புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
92 Posts - 74%
heezulia
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_m10புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 09, 2016 11:28 am

புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  201611090926345295_annabishekam-worship-give-child_SECVPF

உலகத்திற்கே படியளக்கும் இறைவனான சிவபெருமானுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும் சிறப்பு மிக்க நிகழ்வே ‘அன்னாபிஷேகம்’. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில், சகல சிவன் ஆலயங்களிலும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

திருமூலர் தனது திருமந்திரத்தில் சிவலிங்கம் பற்றி இவ்வாறு கூறுகிறார். சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்கள் மாலையாகவும், திசைகள் ஆடையாகவும் இருக்கின்றன. கடலில் ஆவியாக்கி எடுத்துச்செல்லப்படும் நீர், மேகங்களின் மூலம் மழையாக பொழிந்து ஆகாய லிங்கத்தை அபிஷேகம் செய்கிறது. அந்த அபிஷேக நீர் பூமியில் விழுந்து உலக உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன என்கிறார் திருமூலர்.

ஆகாயம் என்னும் ஆண்டவனின் ஒரே கூரையின் கீழ்தான் உயிர்கள் அனைத்தும் வசிக்கின்றன. எனவே அந்த ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதனை எந்த பேதமும் இன்றி அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே இதன் தத்துவார்த்த உண்மையாகும்.

பொதுவாக நிலத்தில் விளையும் பொருட்களில் முதன்மையானதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அந்த முறைப்படியே ஐப்பசி மாதத்தில் அறுவடையாகும் புது நெல்லைக் கொண்டு சாதம் சமைத்து, அதை முழுமையாக இறைவனுக்கு படைப்பது என்பதே அன்னாபிஷேக நிகழ்வுக்கான ஐதீகம் என்று காரண காரியம் கூறப்படுகிறது.

தான, தர்மங்களில் சிறந்தது அன்னதானம் என்பது சான்றோர்கள் வாக்கு. அதுவே நிதர்சனமான உண்மையாகும். கொடை வள்ளலாக திகழ்ந்த கர்ணன், இல்லை என்று வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் தன்மையுடையவனாக திகழ்ந்தான். பலவித தர்மங்களைச் செய்த அவன், தன் வாழ்நாளில் அன்னதானத்தை மட்டும் செய்யவில்லை. ஆகையால் மேல் உலகம் செல்லும்போது, அவன் கடும் பசியால் வாடினான் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் அன்னதானத்திற்கு இருக்கும் சிறப்பு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அத்தகைய அன்னத்திற்கும், அதை உருவாக்கித் தரும் இறைவனுக்கும் மரியாதை செய்யும் விதமாகவே அன்னாபிஷேக நாள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் இறைவனின் திருமேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, லிங்கம் முழுவதும் மறையும் வகையில் அன்னத்தை படைத்து வழிபடுவார்கள்.

மாலை நேரத்தில் அன்னாபிஷேகம் கொண்ட பெருமான், இரண்டாம் காலம் வரை அதாவது மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அன்னாபிஷேகராக காட்சி தருவார். அதன்பின் அன்னம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மீதம் உள்ள அன்னம் திருக்குளத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ, கடலிலோ கரைக்கப்படும். இறைவனின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஷ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேக விழா சிறப்புக்குஉரியதாகும். சுமார் 13½ அடி நீளமும், 60 அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசியை அன்னமாக சமைத்து, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேக விழாவில் அதன் சுற்றுப்புறபகுதி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கிறார்கள். திருச்சியில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

அனைத்து சிவாலயங்களிலுமே இதுபோன்று அன்னத்தால் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. வழிபாட்டுக்குப் பிறகு அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதே போல வீடுகளிலும் கூட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அவற்றை சுற்றத்தில் உள்ளவர்களுக்கு வழங்கினால் பலன் கிடைக்கும்.

கோவில்களில் சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த வருட அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு கஷ்டப்படமாட்டார்கள் என்பது ஐதீகம். ஒருசிலர் நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும். பசி உணர்வு மேலோங்கும். ஆனால் அவர்களால் சாப்பிட முடியாது. இதற்கு ‘அன்ன த்வேஷம்’ என்று பெயர். இந்தக் குறைபாடு உள்ளவர்கள், இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல், ஏழைகளுக்கு தானம் செய்தால் அன்ன த்வேஷம் விலகும்.

மேலும் இறைவனுக்குச் சாத்தப்படும் அன்னத்தை பிரசாதமாக வாங்கி உண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, புத்திரப்பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
-maalaimalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84515
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 09, 2016 6:09 pm

புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  103459460 புத்திரப்பேறு கிடைக்கும் அன்னாபிஷேகம்  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 10, 2016 2:03 pm

அருமையான தகவல் . நற்பதிவு. நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 10, 2016 2:12 pm

கங்கைகொண்ட சோழபுரம் பார்க்கவேண்டிய ஆலயம் ! ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக