புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
32 Posts - 51%
heezulia
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
74 Posts - 57%
heezulia
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10மன உளைச்சலுக்கு மருந்து Poll_m10மன உளைச்சலுக்கு மருந்து Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உளைச்சலுக்கு மருந்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2009 1:29 pm

"எனக்கா? மன உளைச்சலா? சான்ஸே இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுபவரா நீங்கள்? கொஞ்சம் இங்கே கவனியுங்கள். வயது என்னும் வரம்பைக் கடந்து இப்போது பலருடைய உயிரை பலிவாங்கும் ஒரு பெரிய வியாதியாக மன உளைச்சல் வியாபித்து விட்டது. அதிலும் குறிப்பாக 50 முதல் 60 வயது கொண்டோரை இது எளிதாகப் பற்றிக் கொண்டு வாட்டி வதைக்கிறது. மண வாழ்வில் ஏற்படும் பிணக்குகள், தனிமை, மணவிலக்கு, பொருளாதார வசதி குறித்த கவலை. வேலைவாய்ப்பின்மை, நெருங்கிவரும் பணி ஓய்வு, சமுதாய உரசல்கள், தன் லட்சியத்தை அடைவதில் ஏமாற்றம், குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஏக்கம், பேராசை, பொறாமை, இதயவடுக்கள், தீயசக்திகள் வாழ்வின் உச்சிக்குச் செல்வதைப் பார்த்து வரும் கோபம், விரக்தி என எண்ணற்ற காரணிகள் மன உளைச்சலை விளைவிக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு, நரம்பு மண்டல செயலிழப்பு, மதுவுக்கு அடிமையாதல், ஒற்றைத் தலைவலி, முதுகுவலி, செரிமானக் குறைபாடு, ஒவ்வாமை, அசதி, மனச் சோர்வு, உடல் எடை கூடுதல், தூக்கமின்மை, ஏன், சாதாரண ஜலதோஷம் கூட விளையலாம்.

மன உளைச்சல் என்றால் என்ன என்ற கேள்விக்கு சுருக்கமாக விடையளிப்பதென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு உடல் ஒத்துழைப்பதில் ஏற்படும் ஒரு விளைவு எனலாம். ஏதோவொரு குறிப்பிட்ட நாளுக்குள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடித்தாக வேண்டுமே என்ற கரிசனையாகட்டும், பேருந்தைப் பிடிப்பதாகட்டும், அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டுமே என்ற கவலையாகட்டும், வேலைக்குரிய நேர்காணலுக்கு தயாராவதிலாகட்டும், பதவி உயர்வு பற்றி சிந்திப்பதிலாகட்டும், ஒவ்வொரு செயலிலும் மனதுடன் சேர்ந்து உடலும்தான் ஈடுபடுகிறது. தனது திறமை உரிய விதத்தில மதிக்கப்படவில்லை என்ற எண்ணம் வந்தாலோ தனது கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தாலோ மன உளைச்சலுக்கு ஒருவர் எளிதில் ஆளாகிவிடுவார். அதன் மூலம் அவரது அணுகுமுறைகூட மாறிவிடக் கூடும். அதன் தாக்கம் பலவிதங்களில் இருக்கலாம். அவரது உடல் நிலை சீர்குலையலாம். அத்துடன் வேலைத் திறன் குன்றிப்போகலாம். வேலையால் கிடைக்கும் நிறைவு மங்கலாம். இதன் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்வில் பாதிப்புகள் ஏற்படலாம்.

மன உளைச்சலுக்குக் கூறப்படும் முக்கிய காரணங்களில் ஒன்று ஏராளமான வேலைகளை ஒரே நேரத்தில் கையிலெடுத்துச் செய்வதும், எடுத்த வேலையை அதிவிரைவில் செய்து முடிக்க வேண்டுமென்று அவசரப்படுவதும் ஆகும். வேலை செய்யும் இடத்தில் பணி எதுவும் இல்லாமல் சோம்பி இருந்தால் கூட மன உளைச்சல் வரலாம். ஒருவரது மனதிலுள்ள லட்சியங்களுக்கும் தான் மேற்கொள்ளும் பணிக்கும் எதிர்பொருத்தம் இருந்தால் கூட அவர் மனம் வெதும்பிப் போகலாம். அது அவரை மன உளைச்சலுக்கு அழைத்துச் செல்லலாம். செய்யும் வேலையில் திருப்தி இல்லையென்றால் மன உளைச்சல் வருவது நிச்சயம்.

மன உளைச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் பல. எதையும் கண்டு கொள்ளாமல் இருத்தல் அல்லது எதிர்மறையான அணுகுமுறை கொண்டிருத்தல் முதல் அறிகுறியாகும். மனத் தளர்வுற்றுக் காணப்படுவார். அசதியாக இருக்கிறதென்று எப்போதும் கூறுவார். சுயவெறுப்பு கூட காணப்படலாம். தாம் உதவியற்றவராக அவர் தனக்குள் எண்ணிக் கொள்ளலாம். சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் வளைந்து கொடுக்காதவராகவும் மன உளைச்சலுக்கு ஆளானவர் இருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வேலை என்பது ஆதிக்கம் செலுத்தவே செய்கிறது. தாம் பணிபுரியும் இடங்களில் குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். இல்லையென்றால் அவர்களது வேலைக்கு உலை வைக்கப்படலாம். இதனால் அவர்களது ஆழ்மனதில் ஒரு இறுக்கம் ஏற்படுவது இயல்பு. அத்துடன் வீட்டுக்கும் பணியிடத்துக்கும் மாறிமாறிப் பயணம் செய்வது கூட அலுப்பையும் சலிப்பையும் தரலாம். அதோடு திருமணத்திற்குப் பின்பு அலுவலக ஈடுபாடுகளையும் வீட்டில் செலவிட வேண்டிய நேரத்தையும் சமன் செய்து போக வேண்டியுள்ளது.

இத்தகைய நிலையில் மன உளைச்சலை கட்டுப்படுத்த என்னதான் வழி? திட்டமிடுதல். இதுவே இதற்குரிய தடுப்பு மருந்து. தனது பணிகளை சரியாகத் திட்டமிட்டால் மன உளைச்சல் மிகவும் குறைந்து விடுகிறது. இது குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவு பிறக்க வழி செய்கிறது. அத்துடன் உடற்பயிற்சி, நீண்ட தொலைவு நடத்தல், விருப்பமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல் ஆகியவை மனதுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி இறுக்கத்தை தளர்த்தும். படித்தல், புதுமையாக ஏதேனும் செய்தல், எழுத்து, சுற்றுலா, மலையேற்றம், நாடகம், பொழுது போக்கு நடவடிக்கைகள், கல்வி சார்ந்த பணிகள் ஆகியவையும் வாழ்வில் இறுக்கத்தைத் தளர்த்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாகும். ஒருவர் மீது வெறுப்பு கொண்டிருத்தல், பாகுபாடு காட்டுதல் ஆகியவை எதிர்மறையான குணாதிசயங்கள் ஆகும். இவை மூலம் மன அமைதி என்பது எட்டாக்கனியாகிவிடும். அநீதி உண்மையில் இழைக்கப்பட்டாலும் சரி, அல்லது கற்பனையில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினாலும் சரி, அது பகைமைக்கே வழி வகுக்கும். அதனால் மன இறுக்கம் உறுதி. ஆணவம், நேர்மையின்மை ஆகியவை நாளடைவில் மன இறுக்கத்துக்கு வித்திட்டு விடும். சொல்லப் போனால், பதவி-சொத்து ஆகியவற்றால் ஏற்படும் அகங்காரம், தாழ்வு மனப்பான்மையின் ஒரு பிரதிபலிப்புதான். நேர்மையற்ற ஒருவர் எப்போதுமே குற்ற மனசாட்சி கொண்டிருப்பார். குறுகிய காலத்தில் அவர் நேர்மையின்மை மூலம் பயனடைந்திருந்தாலும் கூட, அதனால் விளையும் மன இறுக்கத்தின் பின் விளைவுகள் அவருக்கு எதிராக நாளடைவில் திரும்பும்.

மன இறுக்கத்தை ஒரேயடியாக தவிர்த்துவிட முடியாது. ஒவ்வொருவரின் அடிமனதிலும் அது குறைந்த அளவிலோ பெரிய அளவிலோ இருக்கத்தான் செய்யும். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால், அதனை குறைக்கலாம். நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறை மன இறுக்கத்திலிருந்து பெரிய அளவுக்கு விமோசனம் தருபவையாகும்.

sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Postsweetgee Sun Aug 16, 2009 2:30 pm

migavum arumai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக