ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலு சிறக்க....

2 posters

Go down

கொலு சிறக்க.... Empty கொலு சிறக்க....

Post by krishnaamma Mon Oct 12, 2015 1:35 am

கொலு சிறக்க.... Yw2f7qtETjmhfrviUIhG+E_1444374027

அம்பாளுக்கு உரிய ஒன்பது சிறப்பு நாட்கள், நவராத்திரி. இந்நாட்களில், அம்பாளை பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் பலன் போன்று, வேறு எப்போது பிரார்த்தனை செய்தாலும் கிட்டாது. கலை, பொருள் மற்றும் சக்தியின் அம்சமான அம்பாளை, இந்த ஒன்பது நாட்களும் பிரார்த்தனை, பாராயணம் செய்தால், மேற்கூறிய பலன்களையும் நமக்கு நல்குவாள். உலகில் உயிர் வாழ, இந்த சக்திகளும் இன்றியமையாதவை. வரும் நவராத்திரி கொலுவை வித்தியாசமாக கொண்டாட சில, 'டிப்ஸ்' இதோ...

* கொலு ஷாப்பிங் செல்பவர்கள், புத்தக கடைகளுக்கு சென்று, 'ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி மற்றும் காஞ்சி பெரியவரின் உபதேசங்கள், 'வாழ்வில் சிறக்க' மற்றும் 'மனஅமைதி பெற என்ன செய்யலாம்' இப்படி பல குட்டி புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. இவற்றை கொலுவிற்கு வருவோருக்கு தரலாம். 50 ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் திருப்தி, இப்புத்தகத்திலும் கிடைக்கும்.

* குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாசாரம், பண்பாடு மற்றும் இதிகாச புராணங்களை தெரிய வைக்க, நவராத்திரி பண்டிகை நல்ல சந்தர்ப்பம். கொலுவில், ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளின் முக்கிய நிகழ்வுகளை, 'தீமாக' அமைக்கலாம். அத்துடன், ஹாரிபார்ட்டர் கதைகள் மற்றும் டோரா புஜ்ஜி போன்றவற்றை கூட அமைக்கலாம். இது, பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து, இந்த நவராத்திரியை களை கட்ட வைக்கும்.

* உங்கள் பிள்ளைகளை, கரும் பலகையில், நவராத்திரி பற்றிய விஷயங்களை தினம் ஒன்று எழுதச் சொல்லி, கொலுவில் வைக்கலாம். நவராத்திரி கலச தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீசக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என, அம்பிகையை பற்றிய விஷயங்கள் அனைவரையும் கவரும்.

* நவராத்திரியின்,ஒன்பது நாட்களிலும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்றார், உறவினர்களுடன் உணவருந்தி மகிழலாம்; உறவுகளுக்குள் நல்ல இணக்கம் ஏற்படும்.

* குழந்தைகளுக்கு, 'க்விஸ்' போட்டிகள் வைத்து, அவர்களுக்கு பயன்படும் கலர் பென்சில், ஸ்கேல், பென்சில் பாக்ஸ் போன்றவற்றை பரிசளிக்கலாம். குழந்தைகள் குதூகலமாகக் கலந்து கொள்வர்; அவர்களது தயக்கமும் மறையும்.

* நவராத்திரியில் பிளவுஸ் பிட் கொடுப்பது விசேஷம் தான். ஆனால், அது, அதிகம் பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கும். அதனால், சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்கூடை போன்றவற்றை கொடுக்கலாம்.

* கொலு பார்க்க வருவோருக்கு தாம்பூலத்துடன் ஒரு பூந்தொட்டியை தந்து, 'பூமி வெப்பமடைவதை தடுக்க, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்; முடியாதவர்கள் இந்த பூச்செடியையாவது வளர்ப்போம்...' என்று சொல்லி, இயற்கையை வாழ்விப்போம்.

* ஒரு நாளும் எந்த கொலுவையும், மற்றவர் வீட்டு கொலுவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். சின்ன கொலுவாக இருந்தாலும், அதில், ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும். அதை சிலாகித்து பேசுங்களேன். ஆக்கபூர்வமாக உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால், புதிதாக கொலு வைக்கும் இளசுகளுக்கு இதமாக சொல்லுங்கள்.

கொலு வைக்கும் பழக்கமில்லாதவர்கள் இந்நாளில் தோழிகள் மற்றும் உறவினர்களை அழைத்து, வெற்றிலை, பாக்கு கொடுக்கலாம்.

நன்றி : வாரமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலு சிறக்க.... Empty Re: கொலு சிறக்க....

Post by ayyasamy ram Mon Oct 12, 2015 6:31 am

கொலு ஷாப்பிங் செல்பவர்கள், புத்தக கடைகளுக்கு சென்று, 'ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி மற்றும் காஞ்சி பெரியவரின் உபதேசங்கள், 'வாழ்வில் சிறக்க' மற்றும் 'மனஅமைதி பெற என்ன செய்யலாம்' இப்படி பல குட்டி புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. இவற்றை கொலுவிற்கு வருவோருக்கு தரலாம்
-
கொலு சிறக்க.... 3838410834 கொலு சிறக்க.... 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலு சிறக்க.... Empty Re: கொலு சிறக்க....

Post by krishnaamma Mon Oct 12, 2015 10:03 am

ayyasamy ram wrote:கொலு ஷாப்பிங் செல்பவர்கள், புத்தக கடைகளுக்கு சென்று, 'ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி மற்றும் காஞ்சி பெரியவரின் உபதேசங்கள், 'வாழ்வில் சிறக்க' மற்றும் 'மனஅமைதி பெற என்ன செய்யலாம்' இப்படி பல குட்டி புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. இவற்றை கொலுவிற்கு வருவோருக்கு தரலாம்
-
கொலு சிறக்க.... 3838410834 கொலு சிறக்க.... 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1168304

ஆமாம் குழந்தைகளுக்கு குட்டி குட்டி புத்தகங்கள் மிகவும் பிடிக்கும், அதனால் படிக்கும் பழக்கம் வளரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலு சிறக்க.... Empty Re: கொலு சிறக்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum