புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
21 Posts - 66%
heezulia
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
63 Posts - 64%
heezulia
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_m10அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 11, 2009 3:21 pm

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .

குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..

அம்மாவுக்கு சமையல் வேலை,

அப்பா பேப்பரில் பிசி,

அக்காவுக்கு நாவல் சுவாரசியம்

கடைசியில்

டெலிபோன் வந்தபோது.. .

ஸ்கூலில் என்னதான் நடந்தது ?

குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.

முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தை மாயா புடவையை லேசாக இழுத்தாள். அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை.

அம்மா..

அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..

போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..

இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .

பூனைமேலே ஆனை வந்திருக்கும். அதெல்லாம் கேட்க இப்போது எனக்கு நேரமில்லே. .. போ.

அம். .. மா டீச்சர்கூட.

உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய் ஹோம் ஒர்க்கை கவனி.

அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..

போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்க நேரமில்லே...

அம். .மா.

இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.

தயங்கியபடி மாயா வெளியேறினாள். புனிதா சமையலில் ஆழ்ந்தாள். சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணி எட்டாகிவிடும். அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும் ஃபைலைப் பார்க்க வேண்டும்.

அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார். காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரை வேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தார். அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?

மாயா மெல்ல அவரை நெருங்கினாள். அவர் பேப்பரிலிருந்து முகத்தை எடுக்க விரும்பவில்லை.

அப்பா.. இன்னைக்கு ஸ்கூல்லே.

பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே...

இல்லேப்பா.. இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .

டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.

அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .

நோ. . நோ. .. உன் கதையெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.

கதையில்லேப்பா.

சரி.. சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.ஞ

மாயா அக்காவை தேடி நகர்ந்தாள். அவள் நடுக்காட்டு மாளிகையில் ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் போதுதான், பாவம் மாயாவும் உள்ளே வந்தாள்.

மாலாக்கா. .. மாலாக்கா. .. மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள். புத்தகம் கீழே விழுந்ததில் மாலா காளியானாள். சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத் தட்டிவிட்டுட்டியே. ..

இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..

போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.

கொஞ்சம் கேளக்கா.. .

எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு.

அடித்து துரத்தாத தோஷம் தான் மாலா நடுக்காட்டு மாளிகைக்குள் ஆழந்துவிட்டாள்.

புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.

"மாலா" அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .

மாலா மாயா எங்கே ?

நான் பார்க்கலையே... என்னவோ சொல்ல வந்தாள்... மாலா இழுத்தாள்.

என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.

அப்பா.. அப்பா. . மாயா எங்கே ? மாலாதான் கேட்டாள். பேப்பரும் கையுமாக வந்தார் அங்கே தானேவந்தாள். ..

மாயா.. .

மா.. யா...

குரல்கள் வலுத்தன. பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர். சட்டென்று டெலிபோன் அலறியது. ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.

ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.

நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..

என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா. எங்ககிட்டே சொல்லச் சொனனீங்களா.. .? டாக்டர்கிட்டே அவசரமா கூட்டிப் போகச் சொன்னீங்களா ? தேங்க்யூ.. உடனே டாக்டர் கிட்டே போறோம்.

டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார். அவர் மனைவி முகத்தில் கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை. தேடல் தொடர்ந்தது.

வாசல் வராந்தா மூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா. ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா. முகம் சிவந்திருந்தது. உடல் அனல் பறந்தது.

உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .

ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?

மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.

"மாயா. . மாயா.. பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு" ?

மாலா அலறினாள். மாயா பேசவில்லை.

டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களை எந்திரத்தனமாய் சுழற்றியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார் டாக்டர். பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.

நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்கு ஆபத்துதான்.

கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள். நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..

கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?

டாக்டர் அவர்களை உரிமையுடன். கடிந்துக் கொண்டார். அவர்கள் மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று!.


- ஆர். பி. சாரதி

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 12:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 4:23 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக