புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
4 Posts - 3%
Kavithas
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
1 Post - 1%
bala_t
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
1 Post - 1%
prajai
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
291 Posts - 42%
heezulia
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
6 Posts - 1%
prajai
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
4 Posts - 1%
manikavi
உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_m10உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:51 pm

உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Image110

அமைவிடம் :உடப்பு புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தின் மேற்கு கடற்கரையை அண்டிய வளர்ச்சியடைந்த அழகிய கிராமமாகும். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் கடற்றொழில் வளமிக்க பிரதேசமும் இதன் பெருமையாகும். புத்தளம் நகரிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரமும் சிலாபம் நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தூரமும் வடக்கே தென்னைகள் அடர்ந்த ஒற்றப்பனைக் கிராமத்தையும் தெற்கே பிங்கட்டி முத்துப்பந்தி போன்ற சிறிய கிராமங்களையும் கிழக்கே ஒல்லாந்தர் வெட்டுவாய்க்கால் கற்பிட்டிக் குடாவையும் புளிச்சாக்குளம் முந்தல் கிராமங்களையும் மேற்கே இந்துமா சமுத்திரத்தையும் எல்லைப் பிரதேசங்களாக கொண்டமைந்த பெரும்பான்மை இந்துக்களையும் சிறுபான்மை கத்தோலிக்கர்களையும் முஸ்லீங்களையும் கொண்டு இணைந்து வாழும் கிராமமாகும் . உடப்பு கிராமம் இதனை வளர்ந்து வரும் நகரம் எனலாம். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கருதி அந்நிய மத மாற்றத்துக்குட்படாமல் போர்த்துகேயர் டச்சுக்காரர் ஆங்கிலேயர் காலத்தில் கூட மத மாற்றத்தை விரும்பாது இன்றும் இந்து மதத்தவராக பண்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

மக்கள் : நீண்டகால வரலாறும் தனித்துவமான கலை கலாசார நற் பழக்கவழக்கங்களுடன் பாரம்பரிய உணவு உடை உறைவிடங்களிடையே இந்தியாவின் தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கான மண்வாசனையை காணக்கூடியதாக இருக்கின்றது . மேலும் தமிழகத்திலிருந்து வருவோர் தாம் இராமேஸ்வரம் நிற்பதாகவே கருதுவார்கள் . இங்கே வாழும் மக்கள் மான உணர்ச்சியும் இந்து மதத்தின் மீதான இனியில்லாத பற்றுறுதியும் கொண்டவர்கள்.வரலாற்றுரீதியான ஆய்வுக் குறிப்புக்களும் கர்ணபரம்பரையான கதைகளும் வாய்வழி செய்திகளும் இங்கு வாழும் மக்கள் கி.பி 1300-1400 ஆண்டுகளில் வீரசேகரப்பாண்டியன் மன்னனால் மன்னார் கற்பிட்டி உடப்பு போன்ற பிரதேசங்களில் தமிழகத்து மக்களை குடியேற்றியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் பகருகின்றன. அத்துடன் மாரியம்மன் கோயில் மணியில் கி.பி. 1750 ஆண்டு ஆண்டிமுனை உடப்பங் கரையூரவர் கோயிலுக்கு உபயம் என பொறிக்கப்பட்டுமுள்ளது. மேலும் 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1634 ம் ஆண்டுகளில் இராமேஸ்வரத்தின் அக்காள் மடம் தங்கச்சி மடம் போன்ற கிராமங்களிலிருந்து 18 குடும்பங்கள் கடல் வழியாக மன்னார் கற்பிட்டி ஊடாக ஏழு தோணிகளில் உடப்பில் குடியேறியதாக கர்ணபரம்பரையான கதைகளும் வாய் மொழிச் செய்திகளும் விடை கூறுகின்றன.இதனை Patrons Devotees Goddesses – Masakazu Tanaka என்பவரின் நூலும் வரையறை செய்கின்றது. மேலும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் கருத்துப்படி 16ம் 17ம் நூற்றாண்டுக்குரிய தன்மை உண்டெனக் கூறியுள்ளார். இவ்வாறு வந்தவர்கள் பஞ்சம் பசி பிணி என்று அண்டி வாழ வரவில்லை . தம் குல மானத்தைக் காப்பாற்ற வெளியேறிய குருகுல வம்சத்தவர்களாவர். இக்காலத்தில் தமிழகத்தில் முகமதியர்களின் மிலேச்சத்தனம் பெண்களைக் கவர்தல் பலாற்காரமாகக் கல்யாணம் செய்தல் போன்ற அட்டூழியங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க வெளியேறிய கடல் வேளாளர்களே உடப்பு வாழ் மக்களாவர். இவர்கள் பின்வரும் ஏழு தோணிகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது கமலந்தோணி கப்பனார் தோணி கலப்போத் தோணி போத்தி தோணி சின்னத் தோணி பாபா தோணி மாந்திரியன் தோணி என்பனவாகும். இத்தோணிகளின் உரிமையாளர்களை சம்மாட்டியார் என்றும் தொழில் நடத்துனரை மண்டாடியார் என்றும் அழைப்பர். இப்பெயர்கள் இன்றும் உடப்பு நகரில் கடற்றொழிலாளரிடையே நிலவி வருகின்றன. இது போல முனியன் கறுப்பன் வைரையா வீரபத்திரன் காளி காளியப்பன் கமலமுத்து மாரிமுத்து போன்ற ஆண்களின் பெயர்களும் மாரியாய் முனியம்மா காளியம்மா வைரம்மா வடுவாச்சி வடிவு போன்ற பெண்களின் பெயர்களும் உடை அணிகளும் இங்குள்ள மக்களை இராமேஸ்வரத்துடன் தொடர்பு படுத்துகின்றன.

குலப்பெருமை காக்க மாற்றானுக்கு மண்டியிடாது வாழ்ந்து வந்த இக்கூட்டத்துக்கு தாதன் என்பவன் தலைமை வகித்தான். இவன் தனது மகள் கமலக்கன்னியை முகமதியர் தலைவன் கேட்டுக் கொடுக்க விரும்பாது மான உணர்ச்சியுடன் கடல் வழிப் பயணத்தைத் தொடர்ந்தான். முகமதியர் தொடர்ந்து வழி மறித்து வரவே குருகுலத் தலைவன் பெண்ணின் பெருமை காக்க தன் மகளின் விருப்பத்துடன் கடலில் தள்ளிக் கொன்றான் என்பது கர்ணபரம்பரைக் கதையாகும். கமலக்கன்னியின் பெயரால் இன்றும் உடப்பு வாழ் மக்கள் காலத்துக்குக் காலம் கன்னித் தேவதை பூசைகள் விஷேடமாக ஒவ்வொரு வீட்டின் நற்கருமங்களின் போது முதலில் அப்பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்து படையலிட்டு பொங்கலிட்டு வழி பட்டு வருகின்றார்கள் .

திரௌபதையம்மன் ஆலயம் : தன்மானத்துடன் கூட்டத்தோடு வந்தவர்கள் சந்தனக் கட்டையினால் வடிவமைக்கப்பட்ட திரௌபதையம்மன் சிலையொன்றினையும் கொண்டு வந்தனர். இவர்கள் குடியிருந்த இடங்களில் எல்லாம் திரௌபதையம்மன் ஆலயம் அமைத்து வழிபட்டதாக வாய்மொழிக் கதைகள் பருகின்றன. இதுபோல் இன்று திரௌபதையம்மன் ஆலயமிருக்கும் பிரதேசம் அன்று ஒரு மேட்டு நிலமாகவே இருந்துள்ளது. இவ்விடங்களில் தில்லை மரங்களும் நொச்சி பிஞ்சால் செடிகளும் அடர்ந்து வளர்ந்த பூமியாக காணப்பட்டது. இவ்வாறான ஒதுக்குப் பிரதேசத்தை உடப்பூர் மக்கள் திருக் கோயிலுக்குரிய புனித பூமியாக மாற்றியமைத்தனர் . இன்று இப்பூமி பெருமைக்குரிய ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் திருக்கோயிலாக நவதள 108 அடிகள் இராஜ கோபுரத்துடன் கண்கவர் கவின்கலையாக காட்சி கொடுக்கின்றது.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - என்பது தமிழர் வாக்கு. உடப்பு வாழ் மக்கள் தாங்கள் குருகுலத்தவர் என்றும் வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்த மகான் என்றும் குருகுலத்து வேதவியாசரால் அருளப்பட்ட மகா பாரதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறுவர் . தாய் வழிபாட்டில் நம்பிககை கொண்ட இம்மக்கள் ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயத்தை முதன்முதலில் மரங்கள் தடிகள் கிடுகுகள் கொண்டு கட்டி முடித்து சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலையை மூல மூர்த்தியாக பிரதிஷ்ட செய்து வழிபட்டு வந்துள்ளனர். அன்று மதிய நேரப் பூசையும் இரவு நேரப் பூசையுமே நடந்தேறி வந்தன. இப்பூசைப் பணியினை ஊரின் சைவப் பணியாளரே செய்து வந்தனர். இடைக் காலங்களின் பின் பிராமணர்கள் கோயில் கடமைகளையும் பூசைகளையும் செய்து வந்துள்ளனர்.

ஆலய அபிவிருத்திப் பணியில் திரௌபதையம்மன் ஆலயமும் மகா கும்பாபிஷேகங்களும்: இவ்வாலயம் 1905ம் ஆண்டுகளில் செங்கற்களால் அத்திவாரமிடப்பட்டு சிறிய பண்டிகையுடன் பின் புறக் கோபுரம் சிறிதளவு பொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டு 1908-07-10ந் திகதி மகா கும்பாபிஷேக கிரியைகள் முன்னேஸ்வரத்து பிராமணர்களால் செய்யப்பட்டு உடப்பு மக்களின் வழிபாட்டுத் திருத்தலமானது. இக்காலங்கள் பிராமணர்களின் வருகையும் பூசைக் கிரியைகளும் ஆரம்பிக்கலாயின. பூஜைகள் இரு நேரமேயாகும். ஆரம்ப காலத்தில் ஸ்ரீ திரௌபதாதேவி அம்மன் மூலஸ்தான மூர்த்தியாகவும் உட்பிரகார சந்நிதிகள் மூர்த்தங்களாக வலது புறம் விநாயகர் சிலையும் இடது புறம் ஸ்ரீ முருகன் வேலும் வடிவமைக்கப்பட்டு ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது.

அன்று மூல மூர்த்தியாகிய ஸ்ரீ திரௌபதையம்மனுக்கே சித்திரை மாதத்தில் தீ மிதிப்பு விழா கொண்டாடப்பட்டது என கர்ணபரம்பரைச் சான்றுகள் கூறுகின்றன. தீமிப்பு விழா அன்றிலிருந்து இன்று வரையும் அற்புத சக்திபடைத்த விழாவாகும். இவ்விழா பாரதக் கதையினை மையமாக வைத்து நடைபெறுகின்றது. பாரதக் கதையில் வரும் பாண்டவர் கௌரவர் யுத்தம் பதினெட்டு நாட்கள் அதுபோல் விழாவும் பதினெட்டு நாட்களேயாகும். தீமிப்பில் நடனமாடுவோர் தொகை வருடாவருடம் அதிகரித்து இன்று 3500 பக்தருக்குமேல் தீயில் நடனமாடுகின்றனர். இக்காட்சிகள் பார்போர் கண்களை மெய் மறந்து கொள்ளை கொள்ளும் விதத்தில் ஒரு மணித்தியாலத்தையும் தாண்டிச் செல்கின்றன. தீமிதிப்பு விழாவில் கரகம் பாலித்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கரகம் எடுப்பவர் விழாவின் கதாநாயகனாகவும் பாண்டவர் பத்தினி பாஞ்சாலியாகவும் மதிக்கப்படுகின்றார். மேலும் உட்கொடிறே;றம் வெளிக்கொடி ஏற்றம் கரகம் பாலித்தலுடன் தொடர்பு கொண்டவையாகும். பதினெட்டு நாள் விழாவில் ஒன்றைவிட்டு ஒரு நாள் கரகம் பாலித்தல் இரவு வேளைகளில் நடந்தேறி பதினெட்டாவது நாள் காலை கரகம் எடுப்பவர் அக்கினிச் சட்டி எடுத்து திருக்கோயிலின் முன்னேயுள்ள தீக்கிடங்கில் வைத்து புளியங்கட்டைகளால் தீமூட்டி பாரதக் கதையினை பாராயணம் செய்து பாஞ்சாலி பலி தீர்த்தலுடன் வாது முடித்து மாலை வேளை தீமிப்பு விழா நடைபெறும். முதன்முதலில் கரகம் எடுப்பவரே தீயில் நடனமாடுவார். ஆரம்ப காலத்தில் கரகம் எடுப்பவராக ஊரவர்களே இருந்தனர். அவர்களில் கட்டாடிக் கிழவருமொருவர் முக்கியம் பெறுகின்றார். பிற்காலத்தில் கோயிலில் மாலைகள் கட்டுவித்த பண்டார வம்சத்தினர் பூசைக் கடமைகளைப் பொறுப்பேற்றனர். இன்றும் அதாவது பண்டார வம்சத்தைச் சேர்ந்த பூசாரிமார்களின் தலைமுறையினர் அக்கடமையைச் செய்துவருகின்றனர். அதன்வழி முறையில் சொக்கலிங்கப் பூசாரி முத்தையா பூசாரி அவர் மகன் பரந்தாமன் பூசாரி போன்றவர்களாவர். இவ்விழா இவ் ஊர் மக்களின் மரபு ரீதியான விழாவாகும். பொதுவாக பாரதக் கதையில் வரும் முக்கிய நிகழ்வுகளை காட்சிப்படுத்தி மக்கள் பயபக்தியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பதினெட்டு நாள் விழாவாக வடிவமைத்துக் கொண்டாடி வருகின்ற இவ்விழாவினை உடப்பு மக்கள் அன்று தங்கள் பொருளாதார சமூக நலன் கருதி சித்திரைமாதம் கொண்டாடும் விழாவினை மாற்றி பன்னெடுங் காலமாகவும் இன்றும் தெய்வங்களுக்குரித்தான ஆடி மாதத்தில் கொண்டாடத் தீர்மானித்து இவ்விழாவுக்கு ஆடித் திருவிழா என நாமம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதாவது ஆடி அமாவாசையின் முதல் ஞாயிறு அன்று உட்கொடி ஏற்றத்துடன் (அரவக் கொடி கௌரவரக்குரியது)ஆரம்பித்து ஐந்தாம் நாள் வெளிக் கொடி(அனுமன்கொடி பாண்டவர்க்குரியது) ஏற்றப்படும். இந்நாளிலிருந்து மகா பாரதக் கதை பாராயணம் செய்யப்படும் . பதினெட்டாவது நாள் போர்க் களம் .( துரியோதனன் - பீமன் ) ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் பலி தீர்த்தல் விரித்த கூந்தல் முடித்தல் . இன்று தீ மிதிப்பு விழா கொண்டாடப்படும் . இவ்விழாவுக்கு மெருகூட்டுவதும் இன்றியமையாததும் கரகம் பாலித்தல் வைபவம் சிறப்பு நிகழ்ச்சியாகும். அருள் பெற்ற கரகம் மத்தளம் கைத்தளம் அடித்து காவியங்கள் பாட கோவிந்த நாம சங்கீர்த்தனத்துடன் மக்கள்வெள்ளம் வானைப் பிளக்க ஒலித்து மாரியம்மன் ஆலயம் சென்று அருள் பெற்று காளியம்மன் கோயிலில் வரம் பெற்று மீண்டும் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் முன்றிலமைக்கப்பட்ட தீக்கிடங்கில் கரகம் முதல் காலடி பதிக்க தொடர்ந்து ஏனைய பக்தர்கள் நடனமாடுவர். அன்று தொடக்கம் இன்று வரை இவ்விழா வருடாவருடம் ஆடி அம்வாசைக் காலத்தில் ஆரம்பித்து பதினெட்டாம் நாள் தீமிதிப்பு வைபவம் முடிந்து பத்தொன்பதாம் நாள் பாண்டு தலைவன் தருமருக்கு பட்டாபிஷேகம் முடித்து கொடி இறக்கும் வைபவம் நிறைவு பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:52 pm

ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் ஆலயம் கால ஓட்டத்தில் திருக் கோயில் திருப்பணிகள் நிகழ்ந்த வண்ணமே இருந்துள்ளன . 1917ம் ஆண்டுகளில் கருவறையுடன் அர்த்த மண்டபமும் ஏனைய பகுதிகள் திறந்த மண்டபங்களாக செங்கற்களால் கட்டப்பட்டன .இவ்வாலயத்தில் சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலை அகற்றப்பட்டு 1929ம் ஆண்டுகளில் கருங் கல்லினால் செதுக்கப்பட்ட ஸ்ரீ திரௌபதையம்மன் சிலை பிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . அன்றும் மூலமூர்த்தியாக கருவறை நாயகியாக ஸ்ரீ திரௌபதையம்மனே காட்சி கொடுத்து வந்துள்ளார் .

இவ்வூர் மக்கள் பாரதக் கதையினையும் கதையின் கதாநாயகியின் பத்தினித் தன்மையிலும் சக்தியிலும் பற்றுறுதியும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்களாவர். இதனால் தங்கள் குலதெய்வமாகவே தாங்கள் குடியிருந்த காலத்திலிருந்து மெய்சிலிர்க்கும் முரட்டுப் பக்தியினையும் தொண்டினையும் மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர் .அம்மன் மகாபாரத நாயகியின் இரண்டாவது அவதாரம் சுனீத் மன்னன் செய்த தவப் பேறாக அம்மன் யாகாக்கினியில் தோன்றி துஷ்டனான அசிலோமனைச் சங்காரம் செய்து அடியார்களுக்கு அருள் பாலித்தாள். மேலும் அம்மன் திரௌபதாதேவியாக யோனிவாயில் பிறக்காமல் அக்கினியில் தோன்றியதாக பாரதம் வலியுறுத்துகின்றது .அத்தோடு பஞ்சபாண்டவர் மனைவியாகவிருந்தாலும் அக்கினியில் பிரவேசித்து தான் கற்புடையவள் என்பதை நிருபித்திருக்கின்றார். இதன் காரணமாக அம்மனுக்கு தீமிப்பு விழா திருப்தி மிக்கதாகவும் சிறப்புக்குரிய விழாவாகவும் அமைந்து விடுகின்றது.

மேலும் வணக்கத்துக்குரிய ஸ்ரீ திரௌபதையம்மன் கருங்கல் சிலையில் ஒருகால் கையிலமைந்த தாமரை மொட்டில் அப்பளுக் கேற்பட்டது. வடிவிற்கு வடிவான அழகிய சிலையினை மாற்றி புதிய சிலையினை பிரதிஷ்ட செய்தனர். அதுவே இன்றுள்ள சிலையாகும். திருக்கோயில் திருப்பணியை ஊர் மக்கள் ஆர்வம் கொண்ட பொற்காலம் 1945-1947ம் ஆண்டுகளிலேயாகும். கோயில் தென்னிந்திய சிற்பாசாரிகளான சின்னையா ஆசாரி சிதம்பரம் ஆசாரி சுவாமி நாதன் ஆசாரி போன்றவர்களால் முழுமையான மாற்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இன்றிருக்கும் பின் கோபுரச் சாயலை ஒத்ததாகவே வடிவமைக்கப்பட்டது . கோயிற் கட்டிடங்கள் சிற்பசாஸ்த்திர அடிப்படையில் மூன்று வகை சார்ந்தவை. 1. நாகரம் -வட இந்திய முறை 2. வேசரம் - பௌத்த மத சாயல். 3. திராவிடம் - விந்திய மலைக்கு தென் புறக் கலை எனப்படும். திராவிடப் பண்பாட்டை மெய்ப்பிக்கும் வடிவில் கருவறை அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஏனைய பகுதிகள் ஒரே மண்டபமாக சிறிய முன் கோபுரத்துடன் உருகாக்கப்பட்டது.கருவறையும் அர்த்த மண்டபமும் இணைத்து 17 அடிகள் அகலமும் 27 அடிகள் நீளமும் அத்திவாரத்தின் மேல் 15 அடிகள் உயரத்திற்கு வரிவடிவங்களுடன் வியாழ மட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வியாழ மட்டத்தில் வலது புறம் இராமர் இலக்குமணன் சீதாதேவி போன்றவரின் சிற்பங்களும் அருகில் குரங்கும் குரங்காட்டியும் இடது புறத்தில் காளியம்மன் மகுடா சூரனை சிங்கத்தின் மீதிருந்து வதை செய்யும் காட்சியும் அருகில் பாம்பும் பாம்பாட்டியும் வடிவமைக்கப்பட்டுள்ளன.கருவறைக் கோபுரம் குமிழ் வடிவிலமைந்து ஒற்றைக் கலசத்துடன் காட்சியளிக்கின்றது. கோபுரத்தின் முதல் தளத்தில் நான்கு மூலைகளிலும் விளக்கேந்திய பெண் பொம்மைகளும் வடக்கு வலதுபுறம் புல்லாங்குழலுடன் நந்தகோபாலன் எதிரே யசோதை அருகே ஸ்ரீ கிருஸ்ணனுடன் பஞ்சபாண்டவர்களும் அடுத்து தீயில் தவம் புரியும் முனிவரும் மோகினியின் நடனக் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளன.வலது புற இரண்டாம் தளத்தில் அல்லி ராணியும் எதிரே அருட்ச்சுணனும் மூன்றாம் தளத்தில் திருமால் புல்லாங்குழல் மீட்ட பசுவும் கன்றுகளும் இரசிப்பது போன்று பொம்மைகள் காட்சியளிக்கின்றன .குமிழ் வடிவான பண்டிகையின் மேல் தளத்தில் பூமாலைகளுடன் இணைந்த நான்கு சிறுவர்களும் சீறுமிகளும் கோபுரத்தை மென்மேலும் சிறப்படையச் செய்துள்ளன.

மேற்குப்புறக் கோபுரத்தின் முதல் தளத்தில் கண்ணன் ஐந்து தலை நாகத்தில் சையனத்தில் இருக்க ருக்குமணி சத்தியபாமா அருகிலிருக்க அதன் இரு பக்கங்களும் கருடன் நாரதர் அதே வரிசையில் வலது புறம் சிவனும் சந்திரனும் இடது புறம் சூரியனும் பிரமாவும் வடிவமைத்துள்ளன. இரண்டாம் தளத்தில் சிங்கத்துடன் போரிடும் வீரர்களும் மூன்றாம் தளத்தில் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் இருந்த பாவனையில் அருகில் சேடிப்பெண்கள் சாமரை வீசும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

கோபுரத்தின் வடபுறம் ஐந்து தலை நாகத்தின் தலை மீது பாலகிருஷ்ணர் நடனமாடும் காட்சியும் யசோதரை ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையும் மரநிழலில் இராதாகிருஷ்ண வடிவமும் அருகே இளைய கோபாலன் கோவர்த்தன கிரியைச் சுட்டு விரலால் தாங்கிய வண்ணம் நிற்கும் காட்சியும் பெண் ஒருவர் பொங்கல் செய்யும் பொம்மைகளும் .இரண்டாம் தளத்தில் வில்லுடன் அருட்ச்சுணனும் கிளியுடன் திரௌபதாதேவியும் வடிவமைக்கப்பட்டதோடு மூன்றாம் தளத்தில் ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர் வடிவங்களும் கண்கொள்ளாக் காட்சியளிக்கின்றன.

கோபுரத்தின் கிழக்குப் புறம் முதல் தளத்தில் கையில் கிளியுடன் கூடிய திரௌபதாதேவியம்மனும் இரண்டாம் தளத்தில் அனுமனும் வாலியும் மூன்றாம் தளத்தில் மலர் மொட்டுடன் அமைந்த திரௌபாததேவி சேடிகளுடன் கூடிய பொம்மைகள் யாவும் உயிNhட்டமும் நேர்த்தி மிக்க தன்மையும் பார்ப்பவரின் மனதுக்கும் கண்களுக்கும் இனிமை தரும் காட்சிகளாகும் .

பத்து அடிகள் வாயில் கொண்ட முன் கோபுரத்தில் முதல் தளத்தில் ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர் சிற்பங்கள் வீற்றிருக்க இரு மருங்கிலும் தசாவதாரங்கள் வடிவமைக்கப்பட்டு இரண்டாந் தளத்தில் மத்தியில் ஸ்ரீ திரௌபதாதேவியும் பஞ்சபாண்டவர்களும் அவர்கள் தாயார் குந்திதேவியாரும் வண்ணக் காட்சியாக வடிவமைத்து அடிவாரத்தில் வலது பக்கத்தில் பிள்ளையார் சிற்பமும் இடது பக்கத்தில் முருகப்பெருமானும் வாயிலில் துவாரபாலகர்கள் கம்பீரமாக உயிரோட்டமுள்ளதாக உருவாக்கப்பட்டுக் காட்சி கொடுக்கப்படுகின்றன. இன்று இவ்விடத்தில் நவதள இராஜ கோபுரம் வானளாவ வளர்ந்து காட்சியளிக்கிறது.

திருக் கோயில் அமைக்கப்பட்ட போதிலும் 1950 ம் ஆண்டுகளில் உடப்பு வாழ் மக்களிடையே நெருக்கடியான காலமாகக் கருதலாம். அதாவது மூலமூர்த்தியினை வைப்பதில் முடிவெடுக்க வேண்டிய காலக் கட்டமாகும். ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமாவை மூலமூர்த்தியாக வைப்பதா ? ஸ்ரீ திரௌபதாதேவியினை மூலமூர்த்தியாக வைப்பதா ? எனத் தீர்மானிப்பதில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாது தவித்த காலமாகும் . இதனால் ஊர் பொது மக்கள் பெரி;யவர்கள் பிராமணர்கள் ஒன்று கூடி ஓர் முடிவுக்கு வந்தனர் . முடிவில் திரு வெள்ளச் சீட்டுப் போட்டுப் பார்த்தனர் . முடிவு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமாவே மூலமூர்த்தியாக இருக்க இறைவன் தீர்ப்பானது . இதனடிப்படையில் இன்று இவ்வாலயம் ‘ ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர். ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயம் என அழைக்கப்பட்டு கருவறையில் ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்திய பாமாவும் அர்த்த மண்டபத்தின் இடது புறம் ஸ்ரீ திரௌபதா தேவியம்மனும் பிரதிஷ்டை செய்து 1950-04-17 ம் திகதியன்று மஹா கும்பாபிஷேகம் முன்னேஸ்வர முன்னைநாதப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் பிரமஸ்ரீ கைலாசநாதரும் அவர் அண்ணர் மாப்பிளைக் குருக்கள் தலைமையில் பிரமஸ்ரீ குமாரசாமி குருக்கள் ஆலய பிதான குருவாக இருந்து நடந்தேறியது .

1954ம் ஆண்டுகளில் முன் கோபுரத்துக்கான திருப்பணி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஸ்தபதி சுவாமி நாத ஆசாரி அவர்களால் உயிரோட்டமுள்ள சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. சைவ சித்தாந்தத் தத்துவத்தின் படி கோயிகளின் புனரமைப்புப் பணிகள் பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பாபிஷேகம் நடாத்தப்படுதல் வேண்டும். அதனடிப்படையில் 1961-11-27ம் திகதிகளில் முன்னேஸ்வரம் பிரமஸ்ரீ மாப்பிள்ளைக் குருகள்களால் மஹா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

1973ம் ஆண்டுகளின் பின்பு கோயில் திருப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .தனியான திருப்பணி சபை உருவாக்கப்பட்டது. முன்னுள்ள பின்னுள்ள கோபுரஙகள் மீள புனரமைத்து சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு புதிய மஹா மண்டபம் தரிசன மண்டபம் என்பனவும் அமைக்கப்பட்டன. இவ்வாறான நடைமுறைத் திட்டத்துக்கு தென்னிந்திய ஸ்தபதிகளான சங்கியன் சுந்தரபாண்டியன் போன்றோர் வரவழைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவடைந்தது. மேலும் 1974-02-06ம் திகதிகளில் பிரமஸ்ரீ விசுவநாதக் குருக்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவு பெற்றது .

1975ம் ஆண்டுகளின் பின்பு திருப்பணிக் கடமைகள் பெரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை . 1979-80 ம் ஆண்டுகளி;ல் வசந்த மண்டபத்துக்கான வேலைத்திட்டம் ஸ்தபதி நாகலிங்க ஆசாரியால் நிறைவு பெற்று மஹா மண்டபத்தில் நடந்த வசந்த மண்டபப் பூசைகள் இக்காலத்திலிருந்து வசந்த மண்டபத்தில் நடைபெற வாய்ப்புக்கள் கிட்டியது .

இதுவரை ஆலயத்தின் படிமுறையான மாற்றங்களை அவதானிக்க முடிகின்றன. கருவறை அர்த்த மண்டபம் மஹா மண்டபம் தரிசன மணடபம் வசந்த மண்டபம் போன்ற மண்டபங்கள் நிறைவு பெற்றிருந்தன . திருப்பணி வேலைத் திட்டங்கள் தெய்வ கடாட்சத்துடன் நிறைவு பெற இவ்வூர் மக்களின் உழைப்பும் உதவியும் சாலச் சிறந்த ஊக்கமும் பொறுப்புணர்ச்சியுடன் ஈடுபட்ட தர்ம கர்த்தா சபைகளின் மகத்தான சேவைகளாகும் . தர்ம கர்த்தா சபைகள் ஊர் மக்களால் ஆரம்ப காலத்திலிருந்து முச்சந்திகளிலும் பிற்பட்ட காலத்தில் திருக்கோயில் முன்றிலும் ஒன்று கூடி வயது தகமை அடிப்படையில் தெரிவு செய்து தொண்டு முறையாக செயற்குழுவினை உருவாக்கிவந்துள்ளனர். வருடாவருடம் செயற்குழு புதிதாக தெரிவு செய்யப்படும். இச்சபையானது இன்று இந்து ஆலய பரிபாலன சபை என அழைக்கப்படுகின்றது. இச்சபையே திருக்கோயில் பணிகளைச் செய்வதோடு ஊரின் சமூகப்பணிகளையும் மேற்கொண்டு வரும் சபையாகும். மேலும் இலங்கையின் இந்து கலாசார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சபையாகும். இதற்கான பதிவிலக்கம் : ர்யுஃ6ஃPருஃ5 உடப்பு புத்தளம் .திருக்கோயில் காணிகள் ஆரம்ப காலத்தில் குடியிருந்த மக்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று வரைக்கும் திருக்கோயில் காணியாகவே இருந்து அதற்கான பதிவுகள் இந்து ஆலய பரிபான சபையினுக்கு உடமையாக்கப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக உடப்பு ஊர் மக்களின் நிருவாகத்திலும் அதிகாரத்திலும் இங்குள்ள ஆலயங்கள் வழி நடாத்தப்பட்டு வருவது சிறப்பமிசமாகும். இவ்வாலயங்களான ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர். ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் கோயில். ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் கோயில். ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் ஸ்ரீ கந்தசாமி கோயில் போன்றன இந்து ஆலய பரிபாலன சபையின் நிருவாகத்துக்குட்பட்டனவாகும்.



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:52 pm

1991ம் ஆண்டுகளில் உள் வீதிக்கான வேலைத் திட்டங்களை இக் காலத்து இந்து ஆலய பரிபாலன சபையினர் மேற் கொண்டனர். இது ஓர் பாரிய திருப்பணியாகும். இவ் வேலைத் திட்டம் 1994 ம் ஆண்டுகளில் நிறைவு பெற்றது. அதாவது கோபுர ஆலஞ் சுவர்கள் அமைக்கப்பட்டு குறைபாட்டுக்குரிய சிற்பங்கள் நிறைவு பெற்று மதுரை சந்தானம் ஆசாரியின் தலைமையில் வர்ணம் தீட்டப்பட்டு 1994-06-27ம் திகதிகளில் மஹா கும்பாபிஷேகம் பிரமஸ்ரீ விசுவநாதர் குருக்கள் தலைமையில் கிரியாகால கருமங்கள் நிறைவேற்றப்பட்டு ஆலய பிரதான பிரமஸ்ரீ மணி சினிவாசக் குருக்களின் துணையுடன் மஹா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நிறைவெய்தியது .

1994ம் ஆண்டுகளிலிருந்து முதன்முதலில் ஸ்ரீ நாராயணப் பெருமாளுக்கான பிரமோற்சவத்; திருவிழா ஊர் மக்கள் அனுசரனையுடன் இறை அனுக்கிரகம் கிடைக்கப்பெற்றது . பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.பெருமாளின் வேட்டைத் திருவிழா தேர் திருவிழா தீர்த்தத் திருவிழா முக்கியத்துவம் பெறுகின்றன . இக்காலத்திலிருந்து தரிசன மண்டபத்தில் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கும் ஸ்ரீநாராயணப் பெருமாளுக்கும் என இரு கொடிஸ்தம்பங்கள் இவ்வாலயத்தில் ஏற்படுத்தப்பட்டன . மேலும் கட்டுத் தேர் களியாட்டம் பிரபல்யம் பெற்றமையுடன் 2000ம் ஆண்டுகளில் ஊர் மக்கள் மெய்யடியார்களின் அயராத ஊக்கத்தால் திரு எம். மேகநாதன் சிற்பியின் குழுவினர்களால் சித்திரத் தேர் புதிதாக உருவாக்கப்பட்டு இவ்வாலயத்தில் ஒவ்வொரு மார்கழி மாதமும் ஒன்பதாம் நாள் திருவிழாவன்று ஸ்ரீ கண்ணன் தேரோட்டம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து பத்தாவது நாள் இந்து மாகடலில் தீர்த்தத் திருவிழாவும் மஹோற்சவத் திருவிழாவின் பெருமைக்கு முத்திரையிட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை உணர முடிகின்றது. இதேவிழாவுடன் அதாவது மார்கழி மாதத்தில் திருப்பாவை நோன்பு ஆரம்பிக்கப்பட்டு அதிகாலையில் பெண்கள் அணி புடைசூழ திருப்பாவைப் பாடல்கள் பாடப்படுவது ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. இன்று அதன் விருச்சம் விரிவடைந்துள்ளமையை காணலாம். மேலும் மஹோற்சவத் திருவிழாவில் வைகுந்த ஏகாதசி விரதமும் சொர்க்க வாயில் திறப்பு விழாவும் சிறப்பமிசங்களாகும். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ பாரர்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர் எழுந்தருளி சிலையாக பற்பல அலங்கார வாகனங்களில் கோயில் ஊர் வலங்கள் இடம் பெறுகின்றன.இது ஓர் ஆகமத்திருவிழாவாகும்

இலங்கை நாட்டின் வட மேல் கரையின் புத்தளம் மாவட்டத்தின் உடப்புக் கிராமத்தின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள் புத்தொளி மிக்க பொன்னாளாகும் . ஊர் மக்களின் ஏகோபித்த முடிவும் ஒருமித்த குரலும் ஒருங்கிணைந்து நவதள இராஜ கோபுரம் அமைப்போம் என ஓங்கி ஒலித்தது .அதன் அடிப்படை வேலைத் திட்டத்தை ஆனித்தரமாக மேற் கொள்வதற்கும் நிருவகிப்பதற்கும் தனித்துவமான திருப்பணி சபை உருவாக்கப்படடு 108 அடி நவதள இராஜ கோபுரத்துக்கான கல் நாட்டு விழா 2006-02-10ம் திகதிகளில் வெள்ளிக் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையுள்ள சுப வேளையில் நடந்தேறி முடிவுற்றது. முதல் கல்லினை சிவஸ்ரீ விசுவநாதர் குருக்கள் பிரமஸ்ரீ மணி சினிவாசக் குருக்கள் போன்றோர் வைத்து ஆரம்பித்தார்கள்;.தொடர்ந்து திருப்பணி சபைத் தலைவர் பிரமுகர்கள் உள்@ர் வெளியூர் மக்கள் யாவரும் பயபக்தியுடன் தட்சணை வழங்கி விழாவைச் சிறப்பித்தனர் இவ்வேலைத் திட்டம் ஸ்தபதி எஸ். சத்திவேல் ஆசாரி குழுவினர் பொறுப்பேற்று நடாத்தி வந்து புதுப் பொலிவுடன் வேலைத்திட்டம் இனிது நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கு ரூபா ஆறு கோடிகள் என தீர்மானிக்கப்பட்டன. கோபுரத்தின் அத்திவாரம் மூன்றடி ஆழத்தில் ஐம்பத்தைந்து அடி அகலத்தில் முப்பத்தைந்தடி நீளத்தில் வலைப்பின்னல் வடிவில் நான்கு தட்டுகளுக்கு கொங்ரீட் அமைத்து ஐந்தாவது தட்டிலிருந்து பதினாறு தூண்கள் உயர்த்தி படிமுறையாகச் சென்று நான்கு தூண்களே 108 அடியினை நிறைவு செய்து ஒன்பது கலசங்களுடன் இன்று நவதள இராஜ கோபுரமாக காட்சி கொடுக்கின்றது,

ஊர் மக்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் வெளியூர் அன்பர்களின் நல்லாசியும் அருங் கொடைகளும் நவதள இராஜ கோபுரத்தின் செயற்றிட்டத்தினை 2007 ம் ஆண்டுகளில் வியாழ மட்டம் வரையும் வளர்ச்சியடையச் செய்தது . இவ்வளர்ச்சி மஹா கும்பாபிஷேகத்துக்கு வித்திட்டுக் கொடுத்தது . இதன் பெறுபேறாக 2007-01-28 ம் திகதிகளில் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பாரத இதிகாசத்தைக் கொண்ட தீ மிதிப்பு என்னும் பூமிதிப்பு உச்சவத்தினையும் வைகுண்ட ஏகாதசியில் தேரோட்டம் தீர்த்தம் காணும் ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்திய பாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இனிது நடந்தேறி நிறைவு பெற்றது .

பொதுவாக இராஜ கோபுரங்கள் கட்டிவிக்கும் திருப்பணி விஜய நகர அரசர்களின் காலத்தில் ஆரம்பிக்கப் பட்டதாக இலக்கிய வரலாறுகள் கூறுகின்றன. இதனடிப்படையில் எமது ஊரிலும் இராஜ கோபுரப் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதனால் உடப்பு ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்திய பாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவி அம்மன் ஆலயம் முழுமை பெறும் ஆலயமாகும் . அதாவது மூலஸ்தான மண்டபம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் தரிசன மண்டபம் வசந்த மண்டபம் சபா மண்டபம் இராஜ கோபுரம் என ஏழு மண்டபங்களைக் கொண்டுள்ளன எனலாம். திருக்கோயில் மூலஸ்தானத்திலிருந்து மேற்கு கிழக்கு முகமாக 125 அடிகள் நீளமும் பதினொரு அடிகள் இராஜ கோபுர வாயிலில் முடிவடைகின்றது. இன்று இவ்வாலயம் 150அடிகள் நீளமும் 95 அடிகள் அகலமுமிக்க பரப்பினைக் கொண்டமைந்துள்ளது.

இன்றும் நவதள 108 அடிகள் இராஜ கோபுரத்தின் திருப்பணிகளில் ஒன்பது தளங்களுக்கான வேலைத் திட்டமும் முடிவெய்தியுள்ளன . மேலும் சிற்பங்கள் வர்ணங்கள் கொடுக்கும் வேலைத் திட்டத்தினை முடிவு பெறச் செய்வதற்கு உள்ளூர் வெளியூர் அன்பர்கள் அடியார் தொண்டர்களை திருப்பணி சபையினர் நிதி பெறும் முயற்சியில் நாடுகின்றனர் . நாராயணன் அடியவர்கள் தேடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு;.அதன் பெறுபேறாக இன்று நவதள 108 அடிகள் இராஜ கோபுரம் முழு நிறைவு பெற்றுள்ளது. ஒன்பதாம் தளத்தில் ஒன்பது கலசங்கள் நிருமானித்தமைத்து ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு தள வாயில்களில் கிழக்கிலும் மேற்கிலும் இரு துவாரபாலகர்கள் நின்ற பாவனையில் பல்வேறு நிலையில் கவின்கலைச் சிற்பங்களாக உயிரோட்டமுள்ள முப்பத்தாறு பொம்மைகள் வடிவமைக்கப்படடுள்ளன. இது போல் வடக்கிலும் தெற்கிலும் ஒன்பது தளங்களிலும் ஒன்பது அம்மன்கள் பதினெட்டினை வடிவமைத்துள்ளனர். வியாழ மட்டத்தில் திருக்கோயிலின் முற்பகுதியில் மையத்தில் ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா ஸ்ரீ பார்த்த சாரதி சமேதர் சிற்பங்களும் இடது பக்கத்தில் தசாவதாரமும் தொடர்ந்து நாரைக்கு முத்தி வழங்கும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தில் பஞ்ச பாண்டவர்களும் தொடர்ந்து திரௌபதாதேவி துகிலுரிதல் காட்சியும் வண்ணப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் நவதள இராஜ கோபுரத்தில் 108 க்கு மேலான பொம்மைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நவதள இராஜ கோபுரத்தினை மெருகு படுத்தும் விதத்தில் ஐம்பதடி உயரத்தில் வலது புறத்தில் கான்டாமணிக்கூட்டுக் கோபுரமும் இடது புறத்தில் மணிக் கோபுரமும் பொம்மைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போல வசந்த மண்டபம் நிருமானிக்கப்பட்டு கோபுரத்தில் ஸ்ரீ நாராயணப் பெருமாள் சயனத்திலிருக்கும் காட்சி வண்ணப்படுத்தப்பட்டுள்ளன. வியாழ மட்டத்தின் கீழ் பதினொரு அடிகள் உயரங்கொண்ட இரு பக்கமும் சிங்கத்துடன் கூடிய இரு துவாரபாலகர்களும் காட்சிக்குக் காட்சியாகவும் நுழை வாயிலில் வலது புறம் பதினொரு அடியில் ஸ்ரீமகா விஷ்ணுவும் இடது புறம் ஸ்ரீதிரௌபதாதேவியும் அடுத்து பத்தொன்பதரையடி உயரமும் பதினொரு அடி அகலமும் கொண்ட இரு சித்திர கதவுகள் நவகள இராஜ கோபுரத்தினை அழகு படுத்தி வலம்வருதை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. தகவுகளில் பாரதக் கதையின் இன்றியமையாச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை சிற்பாசாரி எம். மேகநாதன் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

இன்று இவ்வாலயம் ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவி அம்மன் ஆலயம் என்ற பெயருடன் காட்சி கொடுத்து வருகின்றது. கருவறை மூர்த்தியாக ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதரும் அர்த்த மண்டபத்தின் இடது பக்கத்தில் ஸ்ரீ திரௌபதாதேவி அம்மனும் மகா மண்டபத்தின் வலது புறம் விநாயகர் சந்நிதியும் இடது புறம் வேலாயுதக் கடவுள் சந்நிதியும் மேலும் தரிசன மண்டபத்தில் கருவறையைப் பார்த்த வண்ணம் முறையே கருடாள்வார் பலி பீடம் மஹோற்சவத்திற்கான கொடிஸ்த்தம்பம் ஆடித் திருவிழாவுக்கான கொடிஸ்த்தம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தரிசன மண்டபத்தின் இடது பக்கத்தில் நவக்கிரக சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேல் விதானத்தில் முகப்பில் வலமிருந்து இடமாக நர்த்தன விநாயகர் துர்க்கை லக்சுமி சரஸ்வதி திருமுருகன் பொம்மைகளும்; தொடர்ந்து பாரதக் கதையினை மையப்படுத்தி வலது பக்கத்தில் தருமனுக்கு முடி சூட்டுதல் கர்ணன் தான் செய்த தர்மத்ததை தானம் செய்தல் இடது பக்கத்தில் குற்றுயிரான பீஷ்மாருக்கு அருச்சுணன் புவியைப் பிளந்து தண்ணீர் தாகம் தீர்த்தல் கீதா உபதேசம் செய்தல் போன்ற காட்சிகள் கண்கவர் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வசந்த மண்டபத்தில் ஸ்ரீ நாராயணப்பெருமாள் ஸ்ரீ மகாலெட்சுமி திருக்கல்யாணக் காட்சியும் காணக்கிடக்கின்றது. உயிரோட்டமான சிற்பங்களை உணர்ந்து உருவாக்கிய் சிற்பாசாரியார் கலைமாமணி எஸ் செந்தில் அவர்கள் திருவாரூர் தமிழ்நாடு ஆக்க ஊக்கத்துடன் வடிவமைத்துக் கொடுக்க அச் சிற்பங்களுக்கு ஊணும் உயிரும் கொடுத்து அதன் உண்மையை வெளிப்படுத்திய பெருமை ஓவியக் கலைமானி எஸ்.முத்துக்கிருஷ்ணன் குழுவினரையே சாரும் எனலாம். கலைஞர்கள் நிலைத்திருப்பர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

நவதள 108 அடிகள் இராஜ கோபுரம் இலங்கைத் திருநாட்டின் சமாதானம் வேண்டி நிருமானிக்கப்பட்ட கோபுரமாகும். அதன் வேலைத்திட்டம் நிறைவு பெற்று நேர்த்தியான வடிவமைப்புடன் வானளாவ வளர்ந்து காட்சி கொடுக்கின்றது.இதற்கான மஹா கும்hபபிஷேகம் 2010 ஆண்டு ஐப்பசி அல்லது கார்த்திகை மாதங்களில் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன. அதுவே உண்மையுமாகும்.

ஸ்ரீ பார்த்த சாரதி ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் ஆலயத்தின் சிறப்பு நிகழ்ச்சியான ஆடித் திருவிழா உடப்பு மக்களின் சிம்ம சொற்பனமாகும் .

இந்துக்கள் ஆடி ஆவணி மாதங்களில் தங்கள் இ;ஷ்ட தெய்வங்களுக்கு திருவிழாக்கள் செய்வதையே விரும்புவார்கள் . அதாவது ஆடி மாதம் தெய்வங்களுக்குக் குளிர்மையான மாதம் மானிட ஜென்மங்களுக்கு இனிமையான மாதமாகும் . இந்நியதியில் உடப்பு மக்களும் விதிவிலக்கல்ல .

உடப்பு மக்கள் தீமிதிப்பு ஆகிய பூமிதிப்பு வைபவ நாளை வரலாற்றுக் காலங்களிலிருந்து ஆடித் திரு விழா என்றே ஆண்டாண்டு காலமாக அழைத்து வந்துள்ளனர் . பதினெட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழா பாரதக் கதையினை மையப்படுத்தி பதினெட்டு நாட் கள் நடைபெறும் போர்க் களத்தினைச் சித்தரித்துக் காட்டி நிற்கும். மேலும் மரபுத் திருவிழா என இவ்விழாவை வரையறை செய்யலாம் . பாரதக் கதா பாத்திரங்களை இவ்விழாவின் போது காட்சிப் படுத்திக் காட்டுவார்கள் .

பதினெட்டு நாள்கள் நடைபெறும் ஆடித் திருவிழாவின் சிறப்பு: பாரதக் கதையில் பதினெட்டுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன . அதாவது.

- மஹா பாரதம் பதினெட்டுப் பருவங்களைக் கொண்டன .

- பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்தன .

- பாண்டவரினதும் கௌரவர்களினதும் சேனைகள் தொகை பதினெட்டாகும் .

- மஹா பாரதத்தின் சாரம்சமாகிய பகவற் கீதை பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டன .

- இந்த அரிய நூலின் ஞானியை பதினெட்டு சுலோகங்களால் விளக்கியுள்ளனர் .

- எனவே இவ்வூர் ஆடித்திருவிழாவும் பதினெட்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது

- மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாகிய கரகம் இன்றியமையாத இடத்தினைப் பெறுகின்றது . கரகக் கும்பத்தில் அடுக்கி வைக்கப்படும் மாவிகளும் பதினெட்டாகவே உள்ளன .

உடப்பு மக்களால் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா ஆடி அமாவாசையின் முதல் ஞாயிறு நாளன்று உட்கொடி ஏற்றும் வைபவம் . இக் கொடி துரியோதனனின் அரவக் கொடியாகும் . இக்கொடியேற்றத்துக்கான கிரியைகள் யாவும் அர்ச்சகரினால் (பூசாரியார்) மேற்கொள்ளப்படும் . இங்கு பிராமணர்கள் பார்வையாளர்களே . இக்கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் வெளிக் கொடியேற்றும் வைபவம் . இக்கொடி பஞ்ச பாண்டவரின் அனுமன் கொடியாகும் . இதனைத் தொடர்ந்து பதினெட்டாவது நாள் புதன் கிழமை அன்று தீமிதிப்பு விழாவாகிய பூமிதிப்பு விழா ஊர் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது .



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:53 pm

இவ்விழா ஆகம விதிகளுக்குட்பட்டவையல்ல . மரபு முறையான காட்சித் திருவிழாவேயாகும் . சோதிட பஞ்சாங்கங்கள் பார்த்தாராய வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை . ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி திருவிழாவுக்கான நன்னாளை ஏகோபித்த முடிவாக மேற்கொள்வார்கள் . அதாவது ஆடி அமாவாசை முன்னாகவோ பின்னாகவோ வரும் முதல் ஞாயிறு அன்று கொடி ஏற்றி பதினெட்டாவது நாள் புதன் கிழமையில் தீமிதிப்பு வைபவம் என வரையறை செய்து விடுவார்கள் . மேலும் இவ்விழா நாளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது . எக்காரணங்கள் கொண்டு தீமிதிப்பு விழா புதன் கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் வருவதில்லை . திகதிக்கோ நல்ல நேரத்திற்கோ இடமில்லை . ஆனால் ஆடி ஆவணி மாதங்கள் சுப நேரமிக்க நாள்களாக அமைந்து விடுகின்றன. ஏன் ஆடி அமாவாசையில் கொடி ஏற்றப்படுதல் வேண்டும் . மஹா பாரதப் போருக்கான நாள் ஆடி அமாவாசையன்று குறித்தால் குறித்தவர்களுக்கு வெற்றி நிச்சயமாகும் என்பது ஐதீகமாகும் . அதன் அடிப்படையில் தமக்கு வெற்றி கிடைக்கும்படியாக மஹாhபாரதப் போர் தொடங்குவதற்கான முகூர்த்தத் திதியினை கணித்துத் தருமாறு துரியோதனன் வஞ்சகமாக சோதிடக் கலையினில் வல்லவனும் பாண்டவர்களில் ஒருவனுமான சகாதேவனைக் கேட்கிறான் .தொழில் தர்மம் நோக்கிச் சகாதேவன் அமாவாசைத் திதியில் போர் தொடங்கின் வெற்றி நிச்சயம் என்னும் உண்மையை உணர்த்துகின்றான் . கௌரவர்கள் அமாவாசையில் போர் தொடங்கின் நாம் அழிவது உறுதியென அறிந்த பாண்டவர்கள் கண்ணனைச் சரணடைகின்றனர் .கண்ணன் ஆற்றங்கரையிலிருந்த ரிஷிகளின் மனங்களில் குழப்பமுண்டாக்கி சதுர்த்தசி திதியில் பிதுர் சிரார்த்தத்தினை செய்வித்ததோடு தானும் செய்தார் . அதனால் தேவர்களுக்குள் குழப்பமுண்டாக அவர்கள் கண்ணன் முன் தோன்றி அமாவாசையல்லாத தினத்தில் பிதுர்த்தர்ப்பணம் செய்தது ஏன்? என வினவினர் .கண்ணனோ தேவர்களோடு வந்த சந்திரர் சூரியரை சுட்டிக் காட்டி இவ்விருவரும் ஒன்றாய் வந்தால் அமாவாசைதானே . இதினென்ன தவறு எனத் தர்க்கித்தார் . இதிலிருந்து அமாவாசைக்கு எவ்வளவு சக்தியுண்டு என்பதை எல்லோராலும் உணரமுடிகின்றதல்லவா? எனவே வெற்றிக்கு அமாவாசை சிரார்த்த திதி சிறப்பு மிக்க நாளாகும் . இதனைக் கருப்பொருளாகக் கொண்டே ஆடி அமாவாசையின் முதல் ஞாயிறு அன்று உட்கொடியேற்றும் வைபவம் நடைபெற்று வந்துள்ளது .

திருவிழா பதினெட்டு நாட்கள் . இது மஹா பாரதக் கதையில் குருசேத்திரத்தில் நடந்த பாரதப் போர் நாட்களாகவே கருதப்படுகின்றன .இது பாரதப் போரை மையமாகக் கொண்ட மரபு ரீதியான காட்சித் திருவிழாவாகும் . விழாவில் மஹா பாரதக் கதை பாடப்படும் கதையின் சாரம்சத்துக்கு ஏற்ப காட்சிகளும் ஊர் மக்களால் பக்தியோடு நடித்துக் காட்டப்படும் . உட்கொடி ஏற்றும் வைபவம் துரியோதனன் போர் தொடங்கும் கதையின் பாகம் பாடப்பட்டு துரியோதனனின் அரவக் கொடியேற்றம் நடைபெற்று வருவது வழமையாகும் . விழாவின் ஐந்தாவது நாள் பஞ்ச பாண்டவர்களின் ஆஞ்நேயர் கோடியேற்றம் நடைபெறும் இதனை வெளி கொடி என்பர் .இந்நாளிலிருந்து மஹா பாரதக் கதை முழுமையாகப் பாடப்பட்டு வரும் . பாரதக் கதைக்கேற்றவாறு காட்சிகள் அமையும்

இவ்விழாவில் காணப்படும் சிறப்பம்சங்கள் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன . திருவிழாவைச் சிறப்பாகச் செய்வதில் ஊரிலுள்ள அனைவருக்கும் சமத்தும் வழங்கப்பட்டு கொண்டாடி வந்துள்ளனர் . இன்று படிமுறையான வளர்ச்சியின் மைத்தியில் மாற்றஙகள் காணப்படுகின்றன . உபயகாரர்கள் வரிசையில் முதலாளிமார் வெளியூரவர்கள் படகு தெப்பம் போன்ற தனவந்தர்கள் பங்கு கொள்ளலாம் என்ற நியதிக்கு ஊரவர்கள் வந்துள்ளனர்.

மேலும் இவ்விழாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பம்சம் கரகம் .இக்கரகம் பக்திக் கரகம் சக்திக் கரகம் இறை வழிபாட்டு அம்சங்களுடன் சமய வழிபாட்டு நிகழ்ச்சியாக இடம் பெற்றுள்ளது . கரகம் : கமண்டலம் கங்கை பூங்குடம் நீர்த்துளி எனப் பல பொருள்படும். கரகாட்டம் கிராமிய தெய்வ வழிபாட்டுடன் தொடர்பு பட்டவை . இவ்வாறான கிராமியக் கலைகள் உடப்பூரிலுள்ள ஆலயங்களில் பன்னெடுங்காலமாக பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன . அனேக கிராமங்களில் இறைவழிபாட்டுடன் மேற் கொள்ளப்படும் கரகக் கலை கிராம மக்கள் மத்தியில் வறுமை வரட்சி நோய்கள் ஏற்படுகின்ற வேளையில் தெய்வங்களைக் குளிர்ச்சிப்படுத்த கரககாட்ட வழிபாடு நடைபெற்று வருவதுண்டு . ஆனால் உடப்பு ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் ஆலயத்தின் கரகாட்டம் பொதுத் தன்னையிலிருந்து வேறுபட்டு சிறப்புத் தன்மையுடன் தொடர்புபட்டுள்ளது .

இவ்வாடித் திருவிழாவில் கரகம் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது . கரகமின்றேல் விழாவில்லை விழாவில்லையென்றால் கரகமில்லை என்ற முடிவுக்கே வரலாம் . முதன் நாளன்று உட்கொடி ஏற்றும் வைபவம் கரகத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றது . ஐந்தாம் நாள் வெளிக் கொடி ஏற்றும் வைபவத்;தில்; கரகம் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்து எட்டுக் கரகங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும் . எட்டாவது கரகமே தீமிதிப்பாகிய பூமிதிப்பில் நடனமாடும் கரகமாகும் .

முறைசார்ந்த கிராமிய தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய கரகத்தின் அமைப்பு ஆரம்ப காலத்தில் மண் குடமாகவும் பிற்காலத்தில் செம்பினால் உருவாக்கப்பட்டுமுள்ளது .இக்கரகத்தின் கும்பத்தில் பதினெட்டு மாவிலைகள் அடுக்கி நிரப்பப்பட்டு பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் .பதினெட்டு மாவிலைகள் பதினெட்டு நாள் திருவிழாவையும் பதினெட்டு நாள் போர்க் களத்தையும் நினைவுப்படுத்துவதாகும் . எனவே கரகத்தையே ஸ்ரீ திரௌபதாதேவியம்மனாக சிருஷ்டிக்கப்பட்டு மக்கள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர் . கரகமே தீமிதிப்பு நாயகி .பாரத நாயகி திரௌபதாதேவியம்மன் என பக்திமயமாக வழிபடுகின்றனர் .மேலும் கரகத்துடன் தொடர்பு பட்ட ஏனைய சக்திச் சின்னங்கள் பின்லருமாறு :

- சூரியன் சந்திரன் கொடிகள் . இவ்விரு கொடிகளும் கரகத்துக்கு முன்னே நகர்ந்து செல்லும் . இக்கொடிகளின் தாற்பரியம் அமாவாசையினை புலப்படுத்துவதாகவும் . சூரிய சந்திர குலத்தை நினைவுப்படுத்துவதாகவும் வரையறை செய்யலாம் .

- கொந்தன் கொடியும் சாட்டைக் கயிறும்.: கொந்தன் கொடி ஐந்து கூரிய அரை வட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கொடியாகும் . ஒவ்வொரு கூரிலும் தேசிப்பழம் குத்தப்பட்டிருக்கும் . இது பஞ்ச பாண்டவர்களை நினைவுப்படுத்தும் . கொந்தன் கொடியில் இணைந்திருக்கும் சாட்டைக்கயிறு அல்லது மந்திரக் கயிறு அருள் பெற்றவர் அதாவது உருப்பெற்றவரைச் சாந்தப்படுத்தும் கயிறாகும் .

- கரகம் எடுக்கும் அர்ச்சகரின் வலது கையிலிருக்கும் வெள்ளிப் பிரம்பு: இது எச்சரிக்கை செய்யும் பாவனைக்குப் பயன்படுத்தப்படும் . இடது கையிலிருக்கும் சம்சாடு: துரியோதனனின் மார்பைப் பிளந்து உதிரம் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

- மந்திர வாள் : கரகம் பாலித்தலின் பின் அர்த்த மண்டபத்தில் இருக்கும் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் முன் கரகத்தின் விளிம்பில் இந்த மந்திர வாள் நிறுத்தி வைக்கப்படும் . நிறுத்தப்படும் வாள் நீண்ட நேரம் விழாது நிலைத்திருக்குமாயின் சக்தியின் தன்மையில் உச்ச நிலையினை காண்பதாக அறிவர்.

- கரகக் குடத்தினுள் பச்சையரிசி நீர் நிரப்பப்பட்டிருக்கும் . கரகம் ஊர் வலம் வரும் வேளை பாட்டு மத்தளம் கைத்தள மணிகள் சேகண்டி சங்கு மேள வாத்தியம் நாட்டுப் பறை போன்ற ஓசைகளுடன் தெய்வீகத் தன்மை பெற்ற தெய்வங்கள் மீதான காவியங்கள் பாட மக்களின் கோவிந்தா திரௌபதாதேவியம்மனே என்ற வானைப் பிளக்கும் கோசத்தோடு கரகம் திருக் கோயிலை அடையும் .

பதினெட்டாவது நாள் அக்கினிச் சட்டியும் வெள்ளிக் குடத்திலான அலங்காரக் கரகமும் : ஆடித் திருவிழாவின் இறுதி நாள் இனிய தெய்வீகம் பொருந்திய உடப்பு மக்களின் நன்னாள் இந்நாளில் அதிகாலையில் மக்கள் திருக்கோயினைத் தரிசித்து அமைதியாக அமர்ந்திருப்பர் . காலை ஐந்து மணியளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்படும். பிராமணர் யாக மந்திரம் ஓத யாககுண்டலத்தில் யாகம் வளர்க்கப்படும் யாகம் வளர்க்க ஆலை மா பலா அத்தி இத்தி போன்ற சுள்ளிகளால் நிரப்பப்பட்டிருக்கும் . இதனை எரிப்பதற்கான தீயினை பதினெட்டு நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் தூண்டாமணி விளக்கிலிருந்து தீயினை அர்ச்சகரால் அதாவது கரகம் எடுப்பவரால் தீ எடுத்து யாககுண்டலத்துக்கு தீ மூட்டப்படும் . அக்கினிச் சட்டிக்கும் கிரியைகள் செய்து வைக்கப்படும் . அக்கினிச் சட்டி சுள்ளிகளால் நிரப்பி நெய் ஊற்றி சூடம் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும் . பிராமணர் வேத மந்திரம் ஓத புண்ணிய கிரியைகள் முடிவடைந்த பின் அர்ச்சகர் கருவறை சென்று ஸ்ரீ நாராயணப்பெருமாளுக்கு பஞ்சாலாத்தி காட்டி அர்த்த மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரௌபதாதேவியம்மனுக்கு பூசை செய்து கையில் வெள்ளிப் பிரம்பினை எடுத்து அம்மன் பாதங்களை வணங்கி அருள் பெறுவார் . அதாவது உருப்பெறுவார் . இவ்வேளையில் கோயில் மக்களின் கோந்தா என்ற கோசத்தால் வானைப் பிளப்பது போல் அதிர்ந்த வண்ணமிருக்கும். உருப்பெற்றிருக்கும் அர்ச்சகர் ஓம குண்டலத்தை நாடி அலங்காரமாக புன்னகையுடன் நடந்து வந்து கருவறை நோக்கிய வண்ணம் நிற்கும் வேளை ஊர்ப் பெரியவர்களால் நல்வாக்குப் பெறும் நிகழ்ச்சி நடந்து முடிவுறும் . இதேவேளை ஓம குண்டலத்து தணலினை கைகளால் அள்ளியெடுத்து அக்கினிச் சட்டியில் வைத்து கோயிலை வலம் வந்து கோயில் முன்னுள்ள அக்கினிக் குண்டத்தில் வைத்து புளிய மரத்தின் சுள்ளிகள் சிறிய தடிகள் பெரிய மரங்களால் அடுக்கி எரியூட்டப்படும் . எரியூட்டும் நிகழ்ச்சி காலை ஆறு மணி தொடக்கம் மாலை ஏழு மணி வரையும் நடைபெறும் . இந்நிகழ்ச்சியுடன் மஹா பாரத கதாப்பிசங்கமும் நடந்த வண்ணமிருக்கும் . மேலும் தீக்கிடங்கு செப்பனிடப்பட்டு அனல் பரப்பி நடனத்துக்கு ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும். தீக்கிடஙகின் நீளம் பதினான்கடியும் அகலம் மூன்று அல்லது நான்கடியினையும் கொண்டவையாகும்.

மாலை வேளையில் மஹா பாரத கதாபிரசங்கத்துடன் தொடர்புபட்ட பதினெட்டாவது நாள் போர்க்களக் காட்சியும் கோயிலின் முற்றவெளியில் காட்சிப்படுத்தப்படும் . போரில் பீமன் துரியோதனன் போரிடுவர். துரியோதனன் பீமனின் கதாயிதத்தால் தாக்கப்பட்டு இறக்கும் படுகளம் இடம் பெறும் . இதில் திரௌபதாதேவியின் சபதம் முடிவுறும் .அதாவது துரியொதனனின் நெஞ்சு சம்சாடு கொண்டு பிளக்கப்பட்டு உதிரம் எடுத்து தலை முடியில் தடவி அர்ச்சகர் பாரதப் போருக்கு முடிவெடுப்பார் . இதையடுத்து கரகம் இசைக் கோசங்களுடன் இறைவியின் அருள் பெற்று வீதி வலமாக மாரியம்மன் கோயிலை அடைந்து அங்கிருந்து அருளுருவாகப்பட்டு அக்கினியில் நடனமாட ஆசார வேகத்துடன் பூமிதிப்பாகிய தீமிதிப்பு தீக்கிடங்கினை நோக்கி மக்களின் கோவிந்தா அரகரா என்ற கோசத்தோடு கும்மியடித்து முடிவில் அர்ச்சகர் முதன்முதலில் கரகத்துடன் தீக்கிடங்கில் காலடி பதித்து தீமிதித்து வைபவத்தை ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து பக்தர்கள் ஒருவராகவும் இருவராகவும் காலடி பதித்து நடனமாடி தங்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர். கடைசியாக சந்திரன் கொடியுடன் ஊர்ப் பெரிவர் தீக்கிடங்கில் காலடி பதித்து விழாவினை நிறைவு செய்வார்கள்.

இங்கு கரகம் பாலித்தல் : கரகம் மஹா பாரதத்தின் கதாநாயகி திரௌபதாதேவியம்மனாகவே வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகின்றது .கரகத்தைக் காணும் மக்கள் திரௌபதையம்மன் கரகம் தான் என நேசித்து வணங்கி வருகின்றனர் . கரகம் விழாவின் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை இன்றியமையாத இடத்தினைப் பெற்றுள்ளது . சகல நிகழ்ச்சிகளுக்கும் முதன்மை பெற்றிருப்பது கரகமேயாகும். இதுபோல பத்து நாள் ஸ்ரீ நாராயணன் திருவிழா மஹோற்சவ திருவிழாவாகும். ஆகம விதி முறைகளுக்கு அமைவாக பிராமணர்களால் சிறப்பாக மேற் கொள்ளப்படுகின்றது. விஷேடமாக வேட்டையும் தேரும் தீர்த்தமும் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி விழா வருடாந்த இந்து மத விழாக்கள் அபிஷேகங்கள் கிரியைகள் நித்திய பூஜைகள் மூன்று காலங்கள் காலை 7.30 மணிக்கும் நடுபகல் 11.00 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் நாள் தோறும் குறைவின்றி நடைபெறும் இத்திருத்தலம் இலங்கையில் புண்ணிய தலமாகவும் புகழ் மிக்க கோயிலாகவும் பக்தர்கள் பரவசத்துடன் வழிபடும் பரந்தாமன் வாழுமிடமாகவும் உடப்பு என்றால் தீமிதிப்பு விழாவினை நினைவு கூறும் புனித மண்ணாகவும் கருதப்படுகின்றது.



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:54 pm

உடப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்.

அமைவிடம் : புத்தளம் மாவட்டத்தின் புத்தளத் தொகுதியின் தென்கெல்லைக் கிராமம் உடப்பு. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும் . தென்னைகள் நிறைந்த பதினாறு ஏக்கர் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள ஆலயமே ஸ்ரீ மாரியம்மன் ஆலயமாகும். பூர்வீக ஆலயம் இருக்குமிடம் ஆண்டிமுனை என அழைப்பர். உடப்பின் வடக்கே புத்தளத்திலிருந்து நாற்பத்திரெண்டு கிலோ மீற்றரும் சிலாபத்திலிருந்து இருபத்;தாறு கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ்வாலயம் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபையின் அதிகாரத்துக்கும் நிருவாகத்துக்கும் உரித்துடையதாகும்.

பழம்பெருமை வாய்ந்த இவ்வாலயம் டச்சுக்காரர் இலங்கைக் கரையோரத்தை ஆண்ட காலத்தில் ‘ காண்ட வன்னியன்’ வன்னியதிகாரியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அக்காலத்தில் மக்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவி மதமாற்றம் பெற்ற போதும் காண்ட வன்னியன் இவ்வாலயத்தைப் பராமரித்தே வந்துள்ளான் எனக் கர்ணபரம்பரைக் கதைகளும் வாய் மொழிக் கதைகளும் கூறப்பட்டாலும் . இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மத மாற்றத்துக்குட்பட்டு வடக்கே பூனைப்பிட்டிக்கு நகர்ந்த போது கி.பி . 1678 ம் ஆண்டளவில் அதாவது 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சிவத்தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலும் அக்காலத்து சேதுராமன் அம்பலவானருக்கு முழு உரிமையையும் ஓலைச்சுவட்டில் எழுதி ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பன்னெடுங் காலமாக மரந்தடிகள் கொண்டு கிடுகுகளால் வேயப்பட்ட இவ்வாலயம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் 1884ம் ஆண்டளவில் செங்கற்களினால் கட்டப்பட்டது. அன்று தொட்டு ஸ்ரீ மாரியம்மன் கற்சிலை மூலஸ்தானத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டுக் குலதெய்வமானது. 1889ம் ஆண்டில் உடப்பு மக்களுக்கு பெரியம்மை நோய் பரவி பெரும் கஷ்டத்துக்குள்ளானார்கள்.மக்கள் அம்மனின் கோயில் சென்று அடிபணிந்து தொழுது நின்றனர் . அம்மனின் அருட்கடாற்சம் மெய்ப்பிக்கப்பட்டு நோய் நீங்கி சுகமடைந்தனர்.இதனால் அம்மனைக் குளிர்மைப்படுத்த ‘’திருக்குளிர்த்தி’’ நேர்த்தி செய்து வருக்கின்றனர். அதாவது கைக்குத்தரிசி சமையல் செய்து நீர் ஊற்றி மறுநாள் குளிர்மைப்படுத்தி அம்மன் பெயரால் கனிவர்க்கங்களுடன் படையலிட்டு அம்மன் காவியம் பாடி பூசையின் முடிவில் கோயில் முன் மண்டபத்தில் பெண்கள் பந்தியிலமர்ந்திருக்க தலை வாழை இலையிட்டு சாதம் கனிவர்க்கங்கள் பரிமாறி உண்ணக் கொடுத்தலே குளிர்த்தியாகும்.

தீராத அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் அம்மன் கோயிலில் காத்துக் கடந்து தொழுது வணங்கி நோய் பிணியிருந்து விடுபட்டு சுகம் கிடைத்தது என்ற திருப்தியுடன் வீடு வந்து சேர்வர். இன்றும் இவ்வாலயத்தில் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது. எனவே அம்மை என்றால் மாரியம்மனுக்கு குற்றமிழைத்து விட்டதாகவே கருதுவார்கள். மாரி வந்தால் மழை பொழியும் மக்கள் உள்ளம் ஓங்கி எழும் என்பர். மாரியம்மன் மீது இனியில்லாத பற்றுறுதியும் பயமும் இந்த ஊர் மக்களுக்குண்டு.

இவ்வாலயத்தில் பழமையினை உணர்த்துகின்ற தொல்பொருள் இலட்சினைகள் சின்னங்கள் பல. அவற்றில் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஒலிக்கும் காண்டாமணியாகும். இக்காண்டா மணி விவகாரம் ஒன்று நடந்தேறியது. அதாவது இராமேஸ்வரத்திலிருந்து கட்டுமரத்தின் மூலம் காண்டாமணி கொண்டுவரப்பட்டது. பரிபாலன சபைக்கும் வியாபாரிக்குமிடையே விலைத் தகராறு காரணமாக மணி திருப்பிக் கட்டுமரம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. செல்லும் போது நடுக்கடலில் புயற் காற்றினால் கட்டுமரமும் வியாபாரிகளும் உயிராபத்துக்குட்படலாயினர். அவர்கள் அம்மனை வேண்ட புயல் அமைதி பெற்று அறியாமை நீங்கி அறிவு பெற்ற வியாபாரிகள் காண்டாமணியினை மாரியம்மன் கோயிலுக்கே வழங்கியதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.இருந்தும் இந்த மணியில் ‘’ 1750 ம் ஆண்டு ஆண்டிமுனை உடப்பங்கரையூரவர் கோயிலுக்கு உபயம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வு உண்மையாகியுள்ளது எனவாம்.

மேலும் பழமைக்கும் சிறப்புக்கும் உயரிய தொல் பொருள் சின்னம் அம்மனின் செப்புப்படிவமாகும். இது பெரும்பாலும் சோழர் காலத்துச் சின்னமாகக் கருதப்படுகின்றது.அத்தோடு விஜய நகர- நாயக்கர் காலப் பாணியிலமைந்தனவென்றும் 16ம் 17ம் நூற்றாண்டுக்குரிய படிவமென்றும் இதை ஆய்வு செய்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தேன்னந்தோட்டத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் மாரிக்கு தெனம் பாளை குருத்தோலை இளநீர் கொடுக்க அக்காலத்து உயர் வர்க்கத்தினர் மறுத்துள்ளனர். இதனால் ஊரவர்கள் மத்தியில் மனக்குழப்பமும் மனவேதனையும் அடைந்தனர். அவ்வேளையில் அனியாயபுரத்து ராஜா என்பவர் ஊரவர் எல்லோரையும் ஒவ்வொரு தென்னங் கன்று கொண்டு வரச்செய்து மாரியம்மன் கோயிலைச சுற்றி நடும்படிக் கூறினார். அதன் பிரகாரம் எல்லோரும் நட்டி உருவாக்கிய தென்னந்தோட்டமே இன்று பலன் கொடுக்கும் மாரி தோட்டம் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாலயம் நீண்ட காலக்கட்டத்தின் பின் புனரமைக்கும்பணிக்குட்படுத்தப்ட்டன. 1964ம் ஆண்டில் முழுமையாக உடைக்கப்பட்டு மூலஸ்தான மண்டபம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் தரிசன மண்டபம் ஆகியன அமைக்கப்பட்டு தரிசன மண்டபத்தில் பிள்ளையார் சந்நிதியும் வள்ளி தெய்வானை முருகன் சந்நிதியும் வடிவமைக்கப்பட்டது. அத்தோடு தரிசன மண்டபத்தைத் தொடர்ந்து அலங்கார மண்டபம் முன் கோபுர மண்டபத்துடன் இணைக்கப்பட்டு அலங்கார மண்டபத்தில் சிங்கம் பலி பீடமும் வலது புறத்தில் பைரவர் சந்நிதியும் அமைக்கப்பட்டு 1966ம் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.மேலும் 1995ம் ஆண்டில் புனருத்தாரனம் செய்யப்பட்டு சிவஸ்ரீ விசுவநாதக் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் மேற் கொள்ளப்பட்டது.2007ம் ஆண்டில் வசந்த மண்டபம் கட்டிவிக்கப்பட்டது. மேலும் 2009ம் ஆண்டில் வர்ண வேலைத்திட்டதுடன் கோயில் உட்பிரகார வேலைகளும் மேற் கொண்டு பிரமஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் பகல் இரவுப் பூசைகளே நடந்து வந்தன. இன்று மூன்று நேரப் பூசைகள் முறையே காலை 7.00 மணிக்கும் பகல் 10.30 மணிக்கும் இரவு 6.00 மணிக்கும் தினந்தோறும் நடாத்தப்படுகின்றன. முக்காலத்தில் பூசைகளை ஊர் சைவர்கள் மேற் கொண்டனர். இடைக்காலத்தில் பண்டார வம்சத்தைச் சேர்ந்த பூசாரிமார்களும் தற்காலத்தில் பிராமணரும் மேற் கொண்டு வருகின்றனர்.

இவ்வாலயத்தில் விஷேட விழாக்களாக தைப் பொங்கல் விழா. நவராத்திரி விழா பத்துநாட்களும் மாசிமக விழா பத்து நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. 1936 ம் ஆண்டிலிருந்தே மாசிமக விழா கொண்டாடப்பட்டது. பத்தாம் நாள் தீர்த்தம் இந்து மாசமுத்திரத்தில் நடைபெறும் . மூலஸ்தான மூர்த்தியான ஸ்ரீமாரியம்மன் உச்சவ மூர்த்தியாகவும் தெருவீதிப் பவனி வருவார். இக் கோயிலுக்கான வாகனங்களாக சிங்கம் குதிரை போன்றன காணப்படுகின்றன.

இவ்வாலயம் பழம்பெருமை வாய்ந்தவை. பாரம்பரிய காணியைக் கொண்டு உடப்பு இந்து ஆலய பரிபாலன சபையின் நிருவாகத்துக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 5:55 pm

ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயம் .

அமைவிடம் : புத்தள மாவட்டத்தின் புத்தள தொகுதியின் உடப்புக் கிராமத்தின் மத்தியில் மேற்கே இந்துமா சமுத்திரத்தையும் கிழக்கே பிரதான வீதியினையும் முந்தல் சிறுகடலையும் அறுவாய் மணல் பிரதேசத்தையும் புத்தளமிருந்து 42 கிலோ மீற்றர் தூரமும் சிலாபமிருந்து 36 கிலோ மீற்றர் தூரத்தினையும் கொண்டமைந்த காளியம்மன் ஆலயம் பல்லின மக்கள் வழிபாடு செய்யுமிடமாகும்.

எருக்கலம் காடாக வளர்ந்து கிடந்த மணற்பாங்கான பூமியில் கொத்தக் கிழவர் சங்கு சக்கரங்கள் புதையுண்டிருந்ததாக கனவு கண்டு அவ்விடத்தைக் காளி அருள் பெற்ற கொத்தக் கிழவர் பராமரித்து குடில் கட்டி பக்தி வரம்பெற்று வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கால் உடப்புக் கிராமத்தில் அதாவது 1850ம் ஆண்டில் கலரா என்னும் கொடிய கொள்ளை நோய் ஊரில் பரவி இனியில்லாத அவலங்களையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்தியது. யாதுமறியாத மக்கள் துன்பந் தாங்க முடியாது ஊரை விட்டு ஓடி ஒழிய வேண்டிய நிலைமைக்குட்பட்டனர். அவ்வேளையில் கொத்தக் கிழவர் காளி அருள் உருவாகி மக்களை நாடி வந்து ஊரை விட்டு நகர வேண்டாம் . காளியின் கருணையால் யாவரும் காப்பாற்றப்படுவீர்கள் என அசரீரி வாக்குப் போல் ஓசை ஒலித்தார். எனவே ஊர் மக்கள் ஸ்ரீ காளிகாதேவிக்கு பச்சை இலைகளால் குடில் கட்டி வேப்பிலைக் கும்பம் வைத்து கடல் நீரை எண்ணெய்யாக வார்த்து விளக்கெரிக்கும்படி ஆணை பிறப்பித்தார். மக்களும் அவர் வாக்கினை அம்மன் வாக்காகக் கருதி அவ்விதமே செய்து அம்மனைப் பயபக்தியுடன் வழிபட்டனர் . அதன் பெறுபேறாக வேப்பிலை பூத்துக் காய்த்ததாகவும் கடல் நீரில் விளக்கெரிந்ததாகவும் உடப்பு வாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக கூறி வருகின்றனர். அன்றிலிருந்து இன்று வரையும் காளியம்மன் என்றால் பயமும் பக்தியும் இவ்வூர் மக்களின் இதயத்தில் குடிகொண்டுள்ளன. இதனால் ஸ்ரீ காளியம்மனுக்கு கோயிலும் உருவாக்கினர்.

கொத்தக் கிழவர் காலம் மரம் தடிகள் கொண்டு கூரையமைத்த குடில் கிடுகளால் வேயப்பட்ட ஒற்றைக் கூரை கொண்ட கோயிலும் மூலஸ்தானத்தில் சங்கு சக்கரம் புதையுண்ட இடத்தை வழிபட்ட மக்கள் அங்கு காளியம்மன் இருப்பதாகக் கருதி பயபக்தியுடன் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் தங்கள் நேர்த்திக் கடமைகளை செலுத்தி வந்துள்ளனர். 1853 ம் ஆண்டளவில் களிமண்ணினால் சுவர்கள் அமைத்து கோயில் கிடுகுகளால் வேயப்பட்டது. இக்காலத்தில் காளியுருவம் கொண்ட சின்னத்தையே வழி பட்டனர்;. 1878ம் ஆண்டில் செங்கற்களால் சுண்ணம் சாந்து கொண்டு கோயில் கட்டிவித்து சிறிய கோபுரமும் மூலஸ்தான மண்டபமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது.1891ம் ஆண்டு கருங்கல்லினாலான காளி சிலை தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாக காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இச்சிலை ஆண் பாதி பெண் பாதி சேர்ந்தமைந்த அழகுக்கு அழகுடையதாகும். அதன் பொலிவும் தெளிவும் சிற்ப நுட்பங்களை சீர் தூக்கி காட்டுகின்றது. இதனால் தான் இவ்வாலயம் இன்று ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. மேலும் புனருத்தாரனப் பணிகள் இவ்வாலயத்தில் 1918தொடக்கம் 1929ம் வரையும் பகுதி பகுதியாக உடப்பு மக்கள் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் 1920ம் ஆண்டில் கோயில் திருப்பணியில் மகாமண்டபத்தில் வலது புறம் பிள்ளையார் சந்நிதியும் இடது புறம் பேச்சியம்மன் சந்நிதியும் அமைக்கப்பட்டன. மேலும் முன் கோபுரம் சிங்க வாகனத்திலிருந்து ஸ்ரீ பத்திர காளியம்மன் மகுடா சூரனை வதை செய்யும் பாவனையில் சிற்பம் அமைக்கப்பட்டது. இது பார்வைக்கு பயத்தினை ஊட்டுவதாகவே அமைந்திருந்தது. அக்காலத்திலிருந்து பூசைக் கருமங்கள் ஊரவர்களும் பின் சொக்கலிங்கப் பூசாரியார் முத்தையாப் பூசாரியார் இன்று மகன் பரந்தாமன் பூசாரியார் போன்றோரும் இடையே பிராமணர்களும் பூசை செய்து வருந்துள்ளனர்..

1980ம் ஆண்டில் கோயில் முழுமையான திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன. பின் கோபுரம் மூலஸ்தான மண்டபம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் தரிசன மண்டபம் அலங்கார மண்டபம் முன் கோபுரம் போன்றன அமைக்கப்பட்டு கோயிலைச் சுற்றி சுற்றுமதிலமைத்து இதுவரையும் கோயிலோடு இணைந்திருந்த மடைப்பள்ளியறை தங்குமிட அறைகள் தனிமைப்படுத்தப்பட்டு திட்டமிட்ட அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் 1983ம் நிறைவு பெற்று மகாகும்hபபிஷேகம் சிவஸ்ரீ விசுவநாதக்குருக்கள் தலைமையில் நடாத்தப்பட்டன. 1997ம் ஆண்டு மீண்டும் புனருத்தான வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டது. கோபுத்திலுள்ள பொம்மைகள் புதுப்பிக்கப் பட்டன. சிற்பக்கலைஞன் கனேஸ் ஆசாரி தமிழ் நாடு இவரும் அவர் குழுவினரும் படைப்புகளுக்கு முத்திரையிட்டனர்.திரு வீ.முத்துக்கிருஷ்ணன் குழுவினர் வர்ணம் தீட்டினர். . இவ்வாலயத்துக்கான மகா கும்பாபிஷேகம் சிவஸ்ரீ விசுவநாதக் குருக்கள் தலைமையில் இனிது நடைபெற்றது.புனருத்தாரன நடவடிக்கையில் 2002ம் ஆண்டில் இவ்வாலயத்தின் சுற்றுமதில் வேலைகளும் உட்பிரகார வேலைத்திட்டமும் நிறைவு பெற்று 2005ம் ஆண்டில் வந்த மண்டபமும் கட்டப்பட்டு ஆலயம் முழுமை அடைந்தாற் போன்ற நிலையிலுள்ளது.

ஆரம்ப காலத்தில் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இரண்டு நேரப் பூசைகள் மேற் கொள்ளப்பட்டு வந்த இவ்வாலயம் 1983ம் ஆண்டின் பின் இன்று வரையும் காலை 7.30 மணிக்கும் மதியம் 11.30 மணிக்கும் இரவு 6.00 மணிக்கும் தினந்தோறும் பூசைக் கருமங்கள் நடைபெறுகின்றன.

வருடாந்த விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் புரட்டாதி மாதம் நடைபெறும் வேள்வித் திருவிழா மக்களால் பயபக்தியுடன் கொண்டாடப்படும் .இவ்விழா பத்து நாள் நடைபெறும் விழாவாகும். கரகம் பாலித்தல் சிறப்பிடம் பெறும். முதல் நாள்

காலையில் கரகம் எடுத்து மாலை வேளை கோயிலின் இடது பக்கதிலிருக்கும் அறுவாய் மணல் வெளியில் ஏழு சிறிய கிணறுகள் வெட்டி அதில் வரும் நீரை ஓர் மண் குடத்திலிட்டு மூலஸ்தானத்தில் வைத்து அதில் வேப்பிலைக் கிளைகள் நட்டி கும்பம் வைப்பர் . மேலும் தூண்டாமணி விளக்கினை தொடர்ந்து பத்து நாட்களும் எரிய விடுவர். பத்து நாள் திருவிழாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கரகம் பாலித்தல் வைபவம் நடைபெறும். கரகம் ஸ்ரீ காளியம்மனாகவே மக்கள் கருதுவர் .இங்கும் கரகம் எடுப்பவர் பூசாரிமார்களே . கரகத்துக்குத் துணையாக காவல் தெய்வஙகளாக பைரவரும் ஐயனாரும் வருவர். இவர்களைச் சூரப்புலிகள் என்பர்.அதனை நேர்த்தி செய்யும் ஊரவர்கள் பயன்படுத்துவர். கரகத்துக்கான அலங்காரங்கள் வேப்பிலையினை பயன்னடுத்தி கரகக்குடத்தில் வைத்து தெய்வ அனுட்டானங்கள் மேற் கொள்வர். கரகம் ஊரைச் சுற்றியுள்ள வீதிகளெல்லாம் வலம் வரும் . காக்கும் காளியம்மன் ஊருக்கு காவல் அரண் செய்வதாகவும் பஞ்சம் பசி பிணி நோய் நீக்கி இன்பமாக வாழ வழிவகுப்பதாகவும் மக்கள் கருதுவார்கள். கரகம் பாலிக்கும் வேளையில் அம்மன் மீதான காவியங்களும் கும்மிப் பாடல்களும் மத்தளம் கைத்தளம் ஒலித்தோங்க மனமொத்து மகிழ்ச்சியாகப் பாடி அம்மனைத் திருக்கோயில் குடி கொள்ளச் செய்வர். எட்டாம் நாள் விழா ஊர் நேர்த்திக் கடனும் அக்கினி சட்டி எடுத்தலும் நடைபெறும். இரவு வேளையில் கரகம் பாலித்தல் வைபவம் . இக்கரகத்தினை அர்த்தராத்திரிக் கரகம் என அழைப்பர். இதில் விஷேட கும்மியாட்டம் நடைபெறும் மக்கள் வெள்ளம் திரண்டு கண்கொள்ளாக் காட்சியாகப் பார்த்துமகிழ்வார்கள்;. கும்மிப் பாடல்களில் அம்மன் அதிசயங்கள் வரலாறுகள் கருத்தூன்றிக் கிடக்கின்றன. இப்பாடல்களை இயற்றியவர்களும்; இசையமைத்தவர்களும் இவ்வூர்வாசிகளே. இப்பாடல்கள் பாடும் வேளையில் இடையிடையே குலவையிடும் வயதுப் பெண்கள் கும்மியோடு குலவை இடுவர். ஓன்பதாம் நாள் அக்கினி சட்டி வைபவம் காலை வேளையில் நடைபெறும் .கஷ்டப்படுவோரும் பிள்ளைகளற்றவரும் அந்தத் துன்பம் நீங்க வாக்குக் கேட்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பிச்சைக் கரகம் பாலித்தல் வைபவம் . ஊர் மக்கள் யாவரும் தங்களால் இயன்ற தானதர்மங்களாக அரிசி காய்கறிகள் ஏனைய பொருட்களை அன்னதானத்துக்காக வழங்குவர். இதுவே பத்தாம் நாள் படையலுக்குரிய அன்னதானமாகும். இதனை எல்லோரும் பகிர்ந்துண்பர் . பத்தாம் நாள் கரகம் காலை வேளையில் ஊரின் நான்கு திசையும் காவல் புரிந்து பலி கொடுத்து திருக்கோயிலையிலின் முன் கும்மி நடனம் புரிந்து அருள் பெற்று கோயிலின் முன் கொதியிடப்பட்ட மஞ்சல் நீர்க் குடத்தில் கரகம் காவல் தெய்வங்கள் அருள் பெற்று நின்றாடி மஞ்சல் நீர் தாங்கள் அள்ளித் தெளிப்பதோடு மக்களுக்கும் தெளிக்கச் செய்வார்கள். இதனைத் தொர்ந்து பலியிடல் வைபவம் நடைபெறும் .இதே வேளையில் கோயிலின் முன் விநாயகப் பானை ஏற்றும் வைபவமும் தொடர்ந்து மக்கள் கோயிலின் நாற்புறமும் பொங்களிட்டு பொறுமையோடு பூசைக் காட்சிகளைக் கண்டு களித்து அன்னதானம் பெற்றுக் கொள்வர். மாலை வேளை கும்மி கொட்டுவார்கள் பெண்களும் ஆண்களுமாக கும்மி கொட்டி கும்பத்தினைக் கடலில் சொரிவர். இவ்வாறு வேள்வி திருவிழா இனிது முடிவெய்திய போதும் இது ஒரு மரபு ரீதியான விழாவாகும். மேலும் உடப்பு வாழ் மக்களின் தொழிலுக்கு ஊக்கம் கொடுக்கும் விழாவாகவும் கருதலாம். ஆரம்ப காலத்தில் கரவலைத் தொழிலாளர்கள் வருடம் தோறும் தாங்கள் தொழில் செய்யும் இடத்திற்கான பாட்டினைப் பெற கோயில் முன்றில் திருவளச் சீட்டுப் போட்டு தொழில் செய்யும் பாட்டினைப் பெறுவது வழமையாக இருந்தது. இன்று அந்த முறை மாற்றம் பெற்று விட்டது . எனவே தொழிலுக்கும் திருவிழாவுக்கும் ஒருகால் தொடர்பிருந்துள்ளது என்றும் சொல்லலாம்.

உடப்பு வாழ் மக்கள் மேற் கூறப்பட்ட தலங்களில் இனியில்லாத பற்றும் பயமும் கொண்டு கோயிற்றிருப்பணிகளை தவறாது செய்து வருவதுடன் பக்திக்கும் சக்திகளின் சக்திக்கும் சென்றவிடமெல்லாம் மனதால் செபிக்கும் பண்புள்ளம் கொண்டவர்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

மூலம்:http://www.udappu.net



உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 8:43 pm

உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   677196 உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   677196 உடப்பு  ஸ்ரீ பார்த்த சாரதி ருக்குமணி சத்தியபாமா சமேதர், ஸ்ரீ திரௌபதா தேவி அம்மன் ஆலயம்   677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 26, 2010 9:16 pm

பொறுமையாக அமர்ந்து வாசிக்கவேண்டும்... பதிவுக்கு மிக்க நன்றி சிவாஅ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக