புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
4 Posts - 3%
bala_t
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
1 Post - 1%
prajai
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
293 Posts - 42%
heezulia
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_m10வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 6:56 am

புதுடெல்லி, பிப்.25- உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றியை ருசித்தது.

உலக கோப்பை கிரிக்கெட்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நிïசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

சுழற்பந்துவீச்சுடன் தொடக்கம்

போட்டியின் 6-வது நாளான நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (பி பிரிவு) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. தென்ஆப்பிரிக்க அணியில் மூன்று பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றனர். டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் கிரேமி சுமித் முதலில் வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், டேவோன் சுமித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

இந்திய மைதானங்களில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சு தான் எடுபடும் என்பதால், தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சை கொண்டு வந்தார். அதற்கு உடனடி பலனும் கிடைத்தது. ஜோகன் போத்தாவின் பந்து வீச்சில் அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (2 ரன்) 3-வது பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அடுத்து டேரன் பிராவோ களம் இறங்கினார்.

டேவோன் சுமித்-டேரன் பிராவோ ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. ஆக்ரோஷம் காட்டிய டேரன் பிராவோ அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கும் ஓட விட்டார். அவரது பேட்டிங் ஸ்டைல், பிரையன் லாராவின் ஆட்டத்தை ஞாபகப்படுத்தியது.

222 ரன்னில் ஆல்-அவுட்

அணியின் ஸ்கோர் 113 ரன்களை எட்டிய போது, டேரன் பிராவோ (73 ரன், 82 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) போத்தாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்ï. ஆனார். இதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோரின் தாக்குதலில் சரிவுக்குள்ளானது. இருப்பினும் மிடில் வரிசையில் வெய்ன் பிராவோ (40 ரன், 37 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), சந்தர்பால் (31 ரன், 51 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரின் குறிப்பிடும்படியான பங்களிப்பு வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை கடக்க துணை புரிந்தது.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.3 ஓவர்களில் 222 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளும், போத்தா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

தென்ஆப்பிரிக்கா வெற்றி

அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. ஆம்லா 14 ரன்களிலும், காலிஸ் 4 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும் டிவில்லியர்ஸ் நிலைத்து நின்று உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சுமித் தனது பங்குக்கு 45 ரன்கள் (78 பந்து, 2 பவுண்டரி) எடுத்தார்.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ்-டுமினி ஜோடி நேர்த்தியாக விளையாடி அணியை வெற்றிக்கு எளிதாக அழைத்து சென்றது. டிவில்லியர்ஸ் தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார்.

தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 107 ரன்களுடனும் (105 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), டுமினி 42 ரன்களுடனும் (53 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

ஸ்கோர் போர்டு

வெஸ்ட் இண்டீஸ்

கெய்ல் (சி) காலிஸ் (பி) போத்தா 2
டேவோன் சுமித் (சி) அண்ட் (பி) தாஹிர் 36
டேரன் பிராவோ எல்.பி.டபிள்ï (பி) போத்தா 73
சர்வான் எல்.பி.டபிள்ï (பி) தாஹிர் 2
சந்தர்பால் (சி) பீட்டர்சன் (பி) தாஹிர் 31
வெய்ன் பிராவோ (ரன்-அவுட்) 40
டேவோன் தாமஸ் (சி) டுமினி (பி) தாஹிர் 15
பொல்லார்ட் எல்.பி.டபிள்ï (பி) ஸ்டெயின் 0
டேரன் சேமி எல்.பி.டபிள்ï (பி) ஸ்டெயின் 0
சுலிமான் பென் (சி) மோர்கல் (பி) ஸ்டெயின் 6
கெமார் ரோச் (நாட்-அவுட்) 2
எக்ஸ்டிரா 15

மொத்தம் (47.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 222

விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-113, 3-117, 4-120, 5-178, 6-209, 7-213, 8-213, 9-213

பந்து வீச்சு விவரம்

போத்தா 9-0-48-2
ஸ்டெயின் 7.3-1-24-3
மோர்னே மோர்கல் 8-0-35-0
காலிஸ் 3-0-21-0
இம்ரான் தாஹிர் 10-1-41-4
ராபின் பீட்டர்சன் 10-0-49-0

தென்ஆப்பிரிக்கா

ஆம்லா (சி) தாமஸ் (பி) ரோச் 14
சுமித் (பி) பொல்லார்ட் 45
காலிஸ் (சி) சேமி (பி) பென் 4
டிவில்லியர்ஸ் (நாட்-அவுட்) 107
டுமினி (நாட்-அவுட்) 42
எக்ஸ்டிரா 11

மொத்தம் (42.5 ஓவர்களில் 3விக்கெட்டுக்கு) 223

விக்கெட் வீழ்ச்சி: 1-15, 2-20, 3-139

பந்து வீச்சு விவரம்

சுலிமான் பென் 10-0-51-1
கெமார் ரோச் 8-0-42-1
வெய்ன் பிராவோ 2.1-0-12-0
சேமி 8-0-40-0
பொல்லார்ட் 7.5-0-37-1
கெய்ல் 6-0-26-0
டேவோன் சுமித் 0.5-0-5-0

----

அறிமுக போட்டியிலேயே அசத்திய இம்ரான் தாஹிர்

4 விக்கெட்டுகள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீசின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றிய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் 31 வயதான இம்ரான் தாஹிர், பாகிஸ்தானை சேர்ந்தவர். அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்.

அதன் பிறகு தென்ஆப்பிரிக்காவில் குடியேறிய தாஹிர், அங்குள்ள பெண்ணை மணந்து தென்ஆப்பிரிக்க குடியுரிமையையும் பெற்று விட்டார். இதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரின் போதே தென்ஆப்பிக்க அணிக்கு அழைக்கப்பட்ட போதிலும் அப்போது இம்ரான் தாஹிரை கேப்டன் சுமித் பயன்படுத்தவில்லை. யாருக்கும் அறிமுகம் இல்லாத அவரது சுழற்பந்து வீச்சு இந்த உலக கோப்பையில் தங்கள் அணிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார். அவரது நம்பிக்கைக்கு ஏற்றார் போலவே சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார். பின்னர் தாஹிர் கூறுகையில், `ஆகாயத்தில் மிதப்பது போல் உள்ளது. கடவுளுக்கும், எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். கேப்டன் சுமித் எனது மீது நம்பிக்கை வைத்து பவர்-பிளேயில் பந்து வீச வாய்ப்பு அளித்தார். ஒவ்வொருவருக்கும் சில நாட்கள் நல்லதாகவும், சில நாட்கள் மோசமானதாகவும் அமையும். அந்த வகையில் இன்று (நேற்று) எனக்கு சிறந்த நாள்' என்றார்.

----

பாதியில் நின்ற தென்ஆப்பிரிக்க தேசியகீதம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பாகவும் இரு நாட்டு அணிகளுடைய தேசிய கீதங்கள் இசைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, திடீரென பாதியில் நின்று விட்டது. இருப்பினும் வரிசையாக நின்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் மற்றும் வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தை விடாமல் பாடி முடித்தனர். தேசிய கீதம் பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டு தரமானதாக இல்லாததால் இந்த கோளாறு நடந்துள்ளது. தேசியகீதம் பாதியில் நின்றதற்கு ஐ.சி.சி. தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதே சமயம் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-----

தென்ஆப்பிரிக்காவுக்கு கைகொடுத்த `அப்பீல் முறை'

நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை இந்த உலக கோப்பையில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தொழில்நுட்பம் நேற்று தென்ஆப்பிரிக்காவுக்கு நல்ல பலனை தந்தது. டேரன் பிராவோ, சர்வான் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களுக்கு கள நடுவர் வழங்கிய எல்.பி.டபிள்ï. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்த போது, 3-வது நடுவரும் அந்த தீர்ப்பை உறுதி செய்தார். இதில் சர்வானுக்கு பந்து, உள்பேட்டில் பட்டது போல் தெரிந்ததால், சிறிய சலசலப்பும் ஏற்பட்டது.

இதே போல் அதிரடி சூரர் கீரன் பொல்லார்ட் தான் சந்தித்த ஸ்டெயினின் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்ï. ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பின்னர் தென்ஆப்பிரிக்க வீரர்கள் அப்பீல் செய்தனர். டி.வி. ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை தாக்குவது போல் தெரிந்ததால் 3-வது நடுவர் பொல்லார்ட்டுக்கு அவுட் கொடுத்து விட்டார்.

தினதந்தி

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக