புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
1 Post - 2%
viyasan
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 25, 2020 2:34 pm

பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர் கவிஞர் பழநிபாரதி. எஸ்பிபி தீவிர சிகிச்சையில் இருந்த நாட்களில் இந்தப் பாடலின் வரிகளைக் கேட்பது மிகவும் உருக்கமாக இருந்தது.

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் 1601021633797
பாடல்பதிவின்போது எடுத்த படம்

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்... திடமாய்...
எழுவாய் என் மகனே

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
மழையாய்.. கருணை
பொழிவான் இங்கு அவனே

- நீதான் என் கனவு...

சரணம்

ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இதுதான் நாம் கண்ட
உண்மை உலகில்

வலிகளை அறியாத
வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு - என்றும்
தோல்விகள் இனி இல்லை

தெய்வம் கைவிடுமா
எதும் இல்லாதான் வாழ்விலே

- நீதான் என் கனவு...

சரணம் 2

தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீகூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்

கனவும் மெய்யாகும் - அது
கற்பனை கிடையாது
அழைத்திடும் திசையெங்கும் - இனி
நீ வந்து விளையாடு

காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே

- நீ தான் என் கனவு...

( நன்றி-புதியதலைமுறை)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:56 pm

'கண்ணீரில் திரையுலகம்' - எஸ்.பி.பி. மறைவுக்கு சினிமா
பிரபலங்கள் இரங்கல்

-
சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் பல மொழிகளில்
40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய 'பாடும் நிலா'
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை
காலமானார். அவருக்கு வயது 74.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவினால்
திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எஸ்.பி.பி. மறைவுக்கு திரையுலகினரின் இரங்கல் செய்தி:


ரஜினிகாந்த்:
இன்றைக்கு மிகவும் சோகமான நாள். கடைசி வரை உயிருக்குப் போராடி அவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலே இல்லை. குரலைத் தாண்டி அவரை மக்கள் நேசிக்கக் காரணம் அவரது மனிதநேயம். பல மொழிகளில் பாடிய சிறப்பு அவருக்கே உரித்தானது. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:57 pm

கமல் ஹாசன்:
வெகுசில கலைஞர்களுக்கே அவர் வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி. அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் அவரை வழியனுப்பி வைத்த அவருடைய அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் வணக்கங்கள்.

அவர் நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குரலின் நிழல் பதிப்பாகப் பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் பாடும்.

கவிஞர் வைரமுத்து:


ஆயிரம் காதல் கவிதைகள்
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை வடிக்க
வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:58 pm

நடிகர் சிவக்குமார்:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி!
-
டி.ராஜேந்தர்:
தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய திரையுலகத்திற்கே பேரிழப்பு. பாலுவின் குரல் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அவரது மறைவு வேதனையாக இருக்கிறது. பாலில் தேன் கலந்தது போல மண்ணுலகம் இருக்கும்வரை அவரது காந்தக்குரல் இருக்கும். தாங்கமுடியாத இழப்பு.

நடிகர் விவேக்:

பெரும் இழப்பு இசை உலகத்திற்கு பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது. சிலர் வாழ்வு சாதனை; சிலர் வாழ்வு சரித்திரம்; ஆனால் சிலர் வாழ்வோ சகாப்தம்! அப்படி ஒரு சகாப்தம் SPB. இன்னொரு SPB இனி என்றோ? எனப் பதிவிட்டுள்ளார்.

பாடகி ஷ்ரேயா கௌஷல்:

புகழ்பெற்ற எஸ்.பி.பி. காலமானசெய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் மீண்டு வருவார் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:00 pm

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Eiv6uLoUcAAFeHh?format=jpg&name=small
-
நடிகர் தனுஷ்:

எஸ்.பி.பி. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர், அனைவரின் வீட்டிலும் எப்போதும் எதிரொலிக்கும் குரல். நீங்களும், உங்கள் குரலும் தொடர்ந்து பல தலைமுறைகளுடன் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல்.
-
நடிகர் பார்த்திபன்:

பேச முடியவில்லை !
அழுகை என் குரலை அடைக்கிறது.
உலகைக் கவர்ந்தக் குரலையே இழந்துவிட்டு! ஊடகங்களிலிருந்து என் சோகத்தைப் பதிய
இடைவிடாத அழைப்பு. எப்படி பேச? என்ன பேச?
மீண்டும் வேண்டுகிறேன்-
அவர் குடும்பத்தாருக்கு(நமக்கும்)
சமாதானமடைய சக்தி கிடைக்க!

இயக்குனர் ஷங்கர்:

மிகச் சில பாடகர்கள் மட்டுமே தரம் மிகுந்த பாடகர்களாக இருக்கிறார்கள். ரசிகர்களை அடைவதற்கு முன்பே ஒரு பாடல் வெற்றி பெறுகிறது என்றால் அதில் எஸ்.பி.பி ஐயா முதலிடம். நாங்கள் அவரை இழந்தோம், அவருடைய குரலை அல்ல. எப்போதும் காற்றுடன் அவரது குரல் கலந்திருக்கும்.

எஸ்.பி.பியின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம், வலி. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ இரவுகளுக்கு அவர் துணையாக இருந்திருக்கிறார். அவருடன் பணியாற்றியதில் நான் பெருமைகொள்கிறேன். அவரை என்றும் நினைவு கூர்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:01 pm

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்
-
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Eiv6e9UU4AAuiDU

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:04 pm

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் EiwUqAkU4AIUrFj
இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பி.பி-யின் உடல்
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என மருத்துவமனை
சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி
செலுத்தலாம் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி, நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள்
திரளானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர்.

தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:41 pm

பாடும் நிலா மறைந்ததும் 
ஓடும் மேகங்கள் சிறிதே நின்று 
கண்ணீர் அஞ்சலி என தெளித்தது
நன்னீர் மழைத்துளிகளை   

ரமணியன் 

(மாம்பலத்தில் தூறல்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2020 4:26 am

எஸ்பிபி மறைவு குறித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
-
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் 583486

”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு
ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த ஊரடங்கு சமயத்தில்
இணையம் வழியாக நடந்த இசை நிகழ்ச்சிக்காக அவருடன்
நான் சில மாதங்களுக்கு முன்பு உரையாடியிருந்தேன்.

அவர் அன்று மிகவும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாகக்
காணப்பட்டார். வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத
ஒன்று. அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள்,
இரங்கல்கள்".

இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக