புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
76 Posts - 48%
heezulia
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
16 Posts - 3%
prajai
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
jairam
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_m10பழமுதிர்ச்சோலை-ஆலயம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமுதிர்ச்சோலை-ஆலயம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:27 pm

பழமுதிர்ச்சோலை-ஆலயம் IMAGE_01681


முருகப்பெருமானின்
ஆறாவது படைவீடாகப் போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற
பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று
அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற
சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். எந்த முருகன் கோவில்களுக்கும்
இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்தத் தலம்
அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில்
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.



வரலாற்று ஆதாரங்கள்


பழமுதிர்ச்சோலை-ஆலயம் Palamutir%20solai%20temple


பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில்

திருமுருகாற்றுப்படையில்
வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று
நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில்,
வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி
முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப
சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக்
குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும்
தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும்
காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத்
திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை
கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும்
நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக
முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

அவ்வையை சுட்ட பழம்

அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத்
தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல்
புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற
அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய
முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில்
ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின்
கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின்
அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால்
அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன்
அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள்
இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப்
பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று
கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம்
வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம்,
சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக
"சுட்டப் பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, நாவல்
மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள்
அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை,
அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால்
ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன
பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது.
தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது
என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.
மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது
சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை
உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த
மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

அதிசய நூபுர கங்கை



பழமுதிர்ச்சோலை-ஆலயம் Nuubura%20gangai

நூபுர கங்கை தீர்த்தம்

பழமுதிர்ச்சோலைக்கு
சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு
சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது
என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின்
திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும்
வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும்
வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன்
கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும்
இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த தீர்த்தத் தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம்
மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து
இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்தத்
தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் பறந்தோடிவிடும் என்கிற
நம்பிக்கையில் இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச்
செல்கிறார்கள்.

இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா
தோசை தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத்
தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச்
சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும்
கையோடு வாங்கி வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று
கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின்
விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் எனறு
இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

திருமண பரிகார தலம்

முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும்,
இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு,
வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருமணம்
ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம்
முடிவாகி, சிறப்பான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

விழாக்கள் விவரம்

இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய
நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.


பயண வசதி

மதுரை
மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில்
இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்
இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை
உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம்.
சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக
பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை
அமைந்துள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக