புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
20 Posts - 65%
heezulia
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
62 Posts - 63%
heezulia
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_m10சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:44 am

சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  52BCywGRFiCo08tkDsc5+charlestarvin

இயற்கைத் தேர்வு (Natural Selection) என்னும் முறையின் வாயிலாக "உருமலர்ச்சி" (Evolution) ஏற்படுகிறது என்னும் உயிரியல் கோட்பாட்டினை வகுத்த ஆங்கில விஞ்ஞானி சார்லஸ் டார்வின் ஆவார். இவர் இங்கிலாந்தில் ஷிரூஸ்பரி என்னும் ஊரில் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் பிறந்தார். (இதே நாளில் தான் ஆபிரகாம் லிங்கனும் தோன்றினார்).

முதலில் உள்ளூர்ப் பள்ளியில் கல்வி பயின்ற டார்வின், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில்வதற்குச் சேர்ந்தார். மருத்துவமும், உடல் உட்கூறியலும் சுவையற்றதாக இருக்கக் கண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு மாறி, சமய குருவுக்கான கல்வி கற்கலானார்.

கேம்பிரிட்ஜில் படிப்பதை விட குதிரைச் சவாரி, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளிலேயே அவர் அதிக ஆர்வம் காட்டினார். எனினும், அங்கு தாவரவியல் பேராசிரியராக இருந்த ஹென்ஸ்லோ என்பவரின் அன்பைப் பெற்று அவருடைய நெருங்கிய நண்பரானார்.

அப்போது "பீகிள்" (Beagle) என்ற அரசுக் கப்பல் 1831 இல் தென் அமெரிக்காவுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்வதாக இருந்தது. நண்பர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அந்தக் கப்பலின் "இயற்கை விஞ்ஞானியாக" (Naturalist)" டார்வின் நியமனம் பெற்றார்.

இந்த நியமனத்தை இவர் ஏற்றுக் கொண்டதை இவருடைய தந்தை முதலில் எதிர்த்தார். கருத்தூன்றி வேலை செய்வதில் டார்வின் ஈடுபாடு கொள்வதை இந்தப் பயணம் மேலும் தாமதப்படுத்தும் என்று அவர் கருதினார். எனினும், மேனாட்டு அறிவியல் வரலாற்றில் இந்தப் பெருங்கடல் மிகுந்த கைம்மாறு தரக்கூடியதாக விளங்கியதால் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு இந்தப் பயணத்திற்கு தந்தை இசைவளித்தார்.

டார்வின் தமது 22 ஆம் வயதில் "பீகிள்" கப்பலில் 1831 இல் புறப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தக் கப்பல் தென் அமெரிக்காக் கடற்கரையோரமாகப் பயணஞ் செய்து உலகைச் சுற்றி வந்தது. அப்போது, தன்னந்தனியாக இருக்கும் கலப்பகாஸ் தீவுகளை அது ஆராய்ந்தது. பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றிலுள்ள வேறு பல தீவுகளுக்கும் அது சென்றது.

இந்த நீண்ட பயணத்தின் போது டார்வின் பற்பல இயற்கை அதிசயங்களைக் கண்டார்; ஆதீ குடிகள் பலரைச் சந்தித்தார்; ஏராளமான புதை படிவங்களை (Fossils) கண்டுபிடித்து சேகரித்தார்; கணக்கற்ற தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தார். தாம் கண்டறிந்த அனைத்தைப் பற்றியும் விரிவான குறிப்புகளைப் பெருமளவில் எழுதி வைத்துக் கொண்டார்.

இந்தக் குறிப்புகள் தான் இவருடைய பிந்தைய நூல்கள் அனைத்திற்கும் ஆதாரமாக அமைந்தன. இவற்றிலிருந்து தான் இவர் தமது முக்கியக் கொள்கைகள் பலவற்றை வகுத்தார். அவற்றை நிலை நாட்டுவதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக அமைந்தவையும் இந்தக் குறிப்புகளேயாகும்.

இந்தக் கப்பல் பயணத்தில் தாம் சேகரித்த ஆராய்ச்சிப் பொருள்களுடன் 1836 இல் டார்வின் இங்கிலாந்து திரும்பினார். தாம் செய்த ஆராய்ச்சிப் பயணத்தில் கண்ட எல்லாப் பொருள்களைப் பற்றியும் அடுத்த 20 ஆண்டுகளில் பல நூல்களை எழுதினார். இந்த நூல்கள் இவருக்கு இங்கிலாந்தின் தலைசிறந்த உயிரியலறிஞர்களில் ஒருவர் என்ற புகழை ஈட்டித் தந்தன.

விலங்கினங்களும், தாவர இனங்களும், என்றென்றும் ஒரே மாதிரியாக இருப்பவை அல்ல என்றும், நிலவுலகப் புறணியின் வளர்ச்சி மாறுபாடுகளின் போது உருமலர்ச்சி பெற்றவை என்றும் 1837 ஆம் ஆண்டிலேயே டார்வின் உறுதியாக நம்பினார்.

ஆனால், இத்தகைய பரிணாமத்திற்கு என்ன காரணம் என்பதை அப்போது அவரால் கூற முடியவில்லை. 1838 ஆம் ஆண்டில் தாமஸ் மால்தஸ் எழுதிய "மக்கள் தொகை பற்றிய விதி முறைகள்" என்னும் நூலை அவர் படிக்க நேர்ந்தது. கூர்தல் நெறியின் போட்டியில் ஆற்றலுடையன காலத்தைப் புறங்கண்டு வாழ்வதன் வாயிலாக இயற்கைத் தேர்தல் நடைபெறுகிறது என்னும் தமது கொள்கைக்கு இந்த நூலின் உயிர் நாடியான ஆதாரத்தைக் கண்டார்.

இயற்கைத் தேர்வு முறைக் கொள்கையை இவர் வகுத்த பின்னருங் கூட, அதை அவசரப்பட்டு அச்சிட்டு வெளியிட்டு விடவில்லை. தமது கோட்பாட்டிற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் உயர்ந்திருந்தார். எனவே, இக்கோட்பாட்டிற்கு அசைக்க முடியாத சான்றுகளைச் சேகரிப்பதும், அவற்றின் அடிப்படையில் தமது கொள்கைகளுக்குச் சாதகமான வாதங்களைக் கவனமாகத் தயாரிப்பதிலும் அவர் நெடுங்காலம் செலவிட்டார்.

டார்வின் தமது கோட்பாட்டின் முக்கியக் கூறுகளை மட்டும் விவரித்து 1842 இல் எழுதினார். அவற்றைக் கொண்டு ஒரு முழு நாவலை எழுதும் பணியில் 1844 இல் ஈடுபட்டார். எனினும், அவர் தமது நூலில் திருத்தங்கள் செய்து கொண்டும், புதிய செய்திகளைச் சேகரித்துக் கொண்டும் செம்மைப் படுத்திக் கொண்டிருந்த போது, 1858 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிழக்கு இந்தியத் தீவுகளில் அப்போது பணியாற்றி வந்த ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் என்ற பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானி உயிர் மலர்ச்சி பற்றிய தமது சொந்தக் கோட்பாடு அடங்கிய கையெழுத்துப் படியொன்றை டார்வினுக்கு அனுப்பி வைத்தார்.

வாலசின் கோட்பாடு சாராம்சத்தில் டார்வின் கொள்கையினைப் பெரிதும் ஒத்திருந்தது. வாலஸ் தமது கோட்பாட்டினைத் தன்னந்தனியாகவே உருவாக்கியிருந்தார். அதை நூலாக வெளியிடுவதற்கு முன்பு, இத்துறையில் அப்போது முன்னணி விஞ்ஞானியாகப் புகழ்பெற்றிருந்த டார்வினுடைய கருத்துரைகளை அறிந்து கொள்ள விரும்பி, தமது நூலின் கையெழுத்துப் படியை டார்வினுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். அப்போது தான் மிகவும் இக்கட்டானதொரு நிலைமை தோன்றியது.

இந்தக் கோட்பாட்டினை முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து விரும்பத்தகாத போராட்டமே உருவாகியிருக்கக் கூடும். ஆனால், இரு விஞ்ஞானிகளும் காட்டிய பெருந்தன்மை காரணமாக இந்தச் சிக்கல் சுமூகமாகத் தீர்ந்தது. டார்வின் இக்கோட்பாட்டை உருவாக்குவதற்காகத் தம் ஆயுளில் பெரும் பகுதியைச் செலவழித்த போதிலும், அந்தப் பெருமையை வாலசுக்கே அளிக்க முன்வந்தார்.

ஆனால், வாலஸ் டார்வினுடைய உண்மையான உழைப்பினையும், அரும் முயற்சிகளையும் அறிந்ததும், இந்தக் கொள்கை டார்வினுடையதே என்று உலகுக்கு அறிவித்தார். இவ்விருவரும் சிறிதும் அழுக்காறின்றி நடந்து கொண்டது போற்றத்தக்கதாக இருந்தது.

வாலசின் ஆய்வுக் கட்டுரையும், டார்வினுடைய நூலின் சுருக்கமும் ஒரு கூட்டு ஆய்வுக் கட்டுரையாக அடுத்த மாதத்திலேயே ஓர் அறிவியல் கழகத்தின் முன்பு அளிக்கப் பட்டது. இந்தக் கொள்கை மக்கள் கவனத்தை எதிர்பார்த்த அளவுக்குக் கவராமற் போனது விசித்திரமாக இருந்தது.

எனினும், 1859 ஆம் ஆண்டில் டார்வின் வெளியிட்ட "இனங்களின் தோற்றம்" (Origin of Species) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேறெந்த அறிவியல் நூலில், இதைப் போன்று உலகில் விஞ்ஞானிகள், பாமர மக்கள் ஆகிய இரு சாராரிடமும் மிகப் பெருமளவுக்குச் சர்ச்சையும் வாக்குவாதங்களையும் தோற்றுவித்ததில்லை. இந்நூலின் முழுப் பெயரோ, "இயற்கைத் தேர்வு மூலம் இனங்களின் தோற்றம்" என்பதாகும்.

" வாழ்க்கைப் போராட்டத்தில் ஆற்றல் வாய்ந்த இனங்களின் நிலைபேறு" என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்நூலில் அவர் எழுதிய கொள்கை "டார்வின் கொள்கை" என்று பெயர் பெற்றது. இதில் டார்வின் பரிணாமக் கொள்கையை உறுதியாக நிலைநாட்டி, அதற்கு இயற்கைத் தேர்வு என்னும் முறையைக் காரணமாகக் கூறியிருந்தார்.

"இனங்களின் தோற்றம்" பற்றிய வாக்குவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே, 1871 ஆம் ஆண்டில் டார்வின் "மனிதனுடைய பாரம்பரியம் மற்றும் பால் வேறுபாடு பொறுத்தது இயற்கையின் இயல்தேர்வு முறை" (The Discent of Man and Selection in Relation to Sex) என்னும் நூலை வெளியிட்டார்.

இதில், வாலில்லாக் குரங்கு போன்ற ஒரு பிராணியிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கொள்கையை அவர் விளக்கியிருந்தார். இதனால், இவர் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று கூறுவதாக எண்ணி இவருக்கு எங்கும் எதிர்ப்பு எழுந்தது. இவருடைய இந்தக் கொள்கை இன்னும் காரசாரமான வாக்கு வாதங்களைத் தோற்றுவித்தது.

டார்வின் தமது கோட்பாடுகள் குறித்து நடைபெற்ற பொது வாக்கு வாதங்களில் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவருடைய மோசமான உடல் நிலை. அவர் "பீகிங்" கப்பலில் தென் அமெரிக்கப் பயணம் சென்ற போது பூச்சிக்கடியினால் அவரை "சாகா நோய்" என்ற நோய் பீடித்தது. அது முதற்கொண்டு அவர் ஆயுள் முழுவதும் நோயாளியாகவே இருந்தார்.

எனினும் பல சிறந்த விஞ்ஞானிகள் அவருடையை கொள்கையை ஆதரித்துத் தீவிரமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டார்கள். இவர்களில் முக்கியமானவர் தாமஸ் எச். ஹக்ஸ்லி ஆவார். இவர் மிகவும் திறமையான பேச்சாளர்; டார்வின் கொள்கைகளை மிகத் தீவிரமாக ஆதரித்தவர். 1882 இல் டார்வின் இறந்தபோது, அவருடைய கொள்கையின் அடிப்படைச் சரிநுட்பத்தைப் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டு விட்டனர்.

இனங்களின் உருமலர்ச்சி பற்றிய கொள்கையை முதலில் வகுத்தவர் டார்வின் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே சில விஞ்ஞானிகள் இந்தக் கொள்கையைக் கூறியிருக்கின்றனர். ஃபிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி ஜீன்லாமார்க், டார்வினின் தாத்தா ஈராஸ்மஸ் டார்வின் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால், இந்த முற்கோள்களைக் கூறியவர்கள் இந்த உருமலர்ச்சி எந்தக் காரணத்தால் நடைபெறுகின்றது என்பதற்கு நம்பகமான விளக்கங்களைக் கூறத் தவறிவிட்டார்கள். எனவே, இயற்கைத் தேர்வு என்ற முறையினால் உருமலர்ச்சி எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை டார்வின் தெளிவாக விளக்கிக் கூறினார். அத்துடன், தமது கொள்கைக்கு ஆதாரமாக நம்பகமான சான்றுகளையும் அவர் ஏராளமாகக் காட்டினார். எனவே தான், அவருடைய கொள்கையை அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது.

பிறப்புக் கோட்பாட்டின் (Genetic Theory) ஆதரவில்லாமலேயே-பிறப்புக் கோட்பாட்டினை அறிந்து கொள்ளாமலேயே-டார்வின் கோட்பாடு வகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டார்வின் காலத்தில், குறிப்பிட்ட பண்பியல்கள் ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பது குறித்து யாரும் எதுவும் அறிந்திருக்கவில்லை.

டார்வின் தமது வரலாற்றுப் புகழ் வாய்ந்த நூல்களை எழுதிக் கொண்டிருந்த அதே ஆண்டுகளில் "மரபுத் தொடர்பு விதி" (Law of Heredity) என்ற தமது கொள்கையை கிரிகோர் மெண்டல் என்பவர் வகுத்துக் கொண்டிருந்தார். அவரது கொள்கை, டார்வின் கொள்கைக்குத் துணை செய்யக் கூடியதாக அமைந்திருந்தமையால், 1990 வரையில் அவருடைய கொள்கை அடியோடு புறக்கணிக்கப்பட்டதாகவே இருந்தது. அதற்குள்ளாக, டார்வினுடைய கொள்கைகள் நன்கு நிலைபெற்று விட்டன.

இவ்வாறாக, இயற்கைத் தேர்வு முறையிலான மரபுத் தொடர்பு விதிகளுடன் சேர்ந்து உருமலர்ச்சிக் கொள்கை முழுமையடைந்தது. அவ்விதம் முழுமை பெற்ற கொள்கை தான் இன்று நாம் அறிந்துள்ள "உருமலர்ச்சிக் கொள்கை" ஆகும்.

மனிதச் சிந்தனை மீது டார்வினுடைய செல்வாக்கு மிகப் பெரிது. முற்றிலும் அறிவியல் நோக்கில் கூறுவதாயின், உயிரியல் துறை முழுவதிலுமே அவர் புரட்சிகரமான மாறுதல்களை உண்டாக்கினார். இயற்கைத் தேர்வு என்பது மிகவும் விரிவானதொரு தத்துவமாக அமைந்திருந்தது. அந்தத் தத்துவத்தை மானிடவியல், சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற வேறு பல துறைகளுக்கும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டார்வினின் கொள்கைகளினால் ஏற்பட்ட அறிவியல் அல்லது சமூகவியல் விளைவுகளை விட, சமயச் சிந்தனையில் ஏற்பட்ட விளைவுகள் தான் மிக முக்கியமானவையாகும். டார்வின் காலத்திலும், அதன் பின் பல ஆண்டுகள் வரையிலும், சமயப்பற்றுமிக்க கிறிஸ்தவர்கள், டார்வின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால், சமய நம்பிக்கை சீர்குலைந்து போகும் எனக் கருதி வந்தார்கள். வேறு பல காரணங்களினால் அப்போது சமய உணர்வுகள் பொதுவாகக் குறைந்து கொண்டு வந்தமையால் இந்த சமயவாதிகள் இவ்வாறு அச்சங் கொண்டதில் நியாயமிருந்தது.

சமயச் சார்பற்ற நிலையிலுங் கூட, தங்கள் உலகைப் பற்றிய மனிதர்களின் சிந்தனையில் டார்வினுடைய கொள்கை பெரும் மாறுதலை ஏற்படுத்தின. இயற்கை உலகில் மனித இனத்திற்குத்தான் தலைமையான இடம் என ஒரு காலத்தில் நிலவி வந்த கருத்து மறையலாயிற்று. உலகிலுள்ள எத்தனையோ உயிரினங்களில் ஒன்று தான் மனித இனம் என்பதை இப்பொழுது நாம் உணர்ந்து கொண்டு விட்டோம்.

ஒரு காலத்தில் மனித இனம் மறைந்து, வேறொரு இனம் ஆதிக்கம் பெறக்கூடும் என்பதையும் இன்று உணர்ந்திருக்கிறோம். டார்வினின் கொள்கைகளின் விளைவாக, " மாறுதல் ஒன்றைத் தவிர இந்த உலகில் நிலையானது எதுவுமே இல்லை" என்று ஹிராக்ளிட்டஸ் கூறிய கருத்து இன்று எல்லோரும் ஏற்கத் தக்கதாகிவிட்டது. மனிதனின் தோற்றத்தை உருமலர்ச்சிக் கொள்கை வெற்றிகரமாக விளக்குவதை யொட்டி, இயற்பியல் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் அறிவியலின் திறம்பாட்டில் இப்போது நம்பிக்கை வெகுவாக வளர்ந்திருக்கிறது.

"வல்லனவற்றில் வாழ்வு வளம்" (Survival of the Fittest) "வாழ்க்கைப் போராட்டம்" (Struggle for existence) என்பன போன்ற டார்வின் வகுத்தமைத்த சொற்றொடர்கள் எல்லா மொழிகளின் அகராதிகளிலும் இடம் பெற்று விட்டன.

டார்வின் தோன்றியிராவிட்டாலும் அவருடைய கொள்கைகளை வேறு யாராவது கூறியிருக்கக் கூடும். வாலசின் பணியைக் கருதும் போது, டார்வினைப் பொறுத்த வரையில், இந்தக் கருத்து இன்னும் பொருத்தமுடையதாகும். எனினும், உயிரியலையும், மானிடவியலையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தது டார்வினுடைய கொள்கைகளேயாகும். இந்த உலகில் மனிதனுக்குரிய இடம் குறித்த மனிதரின் கருத்தினை மாற்றியதும் இந்த கொள்கைகளேயாகும். இதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி கூடல்




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 12, 2016 10:04 pm

நல்ல பகிர்வு கார்த்திபுன்னகை.............சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  3838410834 சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  3838410834 சார்லஸ் டார்வின் - பிறந்த தின சிறப்பு பதிவு  3838410834
.
.
.ஆனால் முதல் பதிவை இவ்வளவு பெரிசாக போடாமல் சின்னதாக போடுங்கள், இடம் விட்டு சின்ன சின்ன பத்திகளாய் பிரித்து போடுங்கள் , படிக்க எளிதாக இருக்கும்....இப்போ நான் போட்டுவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக