புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
64 Posts - 48%
heezulia
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
15 Posts - 3%
prajai
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை: மனக்கணக்கு Poll_c10சிறுகதை: மனக்கணக்கு Poll_m10சிறுகதை: மனக்கணக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை: மனக்கணக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Sep 2015 - 1:23


கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த என் மனைவி, “” அவர் வீட்டில் இல்லங்க வெளியே போயிருக்கார்” என்றாள்.

“”அவர் எப்போ வருவார்?” என்று கேட்டேன்.

என் குரலைக் கேட்டு என்னை உற்றுப் பார்த்த மனைவி அதிர்ந்தே போனாள்.

“” என்னங்க இது?” என்றாள் அதிர்ச்சியுடன்.

அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.

இதுவரை நரைத்த மீசை. நரைத்த தலைமுடியுடன் இருந்த நான் கருத்த மீசையுடன், கருத்த தலைமுடியுடன் வந்த நின்றதைக் கண்டதுமே அதிர்ந்தே போனாள்.

“” என்னங்க இது திடீரென்று? போகும்போது கூட இதைப் பற்றிச் சொல்லவே இல்லையே?”

சொல்லியிருந்தால் “ஐம்பது வயது ஆகிறது. அதெல்லாம் வேண்டாம்’ என்று சொல்லியிருப்பாள். அதான் சொல்லாமலேயே போய் முடிதிருத்துபவரிடம் வெள்ளை மீசையைத் தலையைக் கறுப்பாக்கிக் கொண்டு வந்து நிற்கிறேன்.

“”ஆபீஸ் மானேஜர் அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகிறார். அவர் தனது மீசைக்கும், தலைக்கும் டை அடித்துக் கொண்டு இளமையாகத் திரியும் போது எனக்கென்ன ஐம்பது வயசுதானே ஆகிறது? நான் டை அடித்து இளமையாக இருக்கக் கூடாதா?” என்று சொன்னேன்.

பின்னே… ஓர் இளம் பெண் என்னைக் காதலிக்கிறாள் போல் தெரிகிறது. அதனால்தான் வெள்ளையைக் கறுப்பாக்கினேன் என்று அவளிடம் சொல்லவா முடியும்?

“”போதும் சமத்து.. இவ்வளவு வயசுக்குமேல்… அக்கம்பக்கத்தினர் என்னைத்தான் கேலி செய்வார்கள்”. தன் தலையில் நோகாமல் அடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

இவருக்கு இந்த வயதில் ஏன் இப்படி புத்தி போகிறது? அவள் சமையலறையில் சொல்வது என் காதில் விழுந்தது. இருந்தாலும் அதைச் சட்டை செய்யாமல் கண்ணாடியில் என் முகத்தை நோக்கினேன். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அவளை ஒரு கண்ணால் பார்த்தேன். உண்மைதான். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிலதடவை பெருமூச்சு விடுவதுபோலக் கூட எனக்குப் பட்டது. காதலுக்கு கண் இல்லை என்பார்களே? அவளுடைய காதலுக்கு என்னுடைய வயசும் ஒரு தடையாக இல்லையோ? நானும் இதை அடிக்கடி நினைத்ததன் விளவுதான் என்னுடைய நரைத்த மீசையும், நரைத்த தலைமுடியும் கறுத்துப் போனதற்குக் காரணம். அவளை நினைக்கும்போதெல்லாம் எனது மனசு ஜிவ் வென்று இறக்கை கட்டிப் பறப்பது எனக்குத் தெரிந்தது. ஒரு தடவை பேருந்தில் இடமில்லாதபோது ஜம்மென்று என் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். பஸ்ஸில் எல்லாரும் இருக்கும்போதே… காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மைதானோ? நான் பேருந்தின் வெளியே பார்ப்பதுபோல் பார்க்க அவள் என்னையே பார்க்க… எனக்கு உடம்பு புல்லரித்தது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ஓர் இருபத்தைந்து வயது பெண் என்னையே உற்று நோக்குகிறாள் என்றால்… என் பக்கத்திலேயே உட்கார்கிறாள் என்றால், உன் அழகு அவளை மயக்கிவிட்டதடா…டேய் ராமநாதா நீ அதிர்ஷ்டசாலியடா… எனது மனது துள்ளியது.

அவள் என்னிடம் கொண்டிருக்கும் காதல் பொருந்தாக் காதல்தான். எனக்கு அது தெரிந்தாலும் எனது மனதுக்கு அது தெரியவில்லையே? எனது நரைத்த மீசையும், நரைத்த தலையையுமே பார்த்து என்னைக் காதலித்தால், அந்த நரைத்த தலை முடியையும், நரைத்த மீசையையும் கருப்பாக்கிக் கொண்டால்? நாணத்தை மறந்து “ஐ லவ் யூ’ என்று சொல்வாளே? என்று நினைத்து வெள்ளையைக் கருப்பாக்கிக் கொண்டேன்.

நாளை திங்கட்கிழமை. பேருந்து நிலையத்திற்கு வந்து என்னைப் பார்ப்பாள். தன்னால்தான் வெள்ளை கருப்பானது என்று நினைப்பாளோ? என்னை நெருங்கி வந்து மெதுவாக ஐ லவ் யூ சொன்னாலும் சொல்வாளோ? அதைத் தொடர்ந்து புல்லரிப்பு. அப்படி அவள் சொல்லிவிட்டால் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். மீசையை முறுக்கிக் கொண்டேன். கடைசி வரையில் என் மனைவிக்குத் தெரியவே கூடாது.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். எனது மனசு படக் படக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. இதோ அவளேதான்… வந்துவிட்டாள். இப்போதுதான் நன்றாக இருக்கிறது என்று தனக்குள் நினைத்துக் கொள்வாள். அவளை நைசாக ஓரக் கண்ணால் பார்த்தேன். என்னைப் பார்த்த அவள் முகத்தில் ஒரு திகைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. ஒருவேளை என்னைப் பார்த்து அவர்தானா இவர்? அல்லது அவருடைய பையனா என்று திகைத்துப் போயிருக்கிறாளோ?

மாலை அலுவலகம் முடிந்து நேராக வீட்டிற்குப் போகாமல் கடற்கரையை நோக்கி நடந்தேன். இலவசமாக கிடைப்பது காற்று ஒன்றுதானே… சிறிது நேரம் காற்று வாங்கலாம். பின்னால் எதேச்சையாக திரும்பிப் பார்த்துத் திகைத்துப் போனேன். பின்னால் அவள் வந்து கொண்டிருந்தாள். ஒருவேளை தனிமையில் என்னைச் சந்தித்து ஐ லவ் யூ என்று சொல்லப் போகிறாளோ? கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டேன். எனக்குச் சிறிது தூரம் தள்ளி அவள் உட்கார்ந்து கொண்டாள். யில் இவ்வளவு பரந்த இடம் இருக்கும்போது, எனக்குச் சிறிது தள்ளி அவள் உட்கார்ந்து இருப்பது…டேய் ராமநாதா… சும்மா சொல்லக் கூடாது… உனக்கு அதிர்ஷ்டம் இருக்குதடா… என நினைத்துக் கொண்டேன், வழக்கமான உடம்பு புல்லரிப்போடு.

நைசாக அவளை நான் எதேச்சையாகப் பார்ப்பதுபோல் பார்க்க அவள் என்னை உற்று நோக்கிக் கொண்டு இருக்க…சே…சே… என்ன இருந்தாலும் பெண்ணுக்கு நாணம் வேண்டாமோ…இப்படி விழுங்கிவிடுவதுபோலப் பார்க்கிறாளே… என்று நினைத்துக் கொண்டாலும் எனக்கு ஜிவ்வென்று ஓர் உற்சாகம் கொப்பளித்தது.

என்னம்மா செளக்கியமா? எப்படி இருக்குது மனசு? என்று சினிமா பாணியில் கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டு என்னையும் அறியாமல் என் உதட்டில் ஒரு புன்னகை. அந்தப் புன்னகை அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்துவிட்டதா? எழுந்து என்னை நோக்கி வந்தாள். இதை நானே எதிர்பார்க்கவில்லை. அவளை முந்திக் கொண்டு ஐ லவ் யூ நானே சொல்லிவிடலாமா? அப்படிச் சொன்னால் அது நன்றாக இருக்குமா?

நான் ஓர் அரசாங்க அலுவலகத்தில் அஸிஸ்டென்ட் மானேஜராக இருக்கிறேன். மானேஜர் வேலையிலிருந்து விரைவில் ஓய்வு பெறப் போகிறார். அதற்கப்புறம் நான் தான் மானேஜர். இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். அடிக்கடி டூர் போவேன். அதில் ஓர் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதை அவளிடம் சொல்லி நான் இரண்டாவது குடும்பம் ஒன்று வைத்துக் கொள்ள தகுதியுடையவன் என்பதைக் காட்டிக் கொண்டுவிடலாமா? நான் நினைத்து முடிப்பதற்கும் அவள் என் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.

“”சாரி… சார்… உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். பேசலாமா?”

என்று ஆரம்பித்தாள்.

திக்திக்கென்று அவள் மனது அடித்ததோ இல்லையோ என் மனது அடித்தது. டேய்…ராமநாதா வாழ்க்கையில் என்ன என்ன அனுபவிக்கணும் இருக்கிறதோ உனக்கு? என்று எனக்குள் ஒரு குரல். ஓர் அழகிய இளம்பெண்ணின் மனதை இந்த வயதில் கவர்ந்துவிட்டாயே?

“”தாராளமாக. நீங்கள் எதையும் வெளிப்படையாகப் பேசலாம். எனக்கு வெளிப்படையாகப் பேசுபவர்களைக் கண்டால் பிடிக்கும்”. பச்சைக் கொடி காட்டினேன்.

“”சார்… என் அம்மாவும், அப்பாவும் ஒரு வருடத்திற்கு முன்பு ஒன்றாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். நான் இப்போது பாட்டி வீட்டில் இருக்கிறேன். இங்கு ஒரு தனியார் கம்பெனியில் ஸ்டெனோவாக வேலை செய்கிறேன்”

“” அட.. பாவமே”

“” சார்… தவறாக நினைக்காதீர்கள்…நீங்கள் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும்போது.. நடந்து போய்க் கொண்டு இருக்கும்போது… உங்களுக்குத் தெரியாமல் உங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால் உங்களைப் பார்த்தால் இறந்துவிட்ட என் அப்பாவையே பார்ப்பதுபோல் எனக்கு இருக்கும். என் அப்பா ஜாடை அப்படியே உங்களிடம் இருக்கிறது. உங்களைப் போலத்தான் அதே மாதிரி வெள்ளை மீசை என் அப்பாவுக்கும். அதே மாதிரி நரைத்த தலைமுடி என் அப்பாவுக்கு… நீங்கள் நடப்பது மாதிரிதான் என் அப்பாவும் நடப்பார். நீங்க டை அடித்ததும் எனக்கு ரொம்ப ஏமாற்றமா போச்சு. ஏதோ உங்க உருவத்தில் என் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படிப் பண்ணிட்டீங்களே சார்?”

அவள் குரல் கம்மியது. கண்களில் கண்ணீர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன பேசுவது என்று தோன்றாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று கொண்டிருந்தது.

சுயநினைவு வந்து நான் விழித்துப் பார்த்தபோது அவள் போய்விட்டிருந்தாள்.

முகவை ராஜா




சிறுகதை: மனக்கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Sep 2015 - 8:02

சிறுகதை: மனக்கணக்கு 103459460 சிறுகதை: மனக்கணக்கு 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 5 Sep 2015 - 13:23

//இப்படிப் பண்ணிட்டீங்களே சார்?”//


ஹா...ஹா...ஹா.....சூப்பர் !......சம்பாதிப்பது 20000 இதில் எத்தனை குடும்பம் நடத்துவானாம்?.............. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக