புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
21 Posts - 66%
heezulia
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
63 Posts - 64%
heezulia
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் ஆவிகள்...


   
   
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 5:08 pm

செம்மணிச் சுடலையிலும்,
குமுதினிப் படகிலும்,
நவாலித் தேவாலயத்திலும்,
முல்லைத்தீவிலும்,
நரபலி கொண்டீர் !
மாறினோம் ஆவிகளாய்,
விண்ணுலகமும் இன்றி,
மண்ணுலகமும் இன்றி,
கண்ணில் சுதந்திரம்
கிடைக்குமோ என்று,
அலையும்
நாங்கள் ஆவிகள்....!

மண்ணுலகில் மாசில்லாப் பிறவி வேண்டி,
எண்ணிய பொருளெல்லாம் கிடைத்திட,
பண்ணவனைக் கேட்கவில்லை !
மானமுடன் வாழ
சுதந்திரம் தானே கேட்டோம்,
தந்திரமாக
வெற்றி அன்னையை
மானபங்கம் செய்து விட்டீர்...
மீண்டுமும் கொட்டமடக்க
மண்ணுலகில் நாமில்லை,
நாங்கள் ஆவிகள்...!

கோடி கோடி கற்பனை கொண்டு
தாயின் கருவில் உறங்கிக் கிடந்தோம்,
அன்னை பூமி அன்பு நாடு
தவழ்ந்த போது இனித்தது,
யாழ் இனிதல்ல என்பர்
எம் சொல்லைக்
கேட்டவர்கள்,
குருதி நிறம் அறிந்திட முன்னே
பருதி உலகம் சென்று விட்டோம்,
நாங்கள் ஆவிகள்...!

கணிணி என்பர்
காதில்தான் கேட்டது,
வருங்காலத்திலதைப்
படித்திட ஆசைதான்,
காதில் இரு குழாய் மாட்டி
வெள்ளைத் தேவதை போல்
வலம் வரும்
வெள்ளை உடை பூண்ட
மருத்துவராகவும் ஆசைதான்,
கல்வித் தெய்வத்தின்
கடைக் கண் பார்வையில் கூட
மேதாவி ஆகிடுவோம்,
ஐயகோ..
ஆசைகள் எல்லாம்
கரைந்து போனதே
எம்மைப் போல்...
நாங்கள் ஆவிகள்..!

பத்துத் திங்கள் சுமந்து கொண்டு,
பத்து வருடமாய்
பாலூட்டித் தாலாட்டிப்
பாராட்டிச் சீராட்டி
பாரில் புகழ் தருவான்
நம் பிள்ளையெனப்
பற்பல கனவுகள் கொண்டு,
செல்வத்தை வளர்த்திடும் போது,
நச்சுப் பாம்பு கூடப் பாராட்டிச்
சென்றது,
எம் சகோதர மனிதனோ
நச்சுப் புகைகொண்டு
தாக்கியதால்,
நாங்கள் ஆவிகள்....

நாங்கள் அன்று எழுந்ததெல்லாம்
நாளை நீங்கள் அமைதியாக
இருந்திடவே,
நாங்கள் இன்று அலைவதேல்லாம்
நாளை உங்கள் ஆவிவாழ்வைத்
தடுத்திடவே,
ஒன்று படுவீர் மக்காள் !
என்றும் வென்றுடுவீர் !
மேமாதப் பதினெட்டில்
பதினாறும் நீங்கள்
பெற்றிட
வாழ்த்துகின்றோம்
நாங்கள் ஆவிகள்...!

இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 5:20 pm

அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!


பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 11:02 pm

ARR wrote:அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!

நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 11:50 pm

எண்ணித்துணிந்து செய்த சுதந்திரப்போர் கருவறுக்கப்பட்டதும் எண்ணிலா ஏழைகள் தங்கள் இன்னுயிரை இழந்ததும்
எண்ணினால் ஏழுபிறவியும் நடுங்கிடும் உண்மைகள்
எண்ணிப்பார்ப்போம் அவர்தம் பலிதானங்களை..

அருமையான கண்ணீர் அஞ்சலிக்கு பாராட்டுகள் பாரதிப் பிரியன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 18, 2010 11:58 am

ஒவ்வொரு உயிரும் ஜனிக்கும்போதே சந்தோஷமான சூழல் தான் இதுவரை கண்டது எல்லோருமே... ஆனால் ஈழத்தமிழ் மண்ணில் ஜனித்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெண்களை கூட விட்டு வைக்காது ஈவிரக்கமில்லாது அட்டூழியங்கள் செய்தவரை தோலுரித்து காட்டிய பாரதிக்கு அன்பு நன்றிகள்....

கண்ணீரால் நனைந்த இந்த கவிதைக்கு ஆவிகளாய் அமைதி இல்லாமல் திரியும் ஈழ மக்களின் நிலையை அப்படியே கவிதையில் எழுதி எங்கள் மனதையும் கலங்க வைச்சிருக்கீங்க பாரதி....

அன்பு நன்றிகள் பாரதி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாங்கள் ஆவிகள்... 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 18, 2010 12:09 pm

ARR wrote:அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக