புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
62 Posts - 57%
heezulia
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
104 Posts - 59%
heezulia
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_m10கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 03, 2010 1:30 am

தமிழகத்தில் வானத்து நட்சத்திரங்களைப் போல மன்னர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். இலக்கியங்களிலும் செவிவழிச் செய்திகளிலும் மேலும் பலரின் பெயர்கள் உலவுகின்றன. அவர்கள் எண்ணங்களில் மட்டுமே வழ்பவர்கள். சிலர் மட்டுந்தான் தங்கள் வாழ்வை, ஆட்சியை, இலக்கிய வேட்கையை, மொழிப்பற்றை, கலைத்திறனை அழியாத சின்னங்களாக்கி நன் கண் முன்னே சான்றுகளாக விட்டுச் சென்றுள்ளனர். அந்த மிகச் சிலரில் ஒருவர் இராசராசன்.

ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. தஞ்சைத் தரணியில் இராசராசனின் கலைப்படைப்பு கம்பீரமாய் நம் கன் முன்னே நிற்கிறது.

அண்மையில் அமர்க்களமாய், ஆடம்பரமாய் ஒரு விழா நடைபெற்று முடிந்த பின்னரும், அவரோ தான் எழுப்பிய அதிசயத்தின் அருகில் பிரதிபலன் எதிர்பாராதவரைப்போல நிற்கிறார்.

அவனியே அண்ணார்ந்து பார்க்கும் வகையில் கோயில் எழுப்பிய கோமானுக்கு, அந்தக் கோயிலின் வளாகத்தில்கூட இடமில்லை என்பது எத்துனை வேதனையானது?

ஆயினும் என்ன, அந்தக் கலைக்கோயிலைக் காண்போர் எல்லாம் அவருக்கு தங்கள் இதயத்தில் இடம் தந்துவிடுகிறார்கள். இதயத்தில் இடம் என்றால்… தேர்தலின் போது ஒதுக்க முடியவில்லை எனில் கூட்டணிக கட்சிகளிடம் இதயத்தில் இடமுண்டு என அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வதுபோலல்ல. நிதர்சனமான நிரந்தர இடம்.

ஆட்சி அமைக்க கை கொடுத்துவிட்டு பிறகு நழுவுவது, கூட்டணியில் இருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என புலம்பி வருந்துவது, வளம்கொழிக்கும் அமைச்சர் பதவி வற்புறுத்திக் கேட்டும் கிடைக்கவில்லையெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து மௌனம் சாதிப்பது, நாட்டு மக்களுக்கு இன்னல் எனில் தீர்வுக்கு விடை தேடி விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது என இருபத்தியோரம் நூற்றாண்டு அரசியல்வாதிகள் பல்வேறு வகையான போக்குகளைக் கடைப்பிடிகின்றனர்.

ஆனால், இராசரசனோ, தனக்கு முடிசூட்டு விழா நடைபெறவிருந்த நிலையில், தானே உத்தம சோழனுக்கு முடிசூட்டி, உறுதுணையாய் இருந்து, பல ஆண்டுகள் கழிந்த பின்னரே தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றால் இராசராசன் அல்லவா உண்மையிலேயே உத்தம சோழன்!

இன்றைக்கு அரசின் செலவில் சில ஆயிரங்களில் ஒரு திட்டப்பணி நடைபெற்றால், கூட அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா என பல விழாக்கள் நடத்தி கல்வெட்டுகளில் தங்கள் பெயரைப் பெரிய அளவில் பொறித்து, பார்த்து பார்த்து பரவசபடுவோரைப் பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.

சுற்றுவட்டாரத்தில் கற்களே இல்லை என்ற நிலையில், டன் கணக்கில் கற்களைச் சேகரித்து நூற்றுக்கணக்கில் கலைஞர்களைத் திரட்டி, ஓர் அதிசயம் எழுப்பிய இராசராசன் தன் பெயரை சில கல்வெட்டுகளில் மட்டுமே செதுக்கி வைத்திருக்கிறார் என்றால் பேர் ஆசை மீது பேராசை இல்லாத அவரைத்தான் என்ன சொல்லிப் பாராட்டுவது?

தமிழ் மீதான பற்று, இடைவிடாது நாடுகளை வென்றது மட்டுமல்ல, கரையான் அரித்த கன்னித் தமிழ் ஏடுகளைத் தேடி சமயத்துக்குச் செய்த தொண்டு என பல விதங்களில் மக்கள் மனங்களில் கலையாத புகழுடன் இன்றும் நிற்கிறார் இராசராசன். ஆனால், அந்தச் சோழச் சக்கரவர்த்தியின் மனதிலோ எப்போதும் ’கலைக்கும்’ ஒரு திட்டமிருந்திருக்கிறது

சமய சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு கூட்டணி வைத்துக்கொண்டு அடுத்தவர் ஆட்சியைக் கலைக்கும் திட்டமல்ல; கருவூலத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக கள்ளுக்கும் மதுவுக்கும் நாட்டில் இடம்கொடுத்து, இளைஞர்கள் உள்பட குடிமக்களை முடிமகன்களாக்கி, அவர்களது ஆறாவது அறிவையும், குடும்பத்தினரின் நிம்மதியையும், அமைதியையும் குலைக்கும் திட்டமல்ல.

இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்தப் பார்முலாவைப் பயன்படுத்தியாவது வாக்காளர்களின் உள்ளத்தைக் கலைக்கும் திட்டமல்ல. வழக்குகளைக் காட்டி மிரட்டியோ, கரன்சிக் கட்டுகளைக் காட்டி விலைபேசியோ எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து, கட்சிகளை பல துண்டுகளாக்கிக் கலைக்கும் திட்டமுமல்ல.

அது, இப்படி ஓர் அற்புதம் உண்டா என, உலகோர் வியந்துவியந்து போற்றும் வண்ணம் உயர் கோபுரத்துடன் கூடிய உன்னதத்தைப் படைத்து, தானே கட்டடக் கலைக்கும் தலைவன் என காண்போரைச் சொல்லச் செய்யும் வண்ணம் செய்யும் திட்டம். அந்தக் கலைக்கோயிலால் காலாகலத்துக்கும் தன் பெயரை நிலைக்கும்வண்ணம் செய்யும் திட்டம்.

எவ்வித நவீன அறிவியலின் வாடையும் எட்டியே பார்த்திராத அந்தக் காலத்தில், கோபுரத்தின் நிழைகூட நிலத்தில் விழாமல் பெருவுடையார் கோயிலை நேர்த்தியாகக் கட்டிவைத்தார் இராசராசன்.

அறிவியல் முன்னேற்றத்தின் அத்துனை அம்சங்களும் நாய்குட்டியாய் வாலாட்டிக் கிடக்கும் இக்காலத்தில், நம் ஆட்சியாளர்கள் பாலம் கட்டினால், பயன்பாட்டுக்கு வரும் முன்பே அல்லவா அது சரிந்து விழுந்துவிடுகிறது!

நடப்பது மன்னராட்சிக் காலம் என்றபோதும், எதிலும் தன் வாரிசுகளுக்கும் முன்னுரிமை கொடுக்காமல் உண்மையான மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் இராசராசன் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடக்கும் காலம் இது. என்றாலும், இது மன்னராட்சிக் காலமோ என நினைக்கவைக்கும் விதத்தில் எங்கும், எதிலும் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கே வழிசெய்து கொடுக்கும் நம் இன்றைய ஆட்சியாளர்களின் மக்களாட்சித் தத்துவத்தை என்ன சொல்வது?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராசராசன் சிங்கமென சிறப்பாய் படை நடத்திச்சென்று சிங்களரை அடிபணியச் செய்து சாதனை படைத்திருக்கிறார் என வரலாறு தெரிவிக்கிறது. இடைப்பட்ட இந்தக் காலத்தில்தான் தமிழனின் நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபமானதாக மாறிவிட்டது?

இராசராசனின் கல்லறை எங்கிருக்கிறது என அரிய முடியாமல் போனது போலவே, அந்த மறத் தமிழனின் வீரமும், ஈரமும் கூட இன்று போன இடம் தெரியவில்லை. ’சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணம் கூறுமளவுக்கு அல்லவா தமிழினம் மாறிவிட்டது?

அண்டை நாட்டில் தன் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டிக்காதது மட்டுமல்ல, அந்நாட்டின் தலைவரை இங்கு வரவழைத்து பல்வேறு வகைகளில் கௌரவப்படுத்தும் செயலுக்கு சிறு எதிர்ப்பும் கூட காட்டாத இன, மொழிப்பற்றை எந்த வகையில் சேர்ப்பது?

சிங்களத்தை வென்ற இராசராசன் எங்கே, சிங்களத்தில் தமிழர்களை வீழ்த்த ஆவேசம் கொண்டு நின்றோருக்கு அடிபணிந்து தன் இனமாம் தமிழினம் அழிய துணை நின்ற இவர்கள் எங்கே!

சிறந்த் நிர்வாகம், பாரபட்சமற்ற அணுகுமுறை, ஒளிவுமறைவற்ற ஆட்சி, கலையுள்ளம், ச்மயப் பொதுநிலை என எந்த வகையில் எப்படிப் பார்த்தாலும் இராசராசனுக்கு நிகர் இராசராசனே!

தினமணி 1-11-2010
திரு.மா.ஆருமுககண்ணன்


Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Wed Nov 03, 2010 4:46 am

சோழ சாம்ராஜ்ஜம் என்று தகர்ந்ததோ, அன்றிலிருந்தே தமிழனின் அழிவும் அடிமைத்தனமும் ஆரம்பமாகிவிட்டது.



கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக