புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
31 Posts - 55%
heezulia
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
9 Posts - 1%
jairam
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_m10அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 9:06 am


குடும்ப கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும், பேன், மிக்சி, கிரைண்டர் போன்றவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் ஜெயலலிதா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் திருச்சி சங்கம் ஓட்டலில் சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வளர்ச்சி திட்டங்கள்

தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாசார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; தமிழகத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு:-

இரண்டாம் விவசாய புரட்சி திட்டம்

தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சி திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.

விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.

மீண்டும் விவசாய கருவிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு இலவசமாக வழங்கும். விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

20 கிலோ இலவச அரிசி


குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

"எத்தனால்'' எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும். சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இலவச தூய குடிநீர் திட்டம்

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். வறுமை கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000 ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டி தரப்படும்.

மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

இலவச ஆடு, மாடுகள்

வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

2016-ம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

இலவச சீருடை

மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் இடை நிறுத்தம் குறைப்பதற்காக 10-12 ம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

இலவச லேப்-டாப்

அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

மீனவர் பாதுகாப்பு

மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4,000 ரூபாயாக வழங்கப்படும். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, ஒரு சிறப்பு குழு அமைத்து, அவர்களை கலந்து ஆலோசித்து அவர்களது பிரச்சினைகள் உடனடியாக களையப்படும்.

இளைஞர்களுக்கான சிறப்பு திட்டம்


படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க- அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.

வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும்.

பேன் - மிக்சி இலவசம்

தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி (பேன்), ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

இலவச உணவுடன் தங்கும் விடுதி

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், புத்தக நிலையமும், தியான மண்டபமும், இனிமையான இயற்கை சூழலும் ஏற்படுத்தப்பட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அன்பு, பாசம் மற்றும் அறிவு பரிமாற்றம் ஏற்படும்படியாக திட்டம் தீட்டப்பெற்று, அங்கு ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற இனிமையான சூழல் ஏற்படுத்தப்படும்.

காவிரி பிரச்சினை

தமிழகம் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக ஆக்கப்படும். தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைக்கப்படும். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்டை மாநில நதிநீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழி மேம்பாடு

நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

கணினி வழி தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித்துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர் நலன்

அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.

அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.

மாற்றுத்திறனாளிகளுக்கென 3 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும். அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கேபிள் டி.வி. அரசுடமை

தமிழகத்தில் கேபிள் டி.வி. தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பிரீ டூ ஏர் டி.டி.எச். சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள் டி.வி. மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும்.

சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரை சவரன் தங்கம் இலவசம்

தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

இளநிலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை 50,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

காவல் துறை சீரமைப்பு

காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

காவல் துறையினரின் தேவையற்ற வேலை பளுவை குறைத்து, அவர்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழி வகை செய்யப்படும். அவர்களது பணி சார்ந்த செயல்பாடுகள் சீர்முறைப்படுத்தப்படும்.

பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத்தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.

முதியோர் உதவித்தொகை:

முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித்தொகை 1,000 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த தேவையான எண்ணிக்கையில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

தற்போது அனைத்து அரசு தேர்வு நிறுவனங்களில் வெளியிடப்படாமல் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முடிவுகள் உள்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.

நுழைவுத்தேர்வு

மருத்துவ கல்வி பொது நுழைவுத்தேர்வு முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட மாட்டாது.

சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.

போக்குவரத்துத்துறை


போக்குவரத்துத்துறை நவீனப்படுத்தப்படும். கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர் நலன் பேணப்பட சிறப்பு திட்டங்கள் தீட்டப்படும்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

திரைப்படத்துறை பிரச்சினைகளுக்குத் தீர்வு

திரைப்படத்துறையில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி!



அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 9:07 am

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தாய்மார்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர் மூன்றும் இலவசம் இது அல்லது அது என்றில்லாமல் மூன்றுமே இலவசமாக தரப்படும்.

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

*கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ 2,500 ஆக உயர்த்தப்படும்.

* அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்படும்.

*விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி.

*அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம்.

* கிராமங்கள் தோறும் நடமாடும்மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

*தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு பெண்களின் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் இலவசம்.

* நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் .

* வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 செண்ட் இடம் தரப்படும்.

* தடையில்லா மின்சார வசதி.

*சூரிய ஒளி மூலம் இலவச மின்சாரம்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு 4 ஆடுகள் இலவசம்.

* வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் இலவசம்

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள், காலணிகள் இலவசம் .

* மாணவர்களின் கல்வி உதவித் தொகை ரூ. 5,000 வரை தரப்படும்.

* பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் கணினி இலவசம்.

* பள்ளி மாணவர்களை பாதுகாக்க படை.

* மீனவர் பாதுகாப்பு படை.

* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் அதில் 25 சதவீதம் மானியம்.

* பெண்களுக்கு மகப்பேறு கால சலுகையாக 6 மாதம் விடுமுறை மற்றும் ரூ 12,000 நிதியுதவி.

* ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில் ஆதரவற்ற முதியோர் குழந்தைகளுக்கு சிறப்பு தங்கும் விடுதி மற்றும் 3 வேளை உணவு.

* கேபிள் டி.வி. தொழில் அரசுடமை இதன் மூலம் ஏகபோகம் தடுக்கப்படும்.

* இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ 50,000 த்துடன் 4 கிராம் தங்கம் இலவசம்.

* சாதி சான்றிதழ்கள் இனி பள்ளியிலேயே வழங்கப்படும்.

* பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை.

* 60,000 கறவை மாடுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை.

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

* தி.மு.க. வினர் பறித்த நிலங்கள் பறிக்கப்பட்டு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை.



அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி திட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக