புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:25 pm

முதலில் இந்தியன் பிறகே தமிழன் ஆனால் அதர்க்காக அநியாயம் நடப்பதி பொறுக்க முடியாது அதே சமயம் இந்தியாவை உடைப்பதை ஏற்கவும் முடியாது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:38 pm

முதலில் தமிழன் பின்பும் தமிழன். தமிழ் இனப் போராட்ட வரலாறு என்ற எனது பதிவைப் படியுங்கள். உங்களுக்கேப் புரியும். தமிழ்நாடு இந்தியாவிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளது என்பது விளங்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:40 pm

அருமையான பகிர்வு அதுக்கு மணி கொடுத்ததும் நச் பதில்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 2:51 pm

எந்த மாநிலத்துலயுமே அந்த மாநில மொழி வழக்காடு மொழி இல்லையே.
மணி சொன்னது போல முதலில் இந்தியன்,பின்தான் தமிழன்.

"அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!"

கோடிட்ட வரிகள் நீங்க கொடுத்த பதிவுகளில் இருந்தது.இதன் மூலம் என்ன சொல்ல வரிங்க? இலங்கை மாதிரி இங்கயும் அடிச்சுக்கிட்டு சாகனும்ன்னு சொல்ல வரிங்க அப்படித்தானே.
திரும்பவும் இந்த வார்த்தைய சொல்றதுக்கு மன்னிக்கனும்.
இந்தியாவில் பிறந்ததால் நீங்க இந்தியர் குடியுரிமை உள்ளவர்,ஆனா இந்தியர் இல்லை.




ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 3:11 pm

நீங்கள் அனைவரும் படித்த பள்ளிப் பாடங்களை மறக்காமல் உள்ளீர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. அதற்கு அப்பால் உண்மைகளை தேடுங்கள். உண்மை எதுவென்று உங்களுக்கேப் புரியும். என்னிடம் விதண்டாவாதம் செய்வதை விடுத்து நீங்களே தேடுங்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 3:12 pm

உங்கள் மொழி உணர்வுதான் சார் அடுத்த மாநிலத்துக்கு தண்ணி தராம நீக்குது இந்தியான்னு நினைச்சா இப்படி ஆகுமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 3:35 pm

maniajith007 wrote:முதலில் இந்தியன் பிறகே தமிழன் ஆனால் அதர்க்காக அநியாயம் நடப்பதி பொறுக்க முடியாது அதே சமயம் இந்தியாவை உடைப்பதை ஏற்கவும் முடியாது

நானும் மணியை வழி மொழிகிறேன் நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jan 27, 2011 4:43 pm

தமிழ் ஈழம் இப்போது தமிழ் தேசம் ஆக மாறுகிறது .எங்கேயோ இப்படி மிக பெரிய தவறுகள் நிகழ்கின்றன . சிறு அடி பட்ட உடம்பில் கட்டூ போடுவதற்கு பதில் மொத்த உடலையும் கூறு போட சொல்கிறீர்கள்

ராம்





avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 6:25 pm

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ..... முடிந்தால் தடுத்து பாருங்களேன்....

தாயக தமிழர்கள் கொல்ல படுவதை பார்த பிறகும் .... இந்தியா அரசிடம் தமிழகம் அடிமயாய் உள்ளதாய் மறுக்கீர்கள்,....

உங்களுக்கு எப்படி சொல்லி அல்லது செய்து புரியவைபது... சகோதர சகோதரிகளே ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக