புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_m10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_m10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian
அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_m10அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:41 pm

பரிந்துரைப்புக்காக தன்னிடம் வந்த ஒரு இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்து அவரை தாயாக்கி விட்டதாக மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் டி. ஜெயக்குமார் என பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், இதை மறுத்துள்ள ஜெயக்குமார் “சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் ஜெயக்குமார் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, அதை கலைக்குமாறு மிரட்டினார். இதற்கு மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பான ஆடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அதை அவர்கள் ஏற்கவில்லை. எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவரும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி விரைவில் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:42 pm

பெண்ணை கற்பழித்துவிட்டு அவருக்கு கர்ப்பத்தடை மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கொடுத்து வந்ததாக வெற்றிவேல் எம்.எல்.ஏ பகீர் பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ “ சிபாரிசுக்காக வந்த பெண்ணுக்கு ஜெயக்குமார் வீட்டில் பழச்சாறு கொடுத்துள்ளனர். அதில் மயங்கிய பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். இதுபற்றி அவரின் தாய் கேட்டதற்கு, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன் பின் பல இடங்களுக்கு அப்பெண்ணை வரவழைத்து கற்பழித்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அப்பெண்ணை அவர் பலமுறை சந்தித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார்.

மேலும், மேலும், அப்பெண் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கர்ப்பதடை மாத்திரை தொடர்ந்து கொடுத்துள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் உஷாரான அப்பெண் மாத்திரைகளை சாப்பிடவில்லை. எனவே, கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த ஆடியோவை நாங்கள் ரிலீசாகவில்லை. உரிய ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் குற்றச்சாட்டு எதுவும் கூற மாட்டோம்.

அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்து விட்டு புகாரை சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை. ஜெயக்குமாரை போல் வேறு சில அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும். ஆடியோ தவிர வேறு சில ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. தகுந்த நேரத்தில் அவற்றை வெளியிடுவோம்” என வெற்றிவேல் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:43 pm

அமமுகவுக்கும் ஜெயக்குமார் மீதான சர்ச்சை ஆடியோ வெளியானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குற்றாலத்திலிருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "அமமுகவுக்கும் ஜெயக்குமார் மீதான சர்ச்சை ஆடியோ வெளியானதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தப்பு நடந்ததாக ஊடகங்கள் சொல்கின்றன. பிள்ளையின் ஃபோட்டோ, பிறப்புச் சான்றிதழ் ஆகியனவற்றை ஊடகங்கள் காட்டுகின்றன.

இதையெல்லாம் வைத்து சக அமைச்சர் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

யாரோ செய்திருந்தாலும்கூட பதவி நீக்கம் செய்ய வேண்டாமா? மத்திய அமைச்சர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியதால் பதவி விலகவில்லையா?

அமைச்சர் ஜெயக்குமார் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கட்டும். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று.
நாங்கள் அப்படியல்ல. நாங்கள் நல்லவர்கள். ஓப்பனாக பேசுவோம் கோபப்படுவோம் ஆனால் கெட்டது செய்ய மாட்டோம்" என்றார்.
முன்னதாக, ஆடியோ விவகாரம் குறித்து வாய் திறந்த அமைச்சர் ஜெயக்குமார் அது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க தினகரனைச் சார்ந்தவர்கள் செய்யும் சதி என்றும், இதை சட்டப்படி எதிர்க்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை தங்கத் தமிழ்ச் செல்வன் மறுத்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:44 pm

ஆடியோ விவகாரம் குறித்து வாய் திறந்த அமைச்சர் ஜெயக்குமார் அது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்க தினகரனைச் சார்ந்தவர்கள் செய்யும் சதி என்றும், இதை சட்டப்படி எதிர்க்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று வாட்ஸ் அப் மற்றும் வலைதளங்களில் இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதில் ஒரு பெண், அமைச்சர் ஜெயக்குமாருடன் உரையாடுவது போன்று உரையாடல் அமைந்திருந்தது. அதில் உங்களைப் பார்க்க என் மகளை அழைத்து வந்தேன் இப்படிச் செய்துவிட்டீர்களே, இப்போது 1.5 மாதம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று பேச கருவைக் கலைக்க பணம் தாருங்கள் என்று கேட்கிறார். வந்து வாங்கிக்கம்மா என்று கூறுவதுபோல் அந்த ஆடியோ உரையாடல் முடியும்.

அடுத்த ஆடியோவில் கருவைக் கலைக்கும் விஷயம் வீட்டு ஆண்ககளுக்குத் தெரிந்துவிட்டது. உங்களைப் பார்க்கணும் என்று சொல்கிறார்கள் அழைத்து வரவா? என்று அந்தப்பெண் கேட்பதும், அதெல்லாம் வேண்டாம் நீங்கள் தனியாக வீட்டுக்கு வாங்கம்மா? என்று பதிலளிப்பதும். இல்லீங்க நீங்க கலைப்பதோடு ஒதுங்கிக் கொள்வீர்கள், அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்யும் செலவு எல்லாம் இருக்கு என்று சொல்ல போனில் அனைத்தையும் சொல்ல முடியாது நேரில் நீங்க மட்டும் தனியாக வாருங்கள் என்று ஆண் குரல் பதிலளிக்கும்.

அமைச்சர் ஜெயக்குமார் குரல் போன்று அந்த ஆடியோவில் குரல் இருப்பதும், அதனுடன் மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் ஒன்றும் அதில் ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது போன்றும், அதில் தந்தை என்ற இடத்தில் ஜெயக்குமார் பெயரும், தாய் என்கிற இடத்தில் ஒரு பெண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டு அமைச்சர் ஜெயக்குமார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வைரலானது.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:

“அந்தக் கும்பல் கடுமையாக என்னை எதிர்ப்பதற்காக என் மீது அரசியல் காழ்புணர்ச்சியோடு ஒரு நட்சத்திர விடுதியில் நான் யாருடனோ இருப்பது போன்று மார்பிங் செய்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் உலாவ விட்டனர். இது எனது கவனத்திற்கு வந்து சைபர் கிரைமில் புகார் அளித்து மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தோம்.

அதன் பின்னர் சிலகாலம் அடங்கி இருந்த அந்தக் கும்பல் அதில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ச்சியாக என்னை எதிர்க்கின்ற காரணத்தினால், அந்தக் குடும்பத்தை முழுமையான அளவிற்கு நான் எதிர்க்கின்ற காரணத்தினால் என்னை நேரடியாக எதிர்க்க திராணியற்றவர்கள் வாய்ஸ் ஒன்றை ஆடியோ மார்பிங் செய்து போட்டுள்ளனர்.

இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்திற்கு முன் பதில் சொல்ல வேண்டியவர்கள். சட்டப்படி அதனை எதிர்க்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன்.

ஏனென்றால் அதை வாட்ஸ் அப்பில், முகநூலில் பதிவு செய்தவர்கள் நிச்சயம் அந்தக் கும்பல் தான். ஏனென்றால் தனியார் தொலைக்காட்சிகள் சிலவற்றில் ஒரு மாதம் முன்னரே இதுபோன்ற ஆடியோ இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இவர்கள் போலியாகத் தயாரிப்பதில் வல்லவர்கள் என்று பாருங்கள்.

அந்தக் கூட்டமே பிராடு, சீட்டிங் கூட்டம். இந்த சிறு நரிகளுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல சிங்கக்கூட்டம் நாங்கள். எந்த ஒன்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் முன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை அவர்களும் எதிர்கொள்ள வேண்டும்.”

நீங்கள் வழக்கு தொடர்வீர்களா?

கண்டிப்பாக வழக்கு தொடருவேன். போலீஸில் புகார் அளிப்பேன்.

யார் அந்தக் குடும்பம்?

உங்களுக்கே தெரியும். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அது வெளிப்படையாகத் தெரியும். சசிகலா குடும்பம், தினகரனைச் சார்ந்தவர்கள். இவர்கள்தான் அந்த மாஃபியா கும்பல். இவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

எதிர்ப்பது என்றால் என்ன ஒட்டுமொத்த கட்சிக்காரர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறேன் அவ்வளவுதான். அதற்காக என்மீது ஒரு அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிடுகின்றனர். நிச்சயமாக அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நீங்கள் அப்படிப்பட்ட உரையாடல் எதிலும் ஈடுபடவில்லையா?

நிச்சயமாக இல்லை, சாலஞ்ச் செய்து சொல்வேன்.

பிறப்புச் சான்றிதழில் உங்கள் பெயர் உள்ளதே?

அதில் உங்கள் பெயரைக்கூட போட்டுக்கொள்ளலாமே. அதில் என் கையெழுத்தா உள்ளது.

உங்கள் பெயரைப் போட்டு இவ்வாறு கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

நீங்கள் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். டி.ஜெயக்குமார் என்று நான் ஒருவன் தானா இருக்கிறேன். கெசட்டில் எடுத்துப் பாருங்கள் ஆயிரம் பேர் இருப்பார்கள். இதில் ஸ்டாலின் பெயரைக்கூட போடலாம், கேள்வி கேட்கும் உங்கள் பெயரைக்கூட போடலாம்.

ஆகவே இது திட்டமிட்ட சதி. களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படுபவர்கள் சதி. 1982 லிருந்து நான் சந்திக்கிறேன்.

ஆடியோ பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?

கண்டிப்பாக அனைத்து சோதனைகளுக்கும் நான் தயார்.

18 எம்.எல்.ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்கிறார். ஈபிஎஸ் அவர்களை குறிவைப்பதால் இவ்வாறு செயல்படுவதாகக் கூறுகிறார்களே?

ஒளிந்திருந்து ஒரு கிரிமினல் வேலை செய்வதில் தினகரனுக்கு நிகர் தினகரன்தான், சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் தடைபடுமா? நிச்சயம் நம் இயக்கத்தைக் காக்க அவர்கள் திரும்புவார்கள்.

இப்போது சசிகலாவைச் சந்திக்க ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். அடுத்து முன்னோட்டமா பெரா ரெடி ஆயிடுச்சு, அடுத்து நான் வருவேன் என்று சொல்லப் போயிருக்கிறார்.

ஆடியோ பற்றி சொன்னீர்களே...எம்.பி.க்கு தம்பி பாப்பா பொறந்திருக்குன்னு சொன்னீர்களே நீங்கள் ஏன் அவர்கள் மீது நடவடிக்கைக்கு செல்லவில்லை?

அவர்கள் என் பெயரைச் சொல்லவில்லையே? சொல்லாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நான் ஏன் போய் சொல்லணும். தெருவில் போகிற வருபவர்கள் கூறுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? வரட்டும் முறையாக நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:45 pm

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு, அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை ஜெயக்குமார் உறவில் இருந்துள்ளார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் டி.ஜெயக்குமார் என பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ “ சிபாரிசுக்காக வந்த பெண்ணுக்கு ஜெயக்குமார் வீட்டில் பழச்சாறு கொடுத்துள்ளனர். அதில் மயங்கிய பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். இதுபற்றி அவரின் தாய் கேட்டதற்கு, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன் பின் பல இடங்களுக்கு அப்பெண்ணை வரவழைத்து கற்பழித்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அப்பெண்ணை அவர் பலமுறை சந்தித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:46 pm

வெளியான ஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல்தான் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது.

ஆனால், இதை மறுத்துள்ள ஜெயக்குமார் “சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “ஆடியோவை கேட்டால் அது ஜெயக்குமாரின் குரல் போலத்தான் இருக்கிறது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இது முதலமைச்சரிடம் கேட்டீர்களா? அதற்கு அவர் பதில் சொன்னாரா? இதுபற்றி அவர்கள்தான் கூற வேண்டும்” என தினகரன் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:49 pm

கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறிவதாவது:

சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:49 pm

நேற்று ஊடகங்களில் அமைச்சர் ஜெயகுமாரின் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அந்த ஆடியோவில் உள்ள குரல் தனது குரல் இல்லை என்றும் இதுகுறித்து சட்டரீதியான எந்த வழக்கையும் நேர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்தார். மேலும் எனக்கும் இந்த ஆட்சிக்கும் களங்கம் கற்பிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாகவும், அந்த கும்பலின் வேலைதான் இந்த ஆடியோ என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'ஜெயகுமார் குறித்த ஆடியோவிற்கும் அம்முகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்கிறார். அந்த அறிவு ஜெயகுமாருக்கு ஏன் இல்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவர் என்பதை ஜெயகுமார் நிரூபிக்க வேண்டும்

ஊடகங்களில் இந்த செய்தி ஆடியோ ஆதாரத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? இந்த அடாவடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே குற்றால ஈஸ்வரரை வணங்குவதற்காக குற்றாலம் வந்துள்ளோம் என தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 23, 2018 5:24 pm

இந்த விவகாரம் குறித்து தி இந்து வாசகர் பாலன்
பதிவிட்ட நகைச்சுவை
-------------------------------------

நகைச்சுவைக்கு :

மீ டூ இந்த ரேஞ்சிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என ஆரம்பத்தில்
தெரியவில்லை. இத்தனை களேபரம் நாட்டில் ,
மீ டூ வால் நடந்து கொண்டு உள்ளது .

ஒரு ஜோதிடராவது ஆண்களுக்கு மீ டூ வால் கண்டம் ,
இமேஜ் பாதிப்பு வரும். பரிகாரம் தேடிக்கொள்ளவும்
என பொதுப்பலன் முன் கூட்டியே கணித்து சொன்ன
மாதிரி தெரியலை .!!!!!!!!!!!!!!.

சொல்லி இருந்தால் , சம்மந்தப்பட்ட பெண்ணை / பெண்களை ,
நேரில் சந்தித்து , பரிகாரம் தேடி இருக்க வாய்ப்பு உள்ளது தானே
-
----------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 11:43 am

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து சில வீடியோக்களையும் தினகரன் தரப்பு வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், அமைச்சர் ஜெயக்குமாரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச வீடுகளை கொடுத்து அவர் சரிகட்டினார். அந்த பெண்கள் தற்போது குடும்பமாகி வாழ்ந்து வருகின்றனர். எனவே, அதுபற்றி பேசினால் பலரின் வாழ்க்கை நாசமாகும். பெண்கள் விஷயத்தில் அவர் எப்படியென வட சென்னைக்கே தெரியும். விரைவில், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியே வருவார்கள் என அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இந்த நிலையில், அடுத்த அதிரடியாக இன்னும் சில ஆடியோக்களையும், வீடியோவையும் வெளியிட தினகரன் டீம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து ஜெயக்குமாரின் அறிமுகம் முதல் குழந்தை பிறந்தது முதல் என்ன நடந்தது என வெற்றிவேல் விசாரிக்கும் வீடியோவை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனராம். செய்தியாளர்களை சந்திக்க அப்பெண் தயங்குவதால், அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக