புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
32 Posts - 51%
heezulia
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
74 Posts - 57%
heezulia
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_m10 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:10 am


 தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள் Tamil-Daily-News-Paper_667888820171357
-

புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவனைத் திருப்தி செய்ய விழைந்த திருமால், தானே இரணியனைப் போல அவதாரம் செய்து, பிரகலாதனுடன் இணைந்து நாம சங்கீர்த்தனம், விஷ்ணு பூஜை உள்ளிட்டவற்றைச் செய்ததாகவும் கூறியுள்ளார். அதே சமயம், உண்மையான இரணியன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகவும், அவனது கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே, தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றிக் கொடியவனான இரணியனை வதம் செய்ததாகவும் பராசர மகரிஷி கூறியுள்ளார்.

* இரணியனின் தம்பியான இரணியாட்சனைத் திருமால் வராக அவதாரம் எடுத்து வதம் செய்த செய்தியை அறிந்த இரணியன், திருமாலைப் பழிவாங்க எண்ணி அனைத்துலகங்களிலும் தேடினான். எங்கு தேடியும் திருமாலை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரணியனால் தேட முடியாத ஓர் இடத்தில் திருமால் ஒளிந்து கொண்டு விட்டாராம். அந்த இடம் எது இரணியனின் இதயம் தான் அங்கு தான் திருமால் ஒளிந்திருந்து மாயம் செய்தார்.

* ன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து அவர்களை இம்சிப்பதால், ‘ஹிம்ஸன்’ (இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள். அதற்கு வியாசர், “முனிவர்களே! நம் பார்வைக்கு நரசிம்மர் தன் நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும். ஆனால் அது இம்சை அல்ல.

ஏனெனில், அந்த அசுரர்கள் தமது பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள் நரகத்தில் வாட வேண்டியிருக்கும். அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப் பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள் உடலைக் கிழித்து, ஒரு நொடியில் ஆழ்ந்த துயரத்தைக் கொடுத்து, அவர்களது பாபங்களைப் போக்கி அவர்களைத் தூய்மையாக்குகிறார். மேலோட்டமாகப் பார்க்கையில் இது ஹிம்ஸை போலத் தெரிந்தாலும், உண்மையில் தீயவர்களான அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப் படுத்தும் நோக்கில் அவர்களைத் துயரத்துக்கு உள்ளாக்கும் நரசிம்மர், ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான்செய்கிறார்.

எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர். ஹிம்ஸன் என்ற சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா? எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார். அந்த ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:11 am


* நரசிம்மரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ராமாநுஜர். ஈசாண்டான் என்னும் குருவிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றார் ராமாநுஜர். தமக்குப் பின் எழுபத்து நான்கு சீடர்களை வைணவ குருமார்களாக அமர்த்திய ராமாநுஜர், அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்மருடைய விக்ரஹத்தைப் பூஜைக்காக வழங்கி, அவர்கள் அனைவருக்கும் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.

* நரசிம்மரின் பெருமையை விளக்க ஒரு சுவையான கதையைப் பராசர பட்டர் கூறுவார். ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கைரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன். திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை என்கிறார் பராசர பட்டர்.

* “தூணிலிருந்து நரசிம்மர் தோன்றிய
படியால், அந்தத் தூண் திருமாலுக்குத் தாயாகவும், திருமாலின் மகனான பிரம்மாவுக்குப் பாட்டியாகவும் ஆனது” என்று வேதாந்த தேசிகனும் ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார்:
“ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ: |
யத் ப்ராது: பவநாத வந்த்ய ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்தூணா பிதாமஹீ அபூத் ||”

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:12 am


* நரசிம்மருக்கு எதிராக தேவர்கள் உருவாக்கிய பறவையை வீழ்த்துவதற்காக நரசிம்மர் இரண்டு தலைகள், இரண்டு இறக்கைகள், எட்டு கால்கள் உடைய ஒரு பறவையாகத் தோன்றினார். அதைக் கண்டபேரண்ட பட்சி என்பார்கள். இன்றும் தேரழுந்தூரில் தேவாதிராஜப் பெருமாள் கழுத்தில் சாற்றியிருக்கும் பதக்கத்தில் கண்டபேரண்ட பட்சியின் வடிவம் இருப்பதைக் காணலாம். ஹைதராபாத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவிலுள்ள யாதகிரிகுட்டா என்ற மலையில், ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், கண்டபேரண்ட நரசிம்மர் ஆகிய மூன்று வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

* திருமாலைத் தரிசிக்க சனத்குமாரர்கள் நால்வரும் வைகுண்டம் சென்ற போது, அதைத் தடுத்த ஜய-விஜயர்கள் அவர்களின் சாபத்தால் பூமியில், இரணியன்-இரணியாட்சன், ராவணன்-கும்பகர்ணன், சிசுபாலன்-தந்தவக்ரன் என்று பிறந்தார்கள் என்பதை நாம் அறிவோம். பின்னொரு சமயம், வைகுண்டத்துக்கு பிரம்மா சென்றபோது, சுமுகன் என்ற வாயில் காப்பாளன் பிரம்மாவைத் தடுத்து விட்டான்.

அவன் பூமியில் பிறக்க வேண்டுமென பிரம்மா சபித்தார். ஆனால் வெளியே வந்த திருமால், “பிரம்மனே! இந்த சுமுகன் எனது தலைசிறந்த பக்தன். ஜய-விஜயர்களைப் போல் ஆணவத்தால் உங்களைத் தடுக்கவில்லை. தங்களின் வருகை எனது உறக்கத்துக்கு இடையூறாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் தடுத்தான். எனினும் தாங்கள் தந்த சாபத்தை இனி திரும்பப் பெற வேண்டாம். இவன் பூமியில் பிறக்கட்டும். ஆனால் தலை சிறந்த பக்தனாக இவன் விளங்கி, எனது பக்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாய்த் திகழட்டும்!” என்றார். அந்த சுமுகன்தான் பக்தப் பிரகலாதன்.

* ஆதிசங்கரர் ஒரு தீ விபத்தில் சிக்கி, அவரது கரம் தீயால் பாதிக்கப்பட்ட போது, லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்னும் துதியை இயற்றினார்.
“ஸ்ரீமத்பயோநிதி-நிகேதன! சக்ரபாணே!
போகீந்த்ர-போக! மணிரஞ்ஜித-புண்யமூர்த்தே!
யோகீச-சாச்வத-சரண்ய! பவாப்திபோத!
லக்ஷ்மீந்ருஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்”
- என்று தொடங்கி, தமது கரத்தைக் காத்தருளும்படி நரசிம்மரிடம் வேண்டினார். அடுத்த நொடியே, பதினாறு கைகளோடு நரசிம்மர் அங்கே தோன்றினார். இரண்டு கைகளில் சங்குசக்கரம் ஏந்தி இருந்தார். இரண்டு கைகளால் சங்கரரின் உடலைப் பிடித்துக் கொண்டார்.

இரண்டு கைகளால் அதிலுள்ள தீயை அணைத்தார். இரண்டு கைகளால் அபய முத்திரையைக் காட்டினார். இரண்டு கைகளால் ஆறுதல் கூறித் தேற்றினார். இரண்டு கைகளால் சங்கரரைத் தூக்கினார். இரண்டு கைகளால் சங்கரரின் உடலில் தேனை ஊற்றினார். இரண்டு கைகளால் சங்கரருக்கு விசிறி வீசினார். சங்கரர் புத்துயிர் பெற்று எழுந்து, நரசிம்மருக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:13 am



“ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள் தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர் தான் அழகு!” என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதனால்தான் “அழகிய சிங்கர்” என்று அழைக்கப்படுகிறார்.

* மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? அழகிய சிங்கரான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காண முடியாது. மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான் மானான நரசிம்மரின் மடியில் ஸ்ரீ தேவி அமர்ந்திருக்கிறாள்.

* இரணியனின் தங்கையான ஹோலிகா என்பவள் தீயால் சுடப்படாமல் இருக்கும் ஆற்றல் பெற்றிருந்தாள். அவள் பிரகலாதனைத் தீயில் தள்ள முற்பட்ட போது, நரசிம்மர் பிரகலாதனைக் காத்து, ஹோலிகாவைத் தீயில் தள்ளினார். அதன் நினைவாகத் தான் ஹோலிப் பண்டிகைக்கு முந்தைய நாள் ஹோலிகா தஹன் என்ற பெயரில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

* பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்ற இரணியன், உயிருள்ள பொருளாலோ உயிரற்ற பொருளாலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று வேண்டியிருந்தான். அதனால் தான் நகத்தால் கீறி அவனை வதைத்தார் நரசிம்மர். நகத்தை வெட்டினால் முளைப்பதால் உயிர் உள்ளதாகவும் கொள்ளலாம், வெட்டினாலும் வலி தெரியாதபடியால், உயிர் அற்றதாகவும் கொள்ளலாம்.

* சங்கத் தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலின் நான்காம் பாடல் நரசிம்மரின் பெருமையைச் சொல்கிறது.

செயிர்தீர் செங்கட் செல்வ! நிற்புகழ
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணிபட
வலந்துழி, மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:15 am


* நரசிம்மருக்கு மூன்று திருக்கண்கள் உண்டு.
அவரது வலக்கண்ணில் சூரியனும், இடக்கண்ணில் சந்திரனும்,
நெற்றிக்கண்ணில் அக்னியும் உள்ளனர்.

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று காட்டுவதே நரசிம்மாவதாரத்தின்
நோக்கமாகும். கண் என்பது தமிழில் இடத்தைக் குறிக்கும். எல்லா
இடங்களிலும் நிறைந்திருப்பதால், நரசிம்மருக்கும் கண்ணன் என்று
பெயருண்டு.

அதனால் தான் நம்மாழ்வாரும்,
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக்
காய்ந்து இங்கு இல்லையால் என இரணியன் தூண்புடைப்ப அங்கு
அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை
ஆராயும் சீர்மைத்தே -

என்ற பாடலில் கண்ணன் என்றே நரசிம்மரைக் குறிப்பிட்டார்.
--

ராமானுஜதாசன்
நன்றி- தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக