்த ஆட்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதுடன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அடம்ஸ் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இறுதி கட்ட மோதலில் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்களின் விபரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பதியப்பட்டிருந்தால் அவர்கள் இருப்பார்கள் என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக