ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

Go down

திரை விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் Empty திரை விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம்

Post by ayyasamy ram Sun Jan 14, 2018 10:07 am

சி
திரை விமர்சனம்: தானா சேர்ந்த கூட்டம் Tskreviewjpg
பிஐ அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ராமையா 1980-களில் தன் மகன் சூர்யாவை சிபிஐ அதிகாரியாக்க நினைக்கிறார். சூர்யாவை நேர்காணல் செய்யும் ‘கெட்ட’ அதிகாரி, சூர்யாவுக்கு அந்த வேலை கிடைக்கவிடாமல் செய்கிறார். அதேவேளையில் போலீஸ் அதிகாரி ஆக ஆசைப்பட்டு லஞ்சம் கொடுக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்கிறார் சூர்யாவின் நண்பர் கலையரசன்.

ஒரு கட்டத்தில், ஊழலை ஊழலால்தான் அழிக்க முடியும் என்ற சிந்தனையோடு சில சித்து வேலைகளைச் செய்து, சிபிஐ அதிகாரிகளை ஆட்டம்காண வைக்கிறார் சூர்யா. இதைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்படுகிறார். அந்த சித்து வேலைகள் என்ன? சூர்யா அப்படி என்ன செய்தார்? கார்த்திக் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.

இந்தியில் அக்சய் கன்னா, அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய், காஜல் அகர்வால் நடித்த ‘ஸ்பெஷல் 26’ நகைச்சுவைப் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

பழைய தினத்தந்தி, பெல்ஸ் போட்டு ஹீரோ-ஹீரோயின் ஆடும் பாடல்கள், கோல்ட் ஸ்பாட், சில்க் சுமிதா, ரசிகர் மன்ற போஸ்டர்களை வைத்தே அந்தக் காலகட்டத்தைக் காண்பித்திருப்பது சிறப்பு.

திறமையானவனுக்குக் கிடைக்கும் அவமரியாதை, நீட் தேர்வு காரணமாக அனிதாவுக்கு நேர்ந்த முடிவு, தலித் அரசியல் சார்ந்து ஆங்காங்கே பஞ்ச் என நகர்கிறது படம். கவுதம் மேனன், ஹரி படங்களில் மட்டுமே தனித்துத் தெரிந்த சூர்யாவுக்கு இது ஒரு புதுமையான மாற்றம். அவரது தோற்றப் பொலிவும், நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது.

கதாபாத்திரத்துக்கு தேவையான கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால், ஒருபுறம், அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் வெற்றுச் சவடால் அடிப்பது, இன்னொரு புறம் இரட்டை அர்த்த வசனம், ஆபாச சைகை. ‘கண்ணியமாக நடிப்பீர்களே, என்னாச்சு சூர்யா?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு சஸ்பென்ஸ் கலந்த கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அவ்வப்போது சூர்யாவுக்கு வசனங்கள் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்.
ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. சுரேஷ் மேனன் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் நன்றாக ஸ்கோர் செய்கிறார். பெட்ரோமாக்ஸ் லைட்டையும், செந்திலையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள காமெடி சிரிக்க வைக்கிறது. சத்யனை ஆபாசத்துக்காகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனந்த்ராஜ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், பிரம்மானந்தம், சிவசங்கர் மாஸ்டர், யோகிபாபு, நந்தா என்று எல்லோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

தினேஷ் கிருஷ்ணனின் கேமரா பளிச்சென படம் பிடித்திருக்கிறது. அனிருத் இசையில் ‘சொடக்கு சொடக்கு’ பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சியமைப்புகளுக்கு வலுசேர்க்கிறது. திரைக்கதைக்கு ஒட்டாமல் நிற்கும் ‘பீலா பீலா’ பாடலை தவிர்த்திருக்கலாம்.

‘ஒருத்தன் பணக்காரனா இருக்க ஒரு கோடி பேரை பிச்சைக்காரனா ஆக்குறானுங்க’, ‘நெஞ்சுல நேர்மையும், செய்யுற செயல்ல நியாயமும் இருந்ததுன்னா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை' என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார், சூர்யாவுடன் இருந்த கூட்டணி இறுதியில் என்ன ஆனது, நந்தா எப்போது சூர்யாவுடன் சேர்ந்தார் என நிறைய கேள்விகள் எழுகின்றன.

அதற்கு படத்தில் பதில் இல்லை. க்ளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு வரும் காட்சி யில் நம்பகத்தன்மை இல்லை. இது சீரியஸான படமா, நகைச்சுவைப் படமா என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ‘லாஜிக் வேண்டாம்; மேஜிக் போதும்’ என்ற கூட்டம் தானாக சேரும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டுள்ள படம்!

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum