புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
31 Posts - 44%
jairam
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 8:30 pm

பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இலவசப் பயணச்சலுகை

தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் அவர்களது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வர, இலவச பயணச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், அவர்களது மாணவ மாணவிகளுக்கான இலவச பயணச் சீட்டுக்களைப் பெறும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள், நடைமுறை விதிகளுக்கிணங்க பரிசீலிக்கப்பட்டு மாணவ/ மாணவிகளுக்கு அவர்களது பள்ளி வளாகங்களிலேயே, வசதியான நாட்களில், இலவச பயணச்சீட்டுக்கள் "ஆன் லைன் " முறையின் மூலம் வழங்கப்படுகின்றன. இது சம்பந்தமான இதர விவரங்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

கல்லூரி மாணவர்களுக்கான சலுகைப் பயணச்சீட்டுகள்

தொழில் துறைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள் போன்றவைகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு, அவர்களது வீட்டிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரியிலிருநது வீட்டிற்கும் பயணம் செய்ய, 50% கட்டணச் சலுகை பயணச்சீட்டுக்கள் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களுக்கும் வழங்கப்படுகின்றன. அதே போன்று, மாலை நேரக் கல்லூரிகள் மற்றும் பகுதிநேர தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவியருக்கும், சலுகை பயணச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், நூலகத்திற்கும், நூலகத்திலிருந்து வீட்டிற்கும் சென்று வர மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் இரண்டு மதிப்பிலான அனுமதி சீட்டுகள், மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 60 சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்துக் கழகங்களால் ஏதேனும் சிறப்பு பயணச்சீட்டு வசதிகள் அளிக்கப்படுகிறதா ?


மாதாந்திர பயணச்சீட்டுக்கள்

அதிகபட்சம் 60 நடைகள் (நாளன்றுக்கு இரண்டு நடைகள்) பயணம் செய்வதற்கு செல்லத்தக்க வகையில், புறப்படும் இடத்திலிருந்து சேருமிடம் வரையுள்ள 40 நடைகளுக்கான குறைந்த எண்ணிக்கை நிறுத்த (எல்.எஸ்.எஸ்) கட்டணத்தில் மாதாந்திர பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டுககள்

பயணிகள், கீழ்க்காணும் கட்டணங்களில் கிடைக்கும், "விருப்பம்போல் பயணம் செய்வதற்கான" பயணச்சீட்டுகள் வாங்குவதன் மூலம் சென்னை நகரினுல் எந்த இடத்திலிருந்தும் இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய முடியும். மேற்படி பயணச்சீட்டுகள் மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன..

வழங்கப்படும் நாட்கள்

1. நாளன்றுக்கு ரூ.30.00
2 வாரம் ஒன்றுக்கு ரூ.160.00
3 மாதம் ஒன்றுக்கு ரூ.600.00

பெருமளவில் பயணச்சீட்டு முன்பதிவின்போது ஏதேனும் சலுகை / தள்ளுபடி வழங்கப்படுகிறதா ?

இரயில்வேயில் மூத்த குடிமகன்களுக்கு அளிக்கப்படும் பயண சலுகை போல் ஏதேனும் வழங்கப்படுகிறதா ?


ஆம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 8 நபர்கள் அல்லது அதற்கு மேல் குழுவாக பயணம் செய்ய முன்பதிவு செய்தால், பயணக் கட்டணத்தில 10 சதவிகிதம் சலுகை வழங்கப்படுகிறது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள், முன்பதிவு செய்யும்பொழுது தங்களது வயது சான்றிதழைக் காண்பித்தால், பயணக் கட்டணத்தில் 10 சதவிகிதம் சலுகை வழங்கப்படுகிறது.

இலவச பயணச்சீட்டு சலுகைகள் வேறு யாருக்கேனும் வழங்கப்படுகிறதா ?



ஊனத்தின் அளவு 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் உள்ள, மாத வருமானம் ரூ.1000/- க்கும் மிகையாகாமல் பெறும் உடல் உனமுற்றவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் அனைவரும் இலவச பயண அட்டைகள் பெறலாம். இலவச பயண சீட்டு பெற நடைமுறையில் உள்ள வழிமுறைகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட மறு வாழ்வு அலுவலரையோ அல்லது போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலரையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

40 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் ஊனமுடைய பார்வையற்றோருக்கு வயது வரம்பின்றி இலவச பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

போக்குவரத்துக் கழக எல்லைக்குள் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர்கள் / மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர் தம் வாரிசுதாரர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

புற்று நோயாளிகள் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தனியாக பயணம் செய்தால் அவர் தம் சிகிச்சை பெறும் மருத்துவ மனைகளிலிருந்து சான்றிதழ் பெற்று எல்லா போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் 75 விழுக்காடு பயணச் சலுகை பெறலாம். நடத்துனர், நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை பெற்றுக் கொண்டு முழு பயணச் சீட்டினை வழங்குவார். மருத்துவ மனையிலிருந்து பெற்ற சான்றினை நடத்துனர் தக்க வைத்துக் கொள்வார்.



தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 8:33 pm

கட்டணம் இல்லாமல் எவ்வளவு சுமையை பேருந்தில் எடுத்துச் செல்லலாம் ?

20 கிலோ எடை வரையுள்ள கைப்பை மற்றும் சிறிய பெட்டி முதலானவற்றை கட்டணம் இல்லாமல் பேருந்தில் எடுத்துக் செல்லலாம்.

சுமைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு?

காய்கறிகளுக்கு ( கூடை அல்லது மூட்டைகள்) 20 கிலோ வரை, குறைந்தபட்ச கட்டணம் ரூ.3/- அல்லது ஒரு பயண கட்டணம் இவற்றில் எது அதிகமோ அக்கட்டணம் வசூலிக்கப்படும்.

20 கிலே எடைக்கு மேற்பட்ட சுமைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6/- அல்லது இரு மடங்கு பயண கட்டணம் இவற்றில் எது அதிகமோ அத்தொகை வசூலிக்கப்படும்.

மீன் கூடைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.8/- அல்லது இரு மடங்கு பயண கட்டணம் இவற்றில் எது அதிகமோ அத்தொகை வசூலிக்கப்படும்.


பேருந்து பழுதடைந்ததின் காரணமாக நடு வழியில் பேருந்து நிற்கும் போது...ஓட்டுநர் என்ன செய்வார் ?


ஓட்டுநர் பழுதடைந்த பேருந்தை சாலையின் ஓரமாய் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத விதமாக நிறுத்துவார்.

நடத்துனர் என்ன செய்வார் ?

நடத்துநர் அடுத்து வரும் வழித்தட கழக பேருந்துகளை நிறுத்தி பயணிகள் தொடர்ந்து பயணம் செய்ய வசதியாக அவர்களை ஏற்றி அனுப்புவார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட பணிமனைக்கோ அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கோ ( வயர்லெஸ் மையத்திற்கு) தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிப்பார்.

பேருந்தில் திருட்டு நடக்கும் பட்சத்தில் ...

ஓட்டுநர் அல்லது நடத்துனர் செய்ய வேண்டியது என்ன ?

பேருந்தில் திருட்டு நடந்ததாக பயணிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் புகார் தெரிவித்தால் பேருந்தினை நடுவில் நிறுத்தாமல் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பயணிகள் அளிக்கும் புகார்களை உடனே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். திருட்டில் சம்மந்தப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தப்பிச் செல்லாமல் பயணிகள் உதவியோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

திருட்டு நடக்கும் போது ஓட்டுநரோ, நடத்துனரோ அல்லது பயணிகளோ தாக்கப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ?

பணி ஓட்டுநர், பணி நடத்துனர் மற்றும் பயணிகள் தாக்கப்பட்டால் பயணிகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தாக்குதலின் போது பணியாளர்களுக்கோ அல்லது பயணம் செய்யும் பயணிகளுக்கோ காயம் ஏற்படின் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விபத்து ஏற்படின் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?

விபத்து ஏற்பட்ட உடன் விபத்து சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் ஓட்டுநர், நடத்துனரும் விபத்து பிரிவிற்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுக்க வேண்டும்.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் சக்கரங்களின் நிலையை சாலையில் குறிப்பிட்டு, பின் போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் சாலையின் ஓரமாக வாகனம் நிறுத்தப்படும்.

விபத்து குறித்த வாக்குமூலங்களையும் வேண்டிய தடயங்கள் மற்றும் சாட்சியங்களையும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்தனர் போக்குவரத்துக் கழகத்தின் விபத்துப் பிரிவு போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் காவல் துறையினருக்கு கொடுப்பார்கள். மேலும் காவல் துறையின் மற்றும் விபத்து பிரிவு ஆய்வாளர்களக்கு வேண்டிய தடயங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்துக் கொடுப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.

விபத்தில் காயமுற்ற நபர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படுமா ?

ஆம். விபத்தில் காயமுற்ற நபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படும். வாகன வசதியில்லாத சமயங்களில் அவர்கள் அதே பேருந்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

விபத்தில் இறந்தவர்களுக்கு அல்லது காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடுபெற வழிமுறைகள் என்ன ?

விபத்தில் காயம் அடைந்தவர் அல்லது மரணமடைந்தவருடைய உறவினர்கள் மோட்டார் வாகன நட்ட ஈடு கோரிக்கைத் தீர்ப்பாயத்தில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம். தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நட்ட ஈட்டுத் தொகை நீதிமனறத்தில் செலுத்தப்படும்.

மோட்டார் வாகன நட்ட ஈடு கோரிக்கை, மக்கள் நடுவர் மன்றத்திற்கு ( லோக் அதாலத்) அனுப்பப்பட்டால் அம்மன்றம் சமரச அடிப்படையில் நட்ட ஈட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகத்தின் சம்மதத்தோடு பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கிறது.

போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டும் ?

போக்குவரத்துக் கழகங்களின் மக்கள் தொடர்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான தற்போதைய கட்டணம் என்ன ?

நாளன்றுக்கு ( 24 மணி நேரம்) பேருந்து வாடகை கட்டணம் ரூ.3,500/- ஆகும். அதாவது ரூ.2,000/- + ரூ.1,500/- ( கி.மீ. ஒன்றுக்கு ரூ.15/- வீதம் குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டருக்கு).

பயணத்தின் போது பயணிகள் உடமைகளை பேருந்தில் தவறவிட்டால் அதைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ?

பொருளைத் தவறவிட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களிடம் தவறவிட்ட பொருட்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். விவரங்கள் பெறப்பட்டதும் அதனை விசாரித்து விண்ணப்பதாருக்கு தெரிவிகக வேண்டும். தவறவிட்ட பொருட்கள் அலவலகத்தில் இருந்தால் தவறவிட்டவர்கள் அடையாளம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடமிருந்து, பொருட்களை கழக அலுவலகத்தில் வைத்திருந்ததற்காக சிறு தொகை வசூலிக்கப்படும். அதில் 50% ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வழங்கப்படும். பயணி பேருந்தில் பொருளைத் தவறவிட்டால் உடனடியாக தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் மற்ற மாநிலத்திற்கும் பயணம் செய்ய இயலுமா ?

ஆம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொலை தூர பேருந்துகளை இயக்கி வருகிறது.

பயணச்சீட்டுகளை பதிவு செய்ய என்ன வசதிகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் அளிக்கப்படுகிறது?


அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம், மாநிலத்திற்குள்ளும் வெளியேயும் தொலைதூர பேருந்துகளை இயக்கி வருகிறது. அனைத்து முக்கிய வழித்தடங்களும் சாதாரண மற்றும் சொகுசு விரைவுப் பேருந்து வசதிகளைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களிலும் பயண நாளுக்கு 30 நாட்களுக்கு முன் வரை கணிணி மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது.

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தில் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏதேனும் பயணச் சலுகை வசதிகள் உள்ளதா?

ஆம். அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் நபர் ஒருவருக்கு ரூ.500/-(திருப்பித் தர இயலாததது) செலுத்தி வருடாந்திர பயணச் சலுகை அட்டையினை பெற்று வருடம் முழுவதும் இப்போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருநதுகளிலும் பயணம் செய்யும்போது பயணக் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வசதி உள்ளது.

நபர் ஒருவருக்கு ரூ.500/-(திருப்பித் தர இயலாததது) செலுத்தி பயண அட்டையினை பெற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் மேற்படி அட்டையை காண்பித்து ஒரு வாரத்திற்கு எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது.

குறிப்பிட்ட ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வண்ணம், 60 நாட்களுக்குள், ஐந்து முறை ஒரு குறிப்பிட்ட ஊருக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு ஆறாவது முறை இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது.



தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 8:36 pm

சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள் யாவை ?

பெருந்துறை மருத்துவக் கல்லூரி

சாலை மற்றம் போக்குவரத்து பொறியியல் கல்லூரி, ஈரோடு

தொழில்நுட்ப பயிலகங்கள்

ஓட்டுநர் பயிற்சி மையங்கள்

வாகன உதிரி பாகங்கள் பரிசோதனைக் கூடம்

பயிற்சிப் பிரிவு

ஆராய்ச்சிப் பிரிவு

போக்குவரத்து மைய கொள்முதல் பிரிவு

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன ?

இந்த மருத்துவக் கல்லூரியில் 51/2 வருடங்களை ( 41/2 வருடங்கள் படிப்பு + 1 வருடம் பயிற்சி) கொண்ட மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்) பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில் 36 இடங்கள் பொது சேர்க்கை முறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பின்பற்றப்படும் முறையை பின்பற்றி மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 24 இடங்கள் தனி சேர்க்கையின் கீழ் தகுதி அடிப்படையில் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு நிரப்பப்படுகிறது.

சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி எப்பொழுது , எங்கு தொடங்கப்பட்டது ?

சாலை மற்றும் போக்குவரத்து துறை பொறியியல் கல்லூரி என்னும் ஒரு தானியங்கி ஆராய்ச்சி பொறியியற் கல்லூரி 1984 ஆம் ஆண்டில் ஈரோட்டில் துவங்கப்பட்டது.

சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகள் என்னென்ன?

இந்த பொறியியல் கல்லூரியில் அகில இந்திய தொழில் நுட்ப பொறியியல் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்கண்ட பொறியியல் பட்டப் படிப்புகள் ( பி.இ) பயிற்றுவிக்கப்படுகிறது :-

தானியங்கி பொறியியல்

கட்டிட கலை பொறியியல்

கணிணி அறிவியல் மற்றும் பொறியியல்

இயந்தி பொறியியல்

மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியல்

மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல்

தகவல் தொழில் நுட்ப பொறியியல்

பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?

அனுமதிக்கப்பட்டுள்ள 360 இடங்களில் 50 விழுக்காடு ஒற்றைச் சாளர அடிப்படையில், அரசு பொறியியல் கல்லூரிகளை போல் அண்ணா பல்கலைக் கழகத்தால் நிரப்பப்படுகின்றன. எஞ்சிய 50 விழுக்காடு இடங்கள் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் தனிச் சேர்க்கையின் கீழ் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதைத் தவிர நேரடி சேர்க்கை மூலம் மூன்று வருட பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக நான்கு வருட பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படுகின்றனர். மொத்தம் உள்ள 36 இடங்களில் 50 விழுக்காடு பொது சேர்க்கையின் கீழ் தொழில் நுட்பக்கல்வி இயக்குநரகத்தாலும், மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு தகுதி அடிப்படையிலும் நிரப்பப்படுகிறது.

பெருந்துறை சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரிகளில் எம்.சி.ஏ நிறைஞர் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறதா? மேற்படி படிப்பிற்காக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?

இக்கல்லூரி மூன்றாண்டு கால கணிணி பயன்பாட்டில் நிறைஞர் பட்டப்படிப்பு (எம்.சிஏ) நடத்தி வருகிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில் 30 இடங்கள் பொது சேர்க்கையின் கீழும் எஞ்சிய 30 இடங்கள் தனி சேர்க்கையின் கீழம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிள்ளைகளைக் கொண்டு தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

சாலை போக்குவரத்து நிறுவனத்தால் நடத்தப்படும் தொழில்நுட்ப பயிலகங்கள் எத்தனை மற்றும் எங்கெங்கே அமைந்துள்ளன ?

குரோம்பேட்டை (சென்னை) பர்கூர் மற்றும் திருநேல்வேலியில் சாலைப்போக்குவரத்து நிறுவனத்தால் 3 தொழில்நுட்ப பயிலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கீழ்க்கண்ட மூன்று வருட பட்டயப்படிப்புகள் நடத்தப்படுகின்றன :-

மின் மற்றும் மின்னணுவியல்

மின்னணு மற்றும் தொடர்பியல்

கணிணி தொழில் நுட்பம்

அவற்றில் மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?


மூன்று பயிலகங்களிலும் மொத்தம் 500 இடங்கள் உள்ளன. அதில் 50 விழுக்காடு பொது சேர்க்கையின் கீழ் தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநரகத்தின் விதி முறைகளுக்கு உட்பட்டும் மீதமுள்ள 50 விழுக்காடு தனிசேர்க்கையின் கீழ் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிள்ளைகளைக் கொண்டும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மேலும் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு நேரடி சேர்க்கையின் மூலம் மொத்த இடங்களில் 10 விழுக்காடு பொதுக் கல்வி பிரிவிலும், 10 விழுக்காடு தொழிற்கல்வி பிரிவிலும் +2 படித்த மாணவர்களைக் கொண்டு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநரின் விதிமுறைகளுக்குட்பட்டு சேர்க்கப்படுகின்றனர்.

சாலை போக்குவரத்து நிறுவனத்தால் நடத்தப்படும் ஓட்டுநர் பயிற்சியில் சேருவதற்கான வழிமுறைகள் என்ன ?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இலகுரக வாகன உரிமம் பெற்ற ஒரு வருடம் அனுபவமுள்ள நபர்களுக்கு மூன்று மாத கால கனரக ஓட்டுநர் பயிற்சி கும்மிடிப்பூண்டி, திருச்சி மற்றும் 3 மண்டல பயிற்சி மையங்களில்( சேலம், மதுரை மற்றும் பொள்ளாச்சி ) சாலை போக்குவரத்து நிறுவனத்தால் அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூபாய் 16,400/- ஆகும். செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து பயிற்சியாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். மேலும், பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் மேம்பாட்டுத் துறையினர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கும் நிதியுதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இலகுரக மோட்டார் வாகன மற்றும் இருசக்கர வாகன பயிற்சி தரமணி மற்றும் திருச்சி மையங்களில் அளிக்கப்படுகின்றன.

சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாகன உதிரி பாகங்கள் பரிசோதனைக் கூடத்தின் செயல்பாடு என்ன ?

சாலை போக்குவரத்து நிறுவனம் சென்னை தரமணியில் வாகன உதிரி பாகங்கள் பரிசோதனைக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறது. இதில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் கொள்முதல் செய்யப்படும் 52 வகையான வாகன உதிரி பாகங்களின் ( 37 உலோக பாகங்கள், 15 ரப்பர் பாகங்கள்) தரம் அறியப்படுகறது. இந்த பரிசோதனைக் கூடம் வாகன உதிரி பாகங்களின் பரிசோதனை தரத்தை மிகவும் மேம்படுத்த டெட் நார்ஸ்கி வெர்டியாஸ், நெதர்லாண்டு ( M/s DET NORSKE VERTIAS NETHERLANDS) நிறுவனத்திடமிருந்து 2002 செப்டம்பர் மாதத்தில் ISO 9001-2000 சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் தமிழ் நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் வாகன பாகங்களின் தரத்தை மேம்படுத்த இப்பரிசோதனைக் கூடத்திலுள்ள பரிசோதனை வசதிகளை உபயோகப்படுத்துகிறார்கள். இப்பரிசோதனை கூடத்தில் பரிசோதனை பாகங்கள் மாநில சாலைப்போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு / இந்திய தர அமைப்பு / தயாரிப்பாளர் குறிப்பிடும் தரத்திற்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

சாலை போக்குவரத்து நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவின் பணி என்ன ?

போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சாலை போக்குவரத்து நிறுவனத்திலும் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகங்களிலும் வெவ்வேறு வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

சாலை போக்குவரத்து நிறுவனத்தின் ஆராய்ச்சிப்பிரிவின் பணி என்ன ?


போக்குவரத்து தொடர்பு உள்ள இரு வகையான முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றது.

1. சாலைப் பாதுகாப்பு
2) பேருந்துகளின் ஒழுங்குமுறை நிர்வாகம், தமிழ் நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களிடமிருந்து விபத்து விவரங்களை பெற்று, ஆராய்ந்து அத்தகைய விபத்துக்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் வழிமுறைகள் அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றது.

சாலை போக்குவரத்து நிறுவனத்தின் போக்குவரத்து கொள்முதல் பிரிவின் பணி என்ன ?

அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் தேவையான முக்கிய பொருட்களாகிய அடிச்சட்டங்கள், டயர்கள், பயணச்சீட்டு அச்சிடுதல், டயர் புதுப்பிக்க தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் பிஸ்டன் அசெம்பிளி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவைகளின் விலை மற்றும் ஒப்பந்த விதிகளை முடிவு செய்வதில் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் நோக்கிற்கு பொது கொள்முதல் பிரிவு உதவி செய்கிறது.



தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 22, 2010 12:29 pm

ஓட்டுநர் அல்லது நடத்துனர் மீது அல்லது பேருந்து இயக்கம் பற்றி புகார் தெரிவிப்பது எப்படி ?

பயணிகள் நடத்துனர் , ஓட்டுநர் மற்றும் பேருந்து இயக்கம் பற்றிய குறைகளை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அல்லது மக்கள் தொடர்பு அலுவலருக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரையுள்ள அலுவலக நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். அவசரப் புகார்கள் ஏதும் இருப்பின், அதனை கம்பியில்லா தொடர்பு மூலம் (Wireless) எந்நேரமும் தெரிவிக்கலாம்.

1.மாநகரப் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிமிடெட்.

23455801
23455861
23455862
23455863
23455864
23455865

2. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ,(தமிழ் நாடு) லிமிடெட்

சென்னை

04425366351


3. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(விழுப்புரம்)லிமிடெட்


விழுப்புரம்: 04146 259256

வேலூர்: 0416 2252681

காஞ்சிபுரம்: 04112 222302


4. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம்)லிமிடெட்


சேலம்; 0427 2314391

தருமபுரி: 04342 230318


5. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கோயம்புத்தூர்) லிமிடெட்


கோயம்புத்தூர்: 0422 2421521

ஈரோடு: 0424 2275655


6. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிமிடெட்


கும்பகோணம்: 0435 2430921

திருச்சி: 0431 2415551

காரைக்குடி: 04565 234125

புதுக்கோட்டை: 04322 266111


7.தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிமிடெட்


மதுரை: 0452 2380112

திருநெல்வேலி: 0462 2500213

நாகர்கோவில்: 04652 224461

திண்டுக்கல்: 0451 2432585

விருதுநகர்: 04562 242589



தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Dec 22, 2010 12:52 pm

தகவலுக்கு நன்றி - இணையத்தளத்தில் முன் பதிவு வசதி உள்ளதா சிவா ?



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 22, 2010 1:28 pm

குடந்தை மணி wrote:தகவலுக்கு நன்றி - இணையத்தளத்தில் முன் பதிவு வசதி உள்ளதா சிவா ?

இது குறித்த விபரம் தெரியவில்லயே மணி!



தமிழக போக்குவரத்துத் துறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Dec 22, 2010 1:40 pm

இனைய தல முன்பதிவு வசதியும் இல்லை
இருக்கிற பேருந்துகள் எதற்கும் இன்சூரன்ஸ் ம் இல்லை
எந்த பேருந்துகளும் சுத்தம் செய்வதும் இல்லை
அதற்கு நிதியும் இல்லை

கட்டணத்தை உயர்த்தாவிட்டால் அரசு போக்குவத்து திவாலாகும்
என்பதுதான் இன்றைய நிலை

ராம்


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Dec 22, 2010 1:43 pm

இணைய தல முன்பதிவிர்கான எல்லா ஏற்பாடுகளும் இப்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது .இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு இணையம் மூலம் முன்பதிவு செய்ய முடியும்

ராம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக