புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_m10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10 
42 Posts - 63%
heezulia
சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_m10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_m10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_m10சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நா.க அரசின் யாப்பு !


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 1:36 am

இக் கட்டுரை தமிழ் இன உணர்வாளர் ஒருவரால் எழுதப்பட்டது !


சி.சந்திரமௌலிசன்

சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த அரசின் யாப்பு சபையில் மீண்டும் சமர்ப்பித்தல் நாடுகடந்த அரசின் சர்வதேச அங்கீகாரத்துக்கு அவசியம்

அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு பாடமாக எடுத்து சட்டத் துறையில் பட்டம் பெற்றவன் என்ற வகையில் இதனை வரைகின்றேன்.
தமிழர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு தமிழீழம் தான் தீர்வு. அது சாத்தியமா இல்லையா என்பது எமது செயல் பாட்டிலும் அதனூடாக சர்வதேச அங்கீகாரத்தை பெறுவோமா என்பதிலும் தான் தங்கி உள்ளது என்பதை நம்புவன் நான்.

இன்றுள்ள நிலைப்படி, எனக்கெட்டிய அறிவுக்குள் எவரும் சரியான பாதையில் நகர்வதாகத் தெரியவில்லை. சரி பிழைகளுக்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறு அமைப்பாக
இருந்த காலம் முதல் கடைப்பிடித்த, ஒழுக்கக் கோவை, செயல் பாடுகளில் முழுமையான ஈடுபாடு கொண்ட உறுப்பினர்கள், சாதாரணத்திலும் உயர்ந்த கொள்கை உறுதிப்பாடு என்பன அவர்களை சிறந்த கரந்தடிப் படையாகவும், சிறந்த இராணுவ கட்டமைப்பாகவும் வளர வழி சமைத்தது. அவர்களின் இராணுவ திறமை எதிரிகளால் கூட பாரட்டப்படுமளவுக்கு இருந்தது. சர்வதேச அரசியல், இராஜ தந்திர உறவுகளை வளர்த்தல் விடயங்களில் அவர்கள் வெற்றியடைய தவறிவிட்டார்கள்.

இதே போல் நா.க. அரசு சர்வதேச அரசியல், இராஜ தந்திர அங்கீகாரத்தை பெற தவறுமாயின் புலம் பெயர் செயல் பாட்டாளர்களின் முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்

தெரிந்த இராணுவ தந்திரோபாயங்களோடு புதிய தந்திரோபாய சிற்பிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்ததால் அவர்களை உலகம் இராணுவ வல்லமை மிக்க சக்தியாக பார்த்தது. அதே போல் சர்வதேச அரசியல் விதிகளை அனுசரிப்பவர்களாக மட்டுமல்லாது, ஜனநாயக வழிமுறைகளில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் சிற்பிகளாக நா.க அரசு மாறவேண்டும். அப்பொழுது தான் உலகம் எம்மை திரும்பிப் பார்க்கும். அங்கீகரிக்கும்.

நா.க அரசு உருவாக்கியது யாப்பு தான். அது அரசியல் அமைப்பு விதி அல்ல. என்றாலும் அதில் யாப்பு மாற்ற அதிகாரம், அரசை கலைத்தல் இரண்டும் யாப்புக்கும், அரசியல் அமைப்பு விதிகளுக்கும் பொதுவான விடயங்கள்.

நடந்தேறிய விடயங்களை பார்க்கும் போது அதில் சர்வதேச தரம் தெரியவில்லை. உதாரணமாக "அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அறுதிப் பெரும்பான்மையும், அரசியல் அமைப்பு மாற்றங்களுக்கு மூன்றில் இரண்டு வாக்கும் அவசியம்" என்பது பொதுவான அரசியல் விதி. இதற்கு முற்றிலும் எதிரான முரணான விதத்தில் நா.க. அரசு "நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மூன்றில் இரண்டு வாக்கும், அரசியல் அமைப்பு மாற்றங்களுக்கு அறுதிப் பெரும்பான்மையும் அவசியம்"

என தீர்மானித்துள்ளது. இது சர்வதேச அங்கீகாரத்துக்கு வழி சமைக்காது. மாறாக சர்வதேச நிராகரித்தலுக்கு வழிகோலும் செயலாகும்.

அமெரிக்க அரசியல் அமைப்பு

நா.க அரசின் இந்த கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் சட்ட மா அதிபர் ராம்சே கிளார்க் கலந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்க அரசியல் அமைப்பு பற்றி முழுமையாக தெரிந்திருக்கும்.

1787 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி கூடிய அமெரிக்க அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பான மகாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய ஜனாதிபதி பெஞ்சமின் பிராங்க்ளின் எல்லா (13) மாநில பிரதிநிதிகளும் புதிய அரசியல் அமைப்புக்கு உடன்படவேண்டும் என கோரியிருந்தார். எனினும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பான மாநாட்டு குழுவினர் ஒன்பது உறுப்பினர்கள் (மூன்றில் இரண்டு) பலம் போதுமானது எனத் தீர்மானித்தனர். கிட்டத்தட்ட மூன்று வருட விவாதத்தின் பின் தான் அமெரிக்க அரசியல் அமைப்பு உருவானது. இது தான் அமெரிக்க என்ற பலம் மிக்க நாடு உருவாக்கத்தின் ஆரம்ப வரலாறு.

அமெரிக்க அரசியல் அமைப்பு மாநாடு உருவாக்கம் நடைபெற்ற போது அமெரிக்க பிரித்தானியாவுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் இருந்தது. இதனால் இங்கு மனித உரிமை தொடர்பான பல நல்ல விடயங்கள் உண்டு.

On September 17, 1787, the Constitution was completed, followed by a speech given by Benjamin Franklin http://en.wikipedia.org/wiki/Benjamin_Franklin, who urged unanimity, although the Convention decided that only nine states were needed to

மேலதிகமாக இங்கே அழுத்தி வாசிக்கலாம் http://en.wikipedia.org/wiki/United_States_Constitution#Ratification

மலேசிய அரசியல் அமைப்பு

மலேசிய பினாங்கு முதல்வரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மலேசிய அரசியல்மைப்பு சட்டமும், இவ்வாறே அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைதான் கோரி நிற்கின்றது
மேலதிகமாக இங்கே அழுத்தி வாசிக்கலாம் http://en.wikipedia.org/wiki/Constitution_of_Malaysia#Amendments

அமெரிக்க முன்னாள் சட்ட மா மா அதிபருக்கும், பினாங்கு முதல்வருக்கும் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வர மூன்றில் இரண்டு வாக்கும், பிரதமரை நீக்க அறுதிப் பெரும்பான்மையும் தேவை என்பது உலக நியதி என்பது நன்கு தெரியும்.

நாடுகடந்த அரசின் யாப்பு ஒரு அரசியல் அமைப்பு இல்லாவிடினும் அது ஒரு நாட்டிற்கு நிகரான நிறுவனத்தின் யாப்பு என்ற வகையில் அடிப்படைகளை மீறுவது நல்லதல்ல. இந்த வகையில் என் மனதில் உள்ள கேள்வி நா.க அரசு பிரதிநிதிகள் சட்ட மா அதிபரினதும், முதல்வரதும் ஆலோசனைகளை பெறவில்லையா? அல்லது அவர்களும் தங்களுக்கு வேண்டிய கைப்பொம்மை ஒருவரை வைத்து காரியம் சாதிக்கும் திட்டத்தில் இதை செய்தார்களா?

யாப்பு என்பது நிறுவனத்தின் தேசியக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருப்பதால் அது இலகுவில் அறுதிப் பெரும்பான்மையுடன் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிய யாப்பு, திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற நடைமுறை உண்டு.

இதேவேளை பதவியில் இருக்கும் ஒருவர் யாப்பின் கொள்கைகளை கடைபிடிக்க தவறின் இலகுவில் நீக்கும் பொருட்டு அறுதிப் பெரும்பான்மை நடைமுறையில் உண்டு. நாடுகடந்த அரசின் தற்போதைய யாப்பு விதிகளை நோக்கும் போது, தேசிய கொள்கைகளை அறுதிப் பெரும்பான்மையுடன் இலகுவில் மாற்றக் கூடியதாகவும், பதவியில் ஏற்றப்பட்டவரை இலகுவில் இறக்க முடியாதவாறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக நிறுவனத்தின் கொள்கை தற்போது தமிழீழம். அது இலகுவில் மாற்றப்படக் கூடியது என்பதை எதிர்பார்க்கலாம். அறுதிப் பெரும்பான்மை நினைத்தால் தமிழீழ கொள்கையை மாற்ற இது வழி வகுக்கும். இத்தகைய யாப்பின் உருவாக்கம் ஆபத்தானது. இவ்வாறான நிலையற்ற அல்லது உறுதியற்ற அல்லது உத்தரவாதமற்ற அரசியல் சமூக கொள்கை சர்வதேச உறவுக்கு பொருத்தமானதல்ல.

எந்த ஒருநாடும் இராஜதந்திர உறவுகளை உருவாக்கு முன் முதலில் பார்ப்பது அவ்வவ் நாட்டின் அரசியல் அமைப்பையும் அதன் கொள்கையையும் ஆகும். நா.க அரசின் இந்த அரசியல் அமைப்பை எந்த ஜனநாயக நாடும் மதிக்காது. ஏனெனில் நா. க. அரசின் பிரதான கொள்கையான தமிழீழம் அறுதிப் பெரும்பான்மையுடன் இலகுவில் மாற்றக் கூடியதாக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த அரசின் யாப்பு சர்வதேச நியமங்களுக்கு அமைய திருத்தப்பட்டு சபையில் மீண்டும் சமர்ப்பித்தல் நா.க அரசின் சர்வதேச அங்கீகாரத்துக்கு அவசியம்.

இது நடைபெற தவறின் உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்து தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். தமிழீழம் என்ற உயரிய நோக்கத்துக்காக இராணுவ நெறிகளுக்கு அமைய கொள்கையில் சற்றும் விட்டுக் கொடுக்காது அர்பணிப்புடன் செயல்பட்டதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ
ரீதியாக பலம் பெற முடிந்தது. அதே போல் ஜனநாயக தேடலில் புறப்பட்டவர்கள் அத்தகைய
ஜனநாயக அர்ப்பணிப்புடன் செயல் பட வேண்டும்.

எமது செயல் பாடுகள் "வெள்ளையிலும் வெள்ளையாக" (Whiter than white) ஆக இருக்க வேண்டும். எமது செயல்பாடுகளின் ஒழுக்கத் தன்மை சாதாரணத்தை விட மிகச் சிறந்தது என்ற பெயர் பெருமளவுக்கு நடை பெறவேண்டும்.

தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று நாம் செயல் படவேண்டும். எமது செயல் பாடுகள் சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கில் இருக்க வேண்டும். எமக்குள் நாமே குறு நில மன்னர் ஆவது சிறு பிள்ளை விளையாட்டாக முடியும். சர்வதேச பந்தயங்களில் பங்கு பற்றுபவர்களைப் பாருங்கள் ஒரு சிலர் போட்டியில் முதலாவதாக வந்தாலும் சர்வதேச நியமங்களை கடைப்பிடிக்காததால், கௌரவத்தை இழந்து வாழ்கின்றனர்.

இன்றைய உலகில் சாதாரண வியாபார நிறுவனங்கள் முதல் அனைவரும், நிறுவனத்துக்கு என்று ஒரு இணையத்தளத்தை எவ்வளவு அழகாக வைத்து நிர்வகிக்கின்றார்கள். நாடுகடந்த அரசு சாதாரணத்தை விட மிகச் சிறந்த இணைய சேவையை நடாத்த வேண்டும். அது நடப்பதாக இல்லை. www.tgte.org இணைய தளம் கடந்த நான்கு மாதங்களாக செயல் அற்று உள்ளது. அதில் ஒரே ஒரு அறிக்கை மட்டும் உள்ளது.

அரசு பிரதிநிதிகளின் விபரம் முதல் கொள்கை, செய்திகள் என பல இருக்க வேண்டிய இடத்தில் எதுவுமே காணப்படவில்லை. இந்த செயல் அற்ற தன்மைக்கு நா.க. அரசின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பு. சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கு அடிபடுபவர்கள் இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக தமது திறமைகளை வெளிக்கொணர தவறி உள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய அமைப்புகள் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியாமல் போனது தான் எமது முள்ளிவாய்க்கால் நிலைக்குக் காரணம்.

இந்நிலையில் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சர்வதேச அங்கீகாரத்தை தேடும் பாரிய கடமை புலம் பெயர் மக்களிடம் உண்டு. இந்த வகையில் மற்றைய நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது நாடுகடந்த தமிழீழ அரசு சரியானதொரு பாதை. இந்த பாதையில் வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் சர்வதேச கௌரவத்தை அங்கீகாரத்தினை தேடுவதாக அமைய வேன்டும். சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற பல விடயங்கள் அந்த வகையில் இல்லை.

இதனை நாம் செய்ய தவறின் சர்வதேச அங்கீகாரம் பெறாத "ஏரியா கொமான்டர்கள்" போல, நாடுகடந்த பிரதமரும், மந்திரிமாரும் ஆக நேரும். எந்த ஒரு நாட்டிலும் புதிய அரசியல் அமைப்பை அமுல்படுத்துவதாயினும் சரி, அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வருவதாயினும் சரி சபை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு அங்கீகாரம் அவசியம். உதாரணமாக தொண்ணூறு உறுப்பினர்களை கொண்ட சபையில் ஆகக் குறைந்த்தது அறுபது பேர் பிரசன்னமாய் இருந்து அதனை செய்ய வேண்டும். அதற்கு குறைவானவர்கள் பிரசன்னமாய் இருந்து எடுக்கப்படும் அரசியல் அமைப்பு செல்லுபடியற்றது இது சர்வதேச நியமம்.
எனவே 135 உறுப்பினர்களைக் கொண்ட நாடுகடந்த அரசு சபையில் 48 மட்டும் பிரசன்னமாய் இருந்து உருவாக்கப் பட்ட யாப்பு செல்லுபடியற்றது. சபை மீண்டும் கூட்டப்பட்டு சர்வதேச தரத்தில் யாப்பு உருவாக்கப்படவேண்டும். இது அத்திவார வேலை. தவறிழைத்தால் இனத்துக்கும் நல்லதல்ல சம்பந்த பட்டோருக்கும் நல்லதல்ல.
இந்த யாப்பை அடித்தளமாக வைத்து எடுக்கப் படும் முன்னெடுப்புக்களுக்கு சர்வதேசநிறுவனங்கள் உரிய கெளரவம் தர மாட்டார்கள். ராஜபக்சே அரசின் 18 ஆவது சரத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கும் நாம் அதே தவறை விட்டால் புலம் பெயர் முள்ளிவாய்க்கால் நிச்சயமாகிவிடும்.
ஒருவேளை சம்பந்தபட்டவர்களை நாடு கடத்துமாறு இலங்கை அரசு கேட்டால் சர்வதேச ஆதரவு இன்றி சம்பந்தபட்டவர்கள் தப்பிக்க முடியாது நாடுகடத்தப்படுவர்.

எனவே எமது செயல் பாடுகள் சர்வதேச தரமானதாக இருக்க வேண்டும். குத்துச்சண்டையை நிறுத்தி, இராஜ தந்திரிகளாய் எமது உறுப்பினர்கள் மாறவேண்டும். எமது செயல் பாடுகளை எல்லோரையும் விட எதிரி மிக கவனமாக கவனித்து வருகின்றான். நாடுகடந்த அரசு சபையில் குழப்பம் என்ற செய்தியை முதல் வெளியிட்டது சிங்கள பத்திரிகையான திவயின தான்.

அரசின் சபையில் விவாதம்
சபை விவாதங்கள் ஒலி, ஒளி, எழுத்து வடிவில் மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும். நாடுகடந்த அரசின் இணைய தளம் விவாதங்களை ஒலி வடிவில் அல்லது ஒளி வடிவில் அல்லது எழுத்து வடிவிலாவது சர்வதேச பார்வைக்கு விட வேண்டும். சபை உறுப்பினர்களின் ஒழுக்காற்று கோவை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

இணையதளம்

இலங்கை அரசின் இன அழிப்பு தொடர்பான அத்தனை செய்திகளும் இடம் பெற்றால் தான் பிரச்சார
பணி நடக்கும்.

யாப்பை இயற்றி தமிழருக்கு அறிக்கை விடுவது நல்லது தான். நான் அறிந்தவரை சர்வதேச ஊடகம் எதுவும் நாடுகடந்த அரசின் யாப்பு செய்தியை வெளியிடவில்லை. பாராளுமன்ற அமர்வை தமிழ் ஊடகவியலாளர்களோ, சர்வதேச ஊடக வியலாளர்களோ நேரடியாக பார்த்ததாக எழுதவில்லை. இது நல்லதல்ல. ஊடகவியலாளர்கள் முக்கியமாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமர்வுக்கு அழைக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

தமிழீழ அரசு பற்றி உலகம் பேச வேண்டும். உலகத்துக்கு அது தெரியவேண்டும். அப்படி எதுவும் நடந்ததாயில்லை. நாமே கூட்டம் கூடி, நமக்கு நாமே பட்டம் சூட்டி, நமக்கு நாமே அறிக்கை விட்டு, நடத்துவதெல்லாம் மாரி காலத்தில் கிணற்று தவளை கும்மாளம் அடித்து மடிவதற்குச் சமன். இது சிறுவர்கள் விளையாடும் கள்ளன் போலிஸ் விளையாட்டல்ல, ஒரு இனத்தின் எதிர்காலம் பற்றிய செயல்பாடு.
உத்தேச தமிழீழ அரசின் யாப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆய்வாளர்கள், பத்திரிகைகள், இணையங்கள் எல்லாம் ஏன் இது பற்றி முன்கூட்டியே ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதவில்லை? ஆர்வலர்கள் எல்லாம் எங்கே ஓடி மறைந்தனர்? முகத்துக்கு நேரே சொல்லாமல் போகவிட்டு புறம் சொல்வது எமது சீரழிந்த பண்புகளில் ஒன்று. தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் ஒட்டி உறவாடி வாழ்ந்தவர்கள் சிலர் இப்போது புறம் சொல்வது போல், உருத்திராவை தோல்விக்கு தள்ளிவிட்டு புறம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க நிறைய விடயங்கள் உண்டு.
உன்னை தொடர்ந்து புகழ்பவனை விட உன்னை விமர்ச்சிப்பவன் தான் நீ தவறுகளை திருத்தி மேலும் முனேற உதவுவான்.

ஊடகங்களுக்கு கட்டுரைகள் எழுதி முன் பின் பழக்கமற்ற நான் வேதனையின் எல்லையில் இதை எழுத முடிவு செய்தேன். நான் எந்த குழுவுக்கும் வக்காலத்து வாங்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. எம் இனத்துக்கு நன்மை விளைய வேண்டுமென்ற ஆசையில் மட்டும் எழுதியுள்ளேன்.


சி.சந்திரமௌலிசன்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக