புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
56 Posts - 50%
heezulia
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%
Shivanya
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
12 Posts - 2%
prajai
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
9 Posts - 2%
jairam
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_m10இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2018 11:04 am

இணைய பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்..... RgIDiTBoQAib5eEuxrJH+Tamil_News_large_199404820180406012444

இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பெட்டிக்கடைகளில் பலசரக்கு வாங்கிய நிலை மாறி இணையக் கடைகளில் நாம் விரல்களால் விற்பனைச் சந்தைக்குள் நுழைந்து நாட்களாகிவிட்டன. ரயில்முன்பதிவு, மின்கட்டணம் செலுத்துதல், இணையவங்கிச் சேவை என்று இணையவாசிகளாகிவிட்டோம்.சில நொடிகள் இணையவேகம் குறைந்துபோனால்கூட நம்மால் தாங்க முடியா அளவு மனச் சோர்வுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் கூட அவற்றிலிருந்து விலகி தலை குனிந்தபடி நம் கையிலுள்ள ஸ்மார்ட் போன்களின் செயலிகளுக்குள் நுழைந்து எதையாவது தேடிக்கொண்டிருக்கும் கவனமற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம். நம் இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்து ஆண்டுகள் தாண்டிவிட்டன.விற்பனையாகும் தகவல்கள்துணிக்கடையிலிருந்து நாமே மறந்துபோன நம் பிறந்தநாளுக்கோ நம் திருமணநாளுக்கோ வாழ்த்து அட்டை எப்படி வருகிறது என்று நாம் என்றாவது சிந்தித்திருப்போமா? நம் வீட்டில் ஆறுமாதம் கழித்து நடைபெற உள்ள திருமணத்திற்கு எங்கள் கடையில் நகை வாங்குங்கள் என்று எப்படிக் கேட்க முடிகிறது என்று சிந்தித்திருப்போமா?

குருவாயூர் போனால் எந்த விடுதியில் தங்கலாம் என்றுகூகுளில் தேடிவிட்டு, முகநுால் வந்தால் முகநுால் திரையில் குருவாயூர் விடுதிகளின் விளம்பரம் எப்படி வருகிறது என்று என்றாவது சிந்தித்திருப்போமா? உடல் எடையைக் குறைக்க எந்த ஜிம்முக்குப் போவது என்று ஏதாவது ஒரு தேடு பொறியில் தேடிவிட்டு வருவதற்குள் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிறுவன விபரம் எப்படி முகநுாலில் வருகிறது என்று என்றாவது சிந்தித்திருப்போமா?

.....தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2018 11:15 am

இரக்கமற்ற இணையம்:
அலைபேசிகள் பேசுவதற்கு என்ற நிலையை தாண்டி விட்டன. திருமண வீட்டிலும், இறப்பு வீட்டிலும், நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லச்சென்ற மருத்துவமனையிலும்கூட, நானே என் படத்தை தற்படமாய்(செல்பி) எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவேன் என்று தற்படப் பிரியர்களாக மாறி இருக்கிறோம். ஓடும் ரயிலுக்கு முன்னால் தற்படம் எடுத்துக் கொள்வதாய் தன்னுயிர் நீத்த மனிதர்களால் அலைக்கற்றைகள் கொலைக்கற்றைகளாக மாறி இருக்கின்றன. நீலத்திமிங்கலங்களின் கோர ஆணையேற்று கைநரம்புகளை அறுத்துக்கொண்டு உயிர்நீத்த சிறுவர்களின் மீது இணையம் இரக்கமில்லாமல் தன் கோரக்கரங்களை நீட்டியிருக்கிறது. இணையமில்லாதவர்களை இதய மில்லாதவர்கள் என்று சமூகம் புறந்தள்ளத் தொடங்கியிருப்பது எவ்வகையில் நியாயம்?

வங்கிக் கணக்கு இல்லாதவர்களைக் கூடக் காணலாம், ஆனால் முக நுால் கணக்கு இல்லாதவர்களைக் காணமுடியாது என்று முகநுால் நம் முகவரியாய் மாறிவிட்டன. மறந்துபோன நண்பனின் பிறந்தநாளை இரண்டு நாட்களுக்கு முன்பே முகநுால் நினைவுபடுத்தி அவருடனான பழைய நினைவுகளைப் படமாக எடுத்து நம்மைப் பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி ஆணையிடுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் நாம் என்ன பதிவிட்டோம் என்று நினைவுபடுத்தி கண்களில் நீர்க்கசிய வைக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது நமக்கு வேண்டியவர்கள் நலமாக இந்த இடத்தில் உள்ளார்கள் என்று காட்டுகிறது. வெளியூருக்குப் போய் இறங்கிய உடன் நம் நண்பர்கள் யார் யார் அருகில் இருக்கிறார்கள் என்று அவர்களை நமக்கும் அவர்களுக்கு நம்மையும் அடையாளம் காட்டுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2018 11:18 am

நடுங்கிய நம்பிக்கை:

பள்ளி நாட்களோடு தொடர்பு அறுந்து போன நண்பனை கணினித் திரைமுன் கொண்டு வந்து நிறுத்தும் முகநுாலின் நேர்த்தி கண்டு வியக்காதவர்கள் இருக்கமுடியாது. சிலந்தி வலைக்குள் சிக்கிய ஈயை மெல்ல மெல்ல சிலந்தி பசையால் கட்டிவைத்து கொட்டிக் கொட்டிக் கொல்லுமோ அதைப்போல் நேரத்தை நின்றுகொன்று நம் வாழ்வைத் தின்று கொண்டிருக்கும் இணையதளங்கள் மீது கவனத்தை ஏற்படுத்திய சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

இது இணையப்பதிவர்கள் இணையப்பயன்பாட்டை மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு கொண்டு நிறுத்தி இருக்கிறது.அலாவுதீன் கையில் இருந்த அற்புதவிளக்காய் உலகம் முகநுாலை நினைக்கத் தொடங்கிய நிலையில்தான் “கேம்ப்ரிட்ஜ் அனலடிகா” என்ற சொற்கள் அதன் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்க்கத் தொடங்கின.பயனீட்டாளர்களுக்கே தெரியாமல் நம்மைப்பற்றிய தகவல்களை வேண்டியவர்களுக்கு முகநுால் நிறுவனம் தந்து ஏமாற்றியிருக்கிறது என்ற தகவல் முகநுால் பயனாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உலகமெங்கும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உரியவர்களுக்கு வழங்கும் சமூக ஊடகத் தகவல் விற்பனையாளர்கள் இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். முகநுாலில் அமெரிக்கப் பதிவர்கள்போட்டுவைத்த தகவல்களை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு எடுத்துத்தந்து வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளது கேம்ப்ரிட்ஜ் அனலடிகா நிறுவனம். அதாவது அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் வணிக நோக்கத்திற்கு விற்கப்பட்டுள்ளன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2018 11:19 am

மார்க் வருத்தம்:

நிறுவனர் மார்க் ஜுகர்ஸ்பர்க் ஐந்துகோடி பேரின் தகவல்களைத் திருடும் அளவு முகநுால் பாதுகாப்பற்றதாகிவிட்டதை அதிர்ச்சியுடன் ஒத்துக்கொண்டு “நான்தான் பேஸ்புக்கை தொடங்கினேன், அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நானே பொறுப்பு. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் நாமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் விழிப்பாக இருக்கவேண்டும்.நமக்கு உதவுகின்றன என்ற நோக்கத்தில் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யும் தேவையற்ற செயலிகள் (ஆப்ஸ்) ரகசியமாக நம்மை எவ்வாறு வேவு பார்க்கின்றன?

நம் வங்கித் தகவல்களை எவ்வாறு இணையத் திருடர்களுக்கு தருகின்றன என்று அறிந்தபோது ஸ்மார்ட்போன் செயலிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணரமுடிகிறது.நம் கடவுச்சொற்களைச் செயலிகள் விற்கும்போது நாம் வங்கியில் போட்டுவைத்த பணத்தை உலகின் ஏதோவொரு மனிதனும் திருடமுடியும் என்பது எத்தனை ஆபத்தானது? அலைபேசியில் தொடர்பில் யார் யார் உள்ளார்கள், அவர்களோடு நாம் நடத்தும் பணப்பரிமாற்றம் என்ன என்று நம் செல்பேசியில் உள்ள செயலிகள் நகலெடுத்து, நம்மை அடிமைப்படுத்த முயல்கின்றன. அலைபேசித் திரைகள் வழியே நாம் கண்காணிக்கப்படுகிறோம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2018 11:19 am

புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது:

ஸ்மார்ட்போன்களின் தாக்கத்தாலும் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சாலும் புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் அளவுக்கதிகமான செயல்பாட்டால் காற்று மாசுபட்டு புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அலைபேசி பயன்பாட்டுக்குப் பின் அதிக அளவு மூளைப் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இலவச அறிவிப்பு நிறைய டீன்ஏஜ் பருவத்தினரை இணையத்தின் பக்கம் திருப்பி அடிமையாக்கியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இணையத்தில் உலாவி செயலிகளுக்குள் உள் நுழைந்து பார்க்கும் அளவு அடிமைக்குள்ளாக்கி வைத்திருக்கிறது.நள்ளிரவு கடந்தபின்னும் உறக்கமில்லாமல் முகம் தெரியாதவர்களுடன் உரையாடல்கள் தொடர்கின்றன. பள்ளி மாணவியர் பேக் ஐடி எனும் போலி பதிவர்களிடம் சிக்கிப் பொருள் இழந்து மானம் இழந்து வெளியில் சொல்லவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.நம் பிறந்தநாள், நாம் படித்தகல்வி நிறுவனம், நம் நண்பர்கூட்டம், நமக்கு என்ன பிடிக்கும்? 

நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்றெல்லாம் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறது முகநுால். இனியும் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் குறிப்பாக, முகநுாலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வினாடிக்கு வினாடி பதிவேற்றவேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்; பிடிக்காதவர்களின் வீட்டையும் எரிக்கலாம். இணையம் வீட்டை எரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. அதில் எரிந்து பொசுங்காமல் நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இணையப்பயன்பாடு கூடாது என்பதல்ல நம் கருத்து. நம் சொந்த வாழ்வையும் சமூக வாழ்வையும் அது சீரழித்துவிடாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள உணர்த்துவதே நம் நோக்கம்.

பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 06, 2018 3:08 pm

அனைவரின் கைகளிலும் ஸ்மாட் போன்கள்... எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றே தெரியாமல் பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் ..நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு வேண்டும் ... இணையதளத்தில் சூது பாதுகளை அறிந்திருப்பது காலத்தின் கட்டாயம் ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 06, 2018 6:09 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அனைவரின் கைகளிலும் ஸ்மாட் போன்கள்... எப்படி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றே தெரியாமல் பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் ..நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு வேண்டும் ... இணையதளத்தில் சூது பாதுகளை அறிந்திருப்பது காலத்தின் கட்டாயம் ...
மேற்கோள் செய்த பதிவு: 1265403
இந்த இணையம் நம்மை அதற்கு அடிமை ஆக்கியுள்ளது. முதலில் டிவி அது போய்
தற்போது இந்த பேய் நம்மை பற்றி கொண்டது
முன்பெல்லாம் பல மணி நேரம் படித்தேன்
தற்போது அந்த பழக்கம் என்னை விட்டு விலகி சென்றது.
அம்மா அருமையான தகவல் பதிவு செய்தமைக்கு
நன்றி அம்மா

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2018 7:16 pm

// இணையதளத்தில் சூது பாதுகளை அறிந்திருப்பது காலத்தின் கட்டாயம் ...//

என்ன பலன்? இணைய பயன்பாட்டை குறைத்தால் தவிர எதுவும் செய்ய முடியாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக